வெள்ளி, 22 மே, 2020

Whatsapp கொடுத்துள்ள ஒரு Trick...

வாட்ஸ்அப் மூலம் நிறைய வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது போனில் டவுன் லோட் ஆவதால் மொபைல் காலரி நிரம்பி சிரமம் அடைகின்றோம். 

இவற்றை அழிக்க Whatsapp கொடுத்துள்ள ஒரு Trick...

வாட்ஸ்அப்பில் குரூப் செயற்பாட்டுக்கு மாத்திரம் ஒரு  அம்சம்  உள்ளது, அதன் மூலம் படங்களையும், வீடியோக்களையும் மொபைல் கலரியில் சேவ் ஆகாமல் குரூப்பில் மட்டுமே பார்க்கலாம்.

செயற்படுத்தும் படிமுறை...

◆ குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும்.

◆ பின்பு GROUP INFO வை அழுத்தவும்.

◆ அப்போது மூன்று தெரிவுகளைக் காண்பீர்கள்.

01. Mute Notification

02. Custom

03. Media Visibility

இதில் Media Visibility ஐ அழுத்தவும்,அதில்
Default
 Yes
 No
என்று காணப்படும், அதில் No வை அழுத்தி பின்னர் Ok பண்ணவும்.

இப்போது வீடியோக்கள் & படங்கள் மொபைல் கலரியில்  சேமிக்கப்படமாட்டாது.
மாறாக உங்கள் குழுவில் மட்டுமே தெரியும்.
மே 22, வரலாற்றில் இன்று.

ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்ற தினம் இன்று(1906).
மே 22, வரலாற்றில் இன்று.

இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவரும், பிரம்ம சமாஜத்தை நிறுவியவருமான ராஜா ராம் மோகன் ராய் (Raja Ram Mohan Roy) பிறந்த தினம் இன்று.

  √ வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டம் ராதாநகர் கிராமத்தில் (1772) பிறந்தார். உயர் கல்விக்காக பாட்னா சென்றவர், 15 வயதுக்குள் ஆங்கிலம், பிரெஞ்ச், லத்தீன், ஹீப்ரூ, கிரேக்கம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்றார். வேத, சாஸ்திரங்கள், உபநிடதங்களையும் ஆழ்ந்து கற்றார். சிலை வழிபாடு, சடங்குகள், சாதிவெறி, மதவெறி, பழமைவாதங்களுக்கு எதிராக செயல்பட்டார். இதனால், தந்தையுடன் கருத்து வேறுபாடு எழுந்தது.

  √ கொல்கத்தாவில் வட்டிக் கடையில் வேலை செய்தார். பின்னர் 5 ஆண்டுகள் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய்த் துறையில் பணியாற்றினார். ஆங்கில நாகரிகம் பிடித்திருந்ததால், இங்கிலாந்துக்கு பலமுறை சென்று வந்தார்.

  √  சமூக ஏற்றத் தாழ்வுகள், முறைகேடுகளைக் கண்டு வெகுண்டார். சாதி, மத, சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டுவரும் முயற்சியாக கொல்கத்தாவில் 1815-ல் ஆத்மிக சபையை உருவாக்கினார்.

  √ இதன்மூலம், அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார். பெண் உரிமை, பெண் கல்வி, விதவை மறுமணம், பெண் சொத்துரிமைக்காக பாடுபட்டார். உடன்கட்டை ஏறுதல், பலதார மணம் போன்றவற்றுக்கு எதிராக தீவிரமாகப் போராடினார்.

  √ வேதாந்த சாஸ்திரங்களின் சாரத்தை 1819-ல் ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் எழுதி வெளியிட்டார். உபநிடதங்களை மொழிபெயர்த்தார்.

  √ ஆங்கிலம், இந்து, பெர்ஷியன், வங்காள மொழிகளில் பல கட்டுரைகளை எழுதினார். ஆங்கில முறைக் கல்வி போதிக்கும் பள்ளியை 1822-ல் நிறுவினார். மேற்கத்திய - இந்திய கற்றல் முறை இணைந்த பாடத்திட்டம் கொண்ட வேதாந்த கல்லூரியை 1826-ல் நிறுவினார். இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவினார். சாதி அமைப்பு, குழந்தைத் திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்கள் முக்காடு அணியும் முறைக்கு எதிராக குரல் எழுப்பினார்.

