வியாழன், 4 ஜூன், 2020

*🌐ஜூன் 4,வரலாற்றில் இன்று:மறைக்கப்பட்ட ஆளுமை,டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு பிறந்த தினம்.*

ஜூன் 4,
வரலாற்றில் இன்று.

மறைக்கப்பட்ட ஆளுமை, டாக்டர் பெருமாள் வரதராஜுலு நாயுடு அவர்களின் பிறந்த தினம் இன்று.

டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு
(பிறப்பு: 1887, ஜூன் 4- மறைவு: 1957 ஜூலை 23)

தென்னாட்டுத் திலகராகப் புகழ்பூத்த வ.உ.சி, 1934இல் ‘தேசிய சங்கநாதம்’ எனும் தலைப்பில் 32 பக்கங்களில் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
இந்தச் சிறுவெளியீட்டில் டாக்டர் நாயுடுவின் தேசியத் தொண்டுகள் 1933 வரையில் நிகழ்ந்தவை மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

‘டாக்டர்’ எனும் பட்டப் பெயர், அவர் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று மருத்துவத் தொழிலில் பெரும்புகழ் பெற்றதால் அமைந்தது.

சேலம் மாவட்டம், ராசிபுரத்தில் 1887ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி வரதராஜுலு நாயுடு பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள் உயர் நிலைக் கல்வி கற்கும்பொழுதே நாடெங்கும் பரவிய வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. இளைஞரான வரதராஜுலு ‘முற்போக்காளர் சங்கம்’ எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார்.

அன்னியத் துணி விலக்கு, சுதேசியம் எனும் தேசிய லட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டதைப் பற்றி பிற்காலத்தில் 1936 செப்டம்பர் 26-ஆம் தேதியிட்ட தமது ‘தமிழ்நாடு’ இதழின் தலையங்கத்தில் பின் வருமாறு கூறியுள்ளார்:
“1906ஆம் ஆண்டில் எனது 19 வயதில் இந்திய தேசிய இயக்கத்தில் நான் ஈடுபட்டேன். 1908ஆம் வருஷம் புதுச்சேரிக்குச் சென்று, சுப்பிரமணிய பாரதியாரின் ஆசீர்வாதத்தைப் பெற்றேன்.

“1916இல் தேசிய அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றேன். இந்த வரலாற்றுச் சிறப்பை, ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க. தமது வாழ்க்கைக் குறிப்புகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-
”பால்- பால்-லால் என்று பாரதநாடு முழங்கிய காலமுண்டு. நாயக்கர், நாயுடு, முதலியார் என்று தமிழ்நாடு முழங்கிய காலமுண்டு.
மேலே,
‘பால்’ என்பது பாலகங்காதர திலகரையும்
‘பால்’ என்பது விபின் சந்திர பாலையும்
‘லால்’ என்பது லாலா லஜபதிராயையும்
குறிப்பிடுவனவாகும்.
இவ்வாறே,
நாயக்கர் என்பது, ஈ.வெ.இராமசாமி நாயக்கரையும்
நாயுடு என்பது டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவையும்
முதலியார் என்பது திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரையும்
குறிப்பிடுவனவாகும்”.

இவரது முதல் சிறைவாசம், 1918-இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக விதிக்கப்பட்டது. சொற்பொழிவில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையில், நாயுடுவின் சார்பில் சேலம் சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) வாதாடினார்.
இவருக்குத் துணையாக, சேலம் ஆதி நாராயண செட்டியார்,
மதுரை ஜார்ஜ் ஜோசப், எம்.கே.சுந்தரராஜ ஐயங்கார்,
ஆர்.எஸ். வரதராஜுலு நாயுடு
ஆகிய வழக்கறிஞர்கள் உதவினர்.

உயர் நீதிமன்ற மேல் முறையீட்டில் ராஜாஜி எழுப்பிய சட்ட நுணுக்க வாதத்தால், நாயுடு விடுதலை பெற்றார்.
அவர் சேலத்தில் வாரப் பதிப்பாக 1919-ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த ‘தமிழ் நாடு’ இதழில் அவர் எழுதிய இரு கட்டுரைகள், ராஜதுரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு விதிக்கப்பட்ட ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையால் இரண்டாம் சிறை வாசத்தை ஏற்றார்.

