திங்கள், 8 ஏப்ரல், 2019
ஞாயிறு, 7 ஏப்ரல், 2019
அஞ்சல் வாக்கு செலுத்தும் விதம் ~ விளக்கம்…
1) முதலில் உறுதி மொழி படிவத்தில் (declaration Form) 13A ல் முன்,பின் என இரண்டு பக்கங்கள் இருக்கும்.
🖊முன்புறம் மட்டும் மேல்பகுதியில் வாக்கு சீட்டு எண்ணை (Ballot paper no) எழுதி கையெழுத்திட வேண்டும்.
🖊கீழ்பகுதியில் உறுதிமொழி படிவத்தில் மேலொப்பம் இட (attestation) ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் இரண்டு தாசில்தார்கள் சீலுடன் ரெடியாக இருப்பார்கள்.
2) இரண்டாவதாக வாக்கு சீட்டு உள்ள கவர் படிவம் - 13 B வாக்குசீட்டு (Ballot Paper) மடித்து வைக்கப்பட்டு இருக்கும்.
🖊அதன் கவர்மீது (Postal Ballot Paper cover 13 - B) வாக்கு சீட்டு எண் குறிப்பிட வேண்டும்.
🖊வாக்கு சீட்டில் பந்துமுனைப் பேனாவால் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு நேரில் அந்த கட்டத்திற்குள் மட்டும் இருக்கும்படி ஒரே ஒரு டிக் √ அடிக்கவும்.
🖊மை பேனாவால் டிக் அடித்து பின்பு மடிக்கும் போது ஒருவேளை மற்றோரு சின்னத்திலோ அல்லது மற்றொரு வேட்பாளருக்கு எதிராகவோ மை கசிந்து விட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும்.
🖊எனவே டிக் √ குறியீட்டை மிக கவனமாக அடியுங்கள்.Over writing வேண்டாம்.
🖊சின்னத்தில் ஒரு டிக்,வேட்பாளர் பெயரில் ஒரு டிக் என இரண்டு டிக் அடித்து விடாதீர்கள்.
🖊பின்பு வாக்குசீட்டை தேர்தல் அலுவலர் எவ்வாறு மடித்து வைத்துள்ளாரோ அவ்வாறே மடித்து உள்ளே வைத்து கவரை ஒட்டி விடவும்.
3) அடுத்து படிவம் - 13 C.இது ஒரு கவர்.இதில் படிவம் 13A (உறுதிமொழி படிவம்) மற்றும் 13 -B வாக்குசீட்டை வைத்து ஒட்டப்பட்ட கவர் இரண்டையும் (Ballot paper உள்ளகவர்) இந்த 13 -C கவரினுள் வைத்து ஒட்ட வேண்டும்.
🖊இந்த கவரின் மீது இடது பக்க ஓரத்தில் signature of the sender என இருக்கும். இதன் மீதும் கண்டிப்பாக கையெழுத்து இடவேண்டும்.
🖊இல்லை என்றால் நமது ஓட்டு கவரினை பிரித்து பார்க்காமல் அப்படியே தூர வைத்து விடுவார்கள்.
நமது வாக்கு செல்லாத வாக்காகிவிடும்.
4) நிறைவாக படிவம் 13 -D.இது வாக்காளருக்கான வாக்களிக்க உதவும் வழிகாட்டி குறிப்பு.(Information letter)
🖊இந்த படிவத்தின் இறுதியில் இரண்டு கோடுகள் இருக்கும்.
அதில் 08 am on 23.05.2019 என எழுத வேண்டும்.
குறிப்பு:
1)ஒரு தேர்தல் பயிற்சி வகுப்பில் இரண்டு தாசில்தார்கள் Attest பண்ண சீலுடன் இருப்பார்கள்.
2)நாம் வரிசையில் நின்று பொறுமையாக வாக்களிக்க வேண்டும்.
உங்கள் வாக்கு உங்கள் உரிமைகளையும் கோரிக்கைகளையும் பெற்றுதரும்...
சனி, 6 ஏப்ரல், 2019
வெள்ளி, 5 ஏப்ரல், 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)