புதன், 20 மே, 2020

*✒10 ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பால் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை வாபஸ் பெற்றது பள்ளிக்கல்வித்துறை.*
இந்தியாவில் வேலை நேரம் 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக  உயர்த்தப்பட்டு இருக்கிறது!

இந்தியாவின் இத்தகு தொழிலாளர் விரோத நடவடிக்கையில் அகில உலக  தொழிலாளர் அமைப்பு (ILO)விரைந்து தலையிட வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்றப் பேரவை (LPF)  உள்ளிட்டு 10 இந்திய தொழிற்சங்கங்கள்  இக் கூட்டுக்கடிதத்தின் வழியில் இக்கோரிக்கையை ஐஎல்ஓ விடம் வலியுறுத்தி உள்ளது!

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கற்பித்தலில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிப்பதற்கு அரசுக்குழு அமைப்பு...

கொரோனா ஊரடங்கால் கல்வி கற்பித்தலில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய 12 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படுவதாகவும், இந்த குழு 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் கொரோனா ஊரடங்கால் கற்றல்-கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், அதனால் எழும் சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவுக்கு பள்ளிக்கல்வி துறையின் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமை வகிக்கிறார். இதில் சமக்ரா சிக்‌ஷா சார்பில் பிரதிநிதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிகுலேசன் பள்ளிகள், அரசு தேர்வுத்துறை இயக்குனர்கள், கல்வி தொலைக் காட்சி அதிகாரி, பெற்றோர் ஆசிரியர் கழக அதிகாரி, யுனிசெப் பிரதிநிதி, தமிழ்நாடு மின் ஆளுமை பிரதிநிதி, சென்னை ஐ.ஐ.டி. சார்பில் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் கடந்த கல்வியாண்டில் கொரோனா ஊரடங்கால் முன்கூட்டியே பள்ளிகள் மூடப்பட்டதன் விளைவாக ஏற்பட்டுள்ள கல்வி, கற்பித்தல் பிரச்சினைகள் மற்றும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் வகுப்புகள் தொடங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து ஆலோசனை வழங்க உள்ளது.
  
மேலும், கற்றல்-கற்பித்தலில் உள்ள இடைவெளிகளை கண்டறிவது, பள்ளி குழந்தைகளுக்கு தரமான கல்வியை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்கான கற்பித்தல், கற்றல் செயல்முறைகளுக்கான தொழில்நுட்பம் மற்றும் ‘ஆன்லைன்’ வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்த செயல் திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றை செய்ய உள்ளனர் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் முடிவுக்காக, இந்த குழுவினர் இதுகுறித்து ஆராய்ந்து 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில்  கற்பித்தலில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து 15 நாள்களுக்குள் அறிக்கை அளிப்பதற்கு அரசுக்குழு  அமைப்பு:
******************
கொரோனா ஊரடங்கால் கல்வி கற்பித்தலில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய 12 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படுவதாகவும், இந்த குழு 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் கொரோனா ஊரடங்கால் கற்றல்-கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், அதனால் எழும் சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவுக்கு பள்ளிக்கல்வி துறையின் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமை வகிக்கிறார். இதில் சமக்ரா சிக்‌ஷா சார்பில் பிரதிநிதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிகுலேசன் பள்ளிகள், அரசு தேர்வுத்துறை இயக்குனர்கள், கல்வி தொலைக் காட்சி அதிகாரி, பெற்றோர் ஆசிரியர் கழக அதிகாரி, யுனிசெப் பிரதிநிதி, தமிழ்நாடு மின் ஆளுமை பிரதிநிதி, சென்னை ஐ.ஐ.டி. சார்பில் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் கடந்த கல்வியாண்டில் கொரோனா ஊரடங்கால் முன்கூட்டியே பள்ளிகள் மூடப்பட்டதன் விளைவாக ஏற்பட்டுள்ள கல்வி, கற்பித்தல் பிரச்சினைகள் மற்றும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் வகுப்புகள் தொடங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து ஆலோசனை வழங்க உள்ளது.

