செவ்வாய், 12 நவம்பர், 2019

2019-20 ஆம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு ~ பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை பள்ளிகளுக்கு விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - சார்பு...


சத்துணவு ஊழியர்கள் சமையலர் பணி இடங்கள் நிரப்ப பதவிஉயர்வு முறையில் திட்டம்


*🌷நவம்பர் 12 -வரலாற்றில் இன்று.*


*சீனாவின் ஆட்சித் தலைவராக இருந்த சன்- இ-சயன் பிறந்த தினம் இன்று.*
--------------------------------------------------------

சன்-இ-சயன்(Sun Yat-sen ; பிறப்பு: நவம்பர் 12, 1866 ;
இறப்பு: மார்ச் 12, 1925) தற்கால சீனாவின்
புரட்சித் தலைவர்களில் ஒருவர். புதிய தற்கால
சீனாவின் தந்தை என  போற்றப்படுகிறார்.

 இவர் முன்வைத்த மக்களுக்கான மூன்று கொள்கைகள்
( Three Principles of the People) சீன அரசியல்
தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.
அவையானவை:
1. மக்களிடம் இருந்து அரசு - தேசியம்
2. மக்களின் அரசு - மக்களாட்சி
3. மக்களுக்கான அரசு - சமவுடமை
*🌷நவம்பர் 12,*
*வரலாற்றில் இன்று.*

*பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி பிறந்த தினம் இன்று.*
---------------------------------------------------------
இந்திய பறவையியல் வல்லுனரும், இயற்கையியல் ஆர்வலருமான சலீம் அலி 1896ஆம் ஆண்டு நவம்பர் 12 அன்று மும்பையில் பிறந்தார். பறவைகளின் மீது இவருக்கிருந்த அன்பினால் பறவைகளின் பழக்க வழக்கங்களையும் அவற்றின் வாழ்கை முறைகளையும் கவனமாக ஆராய்ந்தார். இந்திய மலைப் பகுதிகளான பரத்பூர், மேற்கு தொடர்ச்சி மலைகள், இமய மலைத்தொடர்கள், தக்காண பீடபூமி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களிலும் பல்வேறு வகையான பறவை இனங்களை ஆய்வு செய்து The Hand Book on India Birds என்ற புகழ்வாய்ந்த புத்தகத்தை வெளியிட்டார். மேலும் இவருடைய The Fall of Sparrow என்ற புத்தகமும் குறிப்பிடத்தக்கதாகும். இந்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன், பிரிட்டிஷ் பறவையியல் கழகத்தின் விருது மற்றும் உலக இயற்கை பாதுகாப்பு கழகத்தின் ஜான் சி. ஃபிலிப்ஸ் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
*🌷நவம்பர் 12,*
 *வரலாற்றில் இன்று.*

 *உலக நுரையீரல் அழற்சி தினம் இன்று.*
---------------------------------------------------------
உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) என்பது நுரையீரல் அழற்சிநோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும். சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாளை கொண்டாடின. 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளாவிய அளவில் நியூமோனியா நோய் தாக்கத்தால் ஆண்டுக்கு சராசரியாக 1.6 மில்லியன் பேர் இறக்கின்றனர். 5 வயதிற்கும் குறைந்த 155 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைகின்றனர். இது எயிட்சு, மலேரியா, எலும்புருக்கி நோய் போன்றவற்றினால் இறப்பு ஏற்படுவதை விட அதிகம் என மருத்துவ சங்க குறிப்பு தெரிவிக்கின்றது.

நியூமோனியா, நுரையீரல், தொற்று மூளை சவ்வு பாதிப்பு, ரத்தத்தில் நோய் கிருமிகள் கலப்பு, காதில் நோய் பாதிப்பு, சைனஸைடிஸ் போன்ற வகை கொண்டது. பச்சிளம் குழந்தை, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சியடையாத நுரையீரல், குறுகிய மூச்சுக்குழல், ஊட்டச்சத்து பற்றாக்குறை, வளர்ச்சியடையாத நோய் எதிர்ப்பு மண்டலம் போன்ற காரணங்களால், இத்தகைய தொற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவச் செய்தி கூறுகின்றது.

மாணவர்களுக்கு பொது அறிவுத் தகவல்கள்-1








தொடக்கக் கல்வி இயக்ககம் ~ பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை...


திங்கள், 11 நவம்பர், 2019

தொடக்கக் கல்வி இயக்ககம் ~ பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை...

*🌷நவம்பர் 11,*
*வரலாற்றில் இன்று.*
---------------------------------------------------------

*முத்தமிழ்க் காவலர்*
*கி. ஆ. பெ. விசுவநாதம் பிறந்த தினம் இன்று.*
-----------------------------------------------------------

*கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994)  தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார்.*

*நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காக*
*வும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர்.*

 *துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும்,*
*அவரது திராவிட நாடு கோரிக்கையுடன் உடன்படாதவர்.*
*அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார்.*

*இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.*
*🌷நவம்பர் 11,*
*வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------------------

*ஒருகோடியே 97 இலட்சம் மனிதர்களை காவுகொண்ட*
*முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்த தினம் இன்று(1918)*
------------------------------------------------------------
*1914ஆம் ஆண்டு துவங்கிய இப்போர்*
*உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர்.*

*எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது.*
*இப்போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட*
*ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.*

*ஜெர்மானியப் படைகளின் சரணாகதியை அடுத்து நேச நாடுகளுக்கும் மைய நாடுகளுக்கும் இடையில் 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி உருவான உடன்படிக்கையின்படி இப்போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.*

*1914இல் வெடித்த இந்தப் போர்*
 *1918ஆம் ஆண்டு நவம்பர் 11இல் ஜெர்மனி சரணடைந்ததன் மூலம் போர் முடிவுக்கு வந்தது.*