1923-இல் பெரியகுளம் தாலுகா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இது மூன்றாவது சிறைத்தண்டனையாகும்.

24-ஆம் வயதில் அவர் ருக்மணி எனும் பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். 1920 ஆகஸ்டில் காந்தியடிகள் திருப்பூர் வந்தபொழுது, டாக்டர் வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். 1921-இல் மீண்டும் சேலம் வந்தபொழுது டாக்டர் வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். காந்தியடிகள் அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் நாயுடுவின் மனைவி ருக்மணி, தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும், காந்தியடிகளிடம் கொடுத்துவிட்டார்.
1922-இல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்டபொழுது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க புதுமையைக் கையாண்டார், டாக்டர் நாயுடு.

அரசாங்கத்துக்குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார். காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு தான் வரிகட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார்.
வரி மறுப்பைக் குறிப்பிட்டு டாக்டர் நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம், காந்தியடிகளின் ‘யங் இந்தியா’வில் வெளிவந்தது. 1925-இல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராகவும் பணியாற்றினார். 1929-இல் காங்கிரஸோடு கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரஸை விட்டு வெளியேறினார். பின்னர் ஆர்ய சமாஜத்தில் இணைந்தார்.

‘ஜஸ்டிஸ்’ கட்சியை எதிர்த்ததில் டாக்டர் நாயுடுவின் பங்களிப்பைப் பின்வருமாறு திரு.வி.க. பாராட்டியுள்ளார்:
“ஜஸ்டிஸ் கட்சி முளைவிட்டபோது, அதைக் கிள்ளியெறிவதற்கென்று புறப்பட்டவர் டாக்டர் வரதராஜுலு. வரதராஜுலுவின் பிரசாரம் தமிழ்நாட்டில் நாலா பக்கமும் பரவாவிடின், ‘ஜஸ்டிஸ்’ கொடி நாடு முழுவதும் பரவி, காங்கிரஸ் உணர்ச்சிக்கேடு சூழ்ந்திருக்கும். தென்னாட்டில் காங்கிரஸ் பக்தியை வளர்த்த பெருமை நாயுடுவுக்கு உண்டு”
-என்று திரு.வி.க. எழுதியுள்ளார்.

ஜி.சுப்பிரமணிய ஐயர், பாரதியார், திரு.வி.க.வைத் தொடர்ந்து, தேசியத் தமிழ் இதழியல் துறையை மேலும் வளர்த்தவர் டாக்டர் நாயுடு.
இவருடைய இதழியல் பணி, ‘பிரபஞ்ச மித்திரன்’ எனும் வார இதழ் மூலம் தொடங்கியது. மங்கலம் ஷண்முக முதலியார் உரிமையாளராகவும், சுப்பிரமணிய சிவா ஆசிரியராகவும் நடத்தப்பட்ட ‘பிரபஞ்சமித்திரன்’ மிகுந்த பொருள் இழப்பில் தத்தளித்தபொழுது, டாக்டர் நாயுடு 1916-இல் அந்த இதழை வாங்கினார். அவர் ஆசிரியரானார். இது இரண்டாண்டுகள் வெளிவந்தது. 1918ஆம் ஆண்டு டாக்டர் நாயுடு சிறைப்பட்டபொழுது, ஆயிரம் ரூபாய் ஈடுகாணம் அரசால் கேட்கப்பட்டு, பத்திரிகை முடக்கப்பட்டது. 