மேலும், கற்றல்-கற்பித்தலில் உள்ள இடைவெளிகளை கண்டறிவது, பள்ளி குழந்தைகளுக்கு தரமான கல்வியை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்கான கற்பித்தல், கற்றல் செயல்முறைகளுக்கான தொழில்நுட்பம் மற்றும் ‘ஆன்லைன்’ வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்த செயல் திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றை செய்ய உள்ளனர் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் முடிவுக்காக, இந்த குழுவினர் இதுகுறித்து ஆராய்ந்து 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
மே 20, வரலாற்றில் இன்று.

தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர், சித்த மருத்துவருமான அயோத்தி தாசர் பிறந்த தினம் இன்று.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பெரும் கல்விப் பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்தார் (1845). இவருடைய தாத்தா, வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளிலிருந்து மீட்டெடுத்து தமிழ் இலக்கியச் சுவடிகளைச் சேகரிப்பதில் தன் வாழ்நாளைச் செலவிட்ட எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் அச்சு வடிவுக்கு வந்தது.

தந்தையின் பணி காரணமாகக் குடும்பம் நீலகிரிக்குக் குடியேறியது. இவரது இயற்பெயர் காத்தவராயன். தந்தையிடமே ஆரம்பக்கல்வி கற்றார். பின்னர் காசிமேடு சதாவதானி வைரக்கண் வேலாயுதம் புலவர், வல்லக்காளத்தி வீ.அயோத்தி தாசர் பண்டிதர் ஆகியோரிடமும் கல்வி கற்றார். மேலும் சித்த மருத்துவம், தமிழ், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்த சமய தத்துவங்களையும் கற்றார்.

தன் குரு மீது கொண்ட பற்றால் தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக்கொண்டார். தான் சார்ந்த மக்களின் வாழ்க்கை, சமூகத்தில் அவர்களது நிலை, தீண்டாமைக் கொடுமை, கல்வியறிவின்மை இவற்றைப் பார்த்து வளர்ந்த இவர், அவர்களுக்காகப் போராடுவதையே தன் குறிக்கோளாகக் கொண்டார்.

1870-ல் நீலகிரியில் அத்வைதானந்த சபையை நிறுவினார். இதன் மூலம் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள், மலை ஜாதி பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து ஜாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார்.

அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடைகளை நீக்க வேண்டும், கிராம ஒன்றியங்கள், நகராட்சிகள் ஆகியவற்றில் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும், பொது நீர்நிலைகளைப் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்பட வேண்டும் ஆகியவற்றுக்காகப் போராடி வந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சென்னையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட முக்கிய காரணமாக இருந்தார். ஏழைகளுக்கு இலவசக் கல்வி, மதிய உணவு வழங்குவதில் முன்னோடியாக இருந்தார். 1885-ல் ‘திராவிட பாண்டியன்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

1891-ல் இரட்டைமலை நிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாஜன சபையைத் தோற்றுவித்தார். 1898-ல் ஏராளமான தீண்டத்தகாத மக்களுடன் இணைந்து புத்த மதத்தைத் தழுவினார்.

1907-ல் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற செய்தி வார இதழைத் தொடங்கினார். இதில் அரசியல், சமூகம், ஜாதி, மதம், இலக்கியம் குறித்து கட்டுரைகளை எழுதினார். பின்னர் இது ‘தமிழன்’ என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியது.

‘புத்தரது ஆதி வேதம்’, ‘இந்திரர் வேத சரித்திரம்’, ‘அம்பிகையம்மன் சரித்திரம்’, ‘அரிச்சந்திரன் பொய்கள்’, ‘கபாலீசன் சரித்திர ஆராய்ச்சி’, ‘சாக்கிய முனி வரலாறு’, ‘திருக்குறள் கடவுள் வாழ்த்து’, ‘புத்த மார்க்க வினா விடை’ உள்ளிட்ட பல நூல்கள், 30 தொடர் கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை, ஏராளமான அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில், பகுத்தறிவுக் கட்டுரைகள் என நூற்றுக்கணக்கில் எழுதியுள்ளார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விடிவெள்ளியாகத் தோன்றி அவர்களின் முன்னேற்றத்துக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அயோத்தி தாசர் 1914ஆம் ஆண்டு 69ஆவது வயதில் காலமானார்.
மே 20, வரலாற்றில் இன்று.

