பேச்சுரிமை,
எழுத்துரிமை,
கருத்துரிமையை மறுக்கலாமா?
நடத்தை விதி என்ற பெயரில் தடுக்கலாமா?
உள்நோக்கம் உடைய செயல்முறை பிறப்பிக்கலாமா?
--------------------------------
வாய்ப்பூட்டு சிறந்த செயலாகாது !
--------------------------------
ஆங்கிலேயே அரசாங்கம் இந்தியாவை ஆண்ட பொழுது இந்தியமக்கள் ஆங்கிலேய அரசின் முறையற்ற சட்டங்களால் ,
நடவடிக்கைகளால்,
செயல்பாடுகளால்
வரி-வசூல்களால், பல்வேறு வகை சுரண்டல்களால் சொல்லொண்ணாத் துன்ப-துயரங்களை அன்றாடம் அனுபவித்தனர்.
ஆங்கிலேய அரசால் அடைந்த இன்னல்களை கண்டித்தும்,
ஆட்சேபித்தும்,
எதிர்த்தும்,
முறையற்றச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்
இந்திய விடுதலைப்்போராட்ட வீரர்களும் -
தீரர்களும் கூடியும்,பேசியும், எழுதியும்
,கூத்து நடத்தியும்
,நாடகம் போட்டும்,
பாடல்கள் பாடியும்,
வீரமிகு கதைகள் சொல்லியும்
இந்திய மக்களை
அணி திரட்டி அறவழியிலும் ,
ஆயுதம் ஏந்தியும் தொடர்ந்து போராடினர்.
ஆங்கிலேய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து கடுமையாக விமர்ச்சித்து வந்தனர்.
மக்களை விழிப்படையச் செய்தனர்.
அத்தகைய காலக்கட்டத்தில் ஆங்கிலேய அரசு போராட்டங்களை நசுக்குவதற்காகவும்,
பொதுமக்களை அச்சுறுத்துவதற்காகவும்,
அரசுக்கு எதிரான கருத்துகள் பரவலை தடுப்பதற்காகவும் பல்வேறு கடுமையான சட்டங்களை பிறப்பித்தது;
கொடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
" இம் "என்றால் சிறைவாசம்,
" ஏன் "என்றால் வனவாசம் என்று காட்டாட்சி நடத்திய ஆங்கிலேயர் அரசு ,
தனது அரசின் கொள்கைகளை எவரும் எதிர்த்து பேசக்கூடாது,
எழுதக்கூடாது என்பதற்காக பல்வேறு கொடுஞ்சட்டங்களை கொண்டு வந்து மக்களை வாட்டி வதைத்தது.
அத்தகு கொடும் நடவடிக்கைகளின் நீட்சி - தொடர்ச்சி இன்றளவும் காணப்படுகிறது என்று சொல்லப்படுகின்றது.
இப்பணியாளர் நடத்தை விதிகளின் ஒருசில பிரிவுகள் அத்தகு கறுப்புச்சட்டங்களுக்கு
ஒத்ததாகும் - இணையானதாகும் என்று சொன்னால் அதொன்றும் மிகையாகாது;
தவறாகாது.
இத்தகு பணியாளர் நடத்தை விதிகள் காலத்தின் தேவைக்கேற்ப
திருத்தம் செய்யப்பட
வேண்டும்!
ஆசிரியர்-அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப் படுவது கைவிடப்பட வேண்டும்!
தந்தைபெரியார் பூமியில் இருந்து இச்செயல்முறை வெளியாவது வேதனையளிக்கிறது!இச்செயல்முறை கவலைத்தருகிறது!
இச்செயல்முறை உள்நோக்கம் உடையதாகும்!