செவ்வாய், 22 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 22, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
 *🌷பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே ஜாக் கர்னரின், பாராசூட் மூலம் குதித்த முதல் மனிதர். பாராசூட் மூலம் அவர் தரையில் குதித்த தினம் இன்று (1797).*

திங்கள், 21 அக்டோபர், 2019

TNPSC group II குறித்த தெளிவுரை மற்றும் பாடத்திட்டம் #TNPSC




Go No:516 தீபாவளி பண்டிகை முன்னிட்டு-தீபாவளிக்கு அடுத்த நாள் 28.10.2019 விடுமுறை - அரசாணை எண் 516 வெளியீடு



ATTENDANCE APP - பள்ளிகள் பதிவிடுவதை CEO - கள் நேரிடையாக கண்காணிக்க வேண்டும் - SPD


14417 எண்ணுக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை’ - மாநில திட்ட இயக்குநரகம்





ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி யின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:தலைமை ஆசிரியர்கள் பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் இல வசஎண் 14417 குறித்து எடுத் துரைத்து மாணவர்களிடம் விழிப்புணர்வு உருவாக்க வேண் டும்.

 அதன்படி 14417 எண்ணுக்கு வரும் அழைப்புகளில் சந்தேகம், ஆலோசனை குறித்த தீர்வுகளை இலவச உதவி மைய பணி யாளர்களே வழங்குவர்.14417 எண்ணுக்கு வரும் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த புகார்கள், குறைகள், சம்பந்தப் பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை(எமிஸ்) இணையதளம் மூலம் அனுப்பப்படும். தாமதிக்காமல் அதன்மீது தனிக்கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக்கல்வி-சென்னை உயர் நீதிமன்றம்,மதுரை கிளை வழக்கு- பணிநிரவல் சார்ந்த அரசாணை 165







ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள் 16.10.2019


*🌷அக்டோபர் 21, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
*🌷ஆல்ஃப்ரெட் நோபல் அவர்களின் பிறந்த தினம் இன்று.*

*ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும்.*

*ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும்.*

*நோபல் பரிசு ஒன்று தான் தேச மொழி எல்லைகளை கடந்து 6 வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டு தோறும் கவுரவிக்கிறது.*

*நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலை பெற்றிருக்கிறது.*

*இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?*

*அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்து போன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப் போகும் களங்கத்தை துடைத்துக் கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு.*

*அந்த அழிவு சக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து..*

*அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல். 1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ் பெற்ற பொறியாளராகவும் கண்டு பிடிப்பாளராகவும் இருந்தவர்.*

*கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர்.*


*அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார்.*

*ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.*

*ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார்.*

*அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரிழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராய்ச்சிகளை தொடர்ந்தார் நோபல்.*

*ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது. மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார்.*

*கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டு பிடித்தார்.*

*அந்த தனது கண்டு பிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.*

*டைனமைட் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு 1866.*

*உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.*

*ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட் தான் பேருதவி புரிந்தது.*

*அவரது கண்டு பிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத் தொடங்கியது.*

*ஆனால் ஆக்க சக்தியாக தான் உருவாக்கியதை அழிவு சக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல்.*

*அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனித குல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவது தான் என்று முடிவு செய்தார்.*

*உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற் சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தை கொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார்.*

*1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார்.*

*அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார்.*

*இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.*

*ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின.*

*ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக் கொண்டது.*

*இன்று வரை 770 பேருக்கு மேல் நோபல் பரிசை வென்றிருக்கின்றன.ஆண்டுதோறும் அவர் பெயரில் நோபல்பரிசு வழங்ககப்பட்டு வருகிறது.*
*🌷அக்டோபர் 21, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------

*🌷இந்தியாவில் தாஜ்மகாலை விட அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் அமிர்தசரஸ் நகர் அமைக்கப்பட்ட தினம் இன்று (1577).*


*ராம் தாஸபூர் என்றழைக்கப்படும் அமிர்தசரஸ் நகர்,  சீக்கிய மத குருக்களுள் ஒருவரான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட தினம் இன்று.*


*குரு ராம் தாஸ்*
*சீக்கியர்களின் பத்து மதகுருக்களுள் இவர் நான்காவது குரு ஆவார்.* *முழுவதும் சீக்கிய நகராக பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரை இவர் அமைத்த தினம் இன்று*

*இது வெளி நாட்டு சுற்றுலா பயணிகளைக் காட்டிலும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு இடமாக அமைந்துள்ளது.*

 *சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயில் விளங்குகிறது.*

*தங்க நகரம் என்றழைக்கப்படும், இது முழுக்க முழுக்க சீக்கியர்களின் நகரமாகும்.*
*பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு 28 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.*
*🌷அக்டோபர் 21, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
 *தேசிய காவலர்  நினைவு தினம் இன்று*


*ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி தேசிய காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தங்களது கடமைகளை நிறைவேற்றும் போது தங்கள் உயிர்களை தியாகம் செய்த துணிச்சலான போலீஸ்காரர்களை நினைவுகூர்கின்றனர்.*

*அக்டோபர் 21, 1959இல் லடாக் பகுதியில் சீனத் துருப்புக்கள் இருபது இந்திய வீரர்களை தாக்கினர். துருப்புகளுக்கு இடையிலான இந்த மோதல்கள் பத்து போலீஸ்காரர்களின் மரணத்திற்கு வழிவகுத்தன. சிறையில் அடைக்கப்பட்ட மற்றவர்களில் ஏழு பேர் சீன துருப்புக்களிடமிருந்து தப்பியோடினர்.*