செவ்வாய், 1 அக்டோபர், 2019

சந்தேகமே வேண்டாம்.. கீழடி வைகைக் கரை தமிழ்ப் பண்பாடு.. திராவிடம் அல்ல.. - ஆர்.பாலகிருஷ்ணன் IAS




கேள்வி: கீழடி அகழ்வாய்வு பற்றிய உரையாடல்களில் தமிழ் / தொல் தமிழ் / திராவிடம் என்ற சித்தரிப்புகளில் எது மிகவும் பொருத்தமானது?

விடை: ஐயத்திற்கே இடமில்லாமல் தமிழ்ப் பண்பாடு என்பதே பொருத்தமானது ஆகும். இந்தத் தடயங்கள் சங்க காலம் என்று அறியப்படும் கால கட்டத்தை சேர்ந்தது.
கீழடி சங்க இலக்கியங்கள் போற்றிக் கொண்டாடும் வைகை நதிக்கரையில் மதுரைக்கு அருகே அமைந்திருப்பதாலும் வைகைக் கரையின் இருபகுதியிலும் பல அகழ்வாய்வு இடங்கள் இருப்பதாலும் இதை "வைகைக் கரை தமிழ்ப் பண்பாடு" என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.‌

சங்க இலக்கியம் ஆகச் சிறந்த தொல் தமிழ் இலக்கியம்.‌ வைகைக்கரை அதன் முக்கியமான களம்.‌ எனவே இந்த நாகரிகம் பற்றிக் குறிப்பிடும் போது திராவிடம் என்ற‌ சொல்லை பயன்படுத்த ஒரு தேவையும் இல்லை. அது "புரிதல் விகாரத்தில்" போய் முடியும். அது நல்லது அல்ல.

கேள்வி: சிந்துவெளி பற்றிய உரையாடல்களில் "திராவிடம்" என்ற "தமிழ்" என்ற சொல்லாடல்களின் பொருத்தப்பாடு என்ன?

விடை:
சிந்துவெளிப் பண்பாட்டை கட்டமைத்தவர்கள் யார் என்பது பற்றி பல்வேறு ஊகங்கள் இருந்தாலும் சிந்துவெளி மகுடத்திற்கான முக்கியமாக இரண்டு வேட்பாளர்கள் தான்.

1. "திராவிட மொழிக் குடும்பம்" ( கிழக்கு ஈரான் ஆப்கானிஸ்தானில் தொடங்கி நடு இந்தியாவிலும் கிழக்கு இந்தியா நேபாளம் ஆகிய இடங்களில் அங்கும் இங்கும்; தென்னகம் முழுவதும்; இலங்கையிலும் இப்போது உலகின் பல பகுதிகளிலும் பேசப்படுகிற பல மொழிகள் அடங்கியது) என்று அறியப்படும் மொழியை / அல்லது மொழிகளைப் பேசிய பண்பாட்டினர்.

2. இந்தோ - ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த சமஸ்கிருதம் என்ற வட மொழியை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டினர்.

சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் தமிழ்த்தொன்மங்களுக்கும் பண்பாட்டு தொடர்ச்சி என்ற முறையில் ஒரு மிக ஆழமான உறவு இருந்திருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.

ஆனாலும் இந்த தொடர்பு மொழியியல் அடிப்படையில் "திராவிடக் கருதுகோள்" என்றே ஆய்வாளர்களிடையே தொடக்கம் முதல் அறியப்படுகிறது. சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகளை இது வரை வாசிக்க இயலாததால் குறிப்பிட்ட ஒரு மொழி என்று சொல்லாமல் மொழிக்குடும்பத்தின் பொது அடையாளமாக "திராவிடம்" என்ற அடையாளத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பிராகுயி என்ற திராவிட மொழி சிந்துவெளிப் பண்பாட்டின் கடைவாசல் பகுதிகளில் இன்றும் பேசப்படுவதாலும் கோண்டி போன்ற நடு இந்திய திராவிட மொழியின் சில பண்பாட்டு கூறுகள் சிந்துவெளி பொறிப்புகளுடன் நெருக்கம் காட்டுவதாலும் இத்தகைய பொதுவான சித்தரிப்பு தேவைப்படுகிறது.

