வியாழன், 14 நவம்பர், 2019

நவம்பர் 14,
வரலாற்றில் இன்று.


ராபர்ட் ஃபுல்டன் பிறந்த தினம் இன்று (1765).

 ராபர்ட் ஃபுல்டன் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார்.

இவர் க்ளெர்மோன்ட் என்ற நீராவிக்கப்பலை உருவாக்கியமைக்காக பரவலாக அறியப்படுகிறார்.

1800ஆம் ஆண்டு இவர் நடாலியஸ் என்ற நீர்மூழ்கியை உருவாக்குவதற்காக நெப்போலியன் போனபார்ட்டால் பணிக்கப்பட்டார்.
வரலாற்றில் இதுவெ முதல் நீர்மூழ்கிக் கப்பலாகும்.
நவம்பர் 14,
வரலாற்றில் இன்று.

 உலக நீரிழிவு தினம் இன்று.
(World Diabetes Day)

உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய்(சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921இல் பிறட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த நாள் நினைவாகவே இன்றைய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினால் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது

CHILDLINE Oath for Children..


நவம்பர் 14,
வரலாற்றில் இன்று.


தேசிய குழந்தைகள் தினம் இன்று.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் நாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் நவம்பர் 20ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உலகிலேயே, அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது.

குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

குழந்தைகள் தின விழா என்றால், பள்ளிகளில் கொண்டாட்டம் தான்.

அன்றைய தினத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு, பேச்சு, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

அடிப்படை கல்வி பெற்று குழந்தைகள் முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெறவேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக உள்ளது.

புதன், 13 நவம்பர், 2019

Go No:361 date:8.11.2019 CPS _ Rate of interest for the financial year 2019-2020 effect with (01.10.2019-31.12.2019)



நவம்பர் 13,
வரலாற்றில் இன்று.

தமிழ் நாடகக் கலையின் தந்தை என்று அழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின்  நினைவு தினம் இன்று(1922).

ஆண்டுதோறும் புதுச்சேரி அரசின் சார்பாகவும், கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாகவும் புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது சமாதிக்கு, ஏராளமானோர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் “நாடக உலகின் இமயமலை“ என்று வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றை  இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை இவரது காலத்துக்கு முன் இவரது காலத்திற்கு பின் என்று பிரித்துப் பார்க்கும் அளவிற்கு தமிழ் நாடகங்களில் இவரது பங்கு அளப்பரியது. தமிழ் நாடக தலைமை ஆசிரியர், மறு மலர்ச்சியாளர், தமிழ் நாடக விடிவெள்ளி என்றெல்லாம் கொண்டாடப்பட்ட தவத்திரு சங்கரதாஸ் சுவமிகள் அவர்களின் வரலாறு சற்று சுருக்கமாக...

திருநெல்வேலி மாவட்டத்தின் தூத்துக்குடியை அடுத்த காட்டு நாயக்கன்பட்டியில் 1867ஆம் ஆண்டு  செப்டம்பர் 7ஆம் தேதி பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகராக தன் வாழ்க்கையைத் துவக்கினார்.

அக்காலத்தில் நாடகத்தில் நடிக்க, இசையும் பாட்டுத்திறமையும் மிக  முக்கியம். அதற்காக புதுக்கோட்டை மான் பூண்டியா பிள்ளையிடம் இசைப் பயிற்சி பெற்றார். இலக்கண இலக்கியங்களை தன் தந்தையிடமே கற்றுக் கொண்ட பிறகுதான் முழு நேர நடிப்பில் ஈடுபட்டார்.

இதனாலேயே இவரது நாடகங்கள் நல்ல மொழி வளங்களோடு இருந்தன. எமதர்மன், சனீஸ்வரன், இராவணன், இரணியன், கடோற்கஜன் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்த சங்கரதாஸ் சுவாமிகள், தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை கட்டிப்போட்டார்.

பார்ப்பவர்களை அசத்தும் திறமை பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு நாடகங்களை எழுதி இயக்குவதோடு தன் பங்களிப்பை சுருக்கிக்கொண்டார்.

