ஞாயிறு, 8 டிசம்பர், 2019

டிசம்பர் 8,
வரலாற்றில் இன்று.

 சார்க் தினம் இன்று.

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய
நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.

“சார்க்” எனப்படுவது தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு (South Asian Association for Regional Cooperation - SAARC) என்பதின் சுருக்கச் சொல்லாகும்.

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் இருந்தே இத்தகைய ஒரு கூட்டமைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போது இந்தியா கடைபிடித்த "அணிசேரா" கொள்கையை மையமாகக் கொண்டு இந்த கூட்டமைப்புக்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கபட்டன.

இந்த முயற்சியின் விளைவாக சார்க் கூட்டமைப்பானது 1985ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்பட்டது.

தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14ஆவது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8ஆவது உறுப்பு நாடாக சேர்த்துக்
கொள்ளப்பட்டது.

வெள்ளி, 6 டிசம்பர், 2019

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழல் முறைகேடு - நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் வலியுறுத்தல்

அன்பானவர்களே! வணக்கம். எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர் கூட்டுறவு சங்கத்தில்
பல லட்சக்கணக்கான ரூபாய் அளவில் கையாடல்கள் , முறைகேடுகள் பல்லாண்டு்
காலமாகவே நடைபெற்று வருகிறது.
இன்றும் நின்றபாடில்லை. சரி் செய்துக்கொள்கிறோம் எனும் சமாதானமும் ,
பசப்பு வார்த்தைகளுமே வெளிவருகிறது.
குறைகளை,
கறைகளை இன்றும்
களைந்த பாடில்லை.  எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் கூட்டுறவு சங்கத்தில்
ஆளும் அரசியல் தலையீடுகளும் -செல்வாக்குகளும், நிர்பந்தங்களும் அளவுக்கு அதிகமாவே செலுத்தப்படுகிறது.
இத்தகு அதிகார அத்துமீறல்கள் மற்றும் அதிகார  வரம்புமீறல்களின் அழுத்தங்களை புறந்தள்ளி
இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழும், கூட்டுறவுத்துறை விதிகளின் கீழும் தவறிழைத்தோர் மீது நேர்மைமிகு  நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திடுக!கூட்டுறவுத்துறை மாண்புகளை பாதுகாத்திடுக! கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல்  மாவட்ட அமைப்பு வலியுறுத்துகிறது.

TN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகை ஒரே APP இல் பதிவு செய்யும் வசதி...

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைகள்...


JIO "NEW ALL-IN-ONE" PLANS...


வியாழன், 5 டிசம்பர், 2019

நாமக்கல் மாவட்டம் ஒவ்வொரு ஒன்றியத்தில் ஊராட்சி தேர்தல் நடைபெறும் தேதி வெளியீடு


GO Ms No:270 date:03.12.2019 public service - Equivalenceof degrees -Variours education qualification - higher education













மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் பார்வையிட உள்ள மாவட்டங்கள் மற்றும் தேதி வாரியாக



பொது பிரிவு - கட்டாய ஓய்வு - 31.12.2019 வரை 30 ஆண்டுகள் முடியும் அலுவலர்கள் பதிவு தாள்கள் ஆய்வு செய்தல் சார்ந்து சார்ந்த குறிப்பாணை