செவ்வாய், 21 மே, 2019

*தமிழக கல்வித்துறை தொலைக்காட்சி ஜூனில் ஒளிபரப்பு தொடக்கம்*

*🌷தமிழக கல்வித்துறை டிவி சேனலில் 55 ஆயிரம் பள்ளிகள் இணைப்பு: ஜூனில் ஒளிபரப்பு தொடக்கம்*

*🌷பள்ளிக் கல்வித்துறைக்காக தனியாக ஒரு டிவி சேனல் (TAC TV) தொடங்குகிறது. இதையடுத்து 53 ஆயிரம்  பள்ளிகளுக்கு கல்வி சேனலின் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட உள்ளது.*

 *🌷இந்த சேனலை மாணவர்கள் வீடுகளிலும் பார்க்க முடியும். தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்காகவே புதிய டிவி தொடங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் கல்வித் தொடர்பான தகவல்கள், கல்வித்துறை நிபுணர்கள் நடத்தும் சிறப்பு வகுப்புகளை ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.*

*🌷இதன் ஒளிபரப்பு வரும் ஜூன் மாதம் முதல் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு கேபிள் நிறுவனம் செய்து வருகிறது. இதை பொதுமக்களும் பாக்கலாம்.*

 *🌷இந்நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் என சுமார் 53 ஆயிரம் பள்ளிகளில் இந்த சேனல் தெரியும் வகையில் இணைப்பு வழங்கப்பட உள்ளது.*

*🌷அதற்காக 55 ஆயிரம் பள்ளிகளில் புதியதாக டிவி பெட்டிகள் வாங்க வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள டிவி பெட்டிகளை சீர்செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.*

*🌷இதற்கான செலவுகளை அக்குமிலேஷன் நிதி, பெற்றோர் ஆசிரியர் கழக நிதிகளில் இருந்து செலவிட வேண்டும். உள்ளூர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மூலம் பள்ளிகளில் இணைப்பு பெற வேண்டும்.*

 *🌷பள்ளிக் கல்விக்கான சேனல், அரசு  கேபிள் நிறுவன அலைவரிசை எண் 200ல் பார்க்க முடியும்.*

*🌷ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடங்கள், கல்வி தொடர்பான நிகழ்வுகள், ஒவ்வொரு பாடத்திலும் வல்லமை பெற்ற ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தி அதை ஒளிப்பரப்புவது என்று பல்வேறு நிகழ்வுகள் இந்த சேனலில் வர உள்ளன.*

திங்கள், 20 மே, 2019

இணையதளத்தில் இருந்து அண்ணா பல்கலை சான்றிதழ் நகலை டவுன்லோடு செய்யலாம்...

இயற்கை பேரிடர் குறித்து அலர்ட் செய்யும் புதிய ஆப் ~ வீட்டிற்கு ஒருவர் வீதம் 1 கோடி பேர் டவுன்லோடு செய்ய ஏற்பாடு ~ பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்...

தமிழ்நாடு அரசு அகவிலைப்படி உயர்வு 3% GO_Ms_No_151




GO (Ms) No (262) __ 2019-2020 கல்வியாண்டு அரசு/உதவி பெறும் பள்ளிகளில் 1-5,6-8வகுப்பு மாணவர்களுக்கு புதிய சீருடை வழங்க அரசாணை வெளியீடு



பள்ளிக்கல்வி துறையில் கல்வி சேனல் தொடங்குதல்- அனைத்து பள்ளிகளிலும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் பயன்பாட்டில் இருத்தல் தொடர்பாக இயக்குனர் செயல்முறை


மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் ~ மாவட்டவரியாக பள்ளிகளின் பட்டியல்...

மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டுள்ள தமிழகத்தில் செயல்படும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் பட்டியல் நாமக்கல் மாவட்ட வாரியாக






*1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்புகள்-தமிழக கல்வித்துறை*

*🌷1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்புகள் - தமிழக கல்வித்துறை*

*பள்ளிக் கல்வியில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க எஸ்இஆர்டி முடிவு செய்துள்ளது.*

*பள்ளிக் கல்வியில் இதுவரை நடைமுறையில் இருந்த பாடத்திட்டத்தை, மாற்றி தற்கால வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கல்விக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த ஆண்டு 1,6,9,பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. அதன்பேரில் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.*


*மீதம் உள்ள 2,3,4,5,7,8,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. தற்போது அந்த புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் சில்லறை விற்பனை கடைகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.*

*இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 2 வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டத்தை புரிந்து கொண்டால் தான், மாணவர்களுக்கு பாடம் நடத்த  முடியும். அதனால் 1 லட்சத்து 30 ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த  பயிற்சி வரும் ஜூன் மாதம், மாநில கல்வி  ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறையின்  மூலம் நடத்தப்படுகிறது.*

ஞாயிறு, 19 மே, 2019

ஆதார்-எப்படி பூட்டி வைக்கலாம்?

1. முதலில் ஆன்லைனில், https://uidai.gov.in/
என்ற இணையதள முகவரிக்கு சென்று, My Adhaar- ஐ கிளிக் செய்ய வேண்டும்.

2. அதில் Adhaar Service-இன் கீழுள்ள Lock / Unlock Biometrics - என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. அதில் ஆதார் எண்ணையும், செக்யூரிட்டி கோட் எண்ணையும் பதிவிட வேண்டும். 

4. சிறிது நேரத்தில் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு 'OTP'எண் வரும்.  

5. அந்த 'OTP'எண்ணை சரியாக பதிவிட்டால், சம்பந்தபட்டவரின் ஆதார் விவரங்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டு, பாதுகாக்கப்படும்.
ஆதார் தகவல்கள் பூட்டப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவரே பையோமெட்ரிக் ரீடரில் தங்களது விரல்களை வைத்தாலும், அதை கணினி ஏற்காது.

அதை மீண்டும், மேற்சொன்னது போல செய்து Enable / Disable Biometric Lock - என்பதை கிளிக் செய்து 'OTP' எண்ணை சரியாக பதிவிட்டால் மட்டுமே சம்பந்தபட்டவரின் பயோமெட்ரிக் விவரங்கள் மீண்டும் திறக்கப்படும். அதன் பின் பயன்பாட்டுக்கு வரும். இதனை பயன்படுத்தி, தனி நபர் பற்றிய ஆதார் தகவல்கள் திருடப்படுவதிலிருந்து தற்காலிகமாக தவிர்க்கலாம்.