சிந்துவெளிப் பண்பாடே பல்வேறு திணைகளைச் ( நிலப்பின்னணிகள்) சேர்ந்த பலவகையான சமூகப் பொருளாதார பண்பாட்டு பின்னணியின் கூட்டு இயக்கம் தான் என்று தோன்றுகிறது. மலை நில மக்களின் வாழ்விற்கும் கடல் கடந்து வணிகம் செய்த வணிகர்களின் வாழ்க்கைக்கும் மிகுந்த இடைவெளி இருக்கும். ஆனால் சிந்துவெளிப் பண்பாடு இந்த இரண்டு துருவங்களும் எளிதில் சேர்ந்து இயங்கிய பண்பாட்டின் தொடர்ச்சியும் நகர்மய வாழ்வின் உன்னதமான உச்ச கட்டமும் ஆகும்.
சிந்துவெளியின் பரந்த நிலப்பரப்பிலும் பல்வேறு நகரங்களிலும் நகர அமைப்பு, செங்கல் அளவு, எடைக் கற்கள், எழுத்துப் பொறிப்புகள், முத்திரைகள் என்று பொதுக்கூறுகள் உள்ளன. இந்தத் தரக் கட்டுப்பாடு ஒரு பண்பட்ட மொழி/ தொடர்பு மொழி இல்லாமல் சாத்தியமாகாது. ஆனால் அந்த மொழி எதுவென்று உறுதியாக சொல்லமுடியவில்லை.

ஆனால் அந்த உயர் நாகரிகத்தின் தொடர்ச்சியை அந்தப் பண்பாட்டோடு பொருத்தப்பாடு கொண்ட இன்னொரு ஆவணப்படுத்தப்பட்ட அடுத்தகட்ட பண்பாட்டு மரபில் இலக்கிய மரபில் தான் தேட வேண்டும். அங்கு தான் சங்க இலக்கியம் முக்கியமான சான்றாக நிற்கிறது.

ஒருவேளை சிந்துவெளிப் பண்பாட்டின் பொது நாகரிக மொழியாக தமிழ் அறியப்படும், நிறுவப்படும் சூழல் வந்தால் அப்போது ஆய்வாளர்கள் சிந்துவெளிக்கான மொழி அடையாளம் குறித்து தெளிவாக உரையாடுவார்கள்.

அதுவரை சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி குறித்த தேடலில் "திராவிடக் கருதுகோள்" என்ற சொல்லாடல் தேவையானதும் தவிர்க்கமுடியாததும் ஆகும். இல்லையென்றால் அது புதிய குழப்பத்தை ஏற்படுத்தும். 
-R Balakrishnan IAS

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் தலைமையாசிரியர் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்ந்து செயல்முறை- CEO


Go RT No:4083 விஜிலென்ஸ் ஆணையம் & லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பு திரு.சண்முகம் IAS அரசு முதன்மை செயலாளர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


02.10.2019 நடைபெறும் கிராம் சபை கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - நாமக்கல் CEO

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் 30.09.19்அன்று படைத்துள்ள பத்து ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கை விண்ணப்பங்கள்











தமிழ்நாடு அரசு விதிகளின் படி விலையில்லா நலத்திட்டப்பொருள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட வேண்டும்.தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்...

தமிழ்நாடு அரசு விதிகள் ஒன்றியத்திற்கு ஒன்றியம் மாறுபடும், வேறுபடும் சீரற்றச் செயல்பாட்டை  ஆட்சேபிப்போம்!கண்டிப்போம்!தண்டனை கோருவோம்!
-------------------------------- 
அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு அரசு விதிகள் மற்றும் கல்வித்துறை செயல்முறைகள் அனைத்தும் 
 ஏக காலத்தில், ஒரே மாதிரியாக,
ஒரே சீராக அமலாகி வருகிறது என்று தான் நம்பிக்கை வைக்கப்படுகிறது.
இத்தகு நம்பிக்கையை இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகம் தவிடுபொடியாக்குகிறது.  
எப்படி ?!என்கிறீர்களா?!இதோ!இப்படித்தான்.

பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா நலத்திட்டப் பொருட்கள் பள்ளிகளுக்கே நேரடி விநியோகம் செய்யப்படும் என்கிறது பள்ளிக் கல்வித்துறை. ஆனால் இராசீபுரத்தில் மட்டும் இதை எதிர்பார்க்க கூடாது.

சரக்குந்து வாடகைக்கு வைத்து , அரசு செலவில்,
அரசு நிதியில் பள்ளிக்கே நலத்திட்டப்பொருள்கள் மாநிலமெங்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
 ஆனால் இராசிபுரம் ஒன்றியத்தில் மட்டும் சரக்குந்து வைத்து நலத்திட்டப்பொருள்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை. அரசுவிதிகளுக்கு நேர்எதிராக பள்ளித்தலைமையாசிரியர்களும்,ஆசிரியப்பெருமக் களும் சாக்குப்பைகளை கொண்டுவந்து நலத்திட்டப்பொருள்களை எடுத்துச்செல்லவேண்டுமென்று இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகத்தால் பணிக்கப்படுகிறது .

