ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

முட்டிபோட வைத்தல், கிள்ளுதல், அறைதல் நடைபெறக்கூடாது , மாணவர்களை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்த கூடாது ~ தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு…

நாமக்கல் - புதுச்சத்திரம் ஒன்றியம் , களங்காணி சமுதாய நலக்கூடத்தில் 29.04.19 (திங்கள்) பிற்பகல் 03.00் மணியளவில் வாசிப்பு முகாம் ~ இம்முகாமில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றியப் பொறுப்பாளர்கள் பங்கேற்குமாறும், முகாமின் நோக்கத்தை நிறைவேற்றித் தந்து உதவிடுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்...

அன்பானவர்களே!வணக்கம்.

நாமக்கல் -  புதுச்சத்திரம் ஒன்றியம்,
களங்காணி 
சமுதாய நலக்கூடத்தில் 29.04.19(திங்கள்)
பிற்பகல் 03.00் மணியளவில்  வாசிப்பு முகாம்  தொடங்குகிறது.

கடந்தாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்) ஐசிடி(ICT)முகாம்கள்  நடைபெற்றதை அறிவீர்.

இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்தில்  மாணாக்கர்களின் பல்திறன்களை வெளிக்கொணரும் வகையிலான முகாம்கள்
தொடங்குகிறது. 

வகுப்பறை சனநாயகத்தன்மை கொண்டதாக,
மகிழ்வும்,இனிமையும் நிறைந்தாக,
சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக அமைந்திடுவது சார்ந்தும் கலந்துரையாடல்கள் நடைபெறுகிறது.
 
இன்றைய அக,புறச்சூழல்களின் தேவையை யொட்டி முகாம் வடிவமைக்கப்பட வேண்டி உள்ளது.தொடர்ந்து 
நடைபெறவும் வேண்டியும் உள்ளது.

இம்முகாமின் உள்ளார்ந்த நோக்கம் நிறைவேறிடும்
வகையில் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்தமாநில,மாவட்ட,
ஒன்றியப் பொறுப்பாளர்கள் இம்முகாமில் பங்கேற்குமாறும்,
முகாமின் நோக்கத்தை நிறைவேற்றித் தந்து உதவிடுமாறும் அன்புடன் வேண்டுகிறேன.
                           நன்றி.
           ~முருகசெல்வராசன்.

இ.பிஎப் வட்டி 8.65% ~ மத்திய அரசு ஒப்புதல்…

நீட் ஹால் டிக்கெட்டில் திருத்தம் ~ பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு…

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

பூமியில் நிலநடுக்கம் போன்று செவ்வாயிலும் நிலநடுக்கம்...

மாணவர்கள் எளிதாக பங்கேற்கும் வகையில் இன்ஜி. கவுன்சலிங்கில் பங்கேற்க உதவி மையங்கள் அமைப்பு ~ தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தகவல்…

*ஜிப்மரில் நர்சிங்,துணை மருத்துவப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு விண்ணப்பம் வினியோகம்*

*🌷ஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வு விண்ணப்பம் வினியோகம்*

*ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்சி. நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு தனி நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, சேர்க்கை நடக்கிறது. அதுபோல், இக்கல்லுாரியில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கும் ஆன்லைன் நுழைவு தேர்வு நடத்தி, சேர்க்கை நடக்கிறது.இந்தாண்டிற்கான நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் நேற்று துவங்கியது.*

*ஜிப்மரில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 75 இடங்களும், பி.ஏ.எஸ்.எல்.பி., பாட பிரிவில் 4 இடங்கள் உள்ளன.பி.எஸ்.சி., மயக்க மருந்து டெக்னாலஜி, கார்டியோ லேபரட்டரி டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ரத்த வங்கி டெக்னாலஜி, ரேடியோ டைகனாஸ்டிக் டெக்னாலஜி, நியூரோ டெக்னாலஜி, நியூக்லியர் மெடிசன் டெக்னாலஜி, ஆப்டோமெட்ரி, பெர்ப்ஷன் டெக்னாலஜி, ரெடியோதெரபி டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளில் தலா 4 இடங்கள் உள்ளன. எம்.எல்.டி. பாடப்பிரிவில் 30 இடங்கள், கிளினிக்கல் நியூட்ரிஷன் பாடப்பிரிவில் 4 சீட்கள் உள்ளன. மொத்தமுள்ள 153 இடங்களில், நுழைவு தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.www.jipmer.edu.in என்ற இணையளத்தில், மே 24ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.*

*விண்ணப்ப கட்டணமாக அகில இந்திய மற்றும் புதுச்சேரி பொதுப்பிரிவு, ஓ.பி.சி. மாணவர்களுக்கு ரூ.1500, எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.1200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.ஆன்லைன் நுழைவு தேர்வு, ஜூன் 22ம் தேதி, காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை ஒரே ஷிப்டில் நடக்கிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை, ஜூன் 10ம் தேதி முதல் 22ம் தேதி காலை 8:00 மணி வரை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.*
*நுழைவு தேர்வு முடிவு, ஜூலை 5ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளது.விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு, கட்டணமில்லா எண் 18002667072 மற்றும் ஜிப்மர் அகாடமிக் பிரிவு 0413-2298288, 2272380 என்ற தொலைபேசியில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

வாசிப்பு முகாம் ~ மன்றக் கல்விக்குழு...

வாசிப்போடு சுவாசிப்போம்...

(வாசிக்க 
ஒரு முகாம்~
ஆசிரியருக்கும்,மாணாக்கருக்கும்)

நிகழ்விடம்:

சமுதாயக்கூடம்,
மாரியம்மன் கோவில்
எதிரில்,
களங்காணி.

நாள்:

29.04.19(திங்கள்)

நேரம்:

பிற்பகல் 03:00 - 06.10 மணி

நிகழ்வுகள்:

அ)
03:00 மணி:
முகாம் 
நோக்க உரை

ஆ)
03:15 - 03:45 மணி: 
புத்தக  கலந்துரையாடல் (ஆசிரியர்களுக்கானது) 

இ)
03:50 -  05:05மணி
 புத்தக வாசிப்பு (மாணவர்களுக்கானது)

ஈ)
05:10 - 06.10மணி
வரைதலும்,
வண்ணமிடலும்.

வாசிப்பை நேசிப்போம்; சுவாசிப்போம்...

எல்லோரும் முகாமுக்கு
வரலாம் 
வாங்க... 
அன்போடு அழைக்கிறது...
                           ~ மன்றக்
                          கல்விக்குழு.

பேசிட:
7904505628,
9003628116

ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு தனித்தேர்வர்கள் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்...

தோட்டக்கலை துறை சார்பில் கோடைகால பயிற்சி முகாம்...