திங்கள், 8 ஜூன், 2020

*🌐வரலாற்றில் இன்று:உளவியலாளர் ஆப்ரகாம் மாஸ்லோ நினைவு தினம்.*

ஜூன் 8,
வரலாற்றில் இன்று.

உளவியலாளர் ஆப்ரகாம் மாஸ்லோ நினைவு தினம் இன்று(1970).

அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம். ரஷ்ய நாட்டு அரசு, யூதர்களுக்கு எதிராக அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. யூதர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் வேலை பார்க்கும், பிஸினஸ் செய்யும் உரிமை பறிக்கப்பட்டது. அந்த சமூகத்துப் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. ரத்தவெறி கொண்ட ஓநாய்கள் விரட்டிய மான்களாக யூதர்கள் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அடைக்கலமானார்கள்.

அப்படி அடைக்கலமான ஒரு இளம் தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார் ஆபிரஹாம் மாஸ்லோ (Abraham Maslow).

அவருக்குப் பின் வருடத்துக்கு ஒன்றாக, வரிசையாய் ஆண், பெண் என ஆறு குழந்தைகள்.
குழந்தைப் பருவத்திலிருந்தே, மாஸ்லோ வித்தியாசமான ஆள். தனிமையில் இனிமை காண்பவன். தன் தம்பி, தங்கைகளோடுகூட விளையாட மாட்டான். எப்போதும் புத்தகம் படித்துக்கொண்டிருப்பான். மரை கழன்றவன் என்று அக்கம் பக்கத்தார் முடிவு கட்டினார்கள். அப்பா, அம்மாவுக்கும் அதுதான் டவுட். என்றாலும் மகனை சட்டம் படிக்கச் சொன்னார்கள் அவர்கள்.
ஆனால், அப்போது பலரும் நுழையாத மனோதத்துவப் படிப்பில் சேர்ந்தார் மாஸ்லோ. மனோதத்துவம் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. பாடங்களைக் கரைத்துக் குடித்து டாக்டர் பட்டம் வாங்கினார். 1954இல் தேவைகளின் படிநிலை அமைப்பு  (Hierarchy of needs) என்னும் கொள்கையை வெளியிட்டார். கொள்கையா அது? பிஸினஸ் உலகத்துக்கே புதுப்பாதை போட்ட வேதம்.

மாஸ்லோ அப்படி என்ன சொன்னார்? அவர் கொள்கையின்படி, மனிதர்களின் தேவைகள் கீழ்க்கண்ட படிநிலைகளில் அமைந்துள்ளன.

படிநிலை 1  - உயிர் வாழ்க்கைத் தேவைகள் (உணவு, குடிநீர், உடல் தேவைகள் போன்றவை).
படிநிலை 2 - பாதுகாப்புத் தேவைகள் (உடை, வீடு போன்றவை).
படிநிலை 3 - சமூகத் தேவைகள் (சொந்தங்கள், நட்புகள் போன்றவை).
படிநிலை 4 - சுயமரியாதை, சமூக அந்தஸ்துத் தேவைகள் (பதவி, பட்டம் போன்றவை).
படிநிலை 5 - ஆத்ம திருப்தித் தேவைகள் (சமூகத் தொண்டு, தன்னலம் தாண்டிய செயல்கள்).

எகிப்து நாட்டு பிரமிட்டின் படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தனது கொள்கையை ஒரு பிரமிட் படமாக மாஸ்லோ வரைந்தார்.

நாம் எல்லோருமே படிநிலை 1-ல்தான் வாழ்க்கையைத் தொடங்குகிறோம். ஒவ்வொரு நிலைத் தேவைகளிலும் திருப்தி ஏற்படும்போது, மனிதன் அடுத்த படிநிலைக்கு உயர்கிறான்.