இதற்கு பின்னால் ஒரு சோக சம்பவம் இருக்கிறது. ஒருமுறை நாடகத்தில் சனீஸ்வர பகவான் வேடமேற்று நடித்தவர், நாடகம் முடிந்ததும் வேஷத்தைக் கலைக்க அந்த ஊரின் ஏரிக்கு சென்றார்.

அப்போது அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி, சனீஸ்வர வேடத்தில் இருந்த சங்கரதாஸ் சுவாமிகளைக் கண்டதும் பயத்தில் மயங்கி விழுந்து அங்கேயே இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் அவரை அதிகம் பாதித்ததால் அன்றிலிருந்து வேஷமிடுவதை நிறுத்திக் கொண்டார். சோகமான சம்பவமானாலும சங்கரதாஸ் சுவாமிகளின் கதாபாத்திர பொருத்தத்துக்கு இது ஒரு முக்கிய உதாரணம்.

சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில்  ‘‘வள்ளி திருமணம், பவளக் கொடி சரித்திரம், வீர பாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நள தமயந்தி, இராம இராவண யுத்தம், சித்திராங்கி விலாசம் போன்றவை அவருக்கு புகழ் தந்த நாடகங்கள்.

இதில் பெரும்பாலானவை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் அந்தக் காலத்திலேயே தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்பதிலேயே  சங்கரதாஸ் சுவாமிகளின் ஆங்கிலப் புலமையையும் நாம் அறிய முடியும்.

தம் வாழ்க்கையை நாடக கலைக்கே அர்ப்பணித்து வாழ்ந்த சங்கரதாஸ் சுவாமிகள், திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாடக மேடைகளுக்கு தன் உழைப்பின் மூலம் பெரும் மரியாதையை ஏற்படுத்திய சங்கரதாஸ் சுவாமிகள், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சுற்றி தனது கலைச் சேவையை செய்தார். விழுப்புரத்தில் ஒரு நாடகத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது திடீர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 55.

உடனடியாக வ.சுப்பையா,  சங்கரதாஸ் சுவாமிகளை புதுச்சேரிக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தார்.  தொடர் சிகிச்சைக்காக இங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டு விட்டது. இருப்பினும் விடாது தன்னால் முடிந்த அளவு நாடக கலைக்கு தொண்டு புரிந்த  சங்கரதாஸ் சுவாமிகள், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு பின் மரணமடைந்தார்.

புதுவையில் இரண்டு வருடங்கள் அவர் தங்கியிருந்த  தெருவுக்கு ‘‘சங்கராதாஸ் வீதி‘‘ பெயர் சூட்டி கௌரவித்தது அரசு. சங்கரதாஸ் சுவாமிகளின் பெயர் தாங்கியதால் வரலாற்றில் தன்னையும் இணைத்துக் கொண்டது அந்த தெரு.
நவம்பர் 13,
வரலாற்றில் இன்று.


உலக கருணை தினம் இன்று.

 உலக கருணை தினம் நவம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

 லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனிதநேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர்.

 நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்தவும், மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடும் இருக்க வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாமும் கருணை உள்ளத்துடன் செயல்பட்டு அவரவர் சூழ்நிலைக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை வழங்கிடுவோம்.

INCOME TAX 2019-2020 கணக்கிடுவது எப்படி - தொகுப்பு...


நவம்பர் 13,
வரலாற்றில் இன்று.

 உலக வலைப்பின்னல் பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று (1990)

இணையப் பயன்பாடு குறித்து நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும் அதன் வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1960 ஆம் ஆண்டு வாக்கில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்த போதிலும், ஒரு கணினியிலுள்ள தகவல்களை மற்றொரு கணனியிடம் பகிர்ந்துகொள்ளும் நிலை வரவில்லை. இது கணினி பாடத்திட்டங்களை நடத்திவரும் பல பல்கலைக்கழகங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அமெரிக்காவின் டார்ட்மெளத் மற்றும் பெர்க்லீ பல்கலைக்கழகங்கள் ஐ. பி. எம். கணினிகளைப் பெருமளவில் பயன்படுத்தி வந்தன. அந்த பல்கலைக்கழகங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துவந்த இப்பிரச்சினை பற்றி
ஐ. பி. எம்.க்கு தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சினையே இணையம் உருவானதற்கு அடி கோலியது எனலாம்

