சனி, 30 மே, 2020

*மே 30, வரலாற்றில் இன்று:நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரும், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான சுந்தர ராமசாமி பிறந்த தினம் இன்று.*

*மே 30, வரலாற்றில் இன்று.

 நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரும், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) பிறந்த தினம் இன்று.

# நாகர்கோவில் அருகே உள்ள தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார் (1931). தந்தை கேரளத்தில் உள்ள கோட்டயத்தில் பர்மா எண்ணெய் நிறுவன முகவராக இருந்தார். இதனால் இவரது குழந்தைப் பருவமும் அங்குதான் கழிந்தது. தாய்மொழி தமிழாக இருந்தாலும் கேரளாவில் இருந்ததால் மலை யாளம் கற்றார். இவருக்கு 8 வயதாக இருந்தபோது குடும்பம் நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்தது.

# அப்போது கன்யாகுமரி மாவட்டமும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததால் இங்கும் இவரது கல்வி மலையாளத்திலேயே தொடர்ந்தது. சம்ஸ்கிருதமும் பயின்றார்.

# 18 வயதில்தான் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. தானே முயன்று எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கினார். இவரது அம்மா மணிக்கொடி இலக்கிய இதழையும், நா.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா போன்றோரின் கதைகளையும் இவருக்குப் படித்துக் காட்டினார். 21 வயதில் தமிழில் கதை எழுத ஆரம்பித்துவிட்டார்.

# இவரது ஆரம்பகாலக் கதைகள் தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராக இருந்த ‘சாந்தி’ இதழில் வெளிவந்தன. தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். பிறகு அவருடைய ‘செம்மீன்’ நாவலையும் மொழிபெயர்த்தார்.

# எழுத்து என்ற சிறு பத்திரிகையில் இவரது முதல் கவிதை வெளி வந்தது. பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 1975-ல் ‘நடுநிசி நாய்கள்’ மற்றும் 1987-ல் ‘யாரோ ஒருவனுக்காக’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், 1995-ல் அனைத்துக் கவிதை களும் அடங்கிய ‘107 கவிதைகள்’ என்ற நூலும் வெளிவந்தன.

# முதலில் முற்போக்கு யதார்த்தவாத கதைகளையும் பின்னர் அதிலிருந்து மாறுபட்ட கதைகளையும் எழுதினார். 50களின் இறுதியில் எழுத ஆரம்பித்த ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலை 1966-ல் எழுதி முடித்தார்.

# 1967 முதல் ஆறு ஆண்டு காலம் சொந்த வாழ்வின் நெருக்கடியால் எதையும் எழுதாமல் இருந்தார். அதன் பிறகு புதிய வேகத்துடனும் மேலும் புதிமையான நோக்குடனும் எழுத ஆரம்பித்தார்.1981-ல் இவர் எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் இன்றளவும் அதிகம் விவாதிக்கப்படும் நாவலாக இருக்கிறது.

# இவரது கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள், அஞ்சலிக் கட்டுரை கள், முன்னுரைகள், மதிப்புரைகள், பத்தி எழுத்து எனப் பலதரப்பட் டவை. இவரது கூர்மையான விமர்சனங்கள் தமிழ்ச் சூழலின் இலக்கிய அளவுகோல்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.

# 1988-ல் ‘காலச்சுவடு’ என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். உயர் தரமான படைப்புகளும், புதிய சிந்தனைகளும் இதில் வெளிவந்தன. தற்போது இது மாத இதழாக வெளிவருகிறது. 1998-ல் இவரது மூன்றாவது நாவல் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ வெளிவந்தது.

# குமரன் ஆசான் நினைவு விருது, இயல் விருது, கதா சூடாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழின் நவீனத்துவ இயக்கத்தை வலுப்படுத்தியவர்களுள் ஒருவர் என்று போற்றப்பட்ட சுந்தர ராமசாமி, 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 74ஆவது வயதில் காலமானார்.

*🌐மே 30, வரலாற்றில் இன்று:இந்தியாவின் 25ஆவது மாநிலமாக கோவா உதயமான தினம் இன்று.*

மே 30, வரலாற்றில் இன்று.

இந்தியாவின் 25ஆவது மாநிலமாக கோவா உதயமான தினம் இன்று.

போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவா, டையு மற்றும் டாமன் பகுதிகள், இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1961-ஆம் ஆண்டு டிசம்பர்-12ல் ராணுவ நடவடிக்கை மூலமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பின் கோவா, டையு மற்றும் டாமன் பகுதிகள் மத்திய ஆட்சிப் பகுதிகளாக விளங்கின. 1987-ஆம் ஆண்டு யூனியன் பிரதேச பகுதிகள் பிரிக்கப்பட்டு, இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவா மாநிலம் பனாஜியைத் தலைநகராகக் கொண்டு இதே நாளில்தான் உதயமானது.

