வெள்ளி, 24 மே, 2019

அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை ~ மேல்நிலை முதலாமாண்டு (+ Arrear) , இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் 2019 ~ மறுமதிப்பீடு / மறுகூட்டல் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் குறித்த செய்திக்குறிப்பு...

LKG,UKG மாணவர் சேர்க்கை நடத்தவும், இவ்வகுப்புகளுக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை கொண்டு பள்ளி திறக்கும் நாளில் வகுப்பு ஆரம்பிக்க இயக்குனர் செயல்முறை



கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்...

லோன் வாங்க போறீங்களா? இதை மொதல்ல கவனிங்க...

Anganwadi Judgement ~ Web Copy...

புதன், 22 மே, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணைப்பதிவாளர் திரு.பொ.பாலமுருகன் அவர்களை 22/05/19-புதன் பிற்பகல் 12.00 மணியளவில் சந்தித்தனர்...

இச்சந்திப்பில்,
SN . 241 ,எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்  சங்கத்தின் வரவு- செலவு சார்ந்தும்,சங்கப்பணம் தவறாக கையாளப்பட்டிருப்பது குறித்தும், வெளிப்படையான விசாரணையும்-ஆய்வும், சட்டப்பூர்வமான விரைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வலியுறுத்தி  மாவட்ட அமைப்பின் சார்பில்  விண்ணப்பம் அளிக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 07.06.2019 (வெள்ளி)அன்று பிற்பகல் 05.00 மணியளவில் நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின்  துணைப்பதிவாளர் அலுவலகம் முன் #பெருந்திரள்_ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென முடிவாற்றப்பட்டுள்ளது.

நல்லதொரு கட்டுரை வாசியுங்கள்~உதயச்சந்திரன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்…

அது 2000. சென்னையில் 'பாரதி' படம் மாலைக் காட்சிக்குச் சென்றிருந்தேன். அரங்கம் நிறைந்திருந்தது. பாரதியின் இறுதி ஊர்வலக் காட்சியுடன் தொடங்கி, 'ஓர் மகாகவியின் இறுதி ஊர்வலத்தில் ஏன் வெறும் 14 பேர் மட்டும் கலந்துகொண்டார்கள்?' என்ற வலி மிகுந்த கேள்வியை முன்வைத்து, பாரதியின் வரலாற்றுக்குள் அழைத்துச் சென்றது படம். பாரதியின் ரௌத்திரம், செல்லம்மாவின் தவிப்பு, குவளையின் நட்பு என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்த படைப்பு. இறுதியில், மீண்டும் பாரதியின் இறுதி ஊர்வலக் காட்சி.

அரங்கமே எழுந்து நின்றது. அரங்கத்தின் திரை வீழும் வரை பார்வையாளர்கள் நின்றுகொண்டே இருந்தனர். முக்கால் நூற்றாண்டுக்கு முன் ஓர் மகாகவியின் இறுதி ஊர்வலத்துக்கு வெறும் பதினான்கு பேரை அனுப்பி வைத்த தம் முன்னோரின் அறியாமைக்கு உரிய முறையில் மன்னிப்பு கோருவதைப் போல் அமைந்தது அது.

அன்று படத்தின் இயக்குநர் ஞானராஜசேகரனும் வந்திருக்கிறார். அவரை அடையாளம் கண்டவர்கள் அவரிடம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாயினர். அப்போது பதின்ம வயதுள்ள இளைஞர்கள் இருவர் இயக்குநரிடம் ஒரு கேள்வி கேட்டனர். "சார், பாரதி இந்தப் படத்தில் ஏன் சண்டையே போடவில்லை?"

எதிர்பாராத அந்தக் கேள்வி எழுப்பிய அதிர்வலைகள் இருபது ஆண்டுகள் கழித்தும் என்னிடம் குறையவில்லை. ஒரு மகாகவியை ஏன் கத்திச்சண்டை வீரராகக் கற்பிதம் செய்துகொள்ளும் நிலை இங்கு நேரிட்டது? புதிய பாடநுால்களை உருவாக்கும்போது, நம்முடைய ஆளுமைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் காட்டப்பட்ட கவனத்தில் மேற்கண்ட நிகழ்ச்சிக்கு முக்கியமான பங்குண்டு.

