டிசம்பர் 8,
வரலாற்றில் இன்று.
சார்க் தினம் இன்று.
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய
நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.
“சார்க்” எனப்படுவது தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு (South Asian Association for Regional Cooperation - SAARC) என்பதின் சுருக்கச் சொல்லாகும்.
இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் இருந்தே இத்தகைய ஒரு கூட்டமைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போது இந்தியா கடைபிடித்த "அணிசேரா" கொள்கையை மையமாகக் கொண்டு இந்த கூட்டமைப்புக்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கபட்டன.
இந்த முயற்சியின் விளைவாக சார்க் கூட்டமைப்பானது 1985ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்பட்டது.
தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14ஆவது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8ஆவது உறுப்பு நாடாக சேர்த்துக்
கொள்ளப்பட்டது.