செவ்வாய், 15 அக்டோபர், 2019

*அக்டோபர்-15 -உலக கை கழுவும் தினம்.*

*🌷அக்டோபர் 15- உலக கை கழுவும் தினம்!*

*நமக்கு வரும் நோய்களில் பல கை கழுவாமல் உண்பதால் ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். இன்று, அக்டோபர் 15ஆம் தேதி உலக கை கழுவும் தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந்த தினம் அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கமே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குதான்.*

*தமிழகத்தில் 90 சதவிகிதத்துக்கு அதிகமானவர்கள் உணவு சாப்பிட கைகளைப் பயன்படுத்துகிறார்கள். கைகள் சுத்தமாக இல்லாமல் இருந்தால், வயிற்று நோய் மற்றும் சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. கைகள் சுத்தமாக இருந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவிகிதம் வராமல் தடுக்க முடியும். ஐந்து வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளின் உயிரிழப்பின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். இந்தியாவில், கைகளை முறையாக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்துக்கு ஐந்து லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.*


*இக்காரணத்துக்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அதனால், கைகளை சுத்தமாகக் கழுவினால் இதுபோன்ற நோய்களைத் தடுக்க முடியும்.*

*கைகளை எப்போது, எவ்வாறு கழுவ வேண்டும்?*

*கைகளை அவசர அவசரமாக 2-3 விநாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 விநாடியாவது கை கழுவ வேண்டும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். கழிவறை சென்று வந்த பின் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.*

*எந்த வேலை செய்தாலும், உடனே கை கழுவுதல் வேண்டும். சமைத்த பின்புகூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.*

*வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே கற்று கொடுக்க வேண்டும். அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை கை கழுவ பயன்படுத்தக்கூடாது. கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, 60 சதவிகி
த நோய்களைத் தடுக்கலாம்.*

*அக்டோபர்-15 வரலாற்றில் இன்று.இளைஞர் எழுச்சி நாள்.*

*🌷
அக்டோபர்-15 வரலாற்றில் இன்று*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

*🌷இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாமின் 88வது பிறந்த நாள் இன்று*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------
*மண்ணின் பிறந்த அனைவருமே மகான்களாக மாறுவதில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்த அனைவருமே சரித்திரம் படைத்ததில்லை.* *இந்தியாவின் கடைக்கோடியில் ராமேஸ்வரத்தில் மீனவ கிராமத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்தியாவின் உயரிய பதவியான இந்திய குடியரசு தலைவராக தன்னம்பிக்கையாலும்,* *முயற்சியாலும் முன்னேறியவர். இந்த வகையில் இந்திய இளைஞர்களுக்கு அவர் வாழ்ந்துகாட்டி,* *வழிகாட்டியாகவும் செயல்பட்டு எழுச்சி நாயகனாக மாறியுள்ளார். அவரது  பிறந்த தினம் இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.*

*விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவ மேதைகள், ஈடு இணையில்லா தலைவர்கள் என பலரையும் இந்தியாவிற்கு தமிழன்னை வழங்கியுள்ளாள். அந்த வகையில் 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்றும், 'அணுசக்தி நாயகன்' என்றும்,* *'தலைசிறந்த விஞ்ஞானி' என்றும், 'திருக்குறள் வழி நடந்தவர்' என்றும், 'இளைஞர்களின் எழுச்சி* *நாயகன்' என்றும் போற்றப்படும் பன்முகத் தலைவர் 'பாரத ரத்னா'* *டாக்டர் ஹமீது அப்துல் கலாம் அவர்கள் தமிழகம் பெற்றெடுத்த தலைமகன் ஆவார்.*

*இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்படும் அவுல் பக்கீர் ஜெயினுலாவுதீன் அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம்* *தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஜெயினுலாவுதீன் மரைகாயர். தாய் ஆஷியம்மாள். வறுமை* *குடும்பத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பின் போது நாளிதழ்களை விற்று அதன் மூலம் படித்தவர்.*


