ஜூன் 7,
வரலாற்றில் இன்று.
ஜூன் 7, 1893 அன்று இருளில் கடகடவென்று அந்த ரயில் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் நன்கு சட்டம் படித்த மாநிறமான ஒருவர் பயனித்து வந்தார். அங்கு வந்த வெள்ளையன் ஒருவன் முதல் வகுப்பில் வெள்ளையர் மட்டுமே பயணிக்க வேண்டும் ஆதலால் முன்றாம் வகுப்பு பெட்டிக்கு செல்லுமாறு அந்த மாநிறத்தவரை கேட்டுக்கொண்டார். உரிய பயணச்சீட்டைப் பெற்றுள்ளதால் தனக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யும் உரிமை தனக்கு உண்டு என்று கூறி வெளியேற மறுத்த அவரை, அடுத்த நிறுத்தத்தில் அவரது பெட்டிகளைத் தூக்கி எறிந்து வெளியே தள்ளினான் அந்த வெள்ளையன்.
அவமானப் படுத்தப்பட்ட அந்த மனிதர் சோகமாக ஆற்றாமை கலந்த ஒரு வித வெறுப்புடன் அந்த நள்ளிரவுக் குளிரில் யோசித்து கொண்டு இருந்தார். அவருக்கு இரு வழிகள் இருந்திருக்கும். ஒன்று இனி அந்த ஊர்ச் சட்டத்திற்கு (ஒடுக்குமுறைக்கு) ஏற்ப மூன்றாம் வகுப்பில் பயணிப்பது, மற்றொன்று வசதியான படித்த தன்னை அதில் இருந்து விடுத்து கொள்ள முயற்சிப்பது. ஆனால் அந்த மனிதரோ தன்னைப் போன்றும் அதற்கும் கீழ் இருக்கும் ஒட்டுமொத்த சமூகத்தையும் இந்த மனித நேயமற்ற நிறவாதத்தில் இருந்து மீட்க போராடினார். இது நடந்தது நிறவெறிக்கு பேர் போன தென் ஆப்ரிக்காவில். அந்த மனிதரின் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
ஆம். அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி உருவாக்க காரணமான தினம் இன்று.