  √  கோயில்களில் உயிர் பலி போன்ற சடங்குகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். மனிதர்களிடையே தர்மம், நீதி, கடவுள் பக்தி, கருணை, நல்லொழுக்கம், மத நல்லிணக்கம் ஆகிய உணர்வுகளைத் தூண்டினார்.

  √ வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை 1819-ல் ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். 1833-ல் வில்லியம் பெண்டிங் கொண்டுவந்த சட்டத்தால், சதி ஒழிக்கப்பட்டது.

  √  மாபெரும் கல்வியாளர், சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். மேற்கத்திய மருத்துவம், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கினார். தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடியவர்.

  √ மோசமான பழக்கங்கள், சடங்குகளை ஒழித்து சமூக சீர்திருத்தத்துக்காக போராடியவரும், இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று போற்றப்படுபவருமான ராஜா ராம் மோகன் ராய் 61 வயதில் (1833) மறைந்தார்.
மே 22, வரலாற்றில் இன்று.

 சர்வதேச பல்லுயிர் பரவல் தினம் இன்று.

பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம். பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி, சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது

இன்றைய நாட்களில் மனிதர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியிருப்பது இயற்கை சார்ந்த வனச்சுற்றுலா என்பதில் சந்தேகமில்லை. வனச்சுற்றுலா நடக்கும் முதுமலை,பந்திப்பூர் போன்ற இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் நிற்பதே அதற்கு சாட்சி.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையப்படுத்துவார்கள்.இந்த வருட உலக பல்லுயிர் தினத்தின் கருவாக சுற்றுலா வளர்ப்பும்-பல்லுயிர்சூழல் பெருக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். அதாவது சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம் வருவாய் பெருகுகிறது.அதன் மூலம் வன உயிர்களை காக்கலாம் என்பதே.

இருந்தாலும் சிலவற்றை எப்போதும் சொல்வதைப்போல, மீண்டும் அசை போடுவோம்.
இந்த மாதிரியான தினங்கள் எதற்காக அனுசரிக்கப் படுகிறது என நாம் முதலில் புரிந்து கொண்டால் மட்டுமே அதைப் பின்பற்றி நடக்க ஆரம்பிப்போம்...

முதலில் இந்த தினம் கொண்டாட்ட தினங்களில் ஒன்றல்ல அதாவது, நரகாசூரனை அழித்த தினம் தீபாவளி தினம் தீமை ஒழிந்தநாளாக கருதப்படுவதால் அது கொண்டாட்டத்திற்குரிய நாளாக பார்க்கப்படுகிறது...

இப்படி வருடம் முழுவதுமே பல நாட்களை கொண்டாட்ட நாட்களாக பழக்கப்படுத்திவிட்ட சமூகத்தில் வாழ்வதால் நமக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்டநாளை யாராவது சில அக்கறையுள்ளவர்கள் சில தினங்களை சில காரணங்களுக்காக வலியுறுத்தல் நாளாக அனுசரிக்கச்சொல்வதால் அது கொண்டாட்டப் புத்தியிலேயே பார்க்க வைக்கிறது...

உண்மையில் இவ்வாறான நாட்கள் நம்மை எச்சரிப்பதற்காக...
நினைவூட்டுவதற்காக,
சாலையில் வைத்திருக்கும் எச்சரிக்கைப் பலகைகளைப் போன்றவையே இந்த நாட்கள்...

சரி உலகப் பல்லுயிர்ப் பரவல் நாள் எதற்கு ?

இதுவும் நம்மை எச்சரிக்கவே என்னை கடந்த எதுவுமில்லை என்கிற மனிதனின் இறுமாப்பிற்கு எச்சரிக்கை விடும் நாட்களில் இதுவும் ஒன்று.