*ஏவுகணை நாயகன்*
*தனது ஆரம்ப கல்வியை ராமேஸ்வரத்தில் முடித்த* *அப்துல் கலாம் உயர்கல்வியை ராமநாதபுரத்தில் முடித்தார். பின்னர் திருச்சி ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம், சென்னை எம்.ஐ.டியில் எரோநாட்டிக்கள் பட்டமும் பெற்றார். அதன்பிறகு* *இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் 1963ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த அவர் 20 ஆண்டுகளாக கேரளாவில் உள்ள தும்பா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தார்.*

*அக்னி மனிதர்*
*பின்னர், ஒடிஷா மாநிலம்* *சண்டிபூரில் உள்ள ராக்கெட் ஏவுகணைத் தளத்திலும் 20* *ஆண்டுகளாக அவர் பணியாற்றினார். பிறகு அக்னி, பிருத்வி உள்ளிட்ட பல ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்தினார் கலாம்.*


*அறிவியல் ஆலோசகர்*
*1982ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள* *விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.* *1998ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா நடத்திய பொக்ரைன் அணுகுண்டு சோதனைக்கு மூளையாக அப்துல் கலாம் செயல்பட்டார் . அவர்* *மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் 1999 நவம்பர் முதல் 2001* *நவம்பர் வரை பணியாற்றினார்.இதேபோல் அறிவியல் ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.*

*விருதுகளுக்கு பெருமை*
*அப்துல் கலாமிற்கு, மத்திய அரசு கடந்த 1981ஆம்* *ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதனைத்* *தொடர்ந்து நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமிற்கு கடந்த 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.*

*குடியரசுத்தலைவர்*
*2002ம் ஆண்டு இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்தெடுக்கப்பட்டார்.* *மக்கள் குடியரசு தலைவராக இருந்த இவர் மாணவர்களிடம் அதிகமாக உரையாடினார். மரம் வளர்ப்பு,சுற்றுசுழல்* *பாதுகாப்பு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இந்திய வல்லரசாக வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.*

*சிறந்த ஆசிரியர்*
*அப்துல் கலாம் அவர்கள் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார்.* *இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும்,* *கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும்,* *இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் ஊக்க சக்தியாவும் விளங்கினார்.*


*கனவு காணுங்கள்*
*இந்தியா வல்லரசாக உருவெடுக்க,* *மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான்* *மாணாக்கர்களை, ‘கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது.* *உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்' என* *தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக எடுத்துக் கூறினார்.* *'வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டமில்லாமல் இருப்பது தான் வெற்றி* *பெறுவதற்கான சிறந்த வழி' என வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார் கலாம்.*

*மாணவர்கள் மத்தியில் மரணம்*
*மாணவர்கள் என்றால் கலாமிற்கு கொள்ளை பிரியம். கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருக்கையில் மயங்

திங்கள், 14 அக்டோபர், 2019

EMISஇணையத்தில் என்னென்னசெய்ய வேண்டும் - CEO


பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள் 13.10.2019


அக்டோபர்15 கை ✋ கழுவும்தினம் பள்ளிகளில் பின்பற்ற வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை





ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019-20 மானியத் தொகை - செலவீனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2019 - 20ம் நிதியாண்டு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி மானியத் தொகை ( School Grant ) - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பள்ளி மானியத்தினைக் கீழ்க்காணும் இனங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.*
*1⃣.பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10 % தொகை SWACHHTA ACTION PLAN 2019-20 (SAP) முழு சுகாதாரத் தமிழகம் என்ற இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.*
*மேற்படி 10 % தொகையினை முழு சுகாதார செயல் திட்டத்திற்கு (Swachhta Action Plan) கீழ்க் குறிப்பிட்டுள்ள இனங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.*
*✅பள்ளி வகுப்பறை,*
*✅வளாகத் தூய்மை,*
*✅கழிப்பறையைச் சுத்தமாக,சுகாதாரமாக பராமரித்தல்,*
*✅கை கழுவ வசதி (Hand washing facility) பயன்படுத்துதல்,*
*✅தூய்மையான குடிநீர்*

*போன்ற செயல்பாடுகளுக்கு மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.*
*2⃣.பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள*