படிநிலை 1. சொர்க்கபோகமான சாப்பாடு; வயிறு நிறைந்த திருப்தி; தாகத்தைத் தணிக்க தண்ணீரும் குடித்துவிட்டோம்; துணையும் கிடைத்துவிட்டது. உயிர் வாழ்க்கைக்கான அத்தனை தேவைகளும் நிறைவேறின. மனம் திருப்தி அடைந்துவிட்டதா?

இல்லை. மனம் ஒரு குரங்கல்லவா? அடுத்த படிநிலைக்குத் தாவுகிறது. உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ள ஆடைகள் தேவைப்படுகின்றன, வாங்குகிறான். வெயில், மழை வந்தால் தன்னைப் பாதுகாக்க வீடு வேண்டும் என்று ஏங்குகிறான், ஒரு வீடு கட்டுகிறான். படிநிலை 2-ன் தேவைகளை அவன் திருப்திப் படுத்திவிட்டான்.

ஆனால், என்னிடம் எல்லா வசதிகளும் கொட்டிக்கிடக்கின்றன என்று நாலு பேருக்குத் தெரிய வேண்டாமா? நாமும் சமுதாயத்தால் கவனிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்ற தாகம் அவனுக்குள் ஆரம்பிக்கிறது. உறவுகளோடு பழகுகிறான்; நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். மூன்றாம் படிநிலையின் தேவைகளை அவன் இப்போது திருப்திப்படுத்திக்கொண்டுவிட்டான்.
வாழ்க்கையில் நாம் சாதித்துவிட்டதை உலகம் ஒப்புக் கொண்டுவிட்டது; சந்தோஷத்துக்கு இது போதுமே என நீங்கள் நினைக்கலாம். அந்தக் குரங்கு அப்படி நினைக்கவில்லையே? நான்காம் படிநிலைக்குத் தாவுகிறது.

இப்போது என்ன வேண்டுமாம்? ளோடு, தன்னிடம் வசதி இல்லாவிட்டாலும் கிரெடிட் கார்டை நீட்டி, பெரிய ஃப்ரிட்ஜ், டிவி என ஆடம்பரமாக வாழ்ந்தால் தான் அந்தஸ்து என நினைப்பது.

 அந்தஸ்து கிடைத்துவிட்டது. ஆனால், அதைத் தம்பட்டம் அடிக்கும் அடையாளங்கள் வேண்டாமா? சிறிய கார் வைத்திருப்பவன் தன் குடும்பத் தேவைகளுக்கு மீறிப் பெரிதாக இருக்கும் இன்னோவா கார் வாங்குகிறான். பக்கத்து வீட்டுக்காரனை வாய்பிளக்க வைக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோ.வி., மியூஸிக் சிஸ்டம், ஏ.சி. என வாங்கித் தள்ளுகிறான்.

அந்தஸ்து அடையாளங்கள் இந்த பொருட்கள் மட்டுமல்ல, பதவி பட்டங்களாகவும் இருக்கலாம். தொண்டன் வட்டத் தலைவனாக ஆசைப்படுகிறான். வட்டம் மாவட்டமாக, மாவட்டம் மந்திரியாக நினைக்கிறான். இந்த தாகங்கள் தணிந்தவுடன், அறிவு ஜீவியாகப் பிறர் தன்னை நினைக்கவேண்டும் என்னும் ஆசை முளைக்கிறது. பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணவில்லை என்றாலும், பல்கலைக்கழக டாக்டர் பட்டம் வாங்கத் துடிக்கிறது.

ஆடின ஆட்டமெல்லாம் போதும், ஆறு மனமே ஆறு என இப்போதுதான் மனசாட்சி பேச ஆரம்பிக்கிறது. தன்னைத் தாண்டி, பிறர் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறான். ஐந்தாம் படிநிலைக்கு அவன் வருகிறான். சமூக சேவையில் ஈடுபட ஆரம்பிக்கிறான்.
ஆனால், இப்போதும் அவனுடைய உந்துதல் சக்தி நூறு சதவிகிதப் பொதுநல சேவையல்ல. சுயநலம் கலந்த பொதுநலம். ஆனால், மெல்ல மெல்ல ஆத்ம திருப்திக்காகவே வாழ ஆரம்பிக்கிறான்.


