புதன், 16 அக்டோபர், 2019
*அக்டோபர் 16-வரலாற்றில் இன்று.*
*🌷அக்டோபர் 16, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
*➰வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று (1799).*
*தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வீர மன்னர் கட்டபொம்மன். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலாண்மையை ஏற்க மறுத்து அவர்களுக்கு கப்பம் கட்ட மறுத்தார்*1797இல்* *முதன் முதலாக* *ஆங்கிலேயரான ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மனிடம் போரிட்டு தோற்றுப்போனார்.*
*1799இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டு பின்னர் கைப்பற்றப்பட்டது.* *பாஞ்சாலன்குறிச்சியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் புதுக்கோட்டையில் பதுங்கினார். எனினும் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார்*. *1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16, ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் வீரப்பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.*

*அக்டோபர்-16 வரலாற்றில் இன்று*
*🍎
அக்டோபர் 16, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
*🥕🥒🍊🥛உலக உணவு தினம் இன்று.*
*உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.*
*உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.உணவு தொடர்பான பிரச்னையில் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதும் இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. உணவில் மாவு, புரதம், தாது, கொழுப்பு, உயிர் சத்து (விட்டமின்) போன்றவை கலந்து இருப்பதே சரிவிகித உணவாகும். உயிர்ச்சத்தும் தாது உப்புகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.*
*உலக வங்கி தகவல்படி உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சுமார் 7 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி காரணமாக உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு 3 வேளை உணவு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே சமச்சீரான வளர்ச்சியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். எதிர் காலங்களில் பட்டினியால் சாவு என்பதை தவிர்க்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.*
*உலகளவில் அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது 1986 முதல் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நார்மன் போர்லாக் என்ற அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இந்த விருது பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இதுவரை எம்.எஸ். சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட 6 பேர் இவ்விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.*

செவ்வாய், 15 அக்டோபர், 2019
*அக்டோபர்-15 -உலக கை கழுவும் தினம்.*
*🌷அக்டோபர் 15- உலக கை கழுவும் தினம்!*
*நமக்கு வரும் நோய்களில் பல கை கழுவாமல் உண்பதால் ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். இன்று, அக்டோபர் 15ஆம் தேதி உலக கை கழுவும் தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந்த தினம் அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கமே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குதான்.*
*தமிழகத்தில் 90 சதவிகிதத்துக்கு அதிகமானவர்கள் உணவு சாப்பிட கைகளைப் பயன்படுத்துகிறார்கள். கைகள் சுத்தமாக இல்லாமல் இருந்தால், வயிற்று நோய் மற்றும் சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. கைகள் சுத்தமாக இருந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவிகிதம் வராமல் தடுக்க முடியும். ஐந்து வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளின் உயிரிழப்பின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். இந்தியாவில், கைகளை முறையாக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்துக்கு ஐந்து லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.*
*இக்காரணத்துக்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அதனால், கைகளை சுத்தமாகக் கழுவினால் இதுபோன்ற நோய்களைத் தடுக்க முடியும்.*
*கைகளை எப்போது, எவ்வாறு கழுவ வேண்டும்?*
*கைகளை அவசர அவசரமாக 2-3 விநாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 விநாடியாவது கை கழுவ வேண்டும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். கழிவறை சென்று வந்த பின் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.*
*எந்த வேலை செய்தாலும், உடனே கை கழுவுதல் வேண்டும். சமைத்த பின்புகூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.*
*வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே கற்று கொடுக்க வேண்டும். அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை கை கழுவ பயன்படுத்தக்கூடாது. கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, 60 சதவிகி
த நோய்களைத் தடுக்கலாம்.*

*அக்டோபர்-15 வரலாற்றில் இன்று.இளைஞர் எழுச்சி நாள்.*
*🌷