மரம் தானே என மரத்தை வெட்டியும்,இன்னும் பிற பேராசைச் செயல்களாலும் பலகோடி ஆண்டுகளாக உருவான புவிச்சூழலையே சிதைத்துவரும் மனிதனால், மீண்டும் பழைய நிலைக்கு பூமியை மாற்றுவதென்பது ஒரே நாளில் செய்யமுடியாத காரியம். இதை புரிந்து கொண்டால் மனிதர்களால்தான் இந்த உலகில் எதையும் செய்ய முடியும் என்கிற புத்தி காணாது போய்விடும்.

இந்த மாதிரியான ஆதிக்கபுத்தியை கழட்டிவைக்கச் சொல்லும் நாட்களில் இதுவும் ஒன்று.  மற்ற உயிரினங்களை விட மிக மிக தாமதமாகவே இந்தப்பூமியில் பிறந்த பூமிக்குடும்பத்தின் கடைக்குட்டிதான் மனிதன்...

இந்தவகையில் பார்த்தால் முதல் உரிமை மற்ற உயிர்களுக்கே...
இதை உணர்ந்தால் அத்துமீறி அழிக்கும் புத்தி மனிதனுக்கு எப்படி வரும்?..

இந்த பூமியில் வாழ்கிற அத்தனை உயிர்களுமே மிக மிக அவசியமானவை அதில் முக்கியமானவை எது ?...
எது நமக்கு நன்மை செய்கிறதோ...
அதாவது, "நமக்கு உணவாகவோ அல்லது பணமாகவோ மாற்றக்கூடியவையான உயிரினங்கள் நன்மை செய்யும் உயிரினங்களாக பார்க்கப்படுகிறது"....
மற்றவை தீமை செய்பவையா ?

உண்மை என்னவென்றால் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கு மனிதன்தான்...
"தீமை செய்யும் உயிரினம் "

மரங்களை அழித்தோம்...
அதன் விளைவு

பல பறவைகள் அழிந்தது ,
காலநிலை மாற்றம்,
புவிச்சூடு,
காற்று சீர்கெட்டு அபாய நிலையை நோக்கி பூமி...

இனி நீர் வணிகம் போல காற்றுவணிகச் சூழலையும்  உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்...

இங்கு மற்ற உயிர்கள் எதற்கு இருக்கின்றன என்கிற காரணம் வேண்டுமானால் நமக்குத்தெரியாமல் இருக்கலாம‌் ஆனால் இயற்கை எதையும் காரணமின்றி உருவாக்கவில்லை என்பதை உணர்ந்து பல்லுயிர்ச்சூழல் தழைக்க பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவற்றை சிதைக்கின்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்போம்...

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை தவிர்ப்போம்...
பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்துவோம்,
சைக்கிளை தூசிதட்டி ஓட்டிப் பழகுவோம்,
மின் பயன்பாட்டைக் குறைத்து
ஆடம்பரத்தைக் குறைப்போம் எளிமையை கடைபிடிப்போம்...
அழகிற்காகவும், மூடநம்பிக்கையாலும்,
உயிரினங்களின் இறகுகள்,
சிறகுகள்,
தோல்,
கொம்பு,
பல்,
மயிர்கள்,
நகங்களின் பயன்பாட்டைத் தவிர்ப்போம்...

அதனதன் வாழிடச்சூழலை மேலும் அழிக்காமல் இருப்போம் இல்லையெனில் மனிதன் வாழும் சூழலே அற்றுவிடும். பிற உயிர்களற்ற சூழலில் மனிதன் அனாதையாகி விட மாட்டான் அழிந்தே விடுவான்.

இருப்பதைக்கொண்டு இன்பமாக அனைத்து உயிர்களையும் மதித்து வாழ்வோம்.

வியாழன், 21 மே, 2020

அரசுத் துறை - பொதுத் துறைகள் குறிப்பாக பாதுகாப்புத் துறை உள்பட தனியார் மயமாவதில் பின்னணி என்ன?

