புதன், 4 மார்ச், 2020

நாமகிரிப்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (03-03-2020) ~நாளிதழ் செய்திகளில்...



தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்- கடனுதவி தொகை வழங்குதல் சார்ந்த தகவல்

மாவட்ட அளவில் 4,5 வகுப்புகளுக்கு கற்றல் அடைவுகள் அடிப்படையில் தேசிய அடைவுத்தேர்வு(NAS)வினா மாதிரிகளை தயாரித்தல் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் பணிமனைப்பயிற்சி



நாமகிரிப்பேட்டையில் சிறுவிடுப்பு உள்ளிட்ட அனைத்து வகை விடுப்புகளுக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியப்பெருமக்களை மட்டும் குறிவைத்து அலைக்கழிப்பதை,பழிவாங்குவதை கண்டித்திடுக!தடுத்து நிறுத்திடுக!

ஒரு அரசாணை வெளியாகிறது.
இவ்வரசாணைக்கு துறைத்தலைவர் செயல்முறை இடவில்லை.
நாமக்கல் மாவட்ட 
முதன்மை அலுவலர்  துறைத் தலைவரின் செயல்முறையை மேல் நடவடிக்கைக்கு பகிரவில்லை.
நாமகிரிப்பேட்டை வட்டார அலுவலரும்  தனக்குள்ள வானாளவிய செல்வாக்கில் சுற்றறிக்கை வெளியிடவில்லை.

விடுப்பு விண்ணப்பம் தனது பரிந்துரைக்கு வேண்டும் எனும் 
புத்தம் புதிய அவதார புருசர்களும் 
கடித எண் இட்டு கடிதமோ...
சுற்றறிக்கையோ தனது தொகுப்பு பள்ளிகளுக்கு அனுப்பி வைத்திட வில்லை.

ஆனாலும் ,
வெற்று மிரட்டலில்...
அதிகார தோரணையில்.... அத்துமீறலில் ...
பழிவாங்கும் எண்ணத்தில்...
அலைக்கழிக்கும் உள்நோக்கில் ...
மோதலை உருவாக்கி குளிர் காயும் பேராசையில்...
வட்டாரஅலுவலர்களின் ஓரவஞ்சனைச்
செயல்பாடுகள் நீள்கிறது.

இக்
கொடுமையை - 
கொடிய அராசகத்தைக் கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்
நாமகிரிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்.

செவ்வாய், 3 மார்ச், 2020

DSE Proceedings_ICT-கணினி வழி கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது அளித்தல் விவரம் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:04.02.2020

*கூட்டுறவு சிக்கன நாணய சங்க இயக்குநர்களுக்கு அமர்வு படி உயர்த்தி வழங்குவதற்கான பதிவாளரின் சுற்றறிக்கை*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) ~ முப்பெரும் விழா (08-03-2020) அழைப்பிதழ்...

அன்பானவர்களே!வணக்கம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர், பாவலர்.திரு.க.மீ., அவர்களின் அறைகூவலை ஏற்றுக்கொண்டு ஜாக்டோ-ஜியோவின் 22.01.2019 ஆம் நாள் முதலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் எழுச்சியுடன்  பங்கேற்றுள்ள மறவர்-மறத்தியர் அனைவருக்கும்  இருகரம் குவித்து தலைதாழ்த்தி  வணக்கம் -வாழ்த்து-பாராட்டு உரித்தாக்கிக் கொள்கிறோம்.

எதிர்வரும் 08.03.2020 (ஞாயிறு)அன்று முற்பகல் 10.00மணி அளவில் நாமக்கல்லில்  கடந்த 2019 சனவரி 22ஆம் நாள் முதலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்றுள்ள மறவர்- மறத்தியர்களுக்கும் பாராட்டு செய்து சிறப்பித்திடும் வகையில்  முப்பெரும்விழா நடைபெறுகிறது.

தமிழ்நாடு காவல்துறையால் வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் பங்கேற்றதற்காக  பொய்வழக்கு புனையப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தற்காலிக  பணிநீக்கம் செய்யப்பட்டும், இடமாறுதல் வழங்கப்பட்டும்,17(ஆ)ஒழுங்கு நடவடிக்கைகள் தொடுக்கப்பட்டும் பல்வேறுவகையான தாக்குதல்களை- கொடுமைகளை எதிர்கொண்டுள்ள ஆசிரியர் மன்றத்தின் சேலம் சிறைச்செம்மல்களுக்கு- தியாகச்செம்மல்களுக்கு  சிறைசெம்மல் விழா
நடைபெறுகிறது.

மாநிலத்தலைமை அறிவிக்கும் வரை வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக ஆசிரியப்பணி மறுக்கப்பட்டு பணிக்காக காத்திருப்போர் கறுப்புப்பட்டியிலில் வைக்கப்பட்டும், இடமாறுதல் வழங்கப்பட்டும்,17(ஆ)ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு வகையான சவால்களை சந்தித்துள்ள  மன்ற மறவர்-மறத்தியருக்கு வேலை நிறுத்தப் போராளி விழா நடைபெறுகிறது.

வேலைநிறுத்தக் காலத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகி விடுவிக்கப்பட்டுள்ள செயல்நிறை மறவர்-மறத்தியர்  மற்றும்  வேலைநிறுத்தக் காலத்தில்   போராட்டப் பாரம்பர்யத்தை - போராட்டப் பெருமையை
தாழ விடாது  உயத்திப்பிடித்துள்ள செயல்நிறை மறவர்-மறத்தியர் ஆகியோருக்கு
மன்றச்செம்மல்  விழா 
நடைபெறுகிறது.

கடந்த 2019சனவரி 22ஆம் நாள் முதலான வேலைநிறுத்தத்தில் மாநிலத்தலைமையின் முடிவுகளை முழுமையாக நிறைவேற்றிய மறவர்-மறத்தியருக்கு பொன்னாடை அணிவித்து விருது வழங்கி பாராட்டுச் சான்று வழங்கி சிறப்புச்செய்து முப்பெரும் விழாப்பேருரையை  இனமானக் காவலர்-பாவலர் திரு.க.மீ., அவர்கள்  ஆற்றுகிறார்கள்.

இவ்விழாவில் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில- மாவட்ட- ஒன்றியப்பொறுப்பாளர்கள், மன்ற முன்னோடிகள், ஆசிரியப்பெருமக்கள் அனைவரும் முழுமையாக -நிறைவாக பங்கேற்று பங்களிப்புச் செய்து முப்பெரும் விழாவினை சிறப்புறச்செய்தும்- வெற்றிபெறச் செய்தும்  எல்லோருக்குமான ஒட்டுமொத்தப் போராட்டத்தில் பங்கேற்று பல்வேறு பாதிப்புகளை- இழப்புகளை அடைந்துள்ள ஆசிரியர் மன்றத்தின்  செம்மல்களுக்கு நன்றி பாராட்டி  உதவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

~முருகசெல்வராசன் & மெ.சங்கர்.