இந்தக் கோடை விடுமுறையைக் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக எப்படி மாற்றுவது என்று நானும் என் மனைவியும் திட்டமிட்டபோதும், 'பாரதி' திரைப்பட அனுபவமே நினைவுக்குவந்தது. குழந்தைகளுக்கு முக்கிய ஆளுமைகளை முறையாக அறிமுகப்படுத்துவது என்று முடிவெடுத்தோம். முதல் ஆளுமையாகவும் பாரதியையே தேர்ந்தெடுத்தோம்.

முதல் நாள் குழந்தைகளுக்கு 'சித்திர பாரதி' நுால் கொண்டு பாரதியின் கதையைச் சொல்வது; இரண்டாவது நாள் 'பாரதி' திரைப்படத்தைப் பார்ப்பது, மூன்றாவது நாள் பாரதி நினைவு இல்லத்துக்குச் செல்வது என்று திட்டமிட்டோம். எங்களுக்கும் இதிலிருந்து சில பாடங்கள் கிடைத்தன.

ஓவியாவுக்கு 13 வயது; மகிழனுக்கு 8 வயது. பாரதி குறித்த அரிய செய்திகள்/படங்களைக் கொண்ட 'சித்திர பாரதி' நூலைக் கொண்டு பாரதியின் கதையைச் சொல்ல முற்பட்டபோது இருவரும் ஆர்வமாகக் கேட்டார்கள் என்றாலும், அவர்களால் பெரிதாக ஒன்ற முடியவில்லை. அடுத்த நாள், 'பாரதி' திரைப்படத்தைப் பார்த்தபோது அவர்களுக்கு பாரதி நெருக்கமாகி இருந்தார். மூன்றாவது நாள், பாரதியின் நினைவு இல்லம் சென்றோம். அது பெரும் திருப்பத்தைக் கொண்டுவந்தது.

சென்னை திருவல்லிக்கேணியில் துளசிங்கப்பெருமாள் கோயில் தெருவிலுள்ள தற்போதைய 'பாரதி நினைவில்லம்', அலங்கார முகப்புடன் கூடிய விசாலமான கட்டிடம். ஆனால், அந்த இல்லத்தில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஒன்றாக ஒண்டுக்குடித்தனமாகத்தான் பாரதி குடும்பத்தார் வாழ்ந்துவந்தனர்.

சொல்லிக்கொடுக்கையில் கற்றுக்கொண்டவை

அங்குள்ள ஒரு சிறு அறைக்குள்ளிருந்துதான் அடுத்த நாள் அலுவலகம் சென்று ஆப்கானிஸ்தானத்து அமாதுல்லாகான் குறித்து கட்டுரை எழுத வேண்டும் என்ற தன் கடைசி ஆசையை உதிர்த்த பாரதி, மருந்து உட்கொள்ள மறுத்தார். யார் சொன்னாலும் செவி மடுக்காத பாரதி தன் செல்ல மகள் சகுந்தலையின் கோரிக்கைக்குப் பணிவார் என்ற நம்பிக்கையில் கடைசியில் அவள் கையில் மருந்தைக் கொடுத்து அனுப்புகிறார்கள். மருந்து கொடுப்பது தன் மகள் என்பதால் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் குடித்த பாரதி சொல்கிறார்: "சகுந்தலை! நீ கொடுத்தது மருந்து அல்ல. பார்லிக் கஞ்சியம்மா!"