அரசமைப்புச் சட்ட முகவுரையில் உள்ள ‘சோசலிஸ்ட்’ என்ற தத்துவத்தைப்  புறக்கணிக்கலாமா?

தற்போதுள்ள சமூகநீதியை -  இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் திட்டம் - தந்திரமே இதன் பின்னணி - எச்சரிக்கை!

--------------------------------------------------

கரோனா தொற்று கொடூரத்தைப் பயன்படுத்தி மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு - கரோனா தடுப்பு நிவாரணம் - பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டை - மக்களைக் காப்பாற்ற புதிய திட்டங்கள் என்ற பெயரால், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை வெறும் பெயரளவில் செயல்படும் முனிசிபாலிட்டிகளைப் போல ஆக்கும் பணி, மிக லாவகமாகவும், வேகமாகவும் நடைபெற்று வருகிறது.

மறுபுறத்தில் தற்சார்பு  (Self-Relìance) என்ற பெயரால், ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். எதையெல்லாம் தங்களது அரசியல் பொருளாதாரத் திட்டங்களாக ஆக்கிட வேண்டுமென்று நினைத்திருந்ததோ, அவற்றையெல்லாம் மிகமிக அவசரமாக - 20 லட்சம் கோடி ரூபாய் என்ற நிவாரணப் போர்வைக்குள் வைத்து வெளியிடுகின்றது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் விவாதத்தையேகூட தவிர்த்திடும் யுக்தியாகவும் பயன்படுத்தப்பட்டு  - ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது.

‘தோலிருக்க சுளை முழுங்கி’ என்பதுபோல...

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் (Preamble)   அரசுகளின் அடிப்படை இலக்கு - கொள்கை, முழு இறையாண்மையுள்ள, சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு (Sovereign, Socialist, Secular, Democratic Republic) என்று வலியுறுத்தியுள்ள நிலையில், அதன் பெயரில் உறுதி மொழி எடுத்து ஆட்சி செய்யும் ஓர் அரசு, அதனை நடைமுறையில் ஒழிக்கும் வகையில், ‘தோலிருக்க சுளை முழுங்கி’ என்பதுபோல, அதன் அடிப்படை லட்சியங்களுக்கு நேர் முரணான அரசியல் நிலைப்பாட்டினைச் செயல்படுத்த - இந்தச் சூழலைப் பயன்படுத்துகிறது!
அரசின் சமதர்ம அடிப்படைக்கு ஏற்ப நீண்ட நெடுங்காலமாக இருந்த நம் நாட்டுத் தொழில் வளர்ச்சி என்பதும், அடிக்கட்டுமானம் என்பதும் பொதுத் துறை, கூட்டுத் துறை, தனியார்த் துறை (Public Sector, Joint Sector, Private Sector) ஆகிய மூன்றாக இருந்து வந்தன.

பிரதமர் வாஜ்பேயி அமைச்சரவையில்...

பல பொதுத் துறை நிறுவனங்களையும், அதன் பங்குகளையும் - அதிலும் லாபம் வரும் நிறுவனங்களின் பங்குகளையும்கூட - தனியாருக்கு விற்று விடும் நிலை, அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள் பிரதமராக வந்த காலத்தில் தொடங்கியது; அருண்ஷோரி ஒரு தனி அமைச்சகத்தின் Disinvestment துறை அமைச்சராகவே இருந்து வந்தார்.
பிரதமர் மோடி தலைமையில் ஆறாவது ஆண்டுகால  ஆட்சியில், அது வெகு பட்டாங்கமாய் தனியார் பெரும் -  கார்ப்பரேட் முதலாளிகளுக்கே அரசின் - இராணுவம் போன்ற பல துறைகளும் தனியார் மய அறிவிப்புக்கு ஆளாகியுள்ளது.

‘ஜெட்’ வேகத்தில் தனியார் மயம்!

தனியார் மயம், கரோனா நிவாரணம் என்ற சாக்கில் மிகவும் ‘ஜெட்’ வேகத்தில் அறிவிக்கப்படுகிறது!

