வியாழன், 19 டிசம்பர், 2019
டிசம்பர் 19,
வரலாற்றில் இன்று.
கோவா சுதந்திர தினம் இன்று.
இன்றைய கோவா மாநிலம் போர்ச்சுகீசியர்களின் பிடியில் சுமார் 450 ஆண்டுகளாக இருந்தது. இடையில் 1812-1815 காலகட்டத்தில் பிரிட்டிஸாரால் கைப்பற்றப்பட்டது. 1961இல் இதே நாளில்தான் இந்தியாவோடு இணைந்தது.
1947இல்இந்தியா பிரிட்டிஸாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதற்குப் பிறகும் போர்ச்சுகல் நாடு இந்தியாவில், தான் பிடித்து வைத்திருந்த பகுதிகளிலிருந்து வெளியேற மறுத்தது.
அதனால், இந்தியா 1961 டிசம்பர் 12இல் ‘ஆபரேஷன் விஜய்’ எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. கோவா,டாமன் மற்றும் டையூவை போர்ச்சுகீசியர்களின் பிடியில் இருந்து மீட்டது. 1987 மே 30இல் கோவா இந்தியாவின் 25ஆவது மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. டாமன் மற்றும் டையூ இரண்டும் யூனியன் பிரதேசங்களாகத் தொடர்கின்றன.
360 கோடி ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த கடினப் பாறைகள் கோவாவில் கண்டறியப்பட்டுள்ளன. கோவா தன் பரப்பில் 56.6 சதவீதப் பகுதியில் காடுகளையும் மரங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவில் மிகக்குறைந்த அளவில் பழங்குடியின மக்களைக் கொண்ட மாநிலமாகவும் கோவா உள்ளது
சுற்றுலாதான் கோவாவின் முக்கியமான தொழில். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 12 சதவீதம் பேர் விரும்பி கோவாவுக்குச் செல்கின்றனர். 2004இல் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வந்தனராம். இவர்களில் 4 லட்சம் பேர் வெளிநாட்டினர்.

ஜெர்மனியை சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ருடால்ஃப் ஹெல் (Rudolf Hell) பிறந்த தினம் இன்று ( டிசம்பர் 19 1901-மார்ச்சு 11 2002)
ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள எக்முல் கிராமத்தில் (1901) பிறந்தார். தந்தை ராயல் பவேரியன் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர். அவருடன் அலுவலகம் சென்றபோது அங்கிருந்த டெலிகிராபி கருவி இவரை ஈர்த்தது. அங்கு போகும்போதெல்லாம் அதையே பார்த்துக்கொண்டிருப்பார்.
செக் குடியரசில் உள்ள செப் என்ற இடத்துக்கு அப்பா மாற்றலானதால் அங்கேயே இவரது ஆரம்பக் கல்வி தொடங்கியது. மொழிப் பாடங்கள், விருப்பம் இல்லாத மற்ற பாடங்களில் சராசரி மதிப்பெண்தான் வாங்குவார். ஆனால், விருப்பமான அறிவியல், கணிதத்தில் அதிக மதிப்பெண்களைக் குவித்தார்.
மூனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியலில் டிப்ளமோ பெற்றார். 1923-ல் எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். மின் சாதனங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார்.
வீடியோ கேமரா ட்யூபை முதன்முதலாக கண்டறிந்தார். ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தொலைநகல் சாதனத்தின் முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் (Hellschreiber) என்ற கருவியை 1920-ல் கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களால் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. ஃபேக்ஸ், டெலக்ஸ், கலர் ஸ்கேனர் ஆகியவற்றுக்கு இதுவே முன்னோடி.
விமானப் போக்குவரத்துக்கான ரேடியோ திசை காட்டும் கருவி குறித்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி 1927-ல் முனைவர் பட்டம் பெற்றார். விமானத்துக்கான தானியங்கி வழிகாட்டி உள்ளிட்ட கருவிகளைக் கண்டறிய இவரது ஆராய்ச்சி அடிப்படையாக அமைந்தது.
இவரது ‘ஹெல் ரெக்கார்டர்’ கருவி, தகவல் தொடர்பு துறையில் பெரும் வரவேற்பை பெற்றதால், 1929இல் சொந்த நிறுவனம் தொடங்கினார். தவறுகளைத் திருத்துதல், ஒருங்கிணைத்தல் போன்ற பிரச்சினைகளைக் கையாளும் அமைப்புடன் இக்கருவி வடிவமைக்கப்பட்டது.
செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவரை இது முழுமையாக ஒருங்கிணைக்காவிட்டாலும்கூட, தெளிவாகப் படிக்க ஏதுவாக, காகித நாடாவில் ஒவ்வொரு வார்த்தையும் 2 முறை அச்சிடும்படி வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற பிரத்யேக அம்சங்களால், செய்தி நிறுவனங்கள், தபால் அலுவலகங்கள் மட்டுமின்றி, காவல் துறையிலும் இக்கருவி பிரபலமடைந்தது. இதன் வேகமும் நம்பகத்தன்மையும் இதை உலகம் முழுவதும் பிரபலமடையச் செய்தன.
1931-ல் இரண்டாம் உலகப் போரின்போது குறியீட்டு இயந்திரங்களைத் தயாரித்தார். அடுத்த ஆண்டு எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஹெலிகல் ஸ்கேன் பிரின்ட் சிஸ்டம் என்ற கருவியைக் கண்டுபிடித்தார்.
பெர்லினில் இருந்த இவரது தொழிற்சாலை 1940-ல் இரண்டாம் உலகப் போரில் தாக்குதலுக்கு உள்ளானது. தளர்ந்துவிடாத அவர், தனது தொழிலை 1947-ல் மீண்டும் தொடங்கினார். கிளிஸ்கோகிராஃப், கோலோகிராஃப், டைப்செட்டிங் இயந்திரம் உட்பட பலவற்றை உருவாக்கினார். 1989 வரை பல்வேறு கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.
வியன்னா போட்டோகிராஃபிக் சொசைட்டியின் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். பல நாடுகள் இவருக்கு கவுரவ குடியுரிமை வழங்கின. தொலைத்தொடர்பு துறையின் பிதாமகராகப் போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் நூறாண்டு வாழ்க்கையைப் பூர்த்தி செய்து 2002இல் மறைந்தார்.

