செவ்வாய், 19 நவம்பர், 2019

மாணாக்கர் எண்ணிக்கைக் குறைவினைக் காரணம்காட்டி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்வினை பறிப்பதா!? அநீதியான நடவடிக்கைக்கு வன்மையாக கண்டனம்!

மாணாக்கர் எண்ணிக்கைக் குறைவினைக் காரணம்காட்டி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்வினை பறிப்பதா!? 
அநீதியான நடவடிக்கைக்கு வன்மையாக கண்டனம்!
.........................................
தமிழ்நாட்டின் கல்வியைச் சீரழிக்கும் கொடூரமான நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிப்போம்!

தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டு கடையனுக்கும் கல்வி எனும் அறப்பணியை தொய்வின்றி ,
தளர்வின்றி ஆற்றும்  ஈராசிரியர் பள்ளிகளை அழித்தொழிக்கும் தமிழ்நாடு கல்வித்துறையின் நிலைப்பாட்டினை வன்மையாக கண்டிப்போம்!
ஈராசிரியர் பள்ளிகளை அதிகாரப்பூர்வமாக ஓராசிரியர் பள்ளிகளாக்கி தொடக்கக்கல்வியை அழித்தொழிக்கும் நிலைப்பாட்டை திரும்பப்பெறுமாறு வலியுறுத்துவோம்! 
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்விற்கான  தேர்ந்தப்பட்டியலின் வரிசைஎண்ணில் வைக்கப்பட்டுள்ள  பணிமூப்பு இடைநிலை ஆசிரியருக்கு மாணாக்கர்களின் எண்ணிக்கைக் குறைவினை காரணம்காட்டி  பதவிஉயர்வினை பறிப்பதென்பதும்,
மறுப்பென்பதும் அநீதியான செயலாகும்!நியாயமற்ற நடவடிக்கையாகும்!அரசியல் சட்ட ரீதியான உரிமை பறிப்பாகும்!
பத்துக்குறைவான மாணாக்கர்கள் 
கல்வி பயிலும் பள்ளிகளின் 
தர மேம்பாட்டிற்கு குறுவளமையம் உருவாக்கி 
மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியரின் மேற்பார்வையில் பள்ளிகளை  மேம்படுத்துவோம் என்றுக்கூறிக்கொண்டே  , சிற்றூர் பள்ளிகளை இயற்கைமரணத்தை நோக்கி 
தள்ளுவது 
சிறந்த செயலாகாது; அறமாகாது. 
பள்ளிகளை மூடும்,கல்வியை சீரழிக்கும் தமிழக கல்வித்துறையின் முறையற்றச் செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்போம்!கடுமையாக எதிர்ப்போம்! 

-முருகசெல்வராசன், 
மா.செ.,
தநாதொப
ஆசிரி்யர்மன்றம் - நாமக்கல்மாவட்டம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம், நாமக்கல் மாவட்டம்(கிளை)~விரைவு மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அழைப்பு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை).
--------------------------------
விரைவு மாவட்டச்  செயற்குழுக் கூட்டம் அழைப்பு
--------------------------------
அன்புடையீர்!வணக்கம்.

இடம்:
எச்.பி.எம்.,
மேல்நிலைப்பள்ளி, 
நாமக்கல். 

நாள்: 
21.11.19 - வியாழன்.

நேரம்:
மாலை 05.15மணி.

தலைமை:
திரு.
க.ஆசைத்தம்பி,
மாவட்டத்தலைவர். 

முன்னிலை:
திரு.
பெ.பழனிசாமி,
மாநிலத்தலைமைநிலையச்
செயலாளர். 

பொருள்:
1)உறுப்பினர் பதிவு.
2)இயக்க நாள்காட்டி .
3)நிதி நிலுவைகள்.
4)மாவட்டச்செயலாளர் கொணர்வன.

விழைவு:
எப்பணி இருப்பினும் ஒதுக்கி வைத்து தவறாது வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்
                     நன்றி.
            -முருகசெல்வராசன்.
நவம்பர் 19,
வரலாற்றில் இன்று.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று.