இணையம் தொடங்குவதற்கான செயல்முறை திட்டத்திற்கு அடிகோலியவர் லிக்லைடர் என்பவர் ஆவார். இதனாலேயே இவர் இணையத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு கணினியுடனும் தொடர்பு கொண்டு ஒன்றுக்கொன்று மற்றதற்காகச் செயல்படக் கூடும் என்ற செயல் முறையைக் கொண்டு வந்தவர் இவர்தான். அவர் அத்தகைய இணைப்பை உருவாக்கி அதற்கு கலக்டிக் வலையமைப்பு  (“Galactic Network”) என்று பெயரிட்டார்.

இது மேற்சொன்ன அந்த பல்கலைக் கழகங்களில் வெற்றிகரமாக சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் அமெரிக்க
இரா ணுவத்தில் இரகசிய தகவல்களை உடனுக்குடன் அனுப்பவும், பெறவும் இத்திட்டம்  The Advanced Research Projects Agency Network (ARPANET) என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது.

லிக்லைடரின் கலக்டிக் வலைய மைப்புத் திட்டம் 1962இல் DARPA (Defence Advanced Research Projects Agency) என்ற அமைப்பாக உருவானது. அதன் பின் இதனுடன் ARPANET இணைய இன்டர்நெட் உருவானது.

1965 ஆம் ஆண்டு மிக மெதுவாக இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தி எம். ஐ. டி. பல்கலையின் பேராசிரியர் லாரன்ஸ் ரொபர்ட்ஸ் (Lawrence G. Roberts) தோமஸ் மெரில் (Thomas Merrill) என்ப வருடன் இணைந்து மாசசுசட்ஸ் என்னும் இடத்தில் இயங்கிய ஹிகீ2 கணினியை கலிபோர்னியாவில் இயங்கிய கி. 32 என்ற கணினியுடன் இணைத்தார். பின்னர் சில தகவல்கள் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு பரிமாறப்பட்டது. இது தான் இணையத்தின் முதல் தகவல் பரிமாற்றம். அப்போதைய
தொலைபேசி இணைப்புகள் இத்தகைய இணைய இணைப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய தொடர்பில் தகவல்களை அனுப்ப பெகெட் ஸ்விட்சிங்  என்னும் வழிமுறை கையாளப்படுகிறது. கோப்புகளில் உள்ள தகவல்கள் பொட்டலம் பொட்டலமாக சேர வேண்டிய சர்வர் கணினிக்கு அனுப்பப்பட்டு அங்கு இணைக்கப் படுகின்றன. லியோனார்ட் கிளெ யின்ராக் என்பவர் இந்த முறையைக் கண்டுபிடித்தார். அக்டோபர் 29, 1969ல் மாணவர்கள் பலருடன் இணைந்து இதனை இயக்கினார். இயக்கத் தொடங்கியவுடனேயே சிஸ்டம் கிராஷ் ஆனது வேறு ஒரு நிகழ்ச்சி. இப்போது வரை அந்த முறையே பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கணினிக்கான முதல் மவுஸ் 1968ல் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெ ற்ற கணினி கண்காட்சியில்  Douglas Engeibart  என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதன் பின்னரே இணைய பயன்பாடு எழுச்சியுற தொடங்கியது எனலாம்.

 பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் புதிய முறைகள் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட
தன் விளைவாக 1990 களில் இணையம் மிக பிரபலமடைய தொடங்கியது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு உலகெங்கும் பரவியது. ஐந்து கோடி பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. ஆனால் இணையம் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது.

இணைய பயன்பாட்டில் வரும் www என்பதன் அர்த்தம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே (world wide web). டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவர் தான் 1990 ஆம் ஆண்டு இந்த சொற்றொடரை உரு வாக்கிப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.