ஆந்திர கேசரி என்றழைக்கப்படும்       த.பிரகாசம் அவர்களின் நினைவுதினம் இன்று.   (ஆகஸ்ட் 23, 1872 – மே 20, 1957)

இவர் இந்திய சுதந்தர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் ஆந்திர மாநிலம் உருவானபோது அதன் முதல் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
மே 20,
வரலாற்றில் இன்று.


தர்மாம்பாள் பிறந்த தினம் இன்று.



கரந்தை எஸ். தர்மாம்பாள் (1890 - 1959) தமிழக பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர்.


கரந்தை எஸ். தர்மாம்பாள் 1890 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், கரந்தையில் பிறந்தவர். அக்காலத்திலேயே சித்த மருத்துவம் பயினறு, மருத்துவராகப் பணியாற்றியவர்.


இவர் சமூகசேவையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியவர். விதவைகள் மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என இம்மூன்றிற்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர், தன்அயரா உழைப்பினால், 1938 நவம்பர் மாதம் 13 ஆம் நாள், சென்னையில், தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். மறைமலை அடிகளாரின் மகள் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரை அழைத்து, இம்மாநாட்டிற்குத் தலைமையேற்க வைத்தார்.

இம்மாநாட்டிலேயே,
ஈ. வெ.இராமசாமி அவர்களுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப் பெற்றது.

தமிழாசிரியர்களுக்கு மட்டும், குறைவான ஊதியம் வழங்கப்படுவதைக் கண்டித்து, 1940 ஆம் ஆண்டில் இவர் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினார். இப்போராட்டத்திற்கு இவர் வைத்த பெயர் இழவு வாரம். இப்போராட்டத்தின் பலனாக அன்றைய கல்வி அமைச்சர்
தி. சு.அவிநாசிலிங்கம்  தமிழாசிரியர்களுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க உத்தரவிட்டார். 1938ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த இந்தித் திணிப்புக்கு எதிராக மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். சிறைக்கும் சென்றார்.


தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும், மாணவர்களின் தமிழறிவை வளர்க்கவும், அரசுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவும், பேச்சாற்றலை, எழுத்தாற்றலை வளர்க்கவும் உருவாக்கப்பெற்ற மாணவர் மன்றத்தின், தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார்.


அக்காலத்தில், தமிழ்த் திரை உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய, நடிப்பு, பாட்டு என கொடிகட்டிப் பறந்த எம்.கே.தியாகராச பாகவதர் அவர்களுக்கு ஏழிசை மன்னர் என்னும் பட்டம் வழங்கியவர் இவர்.


பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தர்மாம்பாளுக்கு, அன்றைய தமிழர்கள் வீரத் தமிழன்னை என்னும் பட்டத்தினை வழங்கினர்.

தர்மாம்பாள் அவர்கள், தனது 69 ஆவது வயதில்,1959 ஆம் ஆண்டு காலமானார்.


கரந்தை எஸ்.தர்மாம்பாளின் நினைவினைப் போற்றும் வகையிலும், அவர்களது தொண்டினைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழக அரசு, இவரது பெயரிலேயே, டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் ஒன்றினைத் தொடங்கி நடத்தி வருகின்றது.

 சென்னை மாணவர் மன்றம் தர்மாம்பாளை நினைவு கூரும் வகையில் ஒரு நடுநிலைப் பள்ளியை நடத்தி வருகிறது. சென்னை மாநகராட்சி இவரது பெயரில் ஒரு பூங்காவை அமைத்துள்ளது.
மே 20, வரலாற்றில் இன்று.

சுதந்திர போராட்ட வீரர் பிபின் சந்திர பால் நினைவு தினம் இன்று.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் 'லால்-பால்-பால்' என்ற திரிசூலமாகக் கருதப் பட்டவர்கள் லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், *பிபின் சந்திர பால்* ஆகியோர்.

