செவ்வாய், 12 நவம்பர், 2019

*🌷நவம்பர் 12,*
 *வரலாற்றில் இன்று.*

 *உலக நுரையீரல் அழற்சி தினம் இன்று.*
---------------------------------------------------------
உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) என்பது நுரையீரல் அழற்சிநோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும். சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாளை கொண்டாடின. 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளாவிய அளவில் நியூமோனியா நோய் தாக்கத்தால் ஆண்டுக்கு சராசரியாக 1.6 மில்லியன் பேர் இறக்கின்றனர். 5 வயதிற்கும் குறைந்த 155 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைகின்றனர். இது எயிட்சு, மலேரியா, எலும்புருக்கி நோய் போன்றவற்றினால் இறப்பு ஏற்படுவதை விட அதிகம் என மருத்துவ சங்க குறிப்பு தெரிவிக்கின்றது.

நியூமோனியா, நுரையீரல், தொற்று மூளை சவ்வு பாதிப்பு, ரத்தத்தில் நோய் கிருமிகள் கலப்பு, காதில் நோய் பாதிப்பு, சைனஸைடிஸ் போன்ற வகை கொண்டது. பச்சிளம் குழந்தை, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சியடையாத நுரையீரல், குறுகிய மூச்சுக்குழல், ஊட்டச்சத்து பற்றாக்குறை, வளர்ச்சியடையாத நோய் எதிர்ப்பு மண்டலம் போன்ற காரணங்களால், இத்தகைய தொற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவச் செய்தி கூறுகின்றது.

மாணவர்களுக்கு பொது அறிவுத் தகவல்கள்-1








தொடக்கக் கல்வி இயக்ககம் ~ பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை...


திங்கள், 11 நவம்பர், 2019

தொடக்கக் கல்வி இயக்ககம் ~ பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை...

*🌷நவம்பர் 11,*
*வரலாற்றில் இன்று.*
---------------------------------------------------------

*முத்தமிழ்க் காவலர்*
*கி. ஆ. பெ. விசுவநாதம் பிறந்த தினம் இன்று.*
-----------------------------------------------------------

*கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994)  தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார்.*

*நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காக*
*வும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர்.*

 *துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும்,*
*அவரது திராவிட நாடு கோரிக்கையுடன் உடன்படாதவர்.*
*அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார்.*

*இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.*
*🌷நவம்பர் 11,*
*வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------------------

*ஒருகோடியே 97 இலட்சம் மனிதர்களை காவுகொண்ட*
*முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்த தினம் இன்று(1918)*
------------------------------------------------------------
*1914ஆம் ஆண்டு துவங்கிய இப்போர்*
*உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர்.*

*எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது.*
*இப்போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட*
*ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.*

*ஜெர்மானியப் படைகளின் சரணாகதியை அடுத்து நேச நாடுகளுக்கும் மைய நாடுகளுக்கும் இடையில் 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி உருவான உடன்படிக்கையின்படி இப்போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.*

*1914இல் வெடித்த இந்தப் போர்*
 *1918ஆம் ஆண்டு நவம்பர் 11இல் ஜெர்மனி சரணடைந்ததன் மூலம் போர் முடிவுக்கு வந்தது.*
*🌷நவம்பர் 11,*
*வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
*தேசிய கல்வி தினம் இன்று.*

-------------------------------------------------------
*இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.*

 *ஆசாத், இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதல், தான் மறையும் 1958ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக பணிபுரிந்தார்.*

 *சுதந்திரம் பெற்ற இந்தியாவின் கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவுசெய்ய  நடவடிக்கைகள் எடுத்தார்.*

*இந்திய தொழில்நுட்ப கழகத்தை(IIT) அமைத்ததும், பல்கலைக்கழக மானியக் குழு(UGC) என்ற அமைப்பிற்கு அடித்தளமிட்டதும் இவரது பெரும் சாதனைகளில் சில.*

*இவரது சாதனைகளை நினைவுகூர்ந்து, நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான், இவரது பிறந்த நாளான நவம்பர் 11ஆம் தேதி தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.*

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


நாமக்கல் மாவட்டத்தில், 9 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மாவட்டம்: நாமக்கல்
மொத்த காலியிடங்கள்: 16
பணி: கிராம ஊராட்சி செயலா்
வயதுவரம்பு: 1.7.2019 அன்று 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால், 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்,ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 35 வயதிற்கு மேற்படாதவரகவும் இருத்தல் வேண்டும். 
தகுதி: 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிப்போர், ஊராட்சி செயலா் பணி காலியாக உள்ள கிராம ஊராட்சியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரா்கள் அந்த கிராம ஊராட்சியில் இல்லாதபட்சத்தில், அதே ஊராட்சி ஒன்றியத்தின் அந்த கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கிராம ஊராட்சியை சார்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று பரிசீலிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில், 16 கிராம ஊராட்சி செயலா் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதனை நிரப்ப அந்தந்த கிராம ஊராட்சியின் தனி அலுவலா்களான வட்டார வளா்ச்சி அலுவலா்கள்(கிராம ஊராட்சிகள்) முலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 
காலியிடங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட இன சுழற்சி முறை, மாதிரி விண்ணப்பப் படிவம் உட்பட இதர விபரங்கள் தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய (www.ncs.gov.in) இணையதளத்திலும், நாமக்கல் மாவட்ட (https://namakkal.nic.in) இணையதளத்திலும் மற்றும் அந்தந்த கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையிலும் வெளியிடப் பட்டுள்ளன. 
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய அத்தாட்சி செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ. பதிவு அஞ்சலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே, நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலா்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.11.2019

2019-20ம் ஆண்டு கலந்தாய்வு அறிவுரை வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை நாள்:09.11.2019



CM CELL-பள்ளிக்கல்வித்துறையில் இனி புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் இல்லை