திங்கள், 1 ஜூலை, 2019
தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக ''தமிழ் மறவன்'' வகையை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது...
தமிழ்நாட்டின் அடையாளங்களாக சிலவற்றை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அதன்படி, மாநில விலங்காக வரையாடும், பறவையாக மரகதப் புறாவும், மலராக செங்காந்தளும், மரமாக பனை மரமும் உள்ளன. அந்த வரிசையில் தற்போது மாநில வண்ணத்துப்பூச்சியாக "தமிழ் மறவன்' என்ற வகை வண்ணத்துப்பூச்சியை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.
தமிழகம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணியாக விளங்குவது வண்ணத்துப்பூச்சிகளாகும். காய், கனிகள் மற்றும் விதைகள் உருவாவதற்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் முக்கியக் காரணியாக விளங்குவது மகரந்த சேர்க்கையாகும். இந்த மகரந்த சேர்க்கைக்கு உறுதுணையாக விளங்குவது வண்ணத்துப்பூச்சிகள்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஆங்கிலேயர்கள் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பை நடத்தினர். இதில் 324 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாக அட்டவணைப்படுத்தியுள்ளனர். இதில் 311 வகை வண்ணத்துப்பூச்சி வகைகளை, வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் தற்போது கண்டறிந்து அதனை வகைப்படுத்தியுள்ளனர். மேலும், 13 வகை வண்ணத்துப்பூச்சிகளைத் தேடி வருகின்றனர்.
இந்தியாவில் பல மாநிலங்கள், தங்கள் மாநிலத்தை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் வண்ணத்துப்பூச்சியை தங்களது மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவித்துள்ளன. அதேபோன்று, தமிழக விவசாயிகளின் நண்பனாக விளங்கும் வண்ணத்துப்பூச்சியை தமிழக அரசின் பட்டாம் பூச்சியாக அறிவிக்க வேண்டும் என வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, மாநில வண்ணத்துப்பூச்சியைத் தேர்வு செய்ய வனத் துறையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. "தமிழ் மறவன்' மற்றும் ''தமிழ் லேஸ்விங்'' ஆகிய வண்ணத்துப்பூச்சிகள் இறுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், "தமிழ் மறவன்' வகையை மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்க தமிழக அரசுக்கு முதன்மை தலைமை வனப் பாதுகாலவர் பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று, வனத் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் ''தமிழ் மறவன்'' வகையை மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளார்.
ஞாயிறு, 30 ஜூன், 2019
சனி, 29 ஜூன், 2019
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம்(கிளை)~மாவட்ட விரைவு செயற்குழுக் கூட்டம் அழைப்பிதழ்…
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை).
----------------------------------------
மாவட்ட விரைவு செயற்குழுக்
கூட்டம் அழைப்பிதழ்
---------------------------------------
அன்புடையீர்!வணக்கம்.
இடம்:
நகராட்சி தொடக்கப்பள்ளி,
கோட்டை,நாமக்கல்.
நாள்:
29.06.19(சனி).
நேரம்:
பிற்பகல் 02.00மணி.
தலைமை:
திரு.க.ஆசைத்தம்பி,
மாவட்டத்தலைவர்.
முன்னிலை:
திரு.பெ.பழனிசாமி,
மாநிலத்தலைமை
நிலையச்செயலாளர்.
பொருள்:
1) 2018-19 மற்றும்
2019-20 ஆம்கல்வியாண்டு உறுப்பினர்சேர்க்கை.
2) 2018மற்றும் 2019இயக்க நாள்குறிப்பேடு மற்றும் நாள்காட்டி.
3) மாவட்டப் பொறுப்புகளின் காலியிடங்கள் நிரப்புதல்.
4) சிறைச்செம்மல் பாராட்டுவிழா.
5) ஜாக்டோ-ஜியோ செயல்பாடுகள்.
6) ஆசிரியர் பொது மாறுதல் நடவடிக்கைகள்.
7)ஆசிரியர்கோரிக்கைகள்.
8)புதியகல்விக்கொள்கை எதிர்ப்பு நடவடிக்கைகள்.
9)மாவட்டச்செயலாளர் கொணர்வன.
தாங்கள் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
~முருகசெல்வராசன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)