பிரபஞ்சமித்திரனுக்குப் பிறகு தமிழ்நாடு இதழைத் தொடங்கி ஆசிரியராக இருந்து ஆற்றிய நாயுடுவின் பணி ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

அவருக்கு இவ்வகையில் பெரிதும் துணை நின்றவர் ‘பேனா மன்னன்’ என்று பிற்காலத்தில் புகழப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம் ஆவார்.
1919-இன் இறுதியில் சேலத்தில் வாரப் பதிப்பாக வெளிவரத் தொடங்கிய தமிழ்நாடு இதழில், 21 வயதான இளைஞர் டி.எஸ்.சொக்கலிங்கம் 1923-இல் துணை ஆசிரியரானார்.1926 ஏப்ரல் 14-இல் வாரப் பதிப்புடன் நாளிதழையும் தொடங்கினார். பாரதியார் பாடல்களைச் சித்திர விளக்கங்களாக வெளியிட்ட முதல் இதழ் தமிழ்நாடு எனும் பெருமை பெற்றது.

“காலஞ்சென்ற ஜி.சுப்பிரமணிய ஐயரைப் போல டாக்டர் நாயுடுவும் பத்திரிகை உலகில் ஒரு தனிச் சுடராக விளங்கினார். தேசிய ஆதர்சங்களுடன் வெற்றிகரமாக ஒரு தேச பாஷை பத்திரிகை நடத்திய வீரர்களில் டாக்டர் நாயுடுவைக் காலஞ்சென்ற ஜி.சுப்பிரமணிய ஐயருக்கு இணையாகச் சொல்லலாம்” -என்று வ.உ.சி. ‘தேசிய சங்க நாதம்’ எனும் வெளியீட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழும் டாக்டர் நாயுடுவின் முயற்சியே. 1916-லேயே ஆங்கில இதழ் ஒன்றைத் தொடங்க வேண்டும் என விரும்பிய டாக்டர் நாயுடு, 1932-இல் தமிழ்நாடு நாளிதழுக்கு சகோதரப் பத்திரிகையாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ எனும் பெயரில் ஓர் ஆங்கில நாளேட்டைத் தொடங்கினார். ஆனாலும், சில மாதங்களிலேயே ‘ப்ரீ பிரஸ் ஆப் இந்தியன்’ எனும் சுதேச செய்தி நிறுவனத்தை நிறுவிய தேசிய வீரர் எஸ்.சதானந்தம் வசமாயிற்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’.
1930-32களில் காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும், சட்டமறுப்பு இயக்கம் முதலியவற்றையும் டாக்டர் நாயுடு எதிர்த்தது இவருடைய அரசியல் வீழ்ச்சிக்கும், தமிழ்நாடு இதழின் நலிவிற்கும் காரணமாயிற்று.

விடுதலை பெற்ற இந்தியாவில் டாக்டர் நாயுடு 1951-இல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.

சிற்சில சந்தர்ப்பங்களில் பெரியாருக்கும், காமராசருக்கும் இடையே பாலமாகவும் திகழ்ந்தார். 23.7.1957-இல் அவர் இறந்தபொழுது அவருடைய இறுதிச் சடங்குகள் ஆரிய சமாஜ சடங்குகள் வழியே எரியூட்டப்பட்டது. இவரைப் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாறு வெளிவருதல் இன்றியமையாததாகும்.

புதன், 3 ஜூன், 2020

*🌸கொரானா தொற்று_ தளர்வு இல்லாத 4 மாவட்டங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகப் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு...*

*🌸கொரானா தொற்று_ தளர்வு இல்லாத 4 மாவட்டங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகப் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு...*

*🌟தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில் உரிய வழிகாட்டுதல்களை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளித்திட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்.*

*🌟தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில் உரிய வழிகாட்டுதல்களை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளித்திட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்.*

*☀நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்பு மானியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை..*

*☀நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்பு மானியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை..*

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 2020 பிப்ரவரி மாதம் முதல் 3 மாத ஊதியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை..

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 2020 பிப்ரவரி மாதம் முதல் 3 மாத ஊதியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை..

covid-19_ இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு __கூட்டுறவு வங்கி கடனுக்கு மாதத்தவணை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வேண்டுதல்__ நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

covid-19_ இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு  __கூட்டுறவு வங்கி கடனுக்கு மாதத்தவணை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வேண்டுதல்__ நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

ஈராசிரியர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்று பணியிடமாற்றம் செய்யப்படாத ஆசிரியர்கள் விவரம் கோருதல் சார்ந்த தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்...

