புதன், 20 மே, 2020
*கரெண்டைக் கூட விடமாட்டார்கள் ,போலும்!* *எல்லாமும் விற்பனைமயம்!*
*21நாள்களுக்குள் கருத்து வேறு சொல்லுனுமாம்! *நல்லாபடிங்கோ!உறைக்கிற மாதிரிகருத்துச்சொல்லுங்கள்!*
----------------------------------
மின்சாரத் துறை – ஒரு தரம்!
இரண்டு தரம்!
மூன்று தரம்!
------------------------------------
மின்சாரத் திருத்த சட்டம் 2020, மோடி 2.0 அரசின் மற்றுமொரு மக்கள் விரோத கார்ப்ரேட் நல பொருளாதார சீர்திருத்த கொள்கையை வெளிப்படுத்துகிறது. இந்த திருத்த சட்டம் ஒரு பக்கம் மாநில அரசுகளின் அரசியல் பொருளாதார அதிகாரத்தை பறிப்பதோடு நாட்டு மக்களின் மின்சார நுகர்வு உரிமையையும் இந்தியாவின் ஏகபோக கார்ப்பரேட் கும்பலிடம் அடமானம் வைக்கிறது.
முன்னதாக பாதுகாப்புத் துறையில் ரபேல் விமான தயாரிப்பிற்கு அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை நுழைத்து, அரசுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனம் ஓரம் கட்டப்பட்டது. தொலைத்தொடர்பு துறையில் BSNL ஐ ஒழித்து அம்பானியின் ஜியோ நிறுவனத்தை மோடி அரசு ஏகபோகமாக வளர்த்துவிட்டது. எண்ணெய் சுத்திகரிப்பு துறையிலும் லாபகரமாக இயங்கிய BPCL தனியார்மயமாக்கியது. தற்போது கொரோனா நெருக்கடிகாலத்தில் விண்வெளித்துறை (இஸ்ரோ), ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, அணு சக்தி துறை என தேசப் பாதுகாப்பில் முக்கியமாக உள்ள துறைகளையும் கூட விட்டு வைக்காமல் அந்நிய நிறுவனங்களுக்கும் இந்திய ஏகபோக நிறுவனங்களுக்கும் கையளிக்கப்படுகின்றன. இதற்கு சுய பொருளாதாரம் என்ற புதிய விளக்கம் வேறு!
பொருளாதார அறிஞர்களையும் கிறக்கமடையச் செய்கிற மோடி அரசின் இந்த
சுயச் சார்பு பொருளாதார அலையில் மின்சாரத் துறையும் தப்பவில்லை! தற்போது இந்தியா எங்கிலும்
மின் பகிர்மான துறையில் அதானியையும் அம்பானியையும் டாடாவையும் பிர்லாவையும் நுழைத்து மாநில மின் பகிர்மான கழகங்களுக்கு சவக்குழி தோண்டப்படவுள்ளது.
மின் திருத்த சட்டம் 2020 அதைத்தான் முன்னறிவிக்கின்றது!
பிரதமரின் பேச்சை நம்பி வீட்டின் விளக்கை ஐந்து நிமிடத்திற்கு அனைத்த நாட்டு மக்களுக்கு ‘மின்சார சட்ட திருத்த மசோதா – 2020’ எனும் அற்புத பரிசை மோடி வழங்கியுள்ளார். 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல முக்கிய திருத்தங்களைச் செய்து புதிய திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான வரைவு சட்ட அறிக்கையை ஏப்ரல் 17ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, வெறும் 21 நாட்களுக்குள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் கூறலாம் என்கிறது.
பேரிடர் காலத்தில் முக்கிய திருத்த சட்ட அறிமுகம், அதுவும் குறுகிய கால அவகாசத்திற்குள் மாநில அரசுகள் கருத்து கூறவேண்டும் என கெடு விதிப்பது என மத்திய அரசு இந்த திருத்தத்திற்கு அவசரம் காட்டுகிறது.
இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்று முக்கிய மாற்றங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
இலவச மின் மானியம் ரத்து
புதிய திருத்த சட்டத்தின் பிரிவு 65 இன் கீழ் மின் மானியம் ஒழிக்கப்பட்டு நேரடி பணப் பட்டுவாடா அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போது தமிழகத்தில் முதல் நூறு யூனிட்டுக்கு கட்டணமில்லா இலவச மின்சாரக் கொள்கை அமலில் உள்ளது.மேலும் குடிசைகள், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முற்றிலும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 19 லட்சம் விவசாய பம்ப்செட் மின் இணைப்புகள் உள்ளன. உலகமயத்தால் தமிழகத்தின் வேளாண் பொருளாதாரம் கால் நூற்றாண்டு காலமாக சீரழிந்து வந்தாலும், காவேரி நீர் பங்கீட்டு உரிமை தமிழகத்திற்கு மறுக்கப்பட்டு வந்தாலும் இலவச மின்சார பம்ப் செட் மோட்டார் பயன்பாடே (ஒப்பீட்டளவில்) டெல்டாவின் விவசாயப் பொருளாதாரத்தை முற்றிலும் சீர்குலையாமல் காத்து வருகிறது.
தற்போதைய புதிய திருத்த சட்டத்தின் மூலமாக மானிய சலுகைகள் முற்றிலும் ஒழிக்கப்படுவதால், பம்ப் செட் மின்சார செலவை முதலில் விவசாயி தன் சட்டைப்பையில் இருந்து வழங்கவேண்டும். காசில்லாமல் கட்டத் தவறினால் மின் இணைப்பு பறிக்கப்பட்டு மீண்டும் பணம் கட்டி இணைப்பிற்கு அலையவேண்டும். மேலும், தமிழகத்தில் சுமார் நாற்பது ஐம்பதாண்டு காலமாக விவசாய பம்ப் செட் மின் இணைப்புகள் உள்ளன. இவை பெரும்பாலும் பயனாளிகள் பெயரில் இல்லாமல் வேறு நபர்கள் பெயரில் இருக்கும். இவ்வளவு காலத்தில் நிலம் பல கைகளுக்கு மாறியிருக்கும்.குத்தகைகள் கூட மாறியிருக்கும். அவ்வாறு உள்ள நிலையில் இந்த மானியத் தொகை எவ்வாறு முறையான பயனாளிகள் கையில் சேரும்? தமிழக அரசே நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் திணறி வருகிற நிலையில் சாராயக் கடைகளை நம்பியே ஆட்சி நடத்துகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் வரை சென்று போராடுகிறது. இந்நிலையில் மானியத் தொகையை மாநில அரசு எவ்வாறு வழங்கவியலும்? மேலும்மாநில வருவாயை ஜிஎஸ்டி மூலமாக மத்திய அரசிடம் இழந்ததோடு,15 ஆவது நிதி ஆணையப் ப

EMIS -இணையதளத்தில் UDISE+ படிவம் மற்றும் கூடுதல் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளதை சரிபார்த்து தவறு இருப்பின் சரி செய்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது...
மாநில திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரைப்படி
அனைத்து வகை (அரசு/அரசு நிதி உதவி/தனியார் ) பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...
EMIS -இணையதளத்தில் UDISE+ படிவம் மற்றும் கூடுதல் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளதை சரிபார்த்து தவறு இருப்பின் சரி செய்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளியளவில் அனைத்து தகவல்களும் சரியென உறுதி செய்த பிறகு தலைமையாசிரியர்கள் declaration படிவத்தில் - தேதி , பெயருடன் பதிவு செய்யப்பட உள்ளதால்
அனைத்து தலைமை ஆசிரியர்களும் உள்ளீடு செய்யப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் உறுதி செய்த பின்னரே Submit கொடுக்கப்பட வேண்டும். Submit செய்த பிறகு மாற்றம் செய்ய முடியாது.
