செவ்வாய், 21 ஜனவரி, 2020

*🌷2020 ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுப்பு(RH)நாட்கள்*
ஜனவரி 21, வரலாற்றில் இன்று.

ராஷ் பிஹாரி போஸ் நினைவு தினம் இன்று.

இந்திய தேசிய ராணுவம் என்ற உடனேயே, நம் நினைவுக்கு வருவது நேதாஜிதான்.

ஆனால், அவர் ஐ.என்.ஏ.வை உருவாக்கவில்லை. அதன் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ராஷ் பிகாரி போஸ்.

தேடப்படும் முக்கிய அரசியல் குற்றவாளிகள் பட்டியலை பிரிட்டிஷ் அரசு வைத்திருந்தது. அதில் உள்ள எவரைப்பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ நூறு ஏக்கர் நிலம் பரிசு தருவதாகவும் அறிவித்து இருந்தது.அந்தப் பட்டியலில் முதல்பெயர் ராஷ் பிகாரி போஸ்.

1938ல்  ஹிந்து மகா சபை கிளையை ஜப்பானில் தொடங்கியவர் ராஷ் பிகாரி போஸ்.

நினைத்த நேரம் நினைத்த உருவம் எடுத்துக் கொள்ளும் மாயாவியைப் போல அவர் இருந்தார் என்று போலீஸ் குறிப்புகள் கூறுகின்றன. ஓடும் ரயிலில் போலீஸ் சுற்றி வளைத்த போது, துறவி போல மாறுவேடம் அணிந்து தப்பி இருக்கிறார். ஒரு முறை போலீஸ் உயர் அதிகாரியின் குதிரை வண்டி ஓட்டுபவனாக உருமாறிக்கொண்டு, கூடவே பயணம் செய்து தப்பிச் சென்று இருக்கிறார்.இன்னொரு முறை, காவல்துறை அதிகாரிகள் தேடிவந்த போது செத்துப்போய் ஆவியாக அலையும் கிழவனைப் போல வேடம் போட்டு காவலர்களைப் பயமுறுத்தி தப்பியிருக்கிறார்.

 இப்படி, ராஷ் பிகாரி போஸின் நிஜவாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் இன்றுவரை கதை கதையாகப் பேசப்பட்டு வருகின்றன...

புத்த மதத்துறவி, வணிகர், தேநீர் கடை நடத்துபவர், கூலித் தொழிலாளி, நாடக நடிகர் எனப் பல வேடங்கள் போட்டு மூன்று வருடங்களுக்கு ஜப்பானிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார் போஸ். பத்து நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கியிருக்க முடியாது. போலீஸ் சுற்றி வளைத்துவிடும். தப்பிப் போக வேண்டும். பிரிட்டிஷ் உளவாளிகள் பின்தொடர்ந்து கொண்டே இருந்தார்கள்..

ஜனவரி 21, 1945-ல் ராஷ் பிகாரி போஸும் மரணம் அடைந்தார்.பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ராஷ் பிகாரி போஸின் சுதந்திரக்கனவு அவர் வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஆனால், அவர் உருவாக்கிய உத்வேகம் அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களை ஒன்றிணைத்தது. மலேசியா, பர்மா, சிங்கப்பூரில் இருந்த இந்தியர்களை ஒரே அணியில் திரளச் செய்தது. வலிமைமிக்க அந்த இணைப்புக்கு காரணமாக ராஷ் பிகாரி இருந்தார் என்பதே அவரது தனிச்சிறப்பு.

ராஷ் பிகாரி போஸின் வரலாறும் இளம்தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.வரலாற்று நிகழ்வுகளை எளிதாக கடந்து போய் விடும் வெறும் தகவலாக மாற்றி வைத்திருப்பதுதான் ஒருவன், தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம்.
ஜனவரி 21,
வரலாற்றில் இன்று.

முதல் அணு நீர்மூழ்கி கப்பல் செயல்பாட்டிற்கு வந்த தினம் இன்று.

அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக்கப்பல் நாட்டிலஸ், முதன் முதலாக 1954-னஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று அமெரிக்காவின் தேம்ஸ் நதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த அணு நீர்மூழ்கிக்கப்பல், டீசலினால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை விட நீண்ட நேரத்திற்கு கடலின் அடியில் இருக்க முடியும்.

 அமெரிக்காவின் புது லண்டன் பகுதியிலிருந்து சான் ஜூவான் வரையிலும் 1200 கடல் மைல்கள்(2200 கி.மீ) வரை இந்நீர்மூழ்கி கப்பலின் நீண்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

 நாட்டிலஸ் கப்பலிற்கு 1980ஆம் ஆண்டு சேவையிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது. 1982இல் தேசிய வரலாற்று சின்னமாக இக்கப்பல் அறிவிக்கப்பட்டது. கிரோடன் நகரில் அருங்காட்சியகமாக செயல்படும் இக்கப்பலைக் காண வருடத்திற்கு 2,50,000 பார்வையாளர்கள் வருகின்றனர்.
ஜனவரி 21,
வரலாற்றில் இன்று.


எம். எஸ். உதயமூர்த்தி நினைவு தினம் இன்று.

  மயிலாடுதுறை சி. உதயமூர்த்தி தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார்.

 ‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை எழுதியவர்.

25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய பின், இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். இவர் எழுதிய "என்னைச் செதுக்கிய எண்ணங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது.
ஜனவரி 21, வரலாற்றில் இன்று.

மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனினின் நினைவு தினம் இன்று.

உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின். மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பவும், மார்க்சிய மெய்ஞானத்தின் ஆற்றலை உழைக்கும் மக்களுக்கு எடுத்துக் கூறவும், ஜார் மன்னரின் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கானப் புரட்சிப் படையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் லெனின். இதற்கெல்லாம் அடிப்படையாக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். குழந்தைகளிடமும் விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடம் லெனின் அக்கறை காட்டினார். நாட்டின் எந்தக் கோடியிலிருந்து கடிதம் வந்தாலும் அவற்றைப் படித்துப் பார்த்து, தகுந்த நடவடிக்கை எடுத்தார்.  மிகப் பெரும் தேசத்தின் தலைவராக இருந்தும் எளிமையாக ஒரு சின்ன அறைக்குள் வாழ்ந்த அவரது பண்பு வியக்கத்தக்கது. மாஸ்கோவை நிர்மாணித்த அவருடைய திறமை போற்றத்தக்கது.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தொகுதி - 2ல் சர்ச்சைக்குரிய பாடப்பகுதியினை மேலே தாளிட்டு மறைத்து ஒட்ட தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை - SERT இயக்குநர்



DEDUCTION OF TAX AT SOURCE- INCOME-TAX DEDUCTION FROM SALARIES UNDER SECTION 192 OF THE INCOME-TAX ACT, 1961 ~ DURING THE FINANCIAL YEAR 2019-20…

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2019-20 ஆம் கல்வியாண்டில் அங்கன்வாடி மையங்களில் நியமனம் செய்யப்பட்ட LKG/UKG ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி அளித்தல் - சார்பு...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம் - 2018-19ஆம் கல்வியாண்டு - பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு (SMC/SMDC) உறுப்பினர்களுக்கான - ஒரு நாள் பயிற்சி (Non Residential) - பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் வழங்குதல் -- சார்பு...


கல்வித்தரத்தில் பின்தங்குகிறதா தமிழகம்? எழுத்துக்கூட்டிப் படிக்க முடியாத நிலை என ஆய்வு தகவல் ~ பயத்தை , பீதியை பரப்பிட வேண்டாம் முருகசெல்வராசன் வேண்டுகோள்...


ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோரால் இரண்டாம் வகுப்பு புத்தகங்களைக் கூட படிக்க முடியவில்லை. மேலும் கடந்த பத்து ஆண்டுகளாகக் கல்வியின் தரம் இந்தியாவில் குறைந்துகொண்டே வருவதாகவும் அசர் (The Annual Status of Education Report - ASER) அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அசர் நிறுவனம் பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி, நாட்டின் கல்வித் தரம் குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. 2018-19 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வியின் தரம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதாகவும் இந்த ஆண்டும் வீழ்ச்சி நிற்கவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

2018-19 ஆம் ஆண்டின் கல்வித் தரத்தைப் பொறுத்தவரையில் 2007-2008ஆம் ஆண்டின் கல்வித் தரத்தை விடக் குறைவாகவே உள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அப்படியென்றால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி என்ன ஆனது? கல்வி தரத்தை உயர்த்துவதில் மத்திய மாநில அரசுகள் கவனக்குறைவாகச் செயல்படுகின்றனவா போன்ற பல கேள்விகளை இந்த அறிக்கை எழுப்புகிறது.

2012ஆம் ஆண்டு அன்றைய திட்ட கமிஷன்தான் முதன் முதலில் இந்தியக் கல்வித் தரத்தில் குறைபாடு உள்ளதைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதை அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மறுத்துவிட்டது. அதற்குப் பின் மாணவர்களின் படிக்கும் ஆற்றல், அடிப்படை கணித ஆற்றல் போன்றவை குறித்து எந்த விதமான தகவலும் வெளிவரவில்லை.

குழந்தைகளின் படிக்கும் ஆற்றலையே கல்வியின் தரமாக இந்த ஆய்வு எடுத்துக் கொள்கிறது. இதன்படி 2008 ஆம் ஆண்டிலிருந்து கல்வியின் தரம் 9 சதவீதம் குறைந்துள்ளது.

கவலை அளிக்கும் அரசுப் பள்ளிகள்

கல்வியின் தரத்தை பொறுத்தவரையில் தனியார் பள்ளிகளின் தரம் அதிகஅளவில் குறையவில்லை. ஆனால் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் கவலைக்குரியதாக இருக்கிறது.

2008ஆம் ஆண்டு தனியார் பள்ளிகளின் தரம் 67.9 சதவீதமாக இருந்ததாகவும் தற்போது இது குறைந்து 65.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம் 53 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளிகளின் தரம் தற்போது 44.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.

இதேபோல மேல்நிலைக்கல்வியின் தரமும் வெகுவாக குறைந்துள்ளது.2007-08 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்கள் பத்தில் எட்டு பேருக்குப் படிக்கும் ஆற்றல் இருந்தது. இது தற்போது வெகுவாக குறைந்து ஆறு அல்லது ஏழு பேருக்குத் தான் படைப்பாற்றல் இருக்கிறது.

கணக்குப் போடும் ஆற்றலில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்

கூட்டல் கழித்தல் வகுத்தல் போன்ற அடிப்படைக் கணித அறிவில் தமிழக மாணவர்களின் நிலை தொடர்ந்து வருத்தமளிப்பதாகவே இருந்துவருகிறது. 2008ஆம் ஆண்டு கணித அறிவில் தமிழகம் இந்திய அளவில் மிகவும் பின்தங்கியே இருந்தது. தமிழகத்தில் 100-இல் பத்துக்கும் குறைவான மாணவர்களுக்கே வகுத்தல் கணக்குகளைச் செய்யமுடிந்தது. இந்த நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு, தற்போது 100-இல் இருபது மாணவர்களால் வகுத்தல் கணக்குகளைச் செய்ய முடிவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையும் மிக மிகக் குறைவே.

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு வகுத்தல் கணக்குகளைப் போட முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அசாம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாணவர்களைவிடத் தமிழக மாணவர்களின் கணக்காற்றல் குறைவாகவே உள்ளது.

இந்த தரம் ஏன் குறைவாகவே பத்து ஆண்டுகளுக்கு மேலாகக் குறைவாகவே உள்ளது என்பதைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை கட்டாயம் ஆய்வு ஒன்றை நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

எதை நோக்கிச் சொல்கிறது நம் கல்விக் கொள்கை?