கடந்தவாரம் விலையில்லாச் சீருடையை 
தூக்கிச் சுமந்தனர்.
இந்தவாரம் பாடநூல்கள் ,
குறிப்பேடுகள் தூக்கி சுமக்கின்றனர். கொஞ்சமும் கூட மனிதநேயமும், ஈவும்,இரக்கமும் இன்றி பள்ளித்தலைமையாசிரியர்களை, ஆசிரியப்பெருமக் களை அலைக்கழித்து, சுமை தூக்கிடச் செய்து சுமைதூக்கிகளாக்கி  வேடிக்கை பார்க்கும்,  
அழகு பார்க்கும் நெறியற்ற, முறையற்றச் செயலை தமிழ்நாடு தொடக் கப்பள்ளி்ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆட்சேபிக்கிறது.
இது குறித்து கீழ்க்கண்டவாறு கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1)விலையில்லா நலத்திட்டப்பொருள்களின் பள்ளி விநியோகத்திற்கு என்று இராசிபுரம் 
வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசால் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது தானே?!இவ்வாறு  ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பகிர்ந்து அளித்திடல் வேண்டும். பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு இதுவரை கடந்த கல்வி ஆண்டுகளிலும்  ஏற்படுத்தியுள்ள செலவுகளை இராசீபுரம் வட்டாரக்கல்வி நிர்வாகம்  ஈடுசெய்திடவேண்டும்; திருப்பித்தந்திடவேண்டும்.

2)தமிழ்நாடு அரசு விதிகளை அப்பட்டமாக, மிகத்துணிச்சலாக புறந்தள்ளிவிட்டு பள்ளித்தலைமையாசிரியர்களை, ஆசிரியப்பெருமக்களை சுமைதூக்கிகளாக்கி படாதபாடு படுத்தி துன்பம் விளைவித்ததற்கு இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகம் மன்னிப்பு வேண்டுதல் வேண்டும்.

3)எதிர்வரும் விலையில்லா நலத்திட்டப்பொருள்களின் விநியோகத்தில் எவ்விதமான குறைபாடும் ஏற்படாது ,அரசு விதிகள் மீறப்படாது என்று உத்திரவாதம் அளித்திடல் வேண்டும்.

4)தமிழ்நாடு அரசின் நிதியினை இராசீபுரம் வட்டாரக்கல்வி நிர்வாகம்  தவறாக கையாண்டது, முறைகேடாக செலவிட்டது குறித்து ஆய்வும், விசாரணையும் நடத்தி தவறிழைத்தவர்களின்  மீது கடுமையான  ஒழுங்குநடவடிக்கைகள்  மேற்கொள்ளல் வேண்டும். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் மேற்கண்ட நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படுவதில் சுணக்கமான நிலை 
நிர்பந்தங்களின் வழியில் உருவாக்கப்படின் அல்லது  காணப்படின் ,
பல்வேறு வகைகளிலும் பெரிதும்.  பாதிக்கப்பட்டுள்ள இராசீபுரம் ஒன்றியத் தலைமையாசிரியர்களுக்கான  ,ஆசிரியப்பெருமக்களுக்கான  நீதிக்கான தொடர் நடவடிக்கைகளை மாவட்ட அமைப்பு  மேற்கொள்ளும்! நீதிக்கான நெடும்பயணத்தில் ஆசிரியர் மன்றமே வெல்லும்!
#நாளை நமதே!
நன்றி.
-முருகசெல்வராசன்.

திங்கள், 30 செப்டம்பர், 2019

இரண்டாம் பருவம் நோட்டு புத்தகங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறை


நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் தலையீட்டினை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோருகிறது...



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் 30.09.19்அன்று கோரிக்கைமனு படைப்பு...

அன்பானவர்களே!🙏 வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் முருகசெல்வராசன் 
மற்றும்
நாமக்கல் ஒன்றியச் செயலாளர் அ.செயக்குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை 30.09.19(திங்கள்)பிற்பகல் 05.40மணியளவில் சந்தித்தனர்.
இச்சந்திப்பில்   பள்ளிப்பாளையம்,மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை,சேந்தமங்கலம்,
எருமப்பட்டி, நாமக்கல்,  பரமத்தி 
மற்றும்  கபிலர்மலை ஆகிய 10் ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஒன்றியம் வாரியாக கேட்டுக் கொண்டுள்ள நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்விமாவட்டங்களின் மாவட்டக்கல்வி அலுவலர்களின் வழியில் தொடர்புடைய வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை அளித்தார்கள். நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் இன்றையச் (30.09.19)சந்திப்பு நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிதும் பயனும்,பலனும் தந்திடும் என்று நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் நம்புகிறது.நன்றி.
-முருகசெல்வராசன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) ஒன்றிய செயலாளர்கள் கூட்டச் செய்திகள் இன்றைய நாளேடுகளில்



 🎆🌲