அக்டோபர்-15 வரலாற்றில் இன்று*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
*🌷இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாமின் 88வது பிறந்த நாள் இன்று*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------
*மண்ணின் பிறந்த அனைவருமே மகான்களாக மாறுவதில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்த அனைவருமே சரித்திரம் படைத்ததில்லை.* *இந்தியாவின் கடைக்கோடியில் ராமேஸ்வரத்தில் மீனவ கிராமத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்தியாவின் உயரிய பதவியான இந்திய குடியரசு தலைவராக தன்னம்பிக்கையாலும்,* *முயற்சியாலும் முன்னேறியவர். இந்த வகையில் இந்திய இளைஞர்களுக்கு அவர் வாழ்ந்துகாட்டி,* *வழிகாட்டியாகவும் செயல்பட்டு எழுச்சி நாயகனாக மாறியுள்ளார். அவரது பிறந்த தினம் இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.*
*விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவ மேதைகள், ஈடு இணையில்லா தலைவர்கள் என பலரையும் இந்தியாவிற்கு தமிழன்னை வழங்கியுள்ளாள். அந்த வகையில் 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்றும், 'அணுசக்தி நாயகன்' என்றும்,* *'தலைசிறந்த விஞ்ஞானி' என்றும், 'திருக்குறள் வழி நடந்தவர்' என்றும், 'இளைஞர்களின் எழுச்சி* *நாயகன்' என்றும் போற்றப்படும் பன்முகத் தலைவர் 'பாரத ரத்னா'* *டாக்டர் ஹமீது அப்துல் கலாம் அவர்கள் தமிழகம் பெற்றெடுத்த தலைமகன் ஆவார்.*
*இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்படும் அவுல் பக்கீர் ஜெயினுலாவுதீன் அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம்* *தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஜெயினுலாவுதீன் மரைகாயர். தாய் ஆஷியம்மாள். வறுமை* *குடும்பத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பின் போது நாளிதழ்களை விற்று அதன் மூலம் படித்தவர்.*
*ஏவுகணை நாயகன்*
*தனது ஆரம்ப கல்வியை ராமேஸ்வரத்தில் முடித்த* *அப்துல் கலாம் உயர்கல்வியை ராமநாதபுரத்தில் முடித்தார். பின்னர் திருச்சி ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம், சென்னை எம்.ஐ.டியில் எரோநாட்டிக்கள் பட்டமும் பெற்றார். அதன்பிறகு* *இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் 1963ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த அவர் 20 ஆண்டுகளாக கேரளாவில் உள்ள தும்பா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தார்.*
*அக்னி மனிதர்*
*பின்னர், ஒடிஷா மாநிலம்* *சண்டிபூரில் உள்ள ராக்கெட் ஏவுகணைத் தளத்திலும் 20* *ஆண்டுகளாக அவர் பணியாற்றினார். பிறகு அக்னி, பிருத்வி உள்ளிட்ட பல ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்தினார் கலாம்.*
*அறிவியல் ஆலோசகர்*
*1982ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள* *விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.* *1998ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா நடத்திய பொக்ரைன் அணுகுண்டு சோதனைக்கு மூளையாக அப்துல் கலாம் செயல்பட்டார் . அவர்* *மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் 1999 நவம்பர் முதல் 2001* *நவம்பர் வரை பணியாற்றினார்.இதேபோல் அறிவியல் ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.*
*விருதுகளுக்கு பெருமை*
*அப்துல் கலாமிற்கு, மத்திய அரசு கடந்த 1981ஆம்* *ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதனைத்* *தொடர்ந்து நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமிற்கு கடந்த 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.*
*குடியரசுத்தலைவர்*
*2002ம் ஆண்டு இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்தெடுக்கப்பட்டார்.* *மக்கள் குடியரசு தலைவராக இருந்த இவர் மாணவர்களிடம் அதிகமாக உரையாடினார். மரம் வளர்ப்பு,சுற்றுசுழல்* *பாதுகாப்பு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இந்திய வல்லரசாக வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.*
*சிறந்த ஆசிரியர்*
*அப்துல் கலாம் அவர்கள் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார்.* *இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும்,* *கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும்,* *இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் ஊக்க சக்தியாவும் விளங்கினார்.*
*கனவு காணுங்கள்*
*இந்தியா வல்லரசாக உருவெடுக்க,* *மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான்* *மாணாக்கர்களை, ‘கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது.* *உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்' என* *தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக எடுத்துக் கூறினார்.* *'வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டமில்லாமல் இருப்பது தான் வெற்றி* *பெறுவதற்கான சிறந்த வழி' என வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார் கலாம்.*
*மாணவர்கள் மத்தியில் மரணம்*
*மாணவர்கள் என்றால் கலாமிற்கு கொள்ளை பிரியம். கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருக்கையில் மயங்

