ஞாயிறு, 31 மே, 2020

*🌐மே 31,வரலாற்றில் இன்று:58 பயணிகள் உள்ளிட்ட 65 பேருடன் பயணம் செய்த சென்னை -டெல்லி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் வெடித்துச் சிதறி 48 பேர் பலியான தினம்(1973)*

மே 31, வரலாற்றில் இன்று.

58 பயணிகள், 7 ஊழியர்களுடன் 1973ஆம் ஆண்டு இதே நாளில்தான் சென்னையிலிருந்து
டெல்லி
புறப்பட்டது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்.

7.35க்கு புறப்பட்டவிமானம்,
9.52க்கு தரையிறங்கவேண்டும்.
அதற்கு 30 நிமிடங்கள் முன்பாக,டெல்லி வசந்த விஹார் பகுதியில் வெடித்து
சிதறியது.48 பேர் இறந்தனர்.17 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்திரா மந்திரிசபையில் மந்திரியாக இருந்த மோகன்குமாரமங்கலம்,
கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம், பஞ்சாப் முன்னாள் முதல்வர்
குருநாம்சிங் இறந்தவர்களில் முக்கியப்பிரமுகர்கள்.

மத்தியமந்திரி பாலகோவிந்தவர்மா, காங்கிரஸ் எம்.பி.விஜயலட்சுமி
உயிர்தப்பியவர்களில் முக்கியமானவர்கள்.

*🌐மே 31,வரலாற்றில் இன்று:சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்.*

மே 31, வரலாற்றில் இன்று.

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்று.

சனி, 30 மே, 2020

G.O(Ms) No: 41 Date:26.02.2020- Department of Treasures and Accounts- Mustering for first pension after physical apperance Change in Produre-orders issued முதல் முறையாக ஓய்வூதியம் பெற கருவூலம் வர அவசியம் இல்லை-அரசாணை வெளியீடு



*✒கல்வி -சார்நிலைப்பணி-ஏப்ரல் 2020 மாத ஊதியப்பட்டியல் தயார் செய்தல் மற்றும் கருவூலங்களில் சமர்பித்தல் பணி-பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்/அலுவலகப் பணியாளர்கள் தலைமையிடம் மற்றும் கருவூலம் சென்று வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*✒கல்வி -சார்நிலைப்பணி-ஏப்ரல் 2020 மாத ஊதியப்பட்டியல் தயார் செய்தல் மற்றும் கருவூலங்களில் சமர்பித்தல் பணி-பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்/அலுவலகப் பணியாளர்கள் தலைமையிடம் மற்றும் கருவூலம் சென்று வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - கோவிட்-19 காரணமாக வெளி மாநிலம் /வெளி மாவட்டத்தில் தங்கி இருக்கும் பட்டதாரி/ முதுகலை ஆசிரியர்கள் விபரம் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்:20.05.2020



G.O (Ms) No: 248 Date: 20.5.2020 - புதிய அரசு பணியிடத்துக்கு தடை.: தமிழக அரசு அறிவிப்பு!



*💉மருத்துவக்காப்பீட்டுத் திட்டம்-NHIS 2016-ல் விவரிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் உட்படாத நோய்க்கு-உட்படாத மருத்துவமனை-மருத்துவ சிகிச்சை செலவு செய்தது-DLEC(மாவட்ட அளவிலான அதிகார)குழுவிற்கு அனுப்பி மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகை திரும்ப பெற்று வழங்கக் கோரும் வழிமுறை*

*💉மருத்துவக்காப்பீட்டுத் திட்டம்-NHIS 2016-ல் விவரிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் உட்படாத நோய்க்கு-உட்படாத மருத்துவமனை-மருத்துவ சிகிச்சை செலவு செய்தது-DLEC(மாவட்ட அளவிலான அதிகார)குழுவிற்கு அனுப்பி மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகை திரும்ப பெற்று வழங்கக் கோரும் வழிமுறை*



DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் / உரிமை விடல் செய்தவர்கள் விபரம் கோரி (பணிவரன்முறை செய்யும் பொருட்டு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - நாள்: 19.05.2020.


DSE PROCEEDINGS-பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம் கோருதல் சார்பாக இணைஇயக்குநர் செயல்முறைகள் நாள்: 23.5.2020


*🌸வாடிக்கையாளரிடமிருந்து வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு.புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்:*

*🌸வாடிக்கையாளரிடமிருந்து வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு.புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்:*

*வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு, புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.*

*நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, மே 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். தினக் கூலி தொழிலாளர்கள், மாத சம்பளதாரர்கள் என, அனைத்து தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.*

*வீட்டு வாடகை, மின்சார கட்டணம் போன்றவற்றை கூட செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். மேலும் பலர், அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகின்றனர்.வங்கிகளில், வீடு, வாகனம், கல்வி ஆகியவற்றுக்காக கடன் வாங்கியவர்கள், இந்த மாத, இ.எம்.ஐ., எப்படி செலுத்துவது என கவலையில் ஆழ்ந்திருந்தனர். இதையடுத்து, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 6 மாதங்களுக்கு, இ.எம்.ஐ., செலுத்தத் தேவையில்லை' என, ரிசர்வ் வங்கி அறிவித்தது.*

*இந்த விஷயத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்குவதற்கும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகையை வாடிக்கையாளர்கள் எப்படி பெறுவது என்ற சந்தேகத்தை தீர்ப்பதற்கும், எந்த வங்கியும் ஆர்வம் காட்டவில்லை.*

*இந்நிலையில், மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில், வீடு, வாகனம், கல்விக் கடன் வாங்கியவர்களுக்கு, சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து, இந்த மாத, இ.எம்.ஐ., பிடித்தம் செய்யப்பட உள்ளது. எனவே, போதிய அளவு தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருங்கள்' என, நினைவூட்டல், எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. இது, கடன் வாங்கியவர்களிடையே, குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.*

*இது குறித்து வங்கித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, 6 மாதங்களுக்கான கடன் தவணையை செலுத்த முடியாதவர்கள், 'இ.எம்.ஐ., பிடித்தத்தை ஒத்தி வைக்க வேண்டும்' என, கடன் வாங்கிய வங்கிகளுக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்; இல்லையெனில், கடன் வாங்கியவர்களின் கணக்கிலிருந்து, அதற்கான தொகை, தானாகவே பிடித்தம் செய்யப்படும்.ஒத்திவைப்பு இந்த 6 மாத, இ.எம்.ஐ., தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறதே தவிர, ரத்து செய்யப்படவில்லை என கூறப்பட்டது.*

*இந்நிலையில் வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.*