ஞாயிறு, 29 மார்ச், 2020
சனி, 28 மார்ச், 2020
திராவிட வாசகர் வட்டம் நடத்தும்,
பேரறிஞர் அண்ணா நினைவு
சிறுவர் கதைப் போட்டி 2020
நோக்கங்கள்:
1) சிறுவர் கதைகள் வாசிப்பை ஊக்குவித்தல்.
2) புதிய எழுத்தாளர்களை இனங்காணுதல்.
போட்டி:
சிறுவர்களுக்கு ஆர்வமும் அறிவும் வளர்க்கும் வகையில் எந்த ஒரு பொருள் குறித்தும் கதை அமையலாம்.
கதைகளை எழுதி கிண்டில் புத்தகமாக வெளியிட வேண்டும்.
கதைகளில் கற்பனை / Fantasy கலந்து எழுதலாம். ஆனால், மூட நம்பிக்கை, புராணக் கதைகள், இட்டுக்கட்டிய போலி வரலாற்றுக் கதைகள், பாத்திரங்கள் சார்ந்து அமையக் கூடாது.
அறிவியல், வரலாறு, இலக்கியம், இயற்கை, நன்னெறிகள் (அன்பு, அறம், வீரம், சமூகநீதி, தன்மானம் முதலியவை) போன்றவற்றை அறிமுகப்படுத்தும் வகையில் கதைகள் அமையலாம். கதைகளைக் குழந்தைகளே விரும்பிப் படிக்கும் / கேட்கும் வகையில் எழுதுங்கள். வெறும் நீதி போதனையாக அமைய வேண்டாம்.
விதிகள் மற்றும் வழிகாட்டல்கள்:
* அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.
* கிண்டில் நூல் ஒரே கதையாகவோ, பல சின்னஞ்சிறு கதைகளின் தொகுப்பாகவோ அமையலாம்.
* ஒருவர் எத்தனை கதை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
* கதை நல்ல தமிழ் நடையில் பிழையின்றி அமைய வேண்டும். கதையின் நடை 10 வயது சிறுவர்கள் தாங்களே படிக்க இயலும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும்.
* சொந்தமாக, புதிதாக எழுதிய கதையாக அமைய வேண்டும். ஏற்கனவே உள்ள கதைகளைத் தழுவியோ மொழிபெயர்த்தோ எழுதக் கூடாது.
* நீங்கள் ஏற்கனவே வேறு இடங்களில் எழுதிய கதைகளை அனுப்பலாம். பரிசுக்குத் தெரிவானால் அது உங்கள் கதை தான் என்று உறுதி செய்ய வேண்டி வரும்.
* கதையின் கற்பனை, எழுத்து நடைக்கு மட்டுமே மதிப்பெண். கதையின் அட்டைப்படம் / ஓவியம் / படங்களுக்கு மதிப்பெண் கிடையாது.
* கதைகளைக் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 15, 2020க்குள் பதிவேற்ற வேண்டும்.
* ஒவ்வொரு கிண்டில் புத்தகத்திலும் #AnnaKidsStoryContest2020 என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
* கிண்டிலில் புத்தகம் வெளியிடுவது எப்படி என்ற வழிகாட்டுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். உங்கள் கிண்டில் நூலை KDP Select என்னும் Kindle Unlimited சேவையில் கட்டாயம் இணைக்க வேண்டும். இதற்கான வழிகாட்டல் இந்தப் புத்தகத்தில் உண்டு.
* கிண்டிலில் பதிவேற்றப்பட்ட உங்கள் கதைக்கான link ஐ Dravidian Books என்ற Facebook பக்கத்தின் Inbox க்கு, உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களோடு அனுப்பி வைக்க வேண்டும். “Dravidian Books”, பக்கத்தின் இன்பாக்ஸுக்கு அனுப்பப்படும் link கள் மட்டுமே போட்டியில் கலந்துகொண்டதாக கருதப்படும்.
* நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
பரிசுகள்:
முதற் பரிசு – 10,000 INR , 2 கிராம் தங்க நாணயம், மற்றும் கணிப்பலகை (Tablet PC)
இரண்டாம் பரிசு – 5,000 INR மற்றும் 1 கிராம் தங்க நாணயம்
மூன்றாம் பரிசு – 2,000 INR மற்றும் அரை கிராம் தங்க நாணயம்.