 கோவாவில் ஆட்சி மொழியாக கொங்கணி மொழியும், அலுவல் மொழியாக ஆங்கிலம் மற்றும் மராத்தி உள்ளன. கோவா கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், இயற்கை துறைமுகமான மர்ம கோவா துறைமுகம், சுகாரி மற்றும் மண்டோவி ஆறுகள் ஆகியன கோவாவின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும். கோவாவின் மிகப்பெரிய நகரமாக வாஸ் கோட காமா நகர் உள்ளது. கோடை மற்றும் குளிர் காலங்களுக்கு ஏற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் கோவா, உலகின் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் மாநிலமாக திகழ்கிறது.

*🌐மே 30,* *வரலாற்றில் இன்று:விமானத்தை உருவாக்கிய ரைட் சகோதரர்களில் ஒருவரான ‘வில்பர் ரைட்’ நினைவு தினம் இன்று.*

மே 30,
வரலாற்றில் இன்று.

விமானத்தை உருவாக்கிய ரைட் சகோதரர்களில் ஒருவரான ‘வில்பர் ரைட்’ நினைவு தினம் இன்று.

 மனிதன் விண்ணில் பறக்க முடியுமா? என்ற கேள்வியை உடைத்தெறிந்து விமானம் கண்டுபிடித்தவர்களில் ஒருவர்.

பல முயற்சிகள் தோற்றுப்போனாலும் விடாமுயற்சியுடன் போராடி இறுதியில் விண்ணில் பறந்து சாதித்துக் காட்டியவர்.

இன்றைய நவீன விமானங்கள் அனைத்திற்கும் முன்னோடி ரைட் சகோதரர்கள் முதலில் பறந்த அந்த 12
வினாடி விமானமே.

வெள்ளி, 29 மே, 2020

🎯♨️ *உடனுக்குடன் PAN எண் ஒதுக்கீடு செய்யும் சேவையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார்* கீழுள்ள லிங்க்

*☀1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் வகுப்புகள்;6 முதல் 8 -ம் வகுப்புகளுக்கு வாரத்திற்கு எத்தனை நாட்கள் வகுப்புகள்? விரைவில் அறிவிப்பு.*

*☀1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் வகுப்புகள்;6 முதல் 8 -ம் வகுப்புகளுக்கு வாரத்திற்கு எத்தனை நாட்கள் வகுப்புகள்? விரைவில் அறிவிப்பு.*

*சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.*

*கொரோனா காரணமாக பொது முடக்கத்தை நீட்டிப்பது பற்றி புதிய நெறிமுறைகளை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. என்றாலும் விமான போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஆகிய இரண்டையும் மத்திய அரசு முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.*

*பொதுவாக இந்தியாவில் ஒரு கல்வியாண்டில் பள்ளிகளில் 220 வேலைநாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதாவது ஒரு மாணவர் 1320 மணி நேரம் வகுப்பறை பாடங்களை கற்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக வரும் கல்வியாண்டில் இதை அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.*


*அதாவது 100 நாட்களில்  600 மணி நேரம் கல்வி கற்றால் போதும் என்ற விதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். மீதமுள்ள நாட்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைகளில் 30 முதல் 50 சதவீத மாணவர்களை வைத்தே வகுப்புகளை நடத்த வேண்டும்.*

*1 முதல் 5-ம் வகுப்புக்கு வாரத்திற்கு 2 நாட்கள் வகுப்புகள் எடுத்தால் போதும். 6 முதல் 8-ம் வகுப்புக்கு வாரத்திற்கு 4 நாட்கள் வகுப்புகள் எடுத்தால் போதும். 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் வகுப்புகள் எடுத்தால் போதும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.*

*இதன்மூலம் சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.*

பிளஸ் 2 வேதியியல் தேர்வில்பிழையான கேள்விக்கு 3 ‘மார்க்'கல்வித் துறை உத்தரவு...

*☀பத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்…* *புதிய வழிமுறைகள் வெளியீடு!*

*☀பத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்…*
*புதிய வழிமுறைகள் வெளியீடு!*

பத்து நிமிடங்களில் இலவசமாக பான் கார்டு எண் பெறும் வகையில், புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிமுகப்படுத்தினார்.
மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆதார் அட்டையை கொண்டு பான் கார்டை உடனடியாக பெறுவதற்கான வசதியை இன்று முறையாக அறிமுகப்படுத்தினார். சரியான ஆதார் எண்ணை வைத்திருக்கும் மற்றும் ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டவர்கள் இத்திட்டத்தின் மூலம் பான் கார்டு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அடிப்படையிலான இ- கே.ஒய்.சி மூலம் உடனடி பான் வசதி பெறும் இந்த முறையானது இன்று முறையாக தொடங்கப்பட்டாலும், சோதனை அடிப்படையில் பிப்ரவரி முதல் வருமான வரித் துறையின் மின்-தாக்கல் இணையதளத்தில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இம்முறை மூலம் பான் கார்டு பெறுவதற்கு, வருமான வரித் துறையின் மின்-தாக்கல் (e-filing website) வலைதளத்திற்குச் சென்று, உங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP ஐ அந்த இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த செயல்முறை முடிந்ததும், 15 இலக்க ஒப்புதல் எண் (acknowledgment number) ஒன்று உருவாக்கப்பட்டு விண்ணப்பிப்பவருக்கு தரப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி இ-பான் கார்டை அதே தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். ஆதார் அட்டையுடன் ஈமெயில் முகவரி பதிவு செய்யப்பட்டிருந்தால், ஈமெயில் மூலமாக விண்ணப்பதாரருக்கு இ-பான் அனுப்பப்படும்.
நன்றி : நக்கீரன் இதழ் - 28.05.2020