முத்தமிழ்க் காவலர்
கி. ஆ. பெ. விசுவநாதம் நினைவு தினம் இன்று.
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார்.
நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காக
வும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர்.
துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும்,
அவரது திராவிட நாடு கோரிக்கையுடன் உடன்படாதவர்.
அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார்.
இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

புதன், 18 டிசம்பர், 2019
சிந்தனை செய்க!..... தொடக்கக்கல்வி ஆசிரியர்களை விட்டால் , தேர்தல் பணி ஆற்றிட வேறு அலுவலர்கள் யாருமே இல்லையா?
சிந்தனை செய்க!
--------------------------------
தொடக்கக்கல்வி ஆசிரியர்களை விட்டால் ,
தேர்தல் பணி ஆற்றிட வேறு அலுவலர்கள் யாருமே இல்லை போலும்?!
******************
தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் முதல் சாய்சு தொடக்கக்கல்வித்துறையின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தான் போலும்.
தொடக்கக்கல்வி துறையின் ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் ஒருவர் விடாது பணிநியமனம் அளித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொள்வார்கள் போலும்.
இதனால் தான் என்னவோ இறந்து போன ஆசிரியர்களுக்கு கூட வஞ்சனை இல்லாது பணிஆணை வழங்கி விடுகிறார்கள். பணிநிறைவு பெற்றவர்கள் மனம் கோணாதும் பார்த்துக் கொள்கிறார்கள். பணிநிறைவு ஆசிரியர்களுக்கும் ஆணைகளை
வாரி வழங்கி விடுகிறார்கள். மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண்ணாசிரியரின் பிஞ்சுக்குழந்தை சிணுங்கினால் மனம் தாங்கிக் கொள்ள இயலாதென, குழந்தைபிறந்து இரண்டு மாதம்,மூன்று மாதம் ஆகிஉள்ள இவ்வாசிரியைக்கும் ஆணை தந்து விடுகின்றனர். இதையெல்லாம் விட திசம்பர் மாதத்தில் குழந்தைப் பேறுக்கு
நாள் குறிக்கப்பட்டுள்ள வயிற்றில் பிள்ளையைத் தாங்கிக் கொண்டுள்ள பெண் ஆசிரியைக்கும் வஞ்சகமின்றி பணியாணை வழங்கிவிடுகின்றனர்.
குழந்தைப் பராமரிப்புக்கு 18மாதம்காலம் விடுப்பு அளிக்கும் இந்திய தேசத்தில் தான் தேர்தல் என்று வந்துவிட்டால் பாலூட்டினால் என்ன?!பாயாசம் குடித்தால் என்ன?!மோர் குடித்தால் எங்களுக்கு என்ன?!தேர்தலுக்கு வந்து சேர்!என்று உத்தரவு இடுகிறார்கள்.
மாற்றுத்திறனாளிக்கு விலக்கு என்பதெல்லாம் "சுத்த கம்பக்" என்று சொல்லும் அளவிற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் ஒரு ஆணைக்கு இரண்டாணைகள் தருகிறார்கள். இரத்து செய்து தாருங்கள் என்றால் மனிதாபிமானத்தோடு வட்டாரக்கல்வி அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகமென அங்குமிங்கும் வரவழைத்து இந்த பெயருக்கெல்லாம் முடியாது; வாய்ப்பில்லை என்று பணிபார்க்க பணிப்பார்கள்.
இருதய பாதிப்பா?சிறுநீரகம் பாதிப்பா?கண்கள்பாதிப்பா?நரம்பு பாதிப்பா?எலும்பு பாதிப்பா? எந்தப் பாதிப்புக்கும் நிவாரணம் இல்லை; ஆள் இல்லை .
மரியாதையாக பணிபாரும்.
தேர்தல் பணி பார்க்கலையினா இப்ப பார்க்கிற பணியே போயிடுமென அன்பாய் சொல்லி ஆணை பிறப்பிப்பார்கள். கணவனுக்கு, மகனுக்கு,