*🌷ஜூன் 3,வரலாற்றில் இன்று:எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா நினைவு தினம்.(1924)*

ஜூன் 3, வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா நினைவு தினம் இன்று(1924).

இன்றைய இலக்கிய எழுத்தாளர்கள் பலரின் வாயில் புகுந்து புறப்படும் பெயர், காப்கா;

காந்தாரி ஓரு ஆஸ்திரிய எழுத்தாளர். அவரது தந்தை, மனைவியையும், மகனையும் ஓயாமல் போட்டு அடிப்பார். அந்த மன பாதிப்பு, காப்காவின் எழுத்தில் துாக்கலாக தெரியும்.

 26ஆம் வயதில் இவர் எழுதிய, 'ஒரு கிராமிய திருமணத்திற்கான ஏற்பாடுகள்' என்ற நாவல் தான், இவரது முதல் நூல்.

காதல், மது இரண்டிலும் பிரியம் கொண்ட காப்காவிற்கு, திருமண ஏற்பாடு நிச்சயத்தோடு நின்றது. காசநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த, 1910 முதல் 1923 வரை காப்கா எழுதிய, 'தி டிரையல், தி கேசில், தி ஜட்ஜ்மென்ட், மெட்டமார்பசிஸ், கன்ட்ரி டாக்டர்' என்ற அவரின் ஒவ்வொரு படைப்புமே, அவரது வாழ்க்கை அனுபவ வெளிப்பாடுகளே! காப்கா, தாம் எழுதிய கையெழுத்துப் பிரதிகளை, ஒரு இலக்கிய நண்பரிடம் கொடுத்து, தன் மரணத்திற்கு பின், அவற்றை தீ வைத்து எரித்து விடுமாறு கூறினார். நண்பரோ, அந்த உன்னத படைப்புகளை அழிக்க மனமின்றி, ஒவ்வொன்றாக பிரசுரித்து வெளியிட்டார்.

காப்கா, தன் நாற்பதாவது வயதில், இதே நாளில் காலமானார்!

*🌷ஜூன் 3,வரலாற்றில் இன்று:உடற்கூற்றுயியல்,இரத்த ஓட்டம் பற்றி கண்டுபிடித்தவருமான வில்லியம் ஹார்வி நினைவு தினம்.*

ஜூன் 3, வரலாற்றில் இன்று.

உடற்கூற்றுயியல், இரத்த ஓட்டம் பற்றி கண்டுபிடித்தவருமான வில்லியம் ஹார்வி நினைவு தினம் இன்று.

ஹார்வி ஏப்ரல்-01, 1578இல்
இங்கிலாந்து Folkestone ஊரில் பிறந்தார்.

15 வயதில் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியில் பயின்றார்.

1597இல் இத்தாலி padua யூனிவர்சிட்டியில் மருத்துவம் செய்தார்.

1616இல் இரத்த ஓட்டம் பற்றிய உண்மைகளை கண்டறிந்து விளக்கினார்.

இரத்தம் இதயத்திலிருந்து மனித மூளை, பிற உடல் உறுப்புகளுக்கு சென்று, மறுபடியும் அங்கிருந்து இதயத்துக்கு வருகிறது.

இரத்த ஓட்டம், இதயத்தின் தமனி, சிரை செயல்பாடு விவரித்தார்.

இரத்தம் பின்னோக்கி செல்லாத காரணம் வால்வுகள்.

இரத்த ஓட்டம் இதய துடிப்பு மூலம் அறிதல்.

ஒவ்வொரு முறை இதய துடிப்பின் போது இரண்டு அவுன்ஸ் இரத்தம் வெளியேற்றம்,

ஒரு நிமிடத்திற்கு 72 முறை இதயம் துடிப்பு.

அன்றைய காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சமாளித்து உடற்கூறு ஆராய்ச்சி செய்த இவர் முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டு ஜூன்-3, 1657 இல் தனது 79வது வயதில் காலமானார்.