*🌐வரலாற்றில் இன்று:உலக கடல் தினம்.*

ஜூன் 8, வரலாற்றில் இன்று.

 உலக கடல் தினம் இன்று.

ஆண்டு தோறும் ஜூன் 8-ஆம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது

பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது.

கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, ஆக்சிஜன் எனும் உயிர் வாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.

உலகப் பெருங்கடல்கள் நாள் என்பது உலக நாடுகளால் ஆண்டுதோறும் ஜூன் 8 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை செய்வது குறித்து 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், ரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா கோரிக்கையை முன்வைத்தது.

அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.

அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கடல் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.

ஞாயிறு, 7 ஜூன், 2020

சூரிய மண்டலத்திற்குள் நுழையும் 900 அடி பனிப்பாறை...

வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள இருக்கும் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க முடிவு...

*🌐ஜூன் 7, வரலாற்றில் இன்று:1975ஆம் ஆண்டு உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது உலகக் கோப்பை போட்டிகள் லண்டன் ஓவல் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான தினம் இன்று.*

ஜூன் 7, வரலாற்றில் இன்று.

1975ஆம் ஆண்டு உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது உலகக் கோப்பை போட்டிகள் லண்டன் ஓவல் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான தினம் இன்று.

 முதலாவது போட்டியில் இந்திய இங்கிலாந்து அணிகள் மோதின. 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 334 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 60 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 202 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

*🌐ஜூன் 7, வரலாற்றில் இன்று:பிலிப் எட்வர்டு ஆன்டன் வான் லெனார்டு பிறந்த தினம் இன்று.*

ஜூன் 7, வரலாற்றில் இன்று.

பிலிப் எட்வர்டு ஆன்டன் வான் லெனார்டு பிறந்த தினம் இன்று.

ஜெர்மனியைச் சேர்ந்த பிலிப் எட்வர்டு, கேத்தோடு கதிரின் ஒன்றுக்கும் மேற்பட்ட பண்புகளைக் கண்டறிந்து ஆய்வில் ஈடுபட்டார். இக்கதிர்களின் எலக்ட்ரான் ஒளிக்கற்றையைக் கொண்டு திரையில் படங்களை உருவாக்க முடிந்தது. இவரது ஆய்விற்காக 1905ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

*🌐ஜூன் 7,வரலாற்றில் இன்று:தென்னாப்பிரிக்காவில் முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்த மகாத்மா காந்தி நிறவெறி காரணமாக முதல்வகுப்பு பெட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நாள்.அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி உருவாக்க காரணமான தினம் இன்று.*

ஜூன் 7,
வரலாற்றில் இன்று.


ஜூன்  7, 1893  அன்று இருளில் கடகடவென்று அந்த ரயில் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் நன்கு சட்டம் படித்த  மாநிறமான ஒருவர் பயனித்து வந்தார். அங்கு வந்த வெள்ளையன் ஒருவன் முதல் வகுப்பில் வெள்ளையர் மட்டுமே பயணிக்க வேண்டும் ஆதலால் முன்றாம் வகுப்பு பெட்டிக்கு செல்லுமாறு அந்த மாநிறத்தவரை கேட்டுக்கொண்டார். உரிய பயணச்சீட்டைப் பெற்றுள்ளதால் தனக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யும் உரிமை தனக்கு உண்டு என்று கூறி வெளியேற மறுத்த அவரை, அடுத்த நிறுத்தத்தில்  அவரது பெட்டிகளைத் தூக்கி எறிந்து வெளியே தள்ளினான் அந்த வெள்ளையன்.