அதனைத்தொடர்ந்து பள்ளி பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர்கள் , வ.க. அலுவலர்கள் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்., ஆகியோர்களால் ஒவ்வோரு கட்டமாக சரிபார்க்கப்பட்டு சான்று வழங்கப்பட உள்ளது. ஆகையால் மேற்காண் அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து தனிகவனம் செலுத்தி தவறு ஏற்படா வண்ணம் இப்பணியினை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Instructions to Schools, BRTEs, BEOs, DCs & District Programmers...
For Schools...
1. All Schools to complete the integrated EMIS UDISE+ forms in School login.
2. Download the filled School data (UDISE+ ->Download School Data)
3. Verify that all the data entered is correct.
4. Download the verification checklist (UDISE+ Reports -> Declaration Form)
5. Verify all the points provided in the checklist.
6. Once the data is correct, update the Declaration form (UDISE+ Reports -> Declaration Form)
For BRTEs...
1. In BRTE login, click on last tab. Status of declaration by schools can be checked here.
2. Follow up with Schools to ensure submission of data and declaration.
3. Once School completes declaration, download the School data by clicking on Download button
4. Verify all the data entered by the school using the checklist provided.
5. Ensure all data entered is valid.
6. Once verified and validated, click on the UDISE code of the school and complete the BRTE declaration.
For BEOs...
1. Ensure all Schools and BRTEs complete validation and declaration. (UDISE+ reports -> DCF reports -> Declaration Form)
2. After verification by BRTE, verify the school data for validity once more by clicking on Download button
3. Once verified and validated, click on the UDISE code of the school and complete the BEO declaration.
For District Programmers / MIS Co-ordinators...
1. In DC & CEO login, Downloads menu UDISE+ 19-20 reports are provided
2. Click on Download button to download the report. The report is updated once everyday in the evening.
3. Each report contains validation results for each school in the district.
4. Ensure that the validation errors are fixed before final declaration by DC.
For District Co-ordinators / CEOs...
1. In DC & CEO login, tracking report will be available from tomorrow(20th May) under UDISE+ reports menu
2. Ensure all Schools and BRTEs complete validation and declaration. (UDISE+ reports -> DCF reports -> Declaration Form
)
3. After verification by BRTE, verify the school data for validity once more by clicking on Download button
4. Once verified and validated, click on the UDISE code of the school and complete the DC / CEO declaration.
இந்தியாவில் வேலை நேரம் 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது!
இந்தியாவின் இத்தகு தொழிலாளர் விரோத நடவடிக்கையில் அகில உலக தொழிலாளர் அமைப்பு (ILO)விரைந்து தலையிட வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்றப் பேரவை (LPF) உள்ளிட்டு 10 இந்திய தொழிற்சங்கங்கள் இக் கூட்டுக்கடிதத்தின் வழியில் இக்கோரிக்கையை ஐஎல்ஓ விடம் வலியுறுத்தி உள்ளது!

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கற்பித்தலில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிப்பதற்கு அரசுக்குழு அமைப்பு...
கொரோனா ஊரடங்கால் கல்வி கற்பித்தலில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய 12 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படுவதாகவும், இந்த குழு 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் கொரோனா ஊரடங்கால் கற்றல்-கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், அதனால் எழும் சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவுக்கு பள்ளிக்கல்வி துறையின் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமை வகிக்கிறார். இதில் சமக்ரா சிக்ஷா சார்பில் பிரதிநிதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிகுலேசன் பள்ளிகள், அரசு தேர்வுத்துறை இயக்குனர்கள், கல்வி தொலைக் காட்சி அதிகாரி, பெற்றோர் ஆசிரியர் கழக அதிகாரி, யுனிசெப் பிரதிநிதி, தமிழ்நாடு மின் ஆளுமை பிரதிநிதி, சென்னை ஐ.ஐ.டி. சார்பில் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் கடந்த கல்வியாண்டில் கொரோனா ஊரடங்கால் முன்கூட்டியே பள்ளிகள் மூடப்பட்டதன் விளைவாக ஏற்பட்டுள்ள கல்வி, கற்பித்தல் பிரச்சினைகள் மற்றும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் வகுப்புகள் தொடங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து ஆலோசனை வழங்க உள்ளது.