*🌸ஜூன் 3,வரலாற்றில் இன்று:இந்திய ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்த தினம்.(1984).*

ஜூன் 3,
 வரலாற்றில் இன்று.

இந்திய ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்த தினம் இன்று(1984).

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகளானாலும் வடுக்கள் இன்னும் மறையவில்லை

சீக்கியர்களுக்காக ‘காலிஸ்தான்' என்ற தனிநாடு கோரி, ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் புகுந்துகொண்டனர். பொற்கோயிலிலிருந்து அவர்களை அகற்ற ராணுவம் எடுத்த நடவடிக்கையின் சங்கேதப் பெயர் 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்'.

அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயில் பரந்து விரிந்த ஒரு வழிபாட்டுத் தலம். அந்தக் கோயில் வளாகத்துக்குப் பெயர் ஹர்மந்தர் சாஹிப். சீக்கியர்களின் புனித நூல்தான் குருநாதராகப் பாவிக்கப்பட்டு அன்றாடம் ஓதப்படுகிறது. அந்த இடத்துக்கு வரும் பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடியும் புனித நூலில் உள்ள வசனங்களை ஓதியும் வழிபடுவார்கள். அன்றாடம் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு அளிக்கப்படும் இடம் இது.

இந்தப் பொற்கோயிலுக்குள் தான் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்து பஞ்சாப் அரசும் மத்திய அரசும் விடுத்த வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன. இதையடுத்து, பஞ்சாப் மாநிலம் முழுக்கப் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசிடம் ஒப்புதல் பெறாமல் எந்தத் தகவலையும் செய்தியையும் வெளியிடக் கூடாது என்று பத்திரிகைகளுக்குச் செய்தித் தணிக்கை  செய்யப்பட்டது. அமிர்தசரஸ் நகரிலிருந்து பத்திரிகை நிருபர்கள் அகற்றப்பட்டனர். எல்லைகளில் வாகனங்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டன. மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகளில் குடிநீர் விநியோகம்கூட நின்றது.

பஞ்சாப் மாநில போலீஸார், மத்திய போலீஸ் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படை, கமாண்டோ படையினர், ராணுவம் என்று அனைத்துத் தரப்பினரும் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் பங்கேற்றனர். தரைப்படையின் காலாட்படை, கவச வாகனப்படை இரண்டும் களத்தில் இறக்கப்பட்டன. ராணுவ டேங்குகளும், ஹெலிகாப்டர்களும்கூட பயன்படுத்தப்பட்டன. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் ‘ஆபரேஷன் மெட்டல்', ‘ஆபரேஷன் ஷாப்' என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டது.

‘ஆபரேஷன் மெட்டல்' என்பது பொற்கோயில் அமைந்துள்ள ஹர்மந்தர் சாஹிபுக்கானது. ‘ஆபரேஷன் ஷாப்' என்பது பஞ்சாபின் பிற பகுதிகளில் மறைந்திருந்த பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும் கண்டுபிடித்துக் கைதுசெய்வது அல்லது அழிப்பதற்கானது. இதற்குப் பிறகு ‘ஆபரேஷன் உட் ரோஸ்' (வன ரோஜா) என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது மாநிலம் முழுக்க அங்குலம் அங்குலமாகச் சோதனை நடத்தி, பயங்கரவாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் எவரும் இல்லை என்பதை உறுதிசெய்வது.



பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து பயங்கரவாதிகளை வெளியேற்ற வேண்டும், அதற்கொரு திட்டம் தீட்டுங்கள் என்று பிரதமர் இந்திரா காந்தி லெப். ஜெனரல் இந்தியத் தரைப்படையின் துணைத் தளபதி லெப். ஜெனரல் எஸ்.கே. சின்ஹாவைத்தான் முதலில் கேட்டார். சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில் மீது ராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தினால், அதை சீக்கியர்கள் காலம் முழுக்க மறக்க மாட்டார்கள், வேறு வழியில் இதை முயற்சி செய்துபார்க்கலாம் என்றார். இந்திரா அவருடைய யோசனையை நிராகரித்தார்.