*🌸கற்றல் உபகரணங்களை மாற்றவும்,*
*🌸பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான*
*🌷நாளிதழ்கள்,*
*🌷மின்கட்டணம்,*
*🌷இணையதள வசதி,*
*🌷ஆய்வக உபகரணம்,*
*🌷குடிநீர்,*
*🌷கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்,*
*போன்றவற்றிற்கு இந்த நிதியை பயன்படுத்த வேண்டும்.*
 
3⃣. அரசு பள்ளிக் கட்டிடங்களின் கட்டமைப்பு வசதிகளை (கழிவறை, குடிநீர்...) ச பங்களிப்புடன் பராமரிக்கவும்,பழுதுபார்க்கவும் மற்றும் துாய்மை இந்தியா திட்டத்தினை ஊக்குவித்திட இந்த நிதியை பயன்படுத்தவேண்டும்.

4⃣.தலைமையாசிரியர் இத்தொகையினை பயன்படுத்தும் முன் பள்ளி மேலாண்மை  குழுவினர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்து ஆலோசித்து இந்த ஆண்டு எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து அதனை தீர்மானமாக பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானம் பதிவேட்டில் முறையாக பதிவு செய்த பின்பு*
*15. 03. 2020 - க்குள் செலவுகள் மேற்கொள்ள வேண்டும்.

5⃣.பள்ளி மானிய செலவினங்கள் (School Grant) பள்ளிகள் தேவையை உணர்ந்து அத்தியாவசியமான தரமான பொருட்களை கொள்முதல் செய்வதற்கான விதிகளை பின்பற்றி வாங்க வேண்டும்.

6⃣.மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளிகளுக்கு பார்வைக்குச் செல்லும் போது பள்ளி மானியம் முறையாக செலவிடபட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

 7⃣.Financial Management Mannual 7. 14 (I&II) level of procurement - ன் படி பள்ளி மானியம் பள்ளி அளவிலேயே செலவிடப்பட வேண்டும்.
கொள்முதல் விதிகளை பின்பற்றி,
🌹தரம்,
🌹விலை,
🌹பயன்பாடு
ஆகியவற்றை கவனத்தில் கொண்டு SMC அளவிலேயே கொள்முதல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கொள்முதல் விதிகள் மேற்கொண்ட பின்னர்
✅பொருட்களின் தரம்
 மற்றும்
✅நம்பகத் தன்மை*
General Financial Rules ( GFR )* *145 , 146 படி உரிய சான்றிதழில் தலைமை ஆசிரியர் / கொள்முதல் குழுவினர் கையொப்பமிட்டு Procurement file - ல் இணைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

8⃣.மேற்கொள்ளப்பட்ட அனைத்து செலவினங்களுக்கு
 ✅தீர்மான நகல்*
 ✅தேவைப்பட்டியல்
 ✅விலைப்புள்ளி & ஒப்புநோக்கு பட்டியல் பற்றுச்சீட்டு
 ✅GFR 145 / 146 சான்றிதழ் பதிவேடு
ஆகியவற்றை முறையாக பாராமரித்து துறைத் தணிக்கையாளர் மற்றும் ஆய்வின் போது தலைமையாசிரியர் முன்னிலைப்படுத்க வேண்டும்.
9⃣.மேலும் செலவினங்கள் மேற்கொண்டமைக்கான பயன்பாட்டுச் சான்றிதழை மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி அனைத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் / தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1⃣0⃣.உதவித் திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கணக்கர் பள்ளி மானியத் தொகை (School Grant) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும். பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் (Utilization Certificate) பெற்று, மாவட்ட அளவில் தொகுத்து மாவட்டத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழை மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு 10. 04. 2020 க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்.*
1⃣1⃣.பள்ளி மானியத் தொகையினை இச்சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகளை தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாகாது என தெரிவிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் இத்தொகையினை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1⃣2⃣.பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இப்பொருள் குறித்து உரிய விவரங்களை தெரிவித்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
மாநில திட்ட இயக்குநர்

