வெள்ளி, 25 அக்டோபர், 2019
*🌷அக்டோபர் 25, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*ஜெஃப்ரி சாசர் (Geoffrey Chaucer)பிறந்த தினம் இன்று(1343).*
*இவர் ஒரு ஆங்கில*
*நூலாசிரியரும், கவிஞரும்,*
*மெய்யியலாளரும்,*
*இராஜதந்திரியும் ஆவார்.* *இவர் பல ஆக்கங்களை எழுதியிருந்தபோதும், இவரது நிறைவு* *செய்யப்படாத கன்டபரி கதைகள் (The Canterbury Tales) என்னும்* *ஆக்கத்துக்காகவே இவர் பெரிதும் நினைவுகூரப் படுகிறார்.* *ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனப்படும் இவர், உள்ளூர்*
*ஆங்கில மொழியின் கலை மரபை விளக்கிய முதல்வர் எனவும் கருதப்படுகிறார்.*

*இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிஷ் அரசினால் சிறைப்பிடிக்கப்பட்ட தினம் இன்று (1924).*
*தமது வாழ்நாளில் இருபது ஆண்டுக் காலத்தில் நேதாஜி 11 முறை கைது செய்யப்பட்டார். அதில் முதலாவதாக 1924ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாள் அவரது* *ஆதரவாளர்களோடு கைது செய்யப்பட்டார். அப்போது நேதாஜி ஒரு காங்கிரஸ்காரர்.*
*பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை ஆக்ரோஷமாகவெளிப்படுத்திய நேதாஜி மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது. கைது செய்யப்பட நேதாஜியும் அவரது ஆதரவாளர்களும் பர்மாவின் மண்டலாய் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த மண்டலாய் சிறையானது அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையைப் போன்றது. வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளை அந்தமான் அல்லது மண்டலாய் சிறைகளுக்கு அனுப்புவது ஆங்கிலேய அரசின் வழக்கமாய் இருந்தது. மண்டலாய் சிறையில் தனது முதலாம் சிறைவாசத்தில் போஸ் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். அதன் காரணமாக மூன்று மாத காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.*

*ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோவின் பிறந்த தினம் இன்று(1881).*
*இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார்.*
*20ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறையில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர்.*
*பாரம்பரிய ( Conventional) ஓவிய பாணியில் இருந்து 18 வயதில் முழுவதுமாக விடுவித்துக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார்.*
*‘யங் லேடீஸ் ஆஃப் அவென்யூ’ என்ற ஓவியம் மூலம் கியூபிசம் எனப்படும் புதிய பாணியை* *அறிமுகப்படுத்தினார்.*
*5 பாலியல் தொழிலாளர்களை சித்தரிக்கும் இந்த ஓவியம், வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது மாறுபட்ட விஷயங்களை உணர்த்தும். இந்த ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கலை உலகில் புதிய புரட்சியை உருவாக்கியது.*
*சிற்பம் வடிப்பதிலும் செராமிக் ஓவியம் தீட்டுவதிலும் தனித்தன்மையுடன் பிரகாசித்தார்.*
*அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியவர் இவர்தான்.*
*தொண்ணூறு வயதிலும் அயராது உழைத்து நம்பிக்கையுடன் சாதனைப்பட்டியலை நீளச்செய்தவர் பிக்காசோ. அதனால் தான் வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் பிகாசோ.*

வியாழன், 24 அக்டோபர், 2019
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கடிதம்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 'இந்து இளைஞர் முன்னணி' மற்றும் 'இந்து மாணவர் முன்னணி' முதலிய மதவாத அமைப்புகள் உறுப்பினர் சேர்க்கை செய்வது மற்றும் 'லவ் ஜிகாத்' துக்கு எதிராக மாணவிகளைத் திரட்டுவது முதலிய நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்கிறது.
இப்பொருள் தொடர்பாக அவசர நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை கேட்கிறது.

*🌷அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*🌷மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று.*
*மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.*
*ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.*
*ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.*
*இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது*
*வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர்.*
*இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது.*
*1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு.*
*இவர்களோடு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.*

------------------------------------------------
*🌷உலக போலியோ ஒழிப்பு தினம் இன்று.*
*போலியோ நோயை பூமியிலிருந்து வேறோடு ஒழிக்க சபதம் ஏற்போம்!*
*போலியோ நோய்க்கிருமிகள் மிக வேகமாக தொற்றும் தன்மையுடையவை.*
*இது நரம்புமண்டலத்தை பாதித்த சில மணி நேரத்தில், பக்கவாதத்தை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நுண்கிருமி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே பாதிக்கும்.*
*போலியோ நுண்கிருமிகள் மலம் கலந்த தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் மூலமாக பரவுகின்றன. இந்த கிருமியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கை கால்கள் அல்லது உடலின் பிற பகுதிகளில் நிரந்தர ஊனத்தை ஏற்படுத்துகிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும்.*
*இந்நோய் வந்தால் அதனை குணப்படுத்த எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது. இதற்கு ஒரே வழி குறிப்பிட்ட இடைவெளி காலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சமயத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதேயாகும். அவ்வாறு கொடுக்கும்போது போலியோ நோய் எதிர்ப்பு திறன் அனைத்து குழந்தைகளுக்கும் உருவாக்கப்படுகிறது.*

*🌷உலக தகவல் வளர்ச்சி தினம் இன்று.*
*உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. எனவே 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஆம் தேதியை ஐ.நா.சபை அறிவித்தது.*
------------------------------------------------
*🌷உலக தகவல் வளர்ச்சி தினம் இன்று.*
*உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. எனவே 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஆம் தேதியை ஐ.நா.சபை அறிவித்தது.*
*🌷அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*🌷ஐக்கிய நாடுகள் தினம் இன்று.*
*ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ஆம்தேதி ஐக்கிய நாடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது.*
*ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.*
*2ஆம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலக தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.*
*1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும்.*
*ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும்.*

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)