அதன் பிறகு, ஜெனரல் அருண் ஸ்ரீதர் வைத்யா தரைப்படைத் தலைமை தளபதியாக்கப்பட்டார். அவர் லெப். ஜெனரல் கே. சுந்தர்ஜி உதவியுடன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையை வகுத்தார்.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 1984 ஜூன் 1 முதல் 10 வரை மேற்கொள்ளப்பட்டது. 5 தரைப் படைப் பிரிவுகள், 2 கமாண்டோ படைப் பிரிவுகள், 6 டேங்குகள், 2 துணைநிலை ராணுவப் படைப் பிரிவுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

 இந்திய ராணுவப் படைக்கு மேஜர் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் தலைமையேற்றார். பிஹார் ரெஜிமெண்ட், மெட்ராஸ் ரெஜிமெண்ட், 10-கார்ட்ஸ் ரெஜிமெண்ட் ஆகியவை பங்கேற்றன.

ஜூன் முதல் நாள், ‘குரு ராம்தாஸ் லங்கர்' என்றழைக்கப்படும் யாத்ரிகர்களுக்கான உணவுக் கூடத்தைப் பாதுகாப்புப் படையினர் தாக்கினர். அதில் 8 முதல் 10 பேர் வரை இறந்தனர்.

ஜூன் 2-ம் நாள் காஷ்மீர் முதல் ராஜஸ்தானின் கங்கா நகர் வரையிலான சர்வதேச நில எல்லைகள் மூடப்பட்டன. பஞ்சாப் கிராமங்களுக்கு ராணுவத்தின் 7 டிவிஷன் படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டன. பத்திரிகைகளுக்குத் தணிக்கை விதிக்கப்பட்டது. ரயில், பேருந்து, விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. வெளிநாட்டவர்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் பஞ்சாப் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டனர்.

 பஞ்சாப் ஆளுநரின் ஆலோசகராக ஜெனரல் கௌரி சங்கர் நியமிக்கப்பட்டார்.
ஜூன் 3-ம் நாள் பஞ்சாப் முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. ராணுவமும் துணைநிலை ராணுவமும் ரோந்து சுற்றியது. பொற்கோயிலுக்குள் யாரும் நுழைய முடியாமலும் வெளியேற முடியாமலும் காவல், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

ஜூன் 4-ம் நாள், ராம்கடியா பங்காஸ், தண்ணீர்த் தொட்டி போன்றவை குண்டுகளால் தகர்க்கப்பட்டன. பீரங்கி மூலம், பயங்கரவாதிகளின் வெளிப்புறத் தடுப்பரண்கள் துவம்சம் செய்யப்பட்டன. சுமார் 100 பேர் இறந்தனர். சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் முன்னாள் தலைவர் குருசரண் சிங் தோராவை, பயங்கரவாதிகளுடன் பேசச் சொல்லி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளைக் கைவிட்டு சரண் அடைய மறுத்துவிட்டனர். பேச்சு தோல்வியில் முடிந்தது.

ஜூன் 5-ம் நாள், ஆலய வளாகத்தின் தென்மேற்கு மூலையில் இருந்த ஹோட்டல் டெம்பிள் வியூ என்ற கட்டடமும் பிரம்மபூத அகடாவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படையின் தாக்குதலுக்கு உள்ளாயின. ராணுவத்தின் 9-வது படைப் பிரிவு, அகால்தக்த் என்ற பகுதிமீது தாக்குதல் நடத்தியது. ஆனால், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ராணுவத் தரப்பில் மிகக் கடுமையான ஆள்சேதம் ஏற்பட்டது. வெறும் துப்பாக்கிகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் பயன்தராது என்ற நிலைக்குப் பிறகே டேங்குகள் மூலம் பெரும் தாக்குதல் நடத்தி சேதம் விளைவிக்கப்பட்டது.

