புதன், 29 ஏப்ரல், 2020

R T I information Reserve Bank of Indiaகடன் தள்ளுபடி செய்யப்பட்ட 50 பேரின் பெயர்களை RBI அறிவித்து உள்ளது




COVID-19 CARE- TAMIL NADU OFFICIAL APP பயன்படுத்துவது எப்படி? ~ காணொளி...

 Click here for Video...

கொரோனா தொற்று பற்றிய தவறான செய்திக்கு லைக், கமென்ட் கொடுத்தால் உங்கள் கணக்கு நீக்கப்படும் ~பேஸ்புக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை…

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி ~ தொடக்ககல்வி இயக்குநர் சுற்றறிக்கை...

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

காவேரி நதி நீர் பங்கீட்டில் ஓரவஞ்சனையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது!
காவேரி நதி நீர்  மேலாண்மை ஆணையத்தை மத்திய
 நீர்வள அமைச்சகத்திற்குள் மத்திய அரசு கொண்டுவந்து உள்ளது !

தொன்மைமிகு காவேரி நதியின் தமிழ்நாட்டு
நீர் உரிமை நிலைநாட்டப் படுவதற்கு
தமிழக அரசு தலையீடு செய்திட வேண்டும்!

கூட்டாட்சி தத்துவத்தின் மீது மற்றொரு மோசமான தாக்குதல்! மாநிலப் பணிகளில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் மாநில அரசுக்குநிதி தரவேண்டியதில்லை! மாண்புமிகு பிரதமர் அவர்களின் "PM-CARE " க்குத்தான் சம்பளம் பிடிப்பு நிதி கொடுக்க வேண்டும்! மத்தியரசு ஆணை


தமிழ்நாடு அரசுக்கு நிதி்ஆதாரத்தைப் பெருக்க ஆயி்ரமாயிரம் வழிகள் இருக்கும் போது மேன்மேலும் எதற்கெடுத்தாலும் அரசுப்பணியாளர்கள் ,ஆசிரியர்கள் , ஓய்வூதியதாரர்கள் வயிற்றில் அடிப்பது வேதனைக்குரியதாகும்! தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வேண்டுகோள்





அரசு ஊழியர்களின் ஊதியத்தில் கைவைப்பதா? மத்திய அரசிடம் நிதியைப் பெறுங்கள் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

அரசு ஊழியர்களின் ஊதியத்தில் கைவைப்பதா? மத்திய அரசிடம் நிதியைப் பெறுங்கள் - மு.க.ஸ்டாலின் கண்டனம்
அரசு ஊழியர்களுக்கு முற்றிலும் எதிரான அரசாணைகளை முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசு ஊழியர்களுக்கான ஊழியர்களுக்கு ஊதியத்தை இறுக்குவதைவிட மத்திய அரசிடம் வலியுறுத்தி மாநில அரசின் நிதியைப் பெறவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



தமிழக அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘’தமிழக அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி”, “15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை" ஓராண்டிற்கு நிறுத்தி வைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டி குறைப்பு என்று அ.தி.மு.க. அரசு, தன்னுடைய ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தின் மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது.

கொரோனா நோய்த் தொற்றுப் பேரிடர் அறிவிக்கப்பட்டவுடன் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசு ஊழியர்கள்- கொரோனா தடுப்புப் பணிகளையும், “மெய் வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது", முழு ஈடுபாட்டுடன் ஆற்றி வருகிறார்கள். குறிப்பாக, காவல்துறையினர், மருத்துவத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சித் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் என பெரும்பாலான முக்கிய அரசுத் துறைகளின் லட்சக்கணக்கான ஊழியர்கள் அனைவரும், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் பணியாற்றி - கொரோனா நோய்த் தடுப்பிலும் சிகிச்சையிலும் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


கொரோனா நேரத்தில் நடைபெற்ற தேர்வு மையங்களில் எல்லாம் ஆசிரியர்கள் பணியாற்றியுள்ளார்கள். அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு “அவசியமான” அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் ஒருங்கிணைந்து, நமது மக்களைக் காப்பாற்றிட, போர்க்கால உணர்வுடன் பணியாற்றி வரும் நேரத்தில் அ.தி.மு.க அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை - அரசு ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெருமளவில் இழக்க வைத்து மனதளவில் சோர்வடையச் செய்யும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அரசு ஏனோ உணரவில்லை.



