வியாழன், 30 ஏப்ரல், 2020

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி அறிக்கை


அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கு தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைப்பு ! தமிழ்நாடு அரசு அறிவிப்பு !ஈ




*ஜூலை மாதத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள்” - யு.ஜி.சி அறிவுறுத்தல்!

சூழலைப் பொறுத்து கல்லூரிகளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்ட கல்லூரித் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என யு.ஜி.சி வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்தவும், அடுத்த கல்வி ஆண்டை தொடங்கவும் யு.ஜி.சி வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமிச்சர் ரமேஷ் போக்ரியால் ஒப்புதல் அளித்துள்ளார்.

“ஜூலை மாதத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள்” - யு.ஜி.சி அறிவுறுத்தல்!
அதன்படி தடைபட்ட செமஸ்டர் தேர்வுகளையும், இறுதி ஆண்டுத் தேர்வுகளையும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஒரு மாதத்தில் நடத்தி முடிக்கலாம். மேலும், ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி வகுப்புகளைத் தொடங்கலாம் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவோ, தேர்வு நேரத்தை இரண்டு மணி நேரமாகக் குறைத்தோ நடத்திக் கொள்ளலாம். நேர்முகத் தேர்வுகளை ஸ்கைப் மூலம் நடத்தலாம்.

நிலைமை சீரடையத் தாமதமானால் 50% முந்தைய தேர்வு முடிவுகளின் படியும், 50% ஆசிரியர்களின் மதிப்பீட்டின் படியும் மதிப்பெண்கள் வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 ஊரடங்கு காலத்தை மாணவர்கள் கல்லூரிக்கு வந்ததாகக் கருத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம்: விவசாயிகளின் நலன்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது;
தமிழக அரசு விளக்கம்
-------++++-----------------
காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என தமிழக அரசின் பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் இன்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டப் போராட்டத்தின் விளைவாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது.

அதில், ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவிரி நடுவர் மன்றம் 5.2.2007-ல் பிறப்பித்த இறுதி ஆணையைக் கருத்தில் கொண்டுதான் செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிரிவு 15-ன்படி அது எடுக்கும் முடிவுகள் இறுதியானது என்றும், அது படுகை மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது.

மத்திய அரசு மே, 2019-ல் நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது. இதனை அடுத்து மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொருண்மைகள் குறித்து உள்ள விதிகளுக்கு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது.

இதில் ஜல் சக்தி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இவ்வமைச்சகத்தால் கையாளக்கூடிய பல பொருண்மைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும்.

மேற்கூறியவாறு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள், நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் ஆகியவற்றைக் கையாளக்கூடிய பொருண்மைகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கையாகும்.

பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான ஒரு வழக்கமான நடைமுறையாகும். இதனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்படுகிறது" என விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா காலத்தில்
வேறு மாநிலங்களில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள்
 தமது சொந்த மாநிலத்துக்குத் திரும்பலாம்!மத்தியரசு அனுமதி ஆணை வெளியீீடு!



ஊரடங்கின் காரணமாக வெவ்வேறு இடங்களில் மாட்டிக்கொண்டிருக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள், திருத்தலப் பயணிகள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், மற்றும் சிலரை சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான திட்டமிடலாம் எனவும், அந்தந்த மாநிலங்கள் இதற்கென அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் மைய அரசு சற்று முன் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தமது மாநிலத்தில் உள்ள வேற்று மாநிலத்தவர்களை பதிவு செய்யவும், வேண்டுகிற நபர்களை வேற்று மாநிலத்துக்கு அனுப்பவும், வேற்று மாநிலத்திலிருந்து வருகிறவர்களைப் பெறவும் தேவையான விழமுறைகளை வகுக்கலாம்.
 இதற்காக அந்தந்த மாநிலங்களின் அதிகாரிகள் தமக்கிடையே ஆலோசித்து ஒப்புக்கொள்ளலாம்.

அவ்வாறு செல்பவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறி இல்லாமல் இருந்தால் மட்டுமே அனுப்பப்படுவார்கள்.
போய்ச் சேருகிற இடத்திலும் பரிசோதனை செய்யப்பட்டு தேவையைப் பொறுத்து வீட்டு குவாரன்டைன் அல்லது மருத்துவமனை குவாரன்டைனில் வைக்கப்பட வேண்டும்.

இது போன்றுபல்வேறு வழிகாட்டுதல்களை மத்தியஅரசு வழங்கி உள்ளது.

புதன், 29 ஏப்ரல், 2020

மே1ஆம் தேதி வழக்கமாக நடைபெறும் கிராமசபை கூட்டம் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நடைபெறாது! தடை செய்யப்பட்டுள்ளது! செயல்முறை வெளியிடு


R T I information Reserve Bank of Indiaகடன் தள்ளுபடி செய்யப்பட்ட 50 பேரின் பெயர்களை RBI அறிவித்து உள்ளது




COVID-19 CARE- TAMIL NADU OFFICIAL APP பயன்படுத்துவது எப்படி? ~ காணொளி...

 Click here for Video...

கொரோனா தொற்று பற்றிய தவறான செய்திக்கு லைக், கமென்ட் கொடுத்தால் உங்கள் கணக்கு நீக்கப்படும் ~பேஸ்புக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை…

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி ~ தொடக்ககல்வி இயக்குநர் சுற்றறிக்கை...