மே 29, வரலாற்றில் இன்று: ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தன் கணித இயற்பியல் அறிவின் அதி நுட்பவேலைப்பாட்டில் ஈர்ப்பின் புலச்சமன்பாட்டை வெளியிட்ட தினம்.

மே 29, வரலாற்றில் இன்று.

1917ஆம் ஆண்டு இதே நாளில் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்  தன் கணித இயற்பியல் அறிவின் அதி நுட்பவேலைப்பாட்டில்  ஈர்ப்பின் புலச்சமன்பாட்டை  வெளியிட்டார்.

அதுவே ஐன்ஸ்டினின் சார்புக் கோட்பாடு என்றழைக்கப்பட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டினால் முன்வைக்கப்பட்ட பிரபலமான. E = mc2 என்ற சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை உணர்த்தினார்.
இக்கண்டுபிடிப்பை   அங்கீகரிக்கும் விதமாக ஐன்ஸ்டினுக்கு 1921ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மே 29,வரலாற்றில் இன்று:இந்திய இதழியலின் தந்தை ராமானந்த சட்டர்ஜி பிறந்ததினம்.

மே 29, வரலாற்றில் இன்று.

உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி பிறந்த தினம் இன்று.

சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் கவுரவ முதல்வராகப் பணிபுரிந்தபோது, ரவீந்திரநாத் தாகூரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். அவர்கள் இடையே மலர்ந்த நட்பு இறுதிவரை நீடித்தது.

பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து தரப்பினரின் கருத்துகளும் இந்த இதழ்களில் இடம்பெற்றன.

காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், சி.எஃப்.ஆண்ட்ரூஸ், பிரேம்சந்த், லாலா லஜபதிராய், சகோதரி நிவேதிதை, ஜாதுநாத் சர்க்கார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இந்த இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தனர். 20-ம் நூற்றாண்டின் முதல் 40 ஆண்டுகாலம் வரை, ஒன்றுபட்ட இந்தியாவின் முன்னணி தலைவர்கள், ஆட்சியாளர்களால் இந்த 2 இதழ்களும் மிகவும் மதிக்கப்பட்டன.

‘பிரபாசி’யில் தாகூரின் கவிதைகளும், ‘மாடர்ன் ரிவ்யூ’வில் அவரது மற்ற ஆங்கில மொழிப் படைப்புகளும் தொடர்ந்து வெளிவந்தன. இதன்மூலம் தாகூரை ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை பெற்றார்.

எப்போதுமே உண்மைகள், துல்லியமான புள்ளிவிவரங்களுடன் தனது கட்டுரைகளை எழுதுவார். பத்திரிகை தர்மத்தை இவர் ஒருபோதும் மீறியதில்லை. இவரது திறன்களும் ஆர்வங்களும் பரந்துபட்டவை. அவற்றைத் தன் வாசகர்களுடன் அடிக்கடி பகிர்ந்து கொள்வார். இவரது எழுத்துகளில் நகைச்சுவை இழையோடும்.

இவர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டன. இதழியல், தேசத் தலைவர்கள் தொடர்பான நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘இந்தியா அண்டர் பாண்டேஜ்’ என்ற நூலை தனது அச்சகத்தில் அச்சிட்டதற்காக இவருக்கு அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சாதி, மத, வகுப்புவாத எண்ணங்களுக்கு சிறிதும் இடம்கொடுக்கா மல், முழுமையான ஜனநாயகவாதியாக செயல்பட்டவர். இந்தியாவில் நவீன இதழியலுக்கு வித்திட்டவர். இந்திய இதழியல் துறையின் முன்னோடிப் படைப்பாளியான ராமானந்த சட்டர்ஜி 78ஆவது வயதில் (1943)
காலமானார்.

மே 29,வரலாற்றில் இன்று:ஐ.நா.சபையின் அமைதி காப்போர் தினம்.

மே 29, வரலாற்றில் இன்று.

 ஐ.நா. சபையின் அமைதி காப்போர் தினம் இன்று.

ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் International Day of United Nations Peacekeepers எனப்படுவது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக அமைதி காக்க உயிர்நீத்த வீரர்களுக்கு ஒரு சல்யூட் செய்வோம்..