மேலும், கற்றல்-கற்பித்தலில் உள்ள இடைவெளிகளை கண்டறிவது, பள்ளி குழந்தைகளுக்கு தரமான கல்வியை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்கான கற்பித்தல், கற்றல் செயல்முறைகளுக்கான தொழில்நுட்பம் மற்றும் ‘ஆன்லைன்’ வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்த செயல் திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றை செய்ய உள்ளனர் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முடிவுக்காக, இந்த குழுவினர் இதுகுறித்து ஆராய்ந்து 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கற்பித்தலில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து 15 நாள்களுக்குள் அறிக்கை அளிப்பதற்கு அரசுக்குழு அமைப்பு:
******************

மே 20, வரலாற்றில் இன்று.
தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர், சித்த மருத்துவருமான அயோத்தி தாசர் பிறந்த தினம் இன்று.
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பெரும் கல்விப் பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்தார் (1845). இவருடைய தாத்தா, வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளிலிருந்து மீட்டெடுத்து தமிழ் இலக்கியச் சுவடிகளைச் சேகரிப்பதில் தன் வாழ்நாளைச் செலவிட்ட எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் அச்சு வடிவுக்கு வந்தது.
தந்தையின் பணி காரணமாகக் குடும்பம் நீலகிரிக்குக் குடியேறியது. இவரது இயற்பெயர் காத்தவராயன். தந்தையிடமே ஆரம்பக்கல்வி கற்றார். பின்னர் காசிமேடு சதாவதானி வைரக்கண் வேலாயுதம் புலவர், வல்லக்காளத்தி வீ.அயோத்தி தாசர் பண்டிதர் ஆகியோரிடமும் கல்வி கற்றார். மேலும் சித்த மருத்துவம், தமிழ், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்த சமய தத்துவங்களையும் கற்றார்.
தன் குரு மீது கொண்ட பற்றால் தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக்கொண்டார். தான் சார்ந்த மக்களின் வாழ்க்கை, சமூகத்தில் அவர்களது நிலை, தீண்டாமைக் கொடுமை, கல்வியறிவின்மை இவற்றைப் பார்த்து வளர்ந்த இவர், அவர்களுக்காகப் போராடுவதையே தன் குறிக்கோளாகக் கொண்டார்.
1870-ல் நீலகிரியில் அத்வைதானந்த சபையை நிறுவினார். இதன் மூலம் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள், மலை ஜாதி பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து ஜாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார்.
அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடைகளை நீக்க வேண்டும், கிராம ஒன்றியங்கள், நகராட்சிகள் ஆகியவற்றில் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும், பொது நீர்நிலைகளைப் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்பட வேண்டும் ஆகியவற்றுக்காகப் போராடி வந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சென்னையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட முக்கிய காரணமாக இருந்தார். ஏழைகளுக்கு இலவசக் கல்வி, மதிய உணவு வழங்குவதில் முன்னோடியாக இருந்தார். 1885-ல் ‘திராவிட பாண்டியன்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
1891-ல் இரட்டைமலை நிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாஜன சபையைத் தோற்றுவித்தார். 1898-ல் ஏராளமான தீண்டத்தகாத மக்களுடன் இணைந்து புத்த மதத்தைத் தழுவினார்.
1907-ல் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற செய்தி வார இதழைத் தொடங்கினார். இதில் அரசியல், சமூகம், ஜாதி, மதம், இலக்கியம் குறித்து கட்டுரைகளை எழுதினார். பின்னர் இது ‘தமிழன்’ என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியது.
