புதன், 22 ஜனவரி, 2020
செவ்வாய், 21 ஜனவரி, 2020
ஜனவரி 21, வரலாற்றில் இன்று.
ராஷ் பிஹாரி போஸ் நினைவு தினம் இன்று.
இந்திய தேசிய ராணுவம் என்ற உடனேயே, நம் நினைவுக்கு வருவது நேதாஜிதான்.
ஆனால், அவர் ஐ.என்.ஏ.வை உருவாக்கவில்லை. அதன் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ராஷ் பிகாரி போஸ்.
தேடப்படும் முக்கிய அரசியல் குற்றவாளிகள் பட்டியலை பிரிட்டிஷ் அரசு வைத்திருந்தது. அதில் உள்ள எவரைப்பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ நூறு ஏக்கர் நிலம் பரிசு தருவதாகவும் அறிவித்து இருந்தது.அந்தப் பட்டியலில் முதல்பெயர் ராஷ் பிகாரி போஸ்.
1938ல் ஹிந்து மகா சபை கிளையை ஜப்பானில் தொடங்கியவர் ராஷ் பிகாரி போஸ்.
நினைத்த நேரம் நினைத்த உருவம் எடுத்துக் கொள்ளும் மாயாவியைப் போல அவர் இருந்தார் என்று போலீஸ் குறிப்புகள் கூறுகின்றன. ஓடும் ரயிலில் போலீஸ் சுற்றி வளைத்த போது, துறவி போல மாறுவேடம் அணிந்து தப்பி இருக்கிறார். ஒரு முறை போலீஸ் உயர் அதிகாரியின் குதிரை வண்டி ஓட்டுபவனாக உருமாறிக்கொண்டு, கூடவே பயணம் செய்து தப்பிச் சென்று இருக்கிறார்.இன்னொரு முறை, காவல்துறை அதிகாரிகள் தேடிவந்த போது செத்துப்போய் ஆவியாக அலையும் கிழவனைப் போல வேடம் போட்டு காவலர்களைப் பயமுறுத்தி தப்பியிருக்கிறார்.
இப்படி, ராஷ் பிகாரி போஸின் நிஜவாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் இன்றுவரை கதை கதையாகப் பேசப்பட்டு வருகின்றன...
புத்த மதத்துறவி, வணிகர், தேநீர் கடை நடத்துபவர், கூலித் தொழிலாளி, நாடக நடிகர் எனப் பல வேடங்கள் போட்டு மூன்று வருடங்களுக்கு ஜப்பானிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார் போஸ். பத்து நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கியிருக்க முடியாது. போலீஸ் சுற்றி வளைத்துவிடும். தப்பிப் போக வேண்டும். பிரிட்டிஷ் உளவாளிகள் பின்தொடர்ந்து கொண்டே இருந்தார்கள்..
ஜனவரி 21, 1945-ல் ராஷ் பிகாரி போஸும் மரணம் அடைந்தார்.பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ராஷ் பிகாரி போஸின் சுதந்திரக்கனவு அவர் வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஆனால், அவர் உருவாக்கிய உத்வேகம் அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களை ஒன்றிணைத்தது. மலேசியா, பர்மா, சிங்கப்பூரில் இருந்த இந்தியர்களை ஒரே அணியில் திரளச் செய்தது. வலிமைமிக்க அந்த இணைப்புக்கு காரணமாக ராஷ் பிகாரி இருந்தார் என்பதே அவரது தனிச்சிறப்பு.
ராஷ் பிகாரி போஸின் வரலாறும் இளம்தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.வரலாற்று நிகழ்வுகளை எளிதாக கடந்து போய் விடும் வெறும் தகவலாக மாற்றி வைத்திருப்பதுதான் ஒருவன், தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம்.

ஜனவரி 21,
வரலாற்றில் இன்று.
முதல் அணு நீர்மூழ்கி கப்பல் செயல்பாட்டிற்கு வந்த தினம் இன்று.
அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக்கப்பல் நாட்டிலஸ், முதன் முதலாக 1954-னஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று அமெரிக்காவின் தேம்ஸ் நதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த அணு நீர்மூழ்கிக்கப்பல், டீசலினால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை விட நீண்ட நேரத்திற்கு கடலின் அடியில் இருக்க முடியும்.
அமெரிக்காவின் புது லண்டன் பகுதியிலிருந்து சான் ஜூவான் வரையிலும் 1200 கடல் மைல்கள்(2200 கி.மீ) வரை இந்நீர்மூழ்கி கப்பலின் நீண்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.
நாட்டிலஸ் கப்பலிற்கு 1980ஆம் ஆண்டு சேவையிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது. 1982இல் தேசிய வரலாற்று சின்னமாக இக்கப்பல் அறிவிக்கப்பட்டது. கிரோடன் நகரில் அருங்காட்சியகமாக செயல்படும் இக்கப்பலைக் காண வருடத்திற்கு 2,50,000 பார்வையாளர்கள் வருகின்றனர்.

எம். எஸ். உதயமூர்த்தி நினைவு தினம் இன்று.
மயிலாடுதுறை சி. உதயமூர்த்தி தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார்.
‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை எழுதியவர்.
25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய பின், இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். இவர் எழுதிய "என்னைச் செதுக்கிய எண்ணங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது.

மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனினின் நினைவு தினம் இன்று.
உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின். மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பவும், மார்க்சிய மெய்ஞானத்தின் ஆற்றலை உழைக்கும் மக்களுக்கு எடுத்துக் கூறவும், ஜார் மன்னரின் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கானப் புரட்சிப் படையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் லெனின். இதற்கெல்லாம் அடிப்படையாக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். குழந்தைகளிடமும் விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடம் லெனின் அக்கறை காட்டினார். நாட்டின் எந்தக் கோடியிலிருந்து கடிதம் வந்தாலும் அவற்றைப் படித்துப் பார்த்து, தகுந்த நடவடிக்கை எடுத்தார். மிகப் பெரும் தேசத்தின் தலைவராக இருந்தும் எளிமையாக ஒரு சின்ன அறைக்குள் வாழ்ந்த அவரது பண்பு வியக்கத்தக்கது. மாஸ்கோவை நிர்மாணித்த அவருடைய திறமை போற்றத்தக்கது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)