இப்படி ஒவ்வொரு சம்பவமாகச் சொல்லி, ஒவ்வொரு இடத்தையும் சுட்டிக்காட்டி முந்தைய நாட்களில் படித்த புத்தகத்தையும், பார்த்த திரைப்படத்தையும் நினைவுகூர்ந்துகொண்டே நடந்தோம். "உடல் நலிவுற்ற பாரதி படுத்திருக்க, கவலையுடன் சகுந்தலை அமர்ந்திருந்த இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்" என்று ஒரு அறையைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்த தருணத்தில் என் கரத்தை ஓவியாவின் பிஞ்சு விரல்கள் மென்மையாகப் பற்றிக்கொள்வதையும், மகிழனின் கண்கள் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதையும் கவனிக்க முடிந்தது.

இந்த மூன்று நாட்களில் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்ததைக் காட்டிலும் நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம். குழந்தைகளுடன் எந்த மொழியில் பேச வேண்டும், ஒரு விஷயத்தைக் கடத்த எந்தெந்த அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதை நாம் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கிறது. குழந்தைகளோடு ஒன்றோடு ஒன்று எல்லாவற்றையும் பொருத்திக்கூற முதலில் நாம் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது.

பாரதியோடு உறவாடிய குழந்தைகள்

பாரதி நடத்திய 'இந்தியா' இதழுக்காகக் கருத்துப்படம் வரைய ஓவியருக்குத் தானே நடித்துக் காட்டிய விஷயத்தை 'பாரதி' படத்தில் வரும் ஒரு காட்சியோடும், 'சித்திர பாரதி' நூலில் வந்த படங்களோடும் ஒப்பிட்டுச் சொல்லும்போது அவர்களுடைய ஆர்வம் மேலிடுவதை உணர முடிந்தது. ரைட் சகோதர்கள் விமானத்தை இயக்கிக் காட்டிய ஏழாவது வருடம் சென்னை சிம்ஸன் பணிமனையில் 'தமிழ் வேலைக்காரர்கள்' செய்து காட்டிய விமானம் குறித்த செய்தியை பாரதி வெளியிட்டதைச் சொன்னபோது அவர்கள் 'சிம்ஸன் தொழிற்சாலைக்குப் போக முடியுமா?' என்று கேட்டார்கள். திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலையில் கவிராஜனுக்கும் மிருகராஜனுக்கும் நடந்த உரையாடல் குழந்தைகள் முகங்களில் புன்னகையை வரவழைக்கின்றன. மூன்று நாள் அனுபவத்தில் குழந்தைகளுக்கு பாரதியோடு ஒரு உறவு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது; இனி பாரதியைப் படிக்கும்போது அவர் அந்நியமாக இருக்க மாட்டார்.

சென்னையிலேயே காமராஜர் நினைவில்லம் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவில்லம் இருக்கிறது. புதுச்சேரியில் பாரதிதாசன் நினைவில்லம் இருக்கிறது. இன்னும் வரிசையாகப் பட்டியலிடலாம். அடுத்து எங்கே செல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

- த.உதயச்சந்திரன், தொல்லியல் துறை ஆணையர்.

தொடர்புக்கு: udhay17@gmail.com

நன்றி:இந்து தமிழ் திசை

பாரதிக்கு காவி வண்ணம்(!?) காவி வண்ண முண்டாசு(!?)

கல்விச்சிறந்த தமிழ்நாடு் என்று முழங்கியவனின் முகத்திலும்,தலையிலும் என்னென்ன கோளாறுகள் பாரும் ஓய்(!?)
-----------------------------------------
இவர் தான் பாரதியா(!?)
-----------------------------------------
பாரதி யார்?!
பாரதி எவரை வெறுத்தார்?!
எதை எதை எல்லாம் எதிர்த்தார்!?
பாரதியின் வரலாற்றை
பள்ளி தோறும்,
வகுப்புதோறும், 
தமிழகத்தின் ஒவ்வொரு
கிராமம் தோறும்
நிலைநிறுத்துவோம் உலகமெங்கும்  
பாரதியை பரப்புவோம்!
பாரதியை 
காவிமயமாக்குவதை ,
பாரதியை
ஆழ்வார்மயமாக்குவதை  முறியடிப்போம்!
             -முருகசெல்வராசன்