எடுத்துக்காட்டாக,
1. 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

2. அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்க பாக்சைட் - நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும்.

3. கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி.

4. இராணுவத் தளவாட உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment) 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக அதிகரிப்பு!

5. இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும்.

6. இந்தியாவிலுள்ள மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் முதலீட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

7. இவை எல்லாவற்றிற்கும் மேலான கொடுமை என்ன தெரியுமா?

யூனியன்   பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். (இது ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை நுழைக்கும் துவக்கம் போல - மற்ற மாநிலங்களிலும் அடுத்த கட்டம் - இதை ஏற்று, தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டம், தந்திரம் உள்ளே புதைந்துள்ளது!). இந்த அறிவிப்பின்மூலம், புதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்.

8. விண்வெளித் துறையில் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் அவற்றை ஏவுவது போன்றவற்றில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

9. ‘இஸ்ரோ’வின் உள்கட்டமைப்பு வசதிகளைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். (ராணுவ ரகசியங்கள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படும் சூழல் உருவாகும் என்பது மக்களுக்குத்தான் வெளிச்சம்).

10.  அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும்.

மேதகு அப்துல் கலாம் அவர்களால் உருவாக்கப்பட்ட - பயனுறு வகையில
*☀GO No: 248, Economy in Expenditure Corona (COVID-19) - Ban on creation of new posts in government departments - order - issued.*👆


Go.No:249 செலவினங்களை குறைக்க தமிழக அரசு அரசாணை 249.நாள் 21.05.2020 வெளியீடு..!*👆

*☀ செலவினங்களை குறைக்க தமிழக அரசு  அரசாணை 249.நாள் 21.05.2020 வெளியீடு..!*👆



Educational Digital Content தயார் செய்வதற்கு தேவையான Tutorial Videos ...

1. https://youtu.be/QLf8Veps6wA

*How to Edit Audio On Mobile (மொபைலில் ஆடியோ edit செய்வது எப்படி)*

2. https://youtu.be/DVelAJ1aglk

*மொபைலில் Audio Record செய்ய மிகச்சிறந்த Audio Recorder App*

3. https://youtu.be/jlpae2inFVs

*வீடியோ Edit செய்ய மிகச்சிறந்த Mobile App -Kine Master App - மொபைலில் வீடியோ edit செய்வது எப்படி*

4. https://youtu.be/MU4sBP7GeeI

*Youtube- ல் முறையாக வீடியோ Upload செய்வது எப்படி (18 Steps)*

5. https://youtu.be/BBWY-nIGmcM

*GOOGLE Forms மூலம் ஆசிரியர்கள் QUIZ/Evaluation Questions எவ்வாறு தயாரிப்பது*....

6. https://youtu.be/u-HIOYqDKew

 *ஆசிரியர்கள் Objective type Questions, Two mark Questions சுலபமாக தயாரிப்பது எப்படி*..
(Hot Potatoes- Free Software)

7. https://youtu.be/Xj25Fu0n_Zw

*Computer ல் , Audacity Free open source software மூலம், Audio edit செய்வது எப்படி*.

Thank you...
Mr.G.Anandhakannan. ELT.
Kallakurichi.
கொரானா வைரஸ் தொற்று_ 18.05.2020 முதல் 31.05.2020 வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பிற துறைகளிலும் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி மேற்கொள்வதில் இருந்து விலக்களித்தல் சார்பு
மே 21, வரலாற்றில் இன்று.

எலக்ட்ரோ என்செபலோகிராபி
(Electro EncephaloGraphy)யை கண்டுபிடித்த நரம்பியல் வல்லுநர் ஹான்ஸ் பெர்கர் பிறந்த தினம் இன்று.

இவர் 1924இல் எலக்ட்ரோ என்செபலோகிராபி "மூளை அலைகளைப் பதிவு செய்யும் முறை"யைக் கண்டுபிடித்தார்.

ஆல்பா அலைச்சீரைக் கண்டறிந்த இவரது பெயரால் அந்த அலை "பெர்கர் அலை" என அழைக்கப்படுகிறது.