மத்திய பா.ஜ.க. அரசு முடிவு எடுத்தவுடன் – உடனே அதைப் பின்பற்றி, அ.தி.மு.க. அரசும் இதுபோன்று அரசு ஊழியர்களின் வாழ்வாதார உரிமைகளை மனம் போன போக்கில் ரத்து செய்வதை, மக்கள்நலனில் அக்கறையுள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. “நிதி மேலாண்மையில் நாங்கள் புலிகள்” என்று “விளம்பரம்” செய்து வந்த அ.தி.மு.க. அரசும், அதன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதுபோன்ற ஊழியர்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்திருப்பது - அ.தி.மு.க. ஆட்சியின் நிதி மேலாண்மை படுகுழியில் தள்ளப்பட்டு விட்டது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ரூ.4.56 லட்சம் கோடி கடனில் தமிழகத்தை வீழ்த்திய கொடுமையான அ.தி.மு.க. ஆட்சிதான், இப்படியொரு பின்னடைவான சூழலை கொரோனா போரில் கள வீரர்களாக நிற்கும் காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களின் மீது திணித்து, அவர்கள் தலையில் கைவைத்திருக்கிறது என்பது மிகுந்த கவலையளிக்கிறது.



“ஏற்கனவே ஈட்டிய விடுப்புக்குப் பதில் ஊதியம் வழங்குவதற்கு ஆணை பிறப்பித்திருந்தால் அதையும் ரத்து செய்யுங்கள்” என்று அமைச்சர் ஜெயக்குமாரின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை வெளியிட்டிருப்பது சிறிதும் ஈவு இரக்கமற்றது. கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, இப்படி உதாசீனப்படுத்துவது ஏற்புடையதாகாது.



“அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பிற்குப் பதில் ஊதியம் பெறும் உரிமை ரத்து” போன்ற நடவடிக்கைகள், அரசு ஊழியர்களின் பொருளாதார நிலைமையைப் பாதிக்கும். அரசு ஊழியர்களுக்கு முற்றிலும் எதிரான அரசாணைகளை முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.



மேலும், மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதிக் கமிஷன் பகிர்வு போன்ற பல்வேறு நிதிகளையும், கொரோனா பேரிடர் நிவாரணத்திற்கான நிதியையும், தேவையான அரசியல் அழுத்தம் கொடுத்து, உரிமையுடன் தட்டிக் கேட்டு, உடனடியாகப் பெற வேண்டும். அதை விடுத்து, தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதைப் போல, அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது’ என்று குறிப்பிட்டுள்ளார்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்திடும் இயற்கை பானம் மற்றும் சூடான பானம் தயாரிப்புக்குறிப்புகள் ~ தமிழக அரசு வெளியீடு…

மத்திய அரசை  காக்காய்ப் பிடித்துத் தன்னாட்சியை தக்கவைத்துக்கொள்ளும் எடப்பாடி அரசே!
ஆசிரியர்-அரசூழியர்களின்
மன உளைச்சலை  இரட்டிப்பாக்காதே!
பழிவாங்கும் நடவடிக்கைகளை -பொய்வழக்குகளை திரும்பப் பெறுக!
அகவிலைப்படிகளை, விடுப்பூதியங்களை " சுவாகா " போடாதே!
அரசியல் கற்பிக்கும் ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் கோருகிறேன்!
*முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்.* *பாவலர்.திரு.க.மீனாட்சிசுந்தரம் அறிக்கை...*