அவரை இரும்பு மனுஷி என்று சொல்கிறார்கள். சர்வாதிகாரி என்றும் சொல்கிறார்கள். மூன்று முறை இந்தியாவின் சக்தி வாய்ந்த பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு வேறு சில பரிமாணங்களும் இருந்திருக்கின்றன. வரலாற்றின் ஏடுகளில் இதுவரை சொல்லப்படாத, இந்திய அரசியல் களத்தில் ‘சுற்றுச் சூழல் பாதுகாப்பு’ என்கிற பதமே உபயோகத்தில் இல்லாத காலகட்டத்தில், அழியும் காடுகளையும், வேட்டையாடப்படும் அபூர்வ விலங்கினங்களையும் வளர்ச்சி என்கிற பெயரில் அழிக்கப்படும் இயற்கை வளங்களையும் மீட்டு காப்பாற்ற அவர் பெருமுயற்சி எடுத்த முகம் - இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது, ஒரு புத்தகத்தின் மூலம்.

இயற்கை மீது அக்கறை

ஜெயராம் ரமேஷ் எழுதியிருக்கும் 423 பக்கப் புதிய புத்தகமான ‘இந்திரா காந்தி: எ லைஃப் இன் நேச்சர்’ (இந்திரா காந்தி: இயற்கையில் ஒரு வாழ்க்கை) நவீன இந்தியாவின் பிரதமர்களில் சுற்றுச்சூழலை எவ்வளவு அக்கறையோடு இந்திரா அணுகினார் என்பதை வியப்பூட்டும் வகையில் சொல்கிறது. எத்தனையோ அலுவல்களுக்கிடையே அனைத்து மாநிலங்களின் சுற்றுச் சூழல் பிரச்சினைகளையும் உடனடியாக அவர் கவனித்திருக்கிறார். மிக நீண்ட பட்டியல் அது. தமிழகத்தில் கிண்டி மான்கள் சரணாலயத்தை தேசிய பூங்கா ஆக்கியதில் தொடங்கி கேரளத்தில் அமைதிப் பள்ளத்தாக்கை மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் பாதுகாக்கும் வழிசெய்தது வரை. இந்தியப் புலிகள் இனம் மேலும் வேட்டையிடப்படாமல் இருக்க சட்டம் இயற்ற முனைந்திருக்கிறார். அணைகளும் வளர்ச்சித் திட்டங்களும் அவசியமானாலும் பழங்குடியினரையும் சுற்றுச்சூழலையும் அவை பாதித்தால் அது வளர்ச்சி இல்லை என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

இந்திராவின் பேச்சுகள், கடிதங்கள், ஆவணங்கள் துணையோடு எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் கூடவே இந்திரா தொடர்பான கதையாடல்களில் பலவற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கும் தகவல்கள் பலவும் இடம்பெற்றிருக்கின்றன.

கடிதக் கல்வி

இந்திரா பிரியதர்ஷினி 19 நவம்பர் 1917இல் அலஹாபாதில், இந்திய விடுதலை இயக்கத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தாத்தாவும் தந்தையும் அரசியல் சித்தாந்தத்தில் வேறுபட்டாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கியமானவர்களாக இருந்தார்கள். ஒரே குழந்தையாக இருந்த இந்திராவின் குழந்தைப் பருவம் கடினமானது. தாய் காசநோயில் கஷ்டப்பட்டார். தந்தை நேரு அடிக்கடி சிறைக்குச் சென்ற வண்ணம் இருந்தார். பள்ளிப்படிப்பு ஒரே சீராக இருக்கவில்லை. சுவிட்சர்லாந்திலும் பூனா, கொல்கத்தா, மற்றும் இங்கிலாந்திலும் அமைந்தது. ஆனால் இந்திரா அதிகமாகக் கற்றது அவருடைய தந்தையிடமிருந்து.

