*🌷
அக்டோபர்-15 வரலாற்றில் இன்று*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
*🌷இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாமின் 88வது பிறந்த நாள் இன்று*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------
*மண்ணின் பிறந்த அனைவருமே மகான்களாக மாறுவதில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்த அனைவருமே சரித்திரம் படைத்ததில்லை.* *இந்தியாவின் கடைக்கோடியில் ராமேஸ்வரத்தில் மீனவ கிராமத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்தியாவின் உயரிய பதவியான இந்திய குடியரசு தலைவராக தன்னம்பிக்கையாலும்,* *முயற்சியாலும் முன்னேறியவர். இந்த வகையில் இந்திய இளைஞர்களுக்கு அவர் வாழ்ந்துகாட்டி,* *வழிகாட்டியாகவும் செயல்பட்டு எழுச்சி நாயகனாக மாறியுள்ளார். அவரது பிறந்த தினம் இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.*
*விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவ மேதைகள், ஈடு இணையில்லா தலைவர்கள் என பலரையும் இந்தியாவிற்கு தமிழன்னை வழங்கியுள்ளாள். அந்த வகையில் 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்றும், 'அணுசக்தி நாயகன்' என்றும்,* *'தலைசிறந்த விஞ்ஞானி' என்றும், 'திருக்குறள் வழி நடந்தவர்' என்றும், 'இளைஞர்களின் எழுச்சி* *நாயகன்' என்றும் போற்றப்படும் பன்முகத் தலைவர் 'பாரத ரத்னா'* *டாக்டர் ஹமீது அப்துல் கலாம் அவர்கள் தமிழகம் பெற்றெடுத்த தலைமகன் ஆவார்.*
*இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்படும் அவுல் பக்கீர் ஜெயினுலாவுதீன் அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம்* *தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஜெயினுலாவுதீன் மரைகாயர். தாய் ஆஷியம்மாள். வறுமை* *குடும்பத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பின் போது நாளிதழ்களை விற்று அதன் மூலம் படித்தவர்.*
*ஏவுகணை நாயகன்*
*தனது ஆரம்ப கல்வியை ராமேஸ்வரத்தில் முடித்த* *அப்துல் கலாம் உயர்கல்வியை ராமநாதபுரத்தில் முடித்தார். பின்னர் திருச்சி ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம், சென்னை எம்.ஐ.டியில் எரோநாட்டிக்கள் பட்டமும் பெற்றார். அதன்பிறகு* *இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் 1963ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த அவர் 20 ஆண்டுகளாக கேரளாவில் உள்ள தும்பா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தார்.*
*அக்னி மனிதர்*
*பின்னர், ஒடிஷா மாநிலம்* *சண்டிபூரில் உள்ள ராக்கெட் ஏவுகணைத் தளத்திலும் 20* *ஆண்டுகளாக அவர் பணியாற்றினார். பிறகு அக்னி, பிருத்வி உள்ளிட்ட பல ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்தினார் கலாம்.*
*அறிவியல் ஆலோசகர்*
*1982ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள* *விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.* *1998ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா நடத்திய பொக்ரைன் அணுகுண்டு சோதனைக்கு மூளையாக அப்துல் கலாம் செயல்பட்டார் . அவர்* *மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் 1999 நவம்பர் முதல் 2001* *நவம்பர் வரை பணியாற்றினார்.இதேபோல் அறிவியல் ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.*
*விருதுகளுக்கு பெருமை*
*அப்துல் கலாமிற்கு, மத்திய அரசு கடந்த 1981ஆம்* *ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதனைத்* *தொடர்ந்து நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமிற்கு கடந்த 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.*
*குடியரசுத்தலைவர்*
*2002ம் ஆண்டு இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்தெடுக்கப்பட்டார்.* *மக்கள் குடியரசு தலைவராக இருந்த இவர் மாணவர்களிடம் அதிகமாக உரையாடினார். மரம் வளர்ப்பு,சுற்றுசுழல்* *பாதுகாப்பு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இந்திய வல்லரசாக வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.*
*சிறந்த ஆசிரியர்*
*அப்துல் கலாம் அவர்கள் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார்.* *இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும்,* *கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும்,* *இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் ஊக்க சக்தியாவும் விளங்கினார்.*
*கனவு காணுங்கள்*
*இந்தியா வல்லரசாக உருவெடுக்க,* *மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான்* *மாணாக்கர்களை, ‘கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது.* *உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்' என* *தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக எடுத்துக் கூறினார்.* *'வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டமில்லாமல் இருப்பது தான் வெற்றி* *பெறுவதற்கான சிறந்த வழி' என வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார் கலாம்.*
*மாணவர்கள் மத்தியில் மரணம்*
*மாணவர்கள் என்றால் கலாமிற்கு கொள்ளை பிரியம். கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருக்கையில் மயங்