ஞாயிறு, 17 நவம்பர், 2019

நவம்பர் 17,
வரலாற்றில் இன்று.

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் நினைவு தினம் இன்று.

இந்திய விடுதலைப்
போரில் காந்திஜி வருகைக்கு முன் போராட்டத்தை
தலைமை தாங்கி நடத்திய லால்- பால்-
பால் என்ற திரிசூலத் தலைவர்களில்
முதன்மையானவர் லாலா லஜபதி ராய். பஞ்சாப்
சிங்கம் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழகத்தின்
மகாகவி பாரதிக்கு ஆதர்ஷ புருஷர்.

1865ஆம் ஆண்டு ஜனவரி 28இல் பஞ்சாபின்
மோகா மாவட்டத்தில் துடிகே என்ற கிராமத்தில்
பிறந்தவர் லாலா லஜபதி ராய்.
 சட்டம்
பயின்ற லாலா நாட்டு விடுதலைக்காக தனது
வாழ்வையே அர்ப்பணித்தார்.  லாகூரில்
(தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது)
இருந்தபடி  தனது எழுத்தாலும் பேச்சாலும்
ஆங்கில ஆட்சிக்கு எதிராக
மக்களை அணிதிரட்டியவர் லாலா; நாட்டில்
சுதேசி இயக்கத்தை வீறுகொண்டு எழச்
செய்தவரும் இவரே.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம்
அமைப்பிலும் தீவிரமாகப் பங்கேற்ற லாலா,
இந்திய அரசியலில் ஹிந்துத்துவ சிந்தனை பரவ
காரணமாக இருந்தார். 1928, அக்டோபர் 30இல்
லாகூரில் நடந்த ''சைமன் கமிஷனே திரும்பிப்
போ'' போராட்டத்திற்கு தலைமை தாங்கிய
லாலாவை, ஆங்கிலேய காவலர்கள்
குண்டாந்தடியால்  கடுமையாகத்
தாக்கினர்.  அதில் பலத்த காயம் அடைந்த லாலா,
அதே ஆண்டு நவம்பர் 17இல் காலமானார்.
நவம்பர் 17,
வரலாற்றில் இன்று.

சர்வதேச மாணவர்கள் தினம் இன்று.
(International Students Day)


செக்கோஸ்லோவோக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் 1939ஆம் ஆண்டு நவம்பர்
17 இல் நடந்தது.
நாஜிப் படையினரால் போராட்டம் நசுக்கப்பட்டதோடு 10
மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர் .

மாணவர்களின் எழுச்சியை சர்வதேச அளவில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 அன்று சர்வதேச மாணவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

சனி, 16 நவம்பர், 2019

தபால் நிலையங்களில் காலாவதியான ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு டிச.31க்குள் அணுக அழைப்பு...


எம்பிபிஎஸ் படிப்பு காலம் 50 மாதங்களாக குறைப்பு ~ இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு...


வானில் நடந்த அரிய நிகழ்வு...


சொந்த ஒன்றியங்களிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்ற வாய்ப்பு...


நவம்பர் 16,
வரலாற்றில் இன்று.

 யுனெஸ்கோ உருவான தினம் இன்று.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.
நவம்பர் 16,
வரலாற்றில் இன்று.

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் இன்று.


கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ஆம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச  சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.
நவம்பர் 16,
வரலாற்றில் இன்று.

ஊமைத்துரை நினைவு தினம் இன்று (1801).

 வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை.
இவரது இயற்பெயர் குமாரசாமி. அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று.

 ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். .

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஊமைத்துரை . இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சு திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.

இவர் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார். இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். பின்னர் காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர் 16ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.

ஊமைத்துரை நட்போடும் , மனிதாபிமானத்தோடும் திகழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர், வெள்ளையத்தேவன் , தீரன் சின்னமலை , விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாக கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்களிடம் என்று அனைவரிடமும் நட்போடு வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை,
 அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணைத்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது

காலநெல் என்ற ஆங்கிலேயர் 1801 இல் தூத்துக்குடி மாவட்ட கம்பனி தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தநேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து , தூத்துக்குடி வரையிலும் பாதுகாப்பாக செல்ல குதிரை, இரண்டு வீரர்களையும் அனுப்பி வழி அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
நவம்பர் 16,
வரலாற்றில் இன்று.

தேசிய  பத்திரிகை தினம் இன்று.

நாடு முழுவதும் இன்று தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட தினமான நவம்பர் 16ஆம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஜனாநயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி ஜனநாயக நாட்டில் மிக முக்கியமானது. மக்களின் பிரச்னைகளை சுட்டிக்காட்டுவதோடு மட்டுமின்றி அதற்கு தீர்வு கிடைக்கும் பணிகளையும் பத்திரிகைகள் தொடர்ச்சியாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.