ஐந்து சிறப்புப் பரிசுகள் – தலா 1,000 INR
இறுதிப் போட்டிக்குச் செல்லும் 25 பேருக்கு Periyarbooks.in வலைத்தளம் 500 ரூபாய் மதிப்பு மிக்க கூப்பன் அன்பளிப்பாக வழங்கும்.
* பரிசுத் தொகையை இந்திய ரூபாயில் இந்தியாவுக்குள் மட்டும் தான் அனுப்பி வைக்க முடியும்.
பெரியார் படம் பொறித்த இந்த தங்க நாணயங்களை Ingersal Selvam வழங்க இருக்கிறார்.
கணிப்பலகை பரிசாக வழங்குபவர் Neil Armstrong .
தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை அருமையான படங்கள் சேர்த்து அச்சுப் புத்தக வடிவிலும் வெளியிட முனைவோம்.
முதற்கட்ட மதிப்பீட்டு முறை:
* மே 15, 2020 தேதி இந்திய நேரம் இரவு 11:59 வாக்கில் கிண்டிலில் குறைந்தது 10 கருத்துரைகளைப் பெறும் அனைத்து புத்தகங்களும் இறுதிப் போட்டிக்குச் செல்லும்.
* 25க்கு மேற்பட்ட/குறைவான நூல்கள் இவ்வாறு தெரிவானால், குழந்தைகளுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய வகையில் உள்ளதா என்பதன் அடிப்படையில் பெற்றோர்/ஆசிரியர் அடங்கிய குழு ஒன்று 25 கதைகளை இறுதிப் போட்டிக்கு முடிவு செய்யும்.
* இந்த 25 போட்டியாளர்களில் கட்டாயம் 7 பெண்களாவது இடம் பெறுவர்.
இறுதி மதிப்பீட்டு முறை:
இறுதிப்போட்டிக்குத் தெரிவான 25 கதைகளில், முதல் மூன்று கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும்.
குழந்தைகளுக்கு ஆர்வம் ஊட்டல், அறிவை மேம்படுத்தல் – இவை இரண்டும் பரிசுத் தகுதிக்கான முதன்மைக் காரணிகளாக எடுத்துக்கொள்ளப்படும். கதை வாசிக்க எளிமையாக இருக்கிறதா என்பதும் கவனிக்க வேண்டும்.
கதையின் பிற கூறுகளையும் மதிப்பீட்டு வரையறைக்குள் சேர்ப்பது நடுவர்களின் தனிப்பட்ட உரிமை.
மூன்றில் ஒரு பரிசு கட்டாயம் பெண்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மற்ற இரு பரிசுகள் திறந்த போட்டியாக அமையும்.
நடுவர்கள்:
* சிறார் எழுத்தாளர் திரு. விழியன் அவர்கள்
* கவிஞர் கனிமொழி MV அவர்கள்
* குழந்தைக் கவிஞர் திரு. புதுகை அப்துல்லா அவர்கள்
ஒருங்கிணைப்பாளர்: கபிலன் காமராஜ்
போட்டி ஏற்பாடு:

வெள்ளி, 27 மார்ச், 2020
*தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி
போன்று ஆளும் கட்சியும் கொரொனோ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதி அளித்திருப்பதால் ஆசிரியர் மன்றத்தின் வேண்டுகோள் ஏற்கப்பட்டிருக்கிறது.
*கொரோனா கிருமியின் அச்சக்காலத்தில் ஆசிரியர்-அரசூழியர்கள் மன உளைச்சல் இன்றி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் பழிவாங்கும் நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட வேண்டும் ! *ஜாக்டோ-ஜியோவின் அனைத்துக்கோரிக்கைகளும் ஏற்கப்படவேண்டும்! *கொரோனாகிருமி மனித குலத்திற்கு விடுக்கும் சவாலை எதிர்கொள்வோம்!*தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசூழியர்-ஓய்வூதியர் ஒருநாள் ஊதியம் அளிப்போம்!
*தமிழ்நாடுதொடக் கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ.,தமிழக அரசிடம் வேண்டுகோள்*

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)