அக்டோபர் 14- வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் *

*🌷அக்டோபர் 14 வரலாற்றில் இன்று.*


*🌷உலகத்தர நிர்ணய தினம்*

*(World Standards Day)*

*உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 1946ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. உலகத் தர நிர்ணய தினம் 1970ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொ
ருட்களே உலகைக் காக்கும் என தர நிர்ணய அமைப்பு கூறுகிறது.*
 ----------------------------------------------------------

*🌷உடல் உறுப்புகள் தானம் மற்றும் சிகிச்சை தினம்*

*(World Day for Organ Donation and Transplantation)*

*நாம் இறந்த பிறகும் ஒருவரை வாழவைப்பது என்பது உடல் உறுப்புகளை தானம் செய்வதன்மூலம் நடக்கிறது. ஒருவர் இருபதிற்கும் மேற்பட்ட உறுப்புகளை தானமாக வழங்கலாம். இறந்த பிறகு யாருக்கும் பயன்படாது போகின்ற உறுப்புகளை தானம் செய்வதன்மூலம் பலரை வாழ வைக்கலாம். உடல் உறுப்புதானத்தை வலியுறுத்தி 2005ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.*

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

*🌷அ
க்டோபர் 13, வரலாற்றில் இன்று.*

*🌷சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினம் இன்று.*


*நிலநடுக்கம், வெள்ளம், புயல், இடி, மின்னல், எரிமலை போன்றவை பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை இன்னல்களாகும். சாலை விபத்து, தீ விபத்து, நீரில் மூழ்குதல், கட்டிட விபத்து போன்றவை மனிதனின் கவனக் குறைவாலும், அறியாமையினாலும் தோற்றுவிக்கப்படும் இன்னல்களாகும். இன்னல்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபட உதவும் உத்திகளை அறிந்து செயல்படுவதை பேரிடர் மேலாண்மை என்கிறோம்.*

*ஒன்றும் அறியா பள்ளிக் குழந்தைகள் கூட,*
*இத்தகைய பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கும்பகோணம் பள்ளி தீ விபத்து இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.*

*உலகெங்கும் பெரும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் ஆபத்து பெருகி வருகிறது. இதிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்று மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை 1990 முதல்  அறிவித்தது. உலக நாடுகளில், குறிப்பாக வளரும் நாடுகளில் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் மோசமான விளைவுகள் நிகழாமல் செய்வதும், பாதிப்பைக் குறைப்பதும் இந்தப் பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.*

*உலகத்தில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானவை ஆசிய, பசிபிக் பகுதியில்தான் ஏற்படுகின்றன. புவியியல் அமைப்பாலும், வானிலையாலும், பூகோள அமைப்பாலும் இந்தப் பேரிடர்களில் பெரும்பாலானவை இந்தியாவில் ஏற்படுகின்றன.*

*புயலால் 41% நிலநடுக்கத்தால் 37%, வெள்ளத்தால் 16%, சூறாவளிப் புயலால் 2%, பனிப்புயல், எரிமலை, வெப்ப அலை, நிலச்சரிவு, பேரலைகளால் ஒவ்வொன்றுக்கும் 1% குறைவான உயிர்சேதம் ஏற்படுகிறது என ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.*

*நமது நாட்டில் 55% நிலப்பரப்பு நில நடுக்கத்தால் பாதிக்கப்படும் பகுதியாகும். இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளை ஐந்து மண்டலாகப் பிரித்துள்ளார்கள். தமிழ்நாடு இரண்டாவது மண்டலமாக உள்ளது.*
*🌷அக்டோபர் 13, வரலாற்றி
ல் இன்று.*

*🌷தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் இன்று.*

 *சங்கரலிங்கனார் இளமையில் நாட்டு விடுதலையில் நாட்டமும், ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார்.*

 *கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரப் போராட்ட உரையினைக் கேட்டு விடுதலை உணர்வு பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1908ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்துக் கொண்டார்.*

                *விருதுநகரில் ‘பங்கஜ விலாச வித்தயாபிவர்த்திச் சங்கம்’ என்னும் அமைப்பை 1914 ஆம் ஆண்டு ஏற்படுத்தி, பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சுவாமி திருவாலவாயர் செயல்பட்டார். சங்கரலிங்கனார் அச்சங்கத்தின் செயலாளராகத் தொண்டாற்றினார்.*