நேரு தன் மகளுக்கு 1922 – 1964 காலகட்டத்தில் 535 கடிதங்களைத் தன் மகளுக்கு எழுதியிருக்கிறார்! அவை மூன்று புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. முதல் புத்தகம் – ‘லெட்டர்ஸ் ஃப்ரம் எ ஃபாதர் டு ஹிஸ் டாட்டர்’ (ஒரு தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்) - அவள் பத்துவயதுகூட நிரம்பாத சிறு பெண்ணாக இருந்தபோது சிறையிலிருந்து எழுதப்பட்டவை. அவளுடைய பிஞ்சு மனத்தை ஆட்கொண்டிருக்கின்றன. “கடிதங்கள்... எனக்கு உலகைப் பற்றின புதிய பார்வையை அளித்தன. இயற்கையை ஒரு புத்தகம்போலக் கருத எனக்குச் சொல்லிக்கொடுத்தன. பாறைகளும் மரங்களும் தங்களுடைய கதைகளை மட்டும் சொல்லவில்லை, அவற்றுடன் வாழ்ந்த மனிதர்களைப் பற்றியும் உயிரினங்களைப் பற்றியும் கதைத்தன என்று அவருடைய கடிதங்கள் எனக்கு விவரித்தன” என்று குறிப்பிடுகிறார் இந்திரா.

சிறுமி இந்திரா தந்தைக்கு பதில் எழுதுவாள். கிட்டத்தட்ட சம வயதினருக்கு எழுதுவதுபோல. ஒரு முறை இந்திராவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இன்னொரு சிறையில் இருந்த தந்தைக்குச் சிறை வளாகத்தில் இருந்த ஒரு மரத்தைப் பற்றி எழுதுகிறார். “இங்கு மூன்று நிழல்தரும் மரங்கள் மட்டுமே இருந்தன. அதில் ஒன்று, மிக கம்பீரமாக நின்றிருந்த வேப்ப மரம் பெரிய சத்தத்துடன் ஒரு நாள் விழுந்தது. மரம் நின்றிருந்தபோது அது நிரந்தரமாக இருக்கும் என்று தோன்றும். அதனுடைய வேர்கள் எல்லாம் கரையான் அரித்து உளுத்துப்போய்விட்டன. அது படுத்துவிட்ட நிலையிலும் அதனுடைய கிளைகள் ராஜ கம்பீரத்துடன் இருந்தன. ஆனால் அது உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு அடுப்புக்கு விறகாக வெட்டி உபயோகிக்கப்பட்டது. ஞாபகம் இருக்கிறதா அந்தக் கவிதை? ‘எல்லாரும் பயந்த பயங்கர கரடி / இப்போது காலடிக்குக் கம்பளி!’ ”

இளைய மகன் சஞ்சை காந்தி விமான விபத்தில் [1983] இறந்தபோது அதைத் தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று அதே தோழிக்கு எழுதுகிறார். “நாம் இறந்தவருக்காக அழுவதில்லை; நமக்காக அழுகிறோம்!”

ஒரு தாயின் கவலை

1971 அவருக்கு வெற்றியைத் தந்த வருடம். மார்ச்சில் நடந்த தேர்தல் களம் அவருக்கு சாதகமானதாக இருந்தது. ஆனால், அவர
நவம்பர் 19,
வரலாற்றில் இன்று.

 ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்

ராணி லட்சுமி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆணியில் (இப்போதைய வாரணாசி) ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தை பருவத்தில், அவரை ‘மணிகர்ணிகா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை அன்போடு 'மனு' என்று அழைத்தனர்.

தனது நான்காவது வயதிலேயே அவரது தாயை இழந்ததால், குடும்பப் பொறுப்புகளனைத்தும் அவரின் தந்தை மீது விழுந்தது. பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், லட்சுமி குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக்  கலைகளை முறையாக பயிற்சி மேற்கொண்டு கற்றார்.

1842 ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு ‘லட்சுமி பாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது திருமண விழா, பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 1851இல்,  அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக,  அந்த குழந்தையால் நான்கு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியவில்லை.

1853இல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில்,  பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.

ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி,  லார்ட் டல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின்  நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லட்சுமி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.



ராணி லட்சுமி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து,  ராணி லட்சுமி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.

ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857இல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். போர்க்களத்தில் அவர் மயக்கமாக இருந்த போது, ஒரு பிராமணர் அவரை அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கே அவர் மரணமடைந்தார் என்றும் சிலர் கூறுகின்
நவம்பர் 19,
 வரலாற்றில் இன்று.

உலகக் கழிவறை தினம் இன்று (World toilet day)

 ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் உலக கழிவறை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

அனைவரும் கழிவறையை பயன்படுத்துவதை வலியுறுத்தவும், விழிப்புணர்வூட்டவும் உலக கழிவறை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது

அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

2013 ஜுலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 19 ஆம் நாளை ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாளாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்தது. இதற்கான முன்மொழிவை சிங்கப்பூர் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மற்றும் வேறு அமைப்புகளின் அறிக்கைகளின் படி உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி 131 மில்லியன் குடும்பங்களில் கழிவறை வசதி இல்லை எனவும் அவர்களில் எட்டு மில்லியன் குடும்பத்தினர் பொதுக் கழிவறையையும் 123 மில்லியன் குடும்பங்கள் வெளியிடங்களையும் கழிவறைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.

தற்போதைய கணக்கெடுப்பின்படி உலகின் 700 கோடி மக்களில் 240 கோடி மக்கள் மேம்பட்ட சுகாதாரமான கழிப்பறை வசதி பெறாமல் உள்ளனர். இன்னமும் 100 கோடி மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

கழிவறை வசதி இல்லாததால், சில வேளை பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவும் நேரிடுகிறது. உலக நாடுகளின் வளர்ச்சிக்கும், நீடித்த வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததும் முதன்மையானதுமாக சுகாதாரம் வலியுறுத்தப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே ஐநா மன்றம் நவம்பர் 19 ந்தேதியை உலக கழிவறை தினமாக அறிவித்துள்ளது.

இந்தாண்டின் முக்கிய கருவாக, “சிறந்த ஊட்டச்சத்துமிக்க ஆரோக்கிய வாழ்வுக்கு, சிறந்த கழிவறை வசதி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தினத்தில் கிராமப்புறங்களில் சுத்தமான சுகாதாரமான கழிவறையை பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஊட்ட உலக அளவில் நிகழ்ச்சிகளுக்கு அந்ததந்த நாட்டின் அரசுகளாலும், பொது அமைப்புகளாலும் நடத்தப்படுகிறது. மத்தியஅரசு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரும் 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து விடுகளிலும் கழிவறை கட்டிமுடிக்க உறுதி ஏற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இது அரசுகள், ஆர்வலர்கள் முன்னெடுத்தாலும், தனிநபர்களின் ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வு அவசியம்.

கணக்கெடுப்பின் படி, ஒரு நாளைக்கு சுமார் 1000 குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணம் சுகாதாரமற்ற கழிவறையே காரணம் என கூறப்படுகிறது.

முக்கிய தகவல்கள்

உலகளவில் 240 கோடி மக்கள் சுத்தமான கழிவறையை பயன்படுத்துவதில்லை 100 கோடி மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள்.

உலகளவில் சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம்.

உலகளவில் திறந்த வெளியில் மலம் கழிப்பவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்.

இந்தியாவில் 60.4 % மக்கள் கழிவறையை பயன்படுத்துவதில்லை.

கழிவறை இல்லாததால், பெண்கள், குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள்.

சுகாதாரமான கழிவறை உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வளர துணைபுரிகிறது.
நவம்பர் 19,
வரலாற்றில் இன்று.

 சர்வதேச ஆண்கள் தினம் இன்று.


சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. இத்தினம் அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் சார்பில் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

உலகில் ஆண்களை கௌரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கருதியும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஆண்களாகிய நமக்கு யாரும் வாழ்த்து சொல்லமாட்டார்கள்.

அனைத்து ஆண்களுக்கும்
" ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் ".