மகளுக்கு , சிறுகுழந்தைக்கு
உடம்பு சரியில்லை என்றாலும், மகளுக்கு,
மருமகளுக்கு மகப்பேறு என்றாலும் ,
தனக்கே உடம்பு சரி் இல்லை என்றாலும்
அதை எல்லாம் இரக்க உணர்வு நிறைய இருந்தும், அறவே
காதுக் கொடுத்து கேளாது
பணிக்கு செல்லுங்கள்
என்று பண்பாய் சொல்லுவார்கள். உயரமான மலை என்றாலும்,
அதல பாதாளம் என்றாலும் கருமைசூழ்
அடர் வனம் என்றாலும்,
கடும் பனிப்பொழிவு என்றாலும், பேருந்து வசதி இல்லை என்றாலும் ,
பெண், ஆண் என்று பேதம் பாராது
சரிநிகர் சமமெனக்கூறி ரிச்க்கை...ரச்க்குபோல் சுவைக்கனும்
என்றெல்லாம் ஆற்றுப்படுத்தி ஒரு வாய் காபிக்கு வழி இல்லாதப் பகுதிக்கு அனுப்பிவைப்பார்கள்.
இதற்கு மேல் ஏதாவது சொன்னால்,
எதையாவது கேட்டால் தேர்தல்பணி ஆற்றும் நேரத்தில் அசாம்பாவிதம் வந்து
நடக்க கூடாதது நடந்துவிட்டால் நச்ட ஈடு வீடுபோய் சேர்ந்துவிடும் என்பார்கள்.
இப்படியாக எல்லாம் இச்டப்படுத்தி , கச்டப்படுத்தி தேர்தல் பணி வாங்குபவர்களே! அரசுப்பள்ளிகளில்
மாணாக்கர்
சேர்க்கை குறைகிறது. ஆசிரியர்கள் பணியிடம்
உபரி ஆகிறது ஆசிரியருக்கென கட்டாய ஓய்வுத்திட்டம் வருகிறது. அரசுப்பள்ளி இயற்கை மரணத்தை
நோக்குகிறது. பள்ளியே இல்லை; ஆசிரியரே இல்லை எனும் நிலை வருகிறது என்று ஆரூடம் பிதற்றுகிறது (?!)
ஆமாம் , அப்போது எல்லாம்
,இந்த ஆசிரியர் இல்லாத பேரவலம் சூழும் போதெல்லாம் எதிர் வரும் காலங்களில் தேர்தல் வேலையை எப்படி செய்வர்?!சிந்தனை செய் மனமே!
இந்த நிலை வரும் போது ஆசிரியர்கள் குறைவாக பணியில் உள்ளார்கள்
என்றோ?!
தேர்தல் பணிக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது என்றோ ?! தேர்தலையே நடத்தாது விட்டுவிடவா முடியும்.?!
மாற்று யோசனை ஏதாவது செய்து தானே ஆக வேண்டும்.!
அந்த யோசனையை இப்போதே செய்தால் ,
கோடி புண்ணியமாவது கிட்டாதா?!என்ன?!
-பாதிக்கப்படுவோருக்கான ஆதங்கக் குரல்...

டிசம்பர் 18,
வரலாற்றில் இன்று.
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நினைவு தினம் இன்று.
சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாக
வும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்
பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்த சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார்.
மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
"சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. "சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.
1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செல்லப்பா அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது.
சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
சரஸாவின் பொம்மை
மணல் வீடு
சி. சு. செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள்
வாடி வாசல்
ஜீவனாம்சம்
சுதந்திர தாகம்
முறைப்பெண்
மாற்று இதயம்
இன்று நீ இருந்தால்
சி.சு.செல்லப்பா, 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி காலமானார்.

- இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)