‘புத்தரது ஆதி வேதம்’, ‘இந்திரர் வேத சரித்திரம்’, ‘அம்பிகையம்மன் சரித்திரம்’, ‘அரிச்சந்திரன் பொய்கள்’, ‘கபாலீசன் சரித்திர ஆராய்ச்சி’, ‘சாக்கிய முனி வரலாறு’, ‘திருக்குறள் கடவுள் வாழ்த்து’, ‘புத்த மார்க்க வினா விடை’ உள்ளிட்ட பல நூல்கள், 30 தொடர் கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை, ஏராளமான அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில், பகுத்தறிவுக் கட்டுரைகள் என நூற்றுக்கணக்கில் எழுதியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விடிவெள்ளியாகத் தோன்றி அவர்களின் முன்னேற்றத்துக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அயோத்தி தாசர் 1914ஆம் ஆண்டு 69ஆவது வயதில் காலமானார்.

மே 20,
வரலாற்றில் இன்று.
தர்மாம்பாள் பிறந்த தினம் இன்று.
கரந்தை எஸ். தர்மாம்பாள் (1890 - 1959) தமிழக பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர்.
கரந்தை எஸ். தர்மாம்பாள் 1890 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், கரந்தையில் பிறந்தவர். அக்காலத்திலேயே சித்த மருத்துவம் பயினறு, மருத்துவராகப் பணியாற்றியவர்.
இவர் சமூகசேவையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியவர். விதவைகள் மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என இம்மூன்றிற்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர், தன்அயரா உழைப்பினால், 1938 நவம்பர் மாதம் 13 ஆம் நாள், சென்னையில், தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். மறைமலை அடிகளாரின் மகள் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரை அழைத்து, இம்மாநாட்டிற்குத் தலைமையேற்க வைத்தார்.
இம்மாநாட்டிலேயே,
ஈ. வெ.இராமசாமி அவர்களுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப் பெற்றது.
தமிழாசிரியர்களுக்கு மட்டும், குறைவான ஊதியம் வழங்கப்படுவதைக் கண்டித்து, 1940 ஆம் ஆண்டில் இவர் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினார். இப்போராட்டத்திற்கு இவர் வைத்த பெயர் இழவு வாரம். இப்போராட்டத்தின் பலனாக அன்றைய கல்வி அமைச்சர்
தி. சு.அவிநாசிலிங்கம் தமிழாசிரியர்களுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க உத்தரவிட்டார். 1938ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த இந்தித் திணிப்புக்கு எதிராக மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். சிறைக்கும் சென்றார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும், மாணவர்களின் தமிழறிவை வளர்க்கவும், அரசுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவும், பேச்சாற்றலை, எழுத்தாற்றலை வளர்க்கவும் உருவாக்கப்பெற்ற மாணவர் மன்றத்தின், தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார்.
அக்காலத்தில், தமிழ்த் திரை உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய, நடிப்பு, பாட்டு என கொடிகட்டிப் பறந்த எம்.கே.தியாகராச பாகவதர் அவர்களுக்கு ஏழிசை மன்னர் என்னும் பட்டம் வழங்கியவர் இவர்.
பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தர்மாம்பாளுக்கு, அன்றைய தமிழர்கள் வீரத் தமிழன்னை என்னும் பட்டத்தினை வழங்கினர்.
தர்மாம்பாள் அவர்கள், தனது 69 ஆவது வயதில்,1959 ஆம் ஆண்டு காலமானார்.
கரந்தை எஸ்.தர்மாம்பாளின் நினைவினைப் போற்றும் வகையிலும், அவர்களது தொண்டினைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழக அரசு, இவரது பெயரிலேயே, டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் ஒன்றினைத் தொடங்கி நடத்தி வருகின்றது.
சென்னை மாணவர் மன்றம் தர்மாம்பாளை நினைவு கூரும் வகையில் ஒரு நடுநிலைப் பள்ளியை நடத்தி வருகிறது. சென்னை மாநகராட்சி இவரது பெயரில் ஒரு பூங்காவை அமைத்துள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)