திங்கள், 14 அக்டோபர், 2019
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019-20 மானியத் தொகை - செலவீனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2019 - 20ம் நிதியாண்டு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி மானியத் தொகை ( School Grant ) - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பள்ளி மானியத்தினைக் கீழ்க்காணும் இனங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.*
*1⃣.பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10 % தொகை SWACHHTA ACTION PLAN 2019-20 (SAP) முழு சுகாதாரத் தமிழகம் என்ற இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.*
*மேற்படி 10 % தொகையினை முழு சுகாதார செயல் திட்டத்திற்கு (Swachhta Action Plan) கீழ்க் குறிப்பிட்டுள்ள இனங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.*
*✅பள்ளி வகுப்பறை,*
*✅வளாகத் தூய்மை,*
*✅கழிப்பறையைச் சுத்தமாக,சுகாதாரமாக பராமரித்தல்,*
*✅கை கழுவ வசதி (Hand washing facility) பயன்படுத்துதல்,*
*✅தூய்மையான குடிநீர்*
*போன்ற செயல்பாடுகளுக்கு மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.*
*2⃣.பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள*
*🌸கற்றல் உபகரணங்களை மாற்றவும்,*
*🌸பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான*
*🌷நாளிதழ்கள்,*
*🌷மின்கட்டணம்,*
*🌷இணையதள வசதி,*
*🌷ஆய்வக உபகரணம்,*
*🌷குடிநீர்,*
*🌷கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்,*
*போன்றவற்றிற்கு இந்த நிதியை பயன்படுத்த வேண்டும்.*
3⃣. அரசு பள்ளிக் கட்டிடங்களின் கட்டமைப்பு வசதிகளை (கழிவறை, குடிநீர்...) ச பங்களிப்புடன் பராமரிக்கவும்,பழுதுபார்க்கவும் மற்றும் துாய்மை இந்தியா திட்டத்தினை ஊக்குவித்திட இந்த நிதியை பயன்படுத்தவேண்டும்.
4⃣.தலைமையாசிரியர் இத்தொகையினை பயன்படுத்தும் முன் பள்ளி மேலாண்மை குழுவினர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்து ஆலோசித்து இந்த ஆண்டு எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து அதனை தீர்மானமாக பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானம் பதிவேட்டில் முறையாக பதிவு செய்த பின்பு*
*15. 03. 2020 - க்குள் செலவுகள் மேற்கொள்ள வேண்டும்.
5⃣.பள்ளி மானிய செலவினங்கள் (School Grant) பள்ளிகள் தேவையை உணர்ந்து அத்தியாவசியமான தரமான பொருட்களை கொள்முதல் செய்வதற்கான விதிகளை பின்பற்றி வாங்க வேண்டும்.
6⃣.மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளிகளுக்கு பார்வைக்குச் செல்லும் போது பள்ளி மானியம் முறையாக செலவிடபட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
7⃣.Financial Management Mannual 7. 14 (I&II) level of procurement - ன் படி பள்ளி மானியம் பள்ளி அளவிலேயே செலவிடப்பட வேண்டும்.
கொள்முதல் விதிகளை பின்பற்றி,
🌹தரம்,
🌹விலை,
🌹பயன்பாடு
ஆகியவற்றை கவனத்தில் கொண்டு SMC அளவிலேயே கொள்முதல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கொள்முதல் விதிகள் மேற்கொண்ட பின்னர்
✅பொருட்களின் தரம்
மற்றும்
✅நம்பகத் தன்மை*
General Financial Rules ( GFR )* *145 , 146 படி உரிய சான்றிதழில் தலைமை ஆசிரியர் / கொள்முதல் குழுவினர் கையொப்பமிட்டு Procurement file - ல் இணைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
8⃣.மேற்கொள்ளப்பட்ட அனைத்து செலவினங்களுக்கு
✅தீர்மான நகல்*
✅தேவைப்பட்டியல்
✅விலைப்புள்ளி & ஒப்புநோக்கு பட்டியல் பற்றுச்சீட்டு
✅GFR 145 / 146 சான்றிதழ் பதிவேடு
ஆகியவற்றை முறையாக பாராமரித்து துறைத் தணிக்கையாளர் மற்றும் ஆய்வின் போது தலைமையாசிரியர் முன்னிலைப்படுத்க வேண்டும்.
9⃣.மேலும் செலவினங்கள் மேற்கொண்டமைக்கான பயன்பாட்டுச் சான்றிதழை மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி அனைத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் / தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1⃣0⃣.உதவித் திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கணக்கர் பள்ளி மானியத் தொகை (School Grant) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும். பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் (Utilization Certificate) பெற்று, மாவட்ட அளவில் தொகுத்து மாவட்டத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழை மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு 10. 04. 2020 க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்.*
1⃣1⃣.பள்ளி மானியத் தொகையினை இச்சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகளை தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாகாது என தெரிவிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் இத்தொகையினை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1⃣2⃣.பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இப்பொருள் குறித்து உரிய விவரங்களை தெரிவித்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
மாநில திட்ட இயக்குநர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)