                *சங்கரலிங்கனார் செந்தியம்மாள் என்பவரை 1915 ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். தன் முதல் மகளுக்கு பங்கசம் என்று பெயர் சூட்டினார்.*

                *சங்கரலிங்கனார் ‘மாதர் கடமை’ என்னும் நூலை எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து சங்கரலிங்னாருக்கு மூதறிஞர் இராஜாஜியின் தொடர்பும் நட்பும் ஏற்பட்டது.*

                *அதே ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் இராஜாஜியை சந்தித்தது உரையாடினார்.*

 *அவரும் அவரது குடும்பத்தினரும் கதரே உடுத்துவதென*
*1922ஆம் ஆண்டு முதல் முடிவு செய்தனர். கதர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ‘விருதுநகர் கதர் வஸ்திராலயம்’ என்னும் கதர்க் கடையைத் திறந்தார். கதர் விற்பனையை அவர் அதிகமாகச் செய்ததைப் பாராட்டி 26.04.1926இல் சுதேசமித்திரன் இதழ் ஒரு பாராட்டுச் செய்தி வெளியிட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் கதர் வாரியத் தலைவராக தந்தை பெரியாரும், செயலாளராக எஸ்.இராமநாதனும் தொண்டாற்றினர்! விருதுநகருக்கு தந்தை பெரியாரை 1924 ஆம் ஆண்டு அழைத்து, த.இரத்தினசாமி நாடார் நினைவு வாசக சாலை சார்பாக பொதுக் கூட்டம் நடத்தினார்.*

      *காந்தியடிகளை 16.02.1925 பம்பாயில் சந்தித்தார். அன்று முதல் நாள்தோறும் நூல் நூற்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘மகாத்மா காந்தி கதர் வஸ்திராலயா’ என்னும் கதர்க்கடையில் பணியாற்றினார். 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் விருதுநகர் வருகை புரிந்த போது சிறப்பான ஏற்பாடுகளை சங்கரலிங்கனார் செய்தார். காந்திஜி தங்கிய கிராமத்திற்கு நகராட்சியின் ஒப்புதல் பெற்று ‘காந்தி தங்கல்’ என்று பெயர் சூட்டினார். காந்திஜி உப்புச் சத்தியாகிரகத்துக்காக 1930 ஆம் ஆண்டு தண்டியாத்திரை தொடங்கியபோது சங்கரலிங்கனார் மூன்று நாட்கள் காந்தியடிகளுடன் பயணம் மேற்கொண்டார்.*

   *காந்தியடிகளின் தலைமையில் 1930-31 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில், சங்கரலிங்கனார் சென்னை, திருச்செங்கோடு, ஈரோடு, காரைக்குடி ஆகிய நகரங்களுக்குச் சென்று தலைவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். சங்கரலிங்கனார் கரூர், திருச்சி முகாம்களிலிருந்து சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தினார்.*

       *திருச்சி சத்தியாக்கிரகப் போராட்ட வழக்கில் ஆறு மாத‌ங்கள் கடுங்காவல் தண்டனையும், கரூர் வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்தார்.*

   *அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த ரூபாய் நான்காயிரத்தையும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்தார். அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக உப்பில்லாக் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். பெருந்தலைவர் காமராசர் பின்னர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடியானதாகும்!*
 *தியாகி சங்கரலிங்கனார் பழம்பெரும் காங்கிரஸ் தியாகி; நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார். தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956இல் விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று – மானமே பெரிது” என்ற இலட்சியப் பிடிப்புடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை மேற்கொண்டார். 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த அவர் 1956 அக்டோபர் 13இல் காலமானார்.*

*12 அம்சக் கோரிக்கைகள்:*

*1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்*

*2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.*

*3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.*

*4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.*

*5. அரசுப் பணியி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் , சட்ட மேலவை மேனாள் உறுப்பினர் பாவலர் திரு க. மீனாட்சி சுந்தரம் அவர்களின் அறிக்கை