செவ்வாய், 24 மார்ச், 2020

மத்திய அரசின் ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்த அறிவிக்கை






*✳வருமான வரி தாக்கல், ஆதாருடன் பான் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு - நிர்மலா சீதாராமன்*

*☀வருமான வரி தாக்கல் மற்றும் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.*

*☀தலைநகர் டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் இணை மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.*

*🌸அப்போது அவர்கள் கூறியதாவது:*

*☀தற்போதையை நிலவரம் கவலை அளிக்கிறது. கடந்த 2 மாதமாக தொழில் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.*

*☀வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்படும். தொழில்துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிப்பிற்கான நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும்.*

*☀2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படும். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்படும்.*

*☀ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கான அவகாசம் மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.*

*☀இதேபோல், மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதற்கான அவகாசமும் ஜூன் 30-ம் தேதி வரை வரை நீட்டிக்கப்படுகிறது.*

*☀வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்த 3 மாதங்களில் எந்த ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.*

*☀ஜி.எஸ்.டி., சுங்க.வரி கணக்கு தாக்கல் செய்ய தொழில்துறையினருக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். 5 கோடி ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு தாமதம் மற்றும் அபராதம் விதிக்கப்படாது. பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.*
*✳பள்ளிக்கல்வித்துறை -புதியதாக 5 வருவாய் மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டது- முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதியக் கொடுப்பாணை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் கடிதம்.*

பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்பதால் அவர்கள் பயன்பெற வகையில் இணையதளம் மூலம் படிப்பதற்கு குறிப்பிட்ட இணைய தளம் வெளியிட்டு உள்ளனர் மத்திய அரசாங்கம்.

பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்பதால் அவர்கள் பயன்பெற வகையில் இணையதளம் மூலம் படிப்பதற்கு குறிப்பிட்ட இணைய தளம் வெளியிட்டு உள்ளனர் மத்திய அரசாங்கம்.
அதனை மக்கள் நாம் போன்று மக்கள் பரப்பினால் அவர்கள்  வீட்டில் இருந்து படிக்க வசதியாக இருக்கும்.



சனி, 21 மார்ச், 2020

*🌸பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைத்தல் சார்பான அரசு தேர்வுத்துறை இயக்குநர் செயல்முறைகள்.*


அனைத்து வகையான பணியாளர்கள் (Teaching staffes and Non Teaching staffes வீட்டிலிருந்து பணியினைச் செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உத்தரவு

  • நாமக்கல் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளரே!

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரே!
கடனுக்கு குழுக்காப்பீடு செய்தால்  கடன் கொடு்!குழுக்காப்பீடு செய்யாதவருக்கு கடன் கொடுக்காதே!
 குழுக்காப்பீடு செய்யாதவரை  கடனை திருப்பி செலுத்தத்சொல்!
குழுக்காப்பீடு இல்லையேல் சங்கத்தில் உறுப்பினர் கிடையாது!
 மேற்கண்டவாறு எல்லாம் சங்க நிர்வாகக்குழுக்கள் மிரட்டுகிறது!அச்சுறுத்துகிறது!

மாநிலப் பதிவாளர் வழிகாட்டலில் குழுக்காப்பீடு விருப்பம் பெற்றிடுக!
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளரே!
தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளரின் சுற்றறிக்கையை ஏற்றுக்கொண்டு அமல்படுத்துக!
2019ஆம் ஆண்டின் முதல் சுற்றறிக்கை முடங்கிப் போவது அழகல்ல!
ஐந்து சதவிகித பங்குத்தொகையை திருப்பித்தந்திடுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது.

மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்துவிட்டு ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் தமிழக அரசுக்கு கண்டனம் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுத்செயலாளர் திரு.பாவலர் க.மீனாட்சிசுந்தரம்