முன்பை காட்டிலும் மாணவர்களின் வருகை நாடு முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நம் கல்வி வளர்ச்சி எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது? நம் கல்வியின் வளர்ச்சி எதை நோக்கிச் செல்ல வேண்டும்? அனைவருக்கும் கல்வி என்ற ஒற்றை இலக்கை நோக்கி மட்டும் முன்னேறாமல் அனைவருக்கும் தரமான கல்வி என்ற இலக்கை நோக்கி நாம் எப்போது பயணிக்கப்போகிறோம்?. இது போன்ற பல கடுமையான கேள்விகளை இந்த அறிக்கை முன்வைத்திருக்கிறது.

இந்த கேள்விகளுக்கான பதில்கள் கடினமானவை. குழந்தைகளின் பாடச்சுமையை குறைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கூறிவருகின்றன. இது சரியானதுதான் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆனால், பாடச் சுமையை குறைப்பது என்ற பெயரில் கல்வித் தரத்தைக் குறைப்பது எப்படித் தீர்வாகும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு செயல்வழிக் கற்றல் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏன் நாடு முழுவதிலும் அரசு முன்னெடுத்து செல்லவில்லை?. இந்த கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகள், சில ஆசிய நாடுகளில் கல்வித்தரம் நன்கு வளர்ந்திருப்பது வெளிப்படையாகத் தெரிவதாக ASER அந்த நாடுகளில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நமது கல்வி நிறுவனங்கள் எப்போது கண்டுகொள்ளுமோ?


குறிப்புரை:
------------------------
 மத்திய,மாநில அரசுகள் எல்லோருக்கும் கல்வி என்றது . எல்லோருக்கும் கல்வி என்பதை இந்தியஅரசு அரசயல் சட்ட உரிமையாக்கி விட்டது.
இந்திய அரசியல் சாசன கடமையை கண்ணியத்துடன் மத்திய,மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுடன் இருக்கின்ற அகவய,புறவய கட்டமைப்புகளைக்கொண்டு  தமிழ்நாட்டு ஆசிரியர்கள் சிரத்தை உணர்வோடு பணியாற்றி நிறைவேற்றி
வருகின்றனர்.
அண்மையில்
சில ஆண்டுகளாக மேற்கண்ட அரசுகள் தரமான கல்வித் தருவது குறித்தும்,கல்வித்தரம் குறித்தும்  பெரிதும் சிலாகித்துப் பேசிவருவது வரவேற்கத்
தக்கதே.

தர அளவீடுகளுகக்கான  தேர்வுமுறைகள்,
ஆய்வுமுறைகள் மற்றும் மதிப்பீடுகள் இந்தியளவிலும் ,உலக அளவிலும் ஓரே சீரான அளவில் இருத்தல் வேண்டுமென விரும்புவதும், ஆசைப்படுவதும் என்ன மாதிரியான சிந்தனை ஓட்டம் என்பது வினாக்குரியாகிறது.(?!).

கல்வித்தரம் குறைவு என்று
பீதி கிளப்புவதும்-பயத்தைப் பரப்புவதும்,
இதற்கான வழிமுறைகள் குறித்து சில ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் சில பரிந்துரைகளை முன்வைத்து   அரசுகளை ஏற்கச்செய்வதும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பெடுப்பதும் வழக்கமான-வாடிக்கையான ஒன்றேயாகும்.

கல்வித்தரம் என்றால் என்ன?எது தரம்?தரத்தின் அளவுகோல் கருவிஎது?என்பது பற்றி வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டு ,எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவினை முதலில் எட்ட வேண்டும்.

இதையே இன்று வரையிலும் செய்யாது தரம் பற்றிய பயத்தைப்பரப்புவது பொருத்தமான செயலாகாது.

 கல்வித்தரம் குறித்து குறைகூறல்களின் சாரம் விடுத்து நிறைகளைப் பாராட்டி கல்வித்தரம் மேம்பாடு
பெற் றிட வழிவகைகள் செய்திடுமாறு நல்லோர் எல்லோரையும் வேண்டுகிறேன். -முருகசெல்வராசன்.