ஜூன் 6-ம் நாள் விஜயந்தா டேங்குகள் அகால்தக்தை நிர்மூலம் செய்தன. அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சிறு கும்பல், ராணுவத்தின் இயந்திரத் துப்பாக்கிகளுக்குப் பலியானது. அப்படியும் அகால்தக்தின் பக்கத்துக் கட்டடங்களிலிருந்து பயங்கரவாதிகள் தாக்கினர். ராணுவத்தின் தாக்குதலில் பிந்தரன்வாலே உயிரிழந்தார்.

ஜூன் 7-ம் நாள் ஹர்மந்தர் சாஹிப், ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

ஜூன் 8 முதல் 10 வரையில் ஒரு கோபுரத்தின் அடித்தளத்தில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டனர். அந்த இடத்தை நோக்கி விரைந்த கமாண்டோ படை கர்னல் ஒருவரைப் பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டு அவரது உடலைச் சல்லடைக் கண்களைப் போலத் துளைத்தனர். ஜூன் 10-ந் தேதி பிற்பகல்தான் ஆலயம் முழுக்கப் பாதுகாப்புப் படையினர் வசம் வந்தது.

பலி எத்தனை?

ராணுவத் தரப்பில் 136 பேர் உயிரிழந்தனர், 220 பேர் காயமடைந்தனர். சிவிலியன்கள் தரப்பில் 492 பேர் இறந்தனர். இவர்களில் பயங்கரவாதிகளும் யாத்ரிகர்களும் குருத்வாரா ஊழியர்களும் இருந்தனர். ராணுவ நடவடிக்கையில் 5,000 பேர் இறந்தனர் என்றும் பஞ்சாப் முழுக்க 20,000 பேர் இறந்தனர் என்றும் எந்தவித ஆதாரங்களுமின்றிப் பல தகவல்கள் உலவுகின்றன. பொற்கோயில் நடவடிக்கையில் ராணுவம் 700-க்கும் மேற்பட்டோரை இழந்ததாகப் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த ராஜீவ் காந்தி கூறியிருக்கிறார்.

பொற்கோயிலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகு, சீக்கியர்கள் மனதில் அடக்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது. ராணுவத்திலேயே சில படைப் பிரிவுகளில் சீக்கிய வீரர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். ராணுவத்திலும் போலீஸ் படையிலும் பணிபுரிந்த பலர் பதவிகளை விட்டு விலகினர். இந்திய அரசு அளித்திருந்த பதக்கங்களையும் பட்டங்களையும் துறந்தனர்.

பொற்கோயிலுக்குள் ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை. அவர்களில் சிலர் இந்திரா காந்தியின் மெய்க்காவலர்களாக இருந்த சத்வந்த் சிங், பேயந்த் சிங் என்ற இருவரை அணுகி இதற்குப் பழிவாங்க இந்திராவைக் கொல்ல வேண்டும் என்று அவர்களைத் தூண்டினார்கள். இதையடுத்து, இந்திரா காந்தியை அவர்கள் அவருடைய அரசு இல்லத்திலேயே அவர் நடந்துசெல்லும்போது, 1984 அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக்கொன்றனர். இந்திரா காந்தியின் உடலை 33 குண்டுகள் துளைத்தன.

இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு அதற்குப் பழிவாங்கும் வகையில், டெல்லியிலும் வேறு சில ஊர்களிலும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரங்கள் வெடித்தன. 3,000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் இதில் இறந்தனர். ஆனால், இந்த எண்ணிக்கையும் இறுதியானதோ சரியானதோ அல்ல என்றே பலர் கூறுகின்றனர். இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்டோர் அரசியல் தலைவர்கள் மீது இன்னமும் வழக்கு நடந்துவருகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சீக்கியர் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்து அந்தச் சமூகத்தினரிடம் மத்திய அரசின் சார்பில் மன்னிப்பு கோரியது நினைவுகூரத் தக்கது.

ஆண்டுகள் 36 ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக வடுக்களில் ஊற்றெடுக்கும் ரத்தமாகவே இருக்கிறது நீல நட்சத்திர நடவடிக்கை.