திங்கள், 21 அக்டோபர், 2019

பள்ளிக்கல்வி-சென்னை உயர் நீதிமன்றம்,மதுரை கிளை வழக்கு- பணிநிரவல் சார்ந்த அரசாணை 165







ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள் 16.10.2019


*🌷அக்டோபர் 21, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
*🌷ஆல்ஃப்ரெட் நோபல் அவர்களின் பிறந்த தினம் இன்று.*

*ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும்.*

*ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும்.*

*நோபல் பரிசு ஒன்று தான் தேச மொழி எல்லைகளை கடந்து 6 வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டு தோறும் கவுரவிக்கிறது.*

*நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலை பெற்றிருக்கிறது.*

*இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?*

*அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்து போன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப் போகும் களங்கத்தை துடைத்துக் கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு.*

*அந்த அழிவு சக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து..*

*அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல். 1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ் பெற்ற பொறியாளராகவும் கண்டு பிடிப்பாளராகவும் இருந்தவர்.*

*கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர்.*


*அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார்.*

*ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.*

*ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார்.*

*அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரிழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராய்ச்சிகளை தொடர்ந்தார் நோபல்.*

*ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது. மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார்.*

*கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டு பிடித்தார்.*

*அந்த தனது கண்டு பிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.*

*டைனமைட் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு 1866.*

*உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.*

*ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட் தான் பேருதவி புரிந்தது.*

*அவரது கண்டு பிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத் தொடங்கியது.*

*ஆனால் ஆக்க சக்தியாக தான் உருவாக்கியதை அழிவு சக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல்.*

*அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனித குல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவது தான் என்று முடிவு செய்தார்.*

*உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற் சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தை கொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார்.*

*1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார்.*

*அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார்.*

*இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.*

*ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின.*

*ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக் கொண்டது.*

*இன்று வரை 770 பேருக்கு மேல் நோபல் பரிசை வென்றிருக்கின்றன.ஆண்டுதோறும் அவர் பெயரில் நோபல்பரிசு வழங்ககப்பட்டு வருகிறது.*
*🌷அக்டோபர் 21, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------

*🌷இந்தியாவில் தாஜ்மகாலை விட அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் அமிர்தசரஸ் நகர் அமைக்கப்பட்ட தினம் இன்று (1577).*


*ராம் தாஸபூர் என்றழைக்கப்படும் அமிர்தசரஸ் நகர்,  சீக்கிய மத குருக்களுள் ஒருவரான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட தினம் இன்று.*


*குரு ராம் தாஸ்*
*சீக்கியர்களின் பத்து மதகுருக்களுள் இவர் நான்காவது குரு ஆவார்.* *முழுவதும் சீக்கிய நகராக பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரை இவர் அமைத்த தினம் இன்று*

*இது வெளி நாட்டு சுற்றுலா பயணிகளைக் காட்டிலும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு இடமாக அமைந்துள்ளது.*

 *சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயில் விளங்குகிறது.*

*தங்க நகரம் என்றழைக்கப்படும், இது முழுக்க முழுக்க சீக்கியர்களின் நகரமாகும்.*
*பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு 28 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.*
*🌷அக்டோபர் 21, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
 *தேசிய காவலர்  நினைவு தினம் இன்று*


*ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி தேசிய காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தங்களது கடமைகளை நிறைவேற்றும் போது தங்கள் உயிர்களை தியாகம் செய்த துணிச்சலான போலீஸ்காரர்களை நினைவுகூர்கின்றனர்.*

*அக்டோபர் 21, 1959இல் லடாக் பகுதியில் சீனத் துருப்புக்கள் இருபது இந்திய வீரர்களை தாக்கினர். துருப்புகளுக்கு இடையிலான இந்த மோதல்கள் பத்து போலீஸ்காரர்களின் மரணத்திற்கு வழிவகுத்தன. சிறையில் அடைக்கப்பட்ட மற்றவர்களில் ஏழு பேர் சீன துருப்புக்களிடமிருந்து தப்பியோடினர்.*