அவமானப் படுத்தப்பட்ட அந்த மனிதர் சோகமாக ஆற்றாமை கலந்த ஒரு வித வெறுப்புடன் அந்த நள்ளிரவுக் குளிரில் யோசித்து கொண்டு இருந்தார். அவருக்கு இரு வழிகள் இருந்திருக்கும். ஒன்று இனி அந்த ஊர்ச் சட்டத்திற்கு (ஒடுக்குமுறைக்கு) ஏற்ப மூன்றாம் வகுப்பில் பயணிப்பது, மற்றொன்று வசதியான படித்த தன்னை அதில் இருந்து விடுத்து கொள்ள முயற்சிப்பது. ஆனால் அந்த மனிதரோ தன்னைப் போன்றும் அதற்கும் கீழ் இருக்கும் ஒட்டுமொத்த சமூகத்தையும்  இந்த மனித நேயமற்ற நிறவாதத்தில்  இருந்து மீட்க போராடினார். இது நடந்தது நிறவெறிக்கு பேர் போன தென் ஆப்ரிக்காவில். அந்த மனிதரின் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

ஆம். அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை  காந்தி உருவாக்க காரணமான தினம் இன்று.

*🌐ஜூன் 7,வரலாற்றில் இன்று:ஜேம்ஸ் யங் சிம்சன் பிறந்த தினம்.*

ஜூன் 7, வரலாற்றில் இன்று.

ஜேம்ஸ் யங் சிம்சன் பிறந்த தினம் இன்று.

ஸ்காட்லாந்து நாட்டு  மகப்பேறு மருத்துவரான ஸேர் ஜேம்ஸ் யங் சிம்சன்
( Sir James Young Simpson) 1847ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 04ஆம் திகதி  Chloroformஐ
அறுவைச் சிகிச்சைகளின் போது வலி உணரா நிலையை ஏற்படுத்தத் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தார்.

1811ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07ஆம் நாள்
Edinburghல் பிறந்த அவர் எடின்பரோ பல்கலைக் கழகத்தில்  M.D.பட்டம் பெற்று அங்கு மகப்பேறு மருத்துவப் பேராசிரியர் ஆனார்! பாஸ்டனில் அறுவை மருத்துவத்துக்கு ஈத்தரைப் பயன்படுத்தும்
செய்தி ஸ்காட்லாந்துக்கு எட்டியவுடன்,
சிம்சன் முதன்முதலில் ஈத்தரைப் பயன்படுத்திப் பிரசவ வலியைக் குறைத்தார்! பிறகு குளோரோஃபார்மை,
மகப்பேறு மருத்துவர்களும், மதகுருமார்களும் எதிர்த்த போதிலும், பயன்படுத்தினார்!

Chloroform தெளிந்த, நிறமற்ற,கனமான,
தீப்பற்றாத, நீர்ம நிலையில் உள்ள ஈத்தர் போன்று மணமுடைய கரிம ரசாயனச் சேர்மம்! இது அறுவைச் சிகிச்சையின் போது,
வலி உணரா நிலையை ஏற்படுத்த வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்ட முதல் பொருளாகும்! இதில் ஓரளவு நச்சுத்தன்மை
இருப்பதால், வலியை உணரா நிலையை ஏற்படுத்தும் பிற பொருள்கள் நடைமுறைக்கு
வந்தபின் இதன் பயன்பாடு பெருமளவு குறைந்தது!

ஸேர் ஜேம்ஸ் யங் சிம்சன் குளோரோஃபார்மை பயன்படுத்துவது பற்றிக் கண்டறிந்ததோடு, இரும்புக் கம்பித் தையல்கள், ரத்த ஒழுக்கைத் தடுக்க அழுத்தத்தைப் பயன்படுத்தும் முறை, சிம்சன்
இடுக்கி (நீண்ட மகப்பேற்று இடுக்கி) ஆகியவற்றையும் அறிமுகம் செய்திருக்கிறார்!

1870ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் நாள் சிம்சன் காலமானார்!

G.O (Ms).No: 62 Date: 1.6.2020 Fundamental Rules- Rule 56 - Enhancement of the age of retirement on Superannuation Period from 58years to 59 years_ amendment- issued