திங்கள், 25 மே, 2020
இனமானக்
காவலர் ,
பாவலர் ,
நிறுவனர்-
பொதுச்செயலாளர் திரு.க.மீ.,அய்யா அவர்களுக்கு புகழ்வணக்கம்!
💐🙏💐🙏💐🙏💐🙏
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட தகவல் தொழில் நுட்பக்குழுவின் சார்பில் இனக்காவலர், பாவலர்.திரு.க.மீ., அய்யா அவர்களின் புகழ் வணக்கம் கூட்டம் கபிலர்மலை ஒன்றிய (பரமத்தி-வேலூர்) அலுவலகத்தில் 24.05.2020 (ஞாயிறு) பிற்பகல் 03.30மணியளவில் மாவட்டச்செயலாளர் திரு.மெ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் இனக்காவலர் ,
பாவலர் திரு.க.மீ., அவர்களின் திருஉருவப்படத்தினை மாநிலச்செயலாளர் திரு.முருகசெல்வராசன் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தி புகழ்வணக்க உரை நிகழ்த்தினார்.
மாவட்ட தகவல் தொழில் நுட்பக் குழுவின் அமைப்பாளர்களான மாவட்டத் துணைச்செயலாளர் திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி ,
சேந்தமங்கலம் ஒன்றியத்தலைவர் திரு.கா.செல்வம்,
பரமத்தி் ஒன்றியச்செயலாளர் திரு.க.சேகர், கபிலர்மலை ஒன்றியத் துணைச் செயலாளர்
திரு.இர.மணிகண்டன் மற்றும்
கபிலர்மலை ஒன்றியத் துணைத்தலைவர் திரு.வி.சிவக்குமார்
ஆகியோர்
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.

மே 25, வரலாற்றில் இன்று.
பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் நினைவு தினம் இன்று (2013).
டி.எம்.சௌந்தரராஜன் மார்ச் 24, 1923 அன்று மதுரையில் சௌராட்டிரக் குடும்பம் ஒன்றில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார்.
பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.
இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான, தனித்தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்.
🎼 வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார். இவர் 2003-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும். உடல்நலம் குன்றிய நிலையில் அவர் மே 25, 2013 அன்று காலமானார்.

பார்வையற்ற எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தினம் இன்று.
17,000 அடி உயரமுடைய பனி மலை, 3,000 அடி பனி நீர் வீழ்ச்சிகள், நிறைந்த எவரெஸ்ட் சிகரத்தை கடந்து சாதனை படைத்தவர்கள் பலர்... ஆனால் தனது 13வது வயதில் நடந்த விபத்தொன்றில் இரண்டு கண்களையும் இழந்தபோதும் ஒருவர் இந்த சிகரம் தொடும் சாதனையை செய்வதென்ப
து அசாதாரணமான விசயம்.
ஆனால் தன்னம்பிக்கையை துணையாக்கி தனது நீண்ட நாள் கனவான சிகரம் தொடும் முயற்சியை எட்டியிருக்கிறார் எரிக் வைஹன்மாயர். இவர் இந்தச் சாதனையை எட்டியபோது வயது 32. இந்த எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுத் திரும்பிய முதல் 100 நபர்களுக்கு உள்ளாகவே இவரும் ஒருவர் என்பது மேலும் சிறப்பு.
மேலும் பல உலகின் உயரமான சிகரங்களையும் எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சிறந்த பேச்சாளரும்கூட, பார்வையற்றவர்கள் கல்வியான ப்ரெய்லி முறைக் கல்வியைக்கூட இவர் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. தன்னை எப்போதுமே ஒரு பார்வைற்றவராக நினைத்ததே இல்லை எனும் இவருடைய பேச்சு, அனைத்து சாதனையாளருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
எரிக் வைஹன்மாயர் தனது 32வது வயதில் உலகின் முதல் பார்வையற்றவராக எவரெஸ்ட் சிகரத்தை எட்டி சாதனை படைத்தார்.

ராஷ் பிஹாரி போஸ் பிறந்த தினம் இன்று.
இந்திய தேசிய ராணுவம் என்ற உடனேயே, நம் நினைவுக்கு வருவது நேதாஜிதான்.
ஆனால், அவர் ஐ.என்.ஏ.வை உருவாக்கவில்லை. அதன் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ராஷ் பிகாரி போஸ்.
தேடப்படும் முக்கிய அரசியல் குற்றவாளிகள் பட்டியலை பிரிட்டிஷ் அரசு வைத்திருந்தது. அதில் உள்ள எவரைப்பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ நூறு ஏக்கர் நிலம் பரிசு தருவதாகவும் அறிவித்து இருந்தது.அந்தப் பட்டியலில் முதல்பெயர் ராஷ் பிகாரி போஸ்.
1938ல் ஹிந்து மகா சபை கிளையை ஜப்பானில் தொடங்கியவர் ராஷ் பிகாரி போஸ்.
நினைத்த நேரம் நினைத்த உருவம் எடுத்துக் கொள்ளும் மாயாவியைப் போல அவர் இருந்தார் என்று போலீஸ் குறிப்புகள் கூறுகின்றன. ஓடும் ரயிலில் போலீஸ் சுற்றி வளைத்த போது, துறவி போல மாறுவேடம் அணிந்து தப்பி இருக்கிறார். ஒரு முறை போலீஸ் உயர் அதிகாரியின் குதிரை வண்டி ஓட்டுபவனாக உருமாறிக்கொண்டு, கூடவே பயணம் செய்து தப்பிச் சென்று இருக்கிறார்.இன்னொரு முறை, காவல்துறை அதிகாரிகள் தேடிவந்த போது செத்துப்போய் ஆவியாக அலையும் கிழவனைப் போல வேடம் போட்டு காவலர்களைப் பயமுறுத்தி தப்பியிருக்கிறார்.
இப்படி, ராஷ் பிகாரி போஸின் நிஜவாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் இன்றுவரை கதை கதையாகப் பேசப்பட்டு வருகின்றன...
புத்த மதத்துறவி, வணிகர், தேநீர் கடை நடத்துபவர், கூலித் தொழிலாளி, நாடக நடிகர் எனப் பல வேடங்கள் போட்டு மூன்று வருடங்களுக்கு ஜப்பானிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார் போஸ். பத்து நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கியிருக்க முடியாது. போலீஸ் சுற்றி வளைத்துவிடும். தப்பிப் போக வேண்டும். பிரிட்டிஷ் உளவாளிகள் பின்தொடர்ந்து கொண்டே இருந்தார்கள்..
ஜனவரி 21, 1945-ல் ராஷ் பிகாரி போஸும் மரணம் அடைந்தார்.பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ராஷ் பிகாரி போஸின் சுதந்திரக்கனவு அவர் வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஆனால், அவர் உருவாக்கிய உத்வேகம் அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களை ஒன்றிணைத்தது. மலேசியா, பர்மா, சிங்கப்பூரில் இருந்த இந்தியர்களை ஒரே அணியில் திரளச் செய்தது. வலிமைமிக்க அந்த இணைப்புக்கு காரணமாக ராஷ் பிகாரி இருந்தார் என்பதே அவரது தனிச்சிறப்பு.
ராஷ் பிகாரி போஸின் வரலாறும் இளம்தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.வரலாற்று நிகழ்வுகளை எளிதாக கடந்து போய் விடும் வெறும் தகவலாக மாற்றி வைத்திருப்பதுதான் ஒருவன், தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)