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி துறைக்கு Toll Free Phone Number - பெறப்படும் அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு - SPD Proceedings



*🌷நீங்க தப்பு செய்றத பார்க்க நான் வேலைக்கு வரல.. அத்தனை பேரையும் சஸ்பெண்ட் பண்ணிருவேன்'..! முதல்வன் பட பாணியில் அதிகாரிகளை வெளுத்து வாங்கிய ஆட்சியர்..!*


*முதல்வன் படத்தில், ஒரு நாள் முதல்வராக வரும் அர்ஜுன் பல அதிரடி நடவடிக்கைகளை கையாள்வார். ஒழுங்காக பணியாற்றாமல் இருக்கும் அரசு அதிகாரிகளை ஒரே நாளில் பணி நீக்கம் செய்து உத்தரவிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதே போன்ற ஒரு சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது.*


*தமிழ்நாட்டில் சகாயம் போன்று ஒரு சில அதிகாரிகளே நேர்மையாக பணியாற்றி வருகின்றனர்.*

*அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும் ஒருவர். தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகக் கந்தசாமி பொறுப்பேற்றது முதல் பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். குறிப்பாக பெண் குழந்தைகளின் நலனில், கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறார்.ஏழை மக்களுக்கான சேவை செய்யும் பணியாக அரசு அதிகாரத்தை பயன்படுத்துவதாக மக்கள் கூறுகிறார்கள்.*


*இந்த நிலையில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்காக பயனாளிகளை தேர்வு செய்யக்கூறி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் பலர் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதில் கோபமடைந்த ஆட்சியர் திங்கள் கிழமைக்குள் பயனாளர்களை தேர்வு செய்யாவிடில், அனைவரையும் சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று வாட்ஸ் அப் ஆடியோவில் எச்சரித்துள்ளார். அது தற்போது வெளியாகி இருக்கிறது.*



*அந்த ஆடியோவில் அவர் பேசியது, "அனைவருக்கும் வணக்கம் நான் ஆட்சியர் பேசுகிறேன், ஏற்கெனவே கடந்த மீட்டிங்கில் பசுமை வீடு திட்டம் மற்ற திட்டங்கள் மிகவும் தொய்வாக இருக்கிறது என்று பேசினோம். அரசும் கேள்வி எழுப்புகிறார்கள். நாங்க பதில் சொல்கிறோம். வீடு பற்றி நாம் கடந்தமுறை விரிவாக பேசியபோது இதுகுறித்து அதிக முக்கியத்துவம் குறித்து விவாதித்தோம். நாம் வீடுகட்டும் திட்டம் குறித்து அதிக அக்கறைக்காட்டவேண்டும்.*

*நமது கையில் உள்ள டேட்டாக்கள் தகுதியுள்ள பயனாளிகள் எண்ணிக்கை, வீடு கையில் வைத்துள்ளோம். ஆனால் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிறைய புகார்கள் நமக்கு வந்துக்கொண்டிருக்கிறது. இன்றுகூட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அது சம்பந்தமான குறைகள் வந்தது.*


*திங்கட்கிழமை உங்களுக்கு உச்சக்கட்டம், ஒன்று நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா? அல்லது நீங்கள் பணியில் இருக்கிறீர்களா? என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கங்க. திங்கட்கிழமை எங்கேயாவது ஒரு பஞ்சாயத்து செயலரோ? அது சம்பந்தப்பட்ட பிடிஓ அல்லது டெபுடி பிடிஓ யாராக இருந்தாலும்சரி. திங்கட்கிழமைக்குள் அனைவருக்கும் வீடு ஒதுக்கப்படாவிட்டால் அன்று எத்தனைப்பேரை வேண்டுமானாலும் சஸ்பெண்ட் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.*


*இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், எப்படி செயல்படுத்துகிறீர்களோ செய்யுங்கள். திங்கட்கிழமை இந்த யுத்தத்தை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நான் உறுதியாக இதைச் சொல்கிறேன். என்னுடைய பொறுமையை முற்றிலும் இழந்துவிட்டேன். நீங்கள் தவறு செய்வதை பார்த்துக்கொண்டிருக்க நான் இங்கு பணிக்கு வரவில்லை.தப்புசெய்வதை பார்த்துக்கொண்டு காவல்காப்பவன் நான் அல்ல. தப்பை சரி செய்ய வந்துள்ளேன். இது என்னுடைய உச்சக்கட்ட கோபம். அனைத்து பிடிஓவும், பஞ்சாயத்து செயலர்களும் இதை கவனத்துடன் அணுகி முடிக்கவேண்டும்.*

*திங்கட்கிழமை காலையில் வேலைக்கு வந்துவிட்டு பின்னர் மாலையில் நீங்கள் அனைவரும் வேலையுடன் செல்கிறீர்களா? இல்லை வேலை இல்லாமல் போகிறீர்களா? என்பதை முடிவு செய்துக்கொள்ளுங்கள். இந்த சவாலை சந்திக்க நான் தயாராகிவிட்டேன்".*

*இவ்வாறு திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி கோபமாக பதிவிட்டுள்ளார்.*
*🌷அக்டோபர் 20, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
*🌷எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவு தினம் இன்று.*


*ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) மூத்த தமிழக பெண் எழுத்தாளர்*
 *ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.*


*ராஜம் கிருஷ்ணன்*
*1925ஆம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15ஆவது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.திருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.*


*பொதுவாக தனது படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு வாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக* *உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர்.*
*1970ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மணிகள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை* *சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர். இவரின் 80க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன.* *இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ்* *நூலகத்தில் கிடைக்கப்*
*பெறுகின்றன.*


*இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே.*


*கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில், 2002 ஆம் ஆண்டில், அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. முதுமையில் வறுமையால் வாடிய இவர் சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.*
*🌷அக்டோபர் 20, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*🌷உலக புள்ளியியல் தினம் இன்று.*


*ஐக்கிய நாடுகள் பொது சபை, கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 20  ஆம் தேதியை உலக புள்ளியியல் தினம்  (World Statistics Day, October 20)  ஆக அறிவித்துள்ளது. புள்ளியியல் என்பது கணித அறிவியல். இது விவரங்களைத் திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல், தொடர்புபடுத்திப் பார்த்தல், விளக்குதல், விவரங்களை வரைபடமாக வழங்குதல் ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.*

*இவ்வாறு பெறப்படும் புள்ளியியல் விவரங்கள் வணிகம் மற்றும் அறிவியல் போக்குகளை முன்கூட்டியே கணிக்க உதவகின்றன. இயற்கை அறிவியல்கள், அனைத்து சமூக அறிவியல்கள், அரசாங்கம் மற்றும் வணிகம் போன்ற பல்வேறு கல்வித்துறைகளிலும் புள்ளியியல் பயன்படுத்தப்படுகிறது.*

*மக்கள் தொகை, மிருகங்கள், தயாரிப்பு பொருட்கள் முதலியவற்றின் புள்ளி விவரங்களை சேகரித்து, கணக்கியல் அடிப்படையில் ஆராய்ந்து, தொகுக்கப்பட்ட தகவல்களை கணக்கியல் வடிவத்தில் வெளிப்படுத்துவதே புள்ளி விவர படிப்பு.உயிரியல், கல்வி, பௌதிகம், மனோதத்துவம், சமூகவியல் முதலிய துறைகளில் புள்ளி விவரம் பயன்படுத்தப்படுகிறது.*

*ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் இப்புள்ளி விவரங்களைச் சார்ந்தே உள்ளன. பல்வேறு அரசுத் துறைகளிலும், பல்வேறு வகையான இடைநிலை புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. புள்ளி விவரங்களின் பயன்பாட்டின் வெற்றியையும், அவற்றின் சேவை, மேன்மை மற்றும் தொழில் திறமையையும் கொண்டாடுவதே இத்தினத்தின் பொது நோக்கமாகும்.*