வெள்ளி, 1 நவம்பர், 2019

*🌷நவம்பர் 1, வரலாற்றில் இன்று.*
----------------------------------------------------
*இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15. ஆனால் இந்தியாவின் ஒரு* *பகுதியான பாண்டிச்சேரியில் மட்டும் நவம்பர் 1.*
*ஏன் இந்த வேறுபாடு?*

*இந்தியாவை ஆண்டது ஆங்கிலேயர்கள்.*
*ஆனால் பாண்டிச்சேரியை ஆண்டது பிரெஞ்சுக்காரர்கள்.*
*1600 ஆம் ஆண்டில் இருந்தே பிரெஞ்சு காலனியின் கட்டுப்பாட்டில் இருந்த*
*பாண்டிச்சேரி, 1702ஆம் ஆண்டுதான் முதன் முறையாக தனது சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்தது. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் போல், அங்கே போராட்டம் அவ்வளவு தீவிரமாக நடைபெறவில்லை.*

*ஆங்கிலேயர்களின் கடுமையான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து பாண்டிச்சேரியும் விடுதலைப் போரில் பிரெஞ்சு ஆதிக்கத்தை தீவிரமாக எதிர்த்துப் போராடியது.  போராட்டத்துக்கு ஆதரவாக அப்போது இந்திய பிரதமர் நேரு அவர்களும் குரல் கொடுக்க 1954,நவம்பர் 1ஆம் தேதி பாண்டிச்சேரி மாநிலம் விடுதலை பெற்று இந்தியாவோடு இணைந்தது.*

*இந்த இணைப்பை*
 *டி - ஃபேக்டோ செட்டில் மெண்ட் என்று* *அழைத்தார்கள். இந்த இணைப்பு ஒப்பந்தத்தில்* *இந்தியப் பிரதமர் நேருவும், பிரெஞ்சு தூதுவரும்* *கையொப்பமிட்டனர்.*
*ஆனால் 1963 ஆம் ஆண்டுதான் பாண்டிச்சேரி இந்தியாவின் ஒரு பகுதி என்று பிரெஞ்சு நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அப்போது பாண்டிச்சேரியின் மேயராக இருந்த எட்வர்ட் ஜோபாட் முதல் அமைச்சராக 1963 ஜுலை 1 ஆம் தேதி பதவியேற்றார். அதன் பிறகு அரசியல் கட்சிகள் அங்கு உருவாக ஆட்சி மாற்றம் நடந்தது.*

*இப்போது உள்ள புதுச்சேரியில் அலுவல் மொழிகள் தமிழ், ஆங்கிலம் மட்டுமே. மக்கள் தொகை 7 லட்சம். படிப்பறிவு 82 சதவீதம். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் இன்னமும் அங்கே வசிக்கிறார்கள்.*
*🌷நவம்பர் 1,*
*வரலாற்றில் இன்று.*
------------------------------------------------------
*நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினம் அரசாணை வெளியீடு*

*நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு தினம் என்று கொண்டாட தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.*


*நவம்பர் 1ஆம் தேதி 1956ஆம் ஆண்டு, 63 வருடங்களுக்கு முன்னர் ஒன்றாக இணைந்திருந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் பிரிந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து நவம்பர் 1ஆம் தேதி தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்டதை, பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.*

*அதன்படி, இந்த ஆண்டு முதல் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதியினை தமிழ்நாடு நாள் என சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு நாள் கொண்டாட தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது.*
*🌷நவம்பர் 1,*
*வரலாற்றில் இன்று.*
----------------------------------------------------
 *கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்ட தினம் இன்று (1956).*

*1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது.*

 *கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை.*

 *மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் "குமரித் தந்தை " என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி தலைமையில் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.*


*இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.*

வியாழன், 31 அக்டோபர், 2019

இசை ஆசிரியா் பணியிடங்கள்: பணி நியமன கலந்தாய்வு _இயக்குநர் செயல்முறை நாள் 31.10.2019



தேசிய திறனாய்வு தேர்வு (NTSC) நவம்பர் 2019_அறிவுரை வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள் 30.10.2019





G.O.Ms.No.345 Dt: October 30, 2019 Download Icon ALLOWANCES – Rate of Dearness Allowance applicable with effect from 1/7/2019 in respect of employees continuing to draw their pay in the Pre 2006 pay scales and Pre 2016 pay scale/Grade Pay - Orders - Issued




G.O Ms.No. 164 Dt: October 25, 2019 - Tamil Nadu Fundamental Rules - Maternity Leave under Fundamental Rule 101 (a) - Extending of Maternity Leave benefits to non-permanent married Women Government Servants appointed in a regular capacity - Sanctioning of Maternity Leave without deducting Earned Leave at their credit - orders - Issued



நவம்பர் 2019 ~ நாட்காட்டி…

1.தமிழ்நாடு மாநிலம் உருவான நாள்.

2-வட்டாரக்கல்வி அலுவலக குறைதீர் முகாம்.

10-ஞாயிறு மிலாடி நபி அரசு விடுமுறை.

11-தேசிய கல்வி தினம்.

12-குருநானக் பிறந்தநாள்.வரையறுக்கப்பட்ட விடுப்பு.

14-குழந்தைகள் தினம்.

*நவம்பர் வேலைநாட்கள்-21*

பள்ளி வளாகங்களில் பயன்பாட்டில் இல்லாத போர்வெல் குழி, தொட்டிகளை மூட உத்தரவு...

நடப்பாண்டில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ~ தேர்வு மையம் அமைப்பது குறித்து வழிமுறைகள் வெளியீடு...