 சுதந்திரம்_என்பது பிச்சையிட்டு வாங்குவது அல்ல;
போராடிப் பெற வேண்டிய பிறப்புரிமை என்பது, இவர்களது உபதேசத்தால் தான் அடிமைப்பட்ட மக்களுக்குத் தெரிய வந்தது.

இவர்களில், ஆசிரியர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர்,
 நூலகர்,
எழுத்தாளர் போன்ற பன்முகங்களுக்கு சொந்தக்காரர், வங்கத்தில் பிறந்த  பிபின் சந்திர பால்.

 'வந்தேமாதரம்' என்ற பத்திரிகையை நடத்திய பிபின் சந்திரர், தமிழகத்தின் வ.உ.சி,
 பாரதி,
சிவா அணிக்கு உத்வேகம் அளித்தவர். புரட்சிவீரர் அரவிந்தருக்கு எதிராக சாட்சியம் அளிக்க மறுத்ததற்காக ஆறுமாத சிறைத் தண்டனை பெற்றவர்.

அந்நியத் துணி எரிப்பு,
 அந்நியப் பொருள் பகிஷ்கரிப்பு,
சுதேசி சிந்தனை ஆகியவை பிபின் சந்திரரின் போதனைகள். மகாத்மா காந்தி காங்கிரசில் ப
இடம் பெறும்வரை பிபின் சந்திரரின் முக்கியத்துவம் மிகுந்திருந்தது. 1921 ல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிபின் சந்திரர், ''என்னிடம் மந்திரமோ, மாயமோ இல்லை; இயல்புநிலையை உத்தேசித்தே நான் போராட்டங்களை வகுக்கிறேன். கண்களை மூடிக்கொண்டு என் பின்னால் வரும்படி என்னால் யாருக்கும் உபதேசிக்க முடியாது'' என்று காந்தியின் அஹிம்சையைக் கண்டித்துப் பேசினார் பிபின்.

காங்கிரஸ் கட்சியில் காந்தியின் ஆளுமை அதிகரித்தது, முஸ்லிம் லீகை தாஜா செய்தது, கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்கேற்பு ஆகிய காரணங்களால், தீவிர அரசியலிலிருந்து விலகிய பிபிப் சந்திரர், ஏழ்மையான நிலையில், 1932 , மே 20இல் காலமானார்.

 முற்போக்காளரான பிபின் சந்திரர், விதவையை மறுமணம் செய்வதற்காக குடும்பத்தையே பிரிந்தவர். இவரது எழுத்துகள், சுதந்திர வேட்கையைப் பரப்பிய அக்னிப் பூக்களாக நாடு முழுவதும் வலம் வந்தன. இந்திய பத்திரிகையாளர்
களுக்கு முன்னுதாரணம் பிபின் சந்திரர் என்றால் மிகையில்லை.
மே 20, வரலாற்றில் இன்று.

முதல் நிலவரைபடம்(அட்லஸ்) வெளியிடப்பட்ட தினம் இன்று(1570).

 முதலாவது நவீன அட்லஸ் எனப்படும் உலக வரைபடத்தை நெதர்லாந்தை சேர்ந்த ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார். அதன் பிறகு அந்த அட்லஸில் தொடர்ச்சியாக பல திருத்தங்கள் செய்யப்பட்டன.
இன்று பல நிலப்படத் தொகுப்புகள் இணையப் பக்கங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. நிலப்படத் தொகுப்புப் புத்தகத்தில் பூமியிலுள்ள புவியியல் அமைப்புகள் மற்றும் அரசியல் எல்லைகள் இடம்பெறுவதோடு பெரும்பாலும் அரசியல், சமூகம், வேளாண்மை, மதம் மற்றும் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெறும். வெறும் வரைபடங்கள் மட்டுமல்லாது இடங்கள் மற்றும் அது குறித்த தகவல் தரவுகள் பலவற்றை ஒரு வரைபடப் புத்தகம் தருகிறது.
.

செவ்வாய், 19 மே, 2020

19/05 இல் இ-மெயில் அனுப்பி
20/05 இல் மருத்துவப்படிப்பில் வந்து சேர்ந்துக்கொள்ளனும்!.

இதெல்லாம்,
சரியான நடைமுறையா?! சாரே!