புதன், 27 நவம்பர், 2019
நவம்பர் 27,
வரலாற்றில் இன்று.
முதல் முகமாற்று சிகிச்சை நடந்த தினம் இன்று (2005)
நாய் கடித்ததால் விகாரமாக மாறிப்போன இசபெல்லி டினோரிக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரான்சைச் சேர்ந்த டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினர்.
ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த ஒருவரின் முகப்பாகங்கள் இவருக்கு பொருத்தப்பட்டன. முதலில் வெற்றி கரமாக முடிந்த அறுவை சிகிச்சை நாளடைவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து டினோரி மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனாலும் பக்க விளைவுகள் அதிகரித்து கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமான நிலையை அடைந்தது.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மரணம் அடைந்துள்ளார். 10 ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்ததாலும் பக்க விளைவுகளால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இந்த தகவலை தற்போதுதான் ஏமியன்சில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இசபெல்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இதுவரை அவர் மரணம் குறித்த தகவலை வெளியிடாமல் இருந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முகமாற்று ஆபரேசனின்போது பக்க விளைவுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவருக்கு ஸடீராய்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மருந்துகளின் வீரியத்தினால் இரண்டு புற்றுநோய் கட்டிகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 26 நவம்பர், 2019
திங்கள், 25 நவம்பர், 2019
26.11.19 ஆம் நாளைய பள்ளிக் கல்வித்துறைஆணையாளர் கூட்டம் ஒத்திவைப்பு.
26.11.19 ஆம் நாளைய ஆணையாளர் கூட்டம் ஒத்திவைப்பு:
Sir/ Madam, Due to
Administrative reasons association meeting scheduled on 26.11.2019 has been postponed.
Director ~Dse
அனைத்து சங்கங்களுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் அலுவலர்களின் தகவலின்படி கூறப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள புதிய மாநிலப் பொறுப்பாளர்களுக்கு மாவட்டச் செயலாளர் வாழ்த்து
அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தேர்தல் சிதம்பரத்தில் 24.11.19(ஞாயிறு)அன்று நடைபெற்றுது.
இத்தேர்தலில் மாநிலச்செயலாளராக திரு.முருகசெல்வராசன் ,
மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளராக திரு.வெ.பாலமுரளி ,
மாநில சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக திரு.பெ.பழனிசாமி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சார்ந்த
மேற்கண்டோரை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ள மாநிலப்பொதுக் குழுவினை நாமக்கல் மாவட்ட அமைப்பு பெரிதும் வணங்குகிறது;
நன்றி பாராட்டுகிறது.
💐🙏🙏💐
முருகசெல்வராசன்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)