வெள்ளி, 26 ஜூன், 2020

*🌐ஜூன் 26, வரலாற்றில் இன்று:சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பிறந்த தினம் இன்று.*

ஜூன் 26, வரலாற்றில் இன்று.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பிறந்த தினம் இன்று.

 கப்பலோட்டிய தமிழனைப் பற்றி முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவா் ம.பொ.சிவஞானம்.

 1927இல் 'தமிழ்நாடு ' நாளிதழில் அச்சு கோப்பாளராக பணியாற்றிய ம.பொ.சி அங்கே அவா் அறிய நோ்ந்த விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள் அவருக்குள் சுதந்திர வேள்வியை எழுப்பின. பலமுறை சிறை சென்றாா்.

சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிாித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திர மக்கள் கோாினாா்கள். 'மதராஸ் மனதே' என்று ஆந்திரா்கள் எழுப்பிய இந்தக் குரலுக்கு, 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று வீர முழக்கம் எழுப்பியவா் ம.பொ.சி. ஒரு கட்டத்தில் சென்னையை பொது தலைநகரமாக ஆக்கலாம், அல்லது இரண்டாகப் பிாிக்கலாம் என்று கூட மத்திய அரசு நினைத்தது. சென்னை நகாின் மீது தமிழா்களுக்கு உள்ள உாிமையை வலியுறுத்தி, அன்றைய மத்திய உள்துறை அமைச்சா் லால்பகதூா் சாஸ்திாிக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கத்தை ம.பொ.சி நடத்தினாா். இதன் தாக்கத்தால் மத்திய அரசின் முடிவினை மறுபாிசீலனை செய்வதாகவும் சாஸ்திாி உறுதி கூறினாா்

ம.பொ.சியின் கடும் போராட்டத்திற்கு பின் ம.பொ.சியின் எண்ணம் போல் சென்னை தமிழ்நாட்டின் தலைநகரானது.

 நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச்சின்னம் மாற்றப்பட வேண்டிய அவசியம் வந்தது. இதற்கான குழுவில் இருந்த ம.பொ.சி அவா்கள்  சேர, சோழ, பாண்டியாின் சின்னமான 'வில், புலி, மீன்' சின்னங்களை சென்னை மாநகராட்சி கொடியிலும் பொறிக்க பாிந்துரைத்தாா். இன்று வரை ம.பொ.சி பாிந்துரைத்த கொடியே சென்னை மாநகராட்சியின் கொடியாக திகழ்கிறது.

ம.பொ.சியின் தீவிரமான திருத்தணி எல்லைப் போராட்டத்தின் விளைவாகத்தான், திருப்பதி போன்று திருத்தணியும் ஆந்திரா்களின் ஆளுமைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

*🌐ஜூன் 26, வரலாற்றில் இன்று:சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் இன்று.*

ஜூன் 26, வரலாற்றில் இன்று.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் இன்று.

ஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 கோடி பேர் போதை பொருள்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.
போதை என்றால் மது மற்றும் புகையிலைத் தொடர்பானவை என பலரும் நினைக்கின்றனர்.

 ஆனால் உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருட்களான கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் மற்றும் ஒயிட்னர், சில பெயின்ட் வகைகள் என பலவகை பொருட்கள் போதையூட்ட பயன்படுத்தப் படுகின்றன.
இவை மனிதரின் உடல், மனம் இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
ஆனால் போதை பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.
போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போதை பழக்கத்தின் தீமையை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களுக்கு அழைத்து சென்று சிசிச்சை அளித்து அவர்களின் மறுவாழ்வுக்கு உதவ வேண்டும்.

*🌐ஜூன் 26, வரலாற்றில் இன்று:வந்தேமாதரம்' பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று.*

ஜூன் 26, வரலாற்றில் இன்று.

'வந்தேமாதரம்' பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று.

வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் காண்டல்படா கிராமத்தில் (1838) வசதியான குடும்பத்தில் பிறந்தார்.

 தந்தை துணை ஆட்சியர். இவரை செல்லமாக வளர்த்த பெற்றோர், வீட்டிலேயே ஆசிரியர்களை வைத்துப் பாடம் கற்பித்தனர்.

மிட்னாப்பூர் கான்வென்ட் பள்ளியில் சேர்ந்தார். இளம் வயதிலேயே இயற்கைக் காட்சிகளில் மனதைப் பறிகொடுத்தார்.

 வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். பள்ளியில் படிக்கும்போதே வங்கமொழியில் கவிதைகள் எழுதினார்.

இவரது கவிதைத் தொகுப்பு 'லலிதா ஓ மானஸ்' என்ற தலைப்பில் வெளிவந்தது.

ஆங்கிலத்தில் 'ராஜ்மோகன்ஸ் ஒய்ஃப்' என்ற கதையை எழுதினார்.

கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். துணை மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினார். சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.

இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை மக்கள் மதிக்காததால்தான் அந்நியர்கள் மனம்போனபடி நடக்கின்றனர் என கருதினார்.

இலக்கியத்தின் வாயிலாக, இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்தும் முனைப்புகளை மேற்கொண்டார்.

அதுவரை ஷேக்ஸ்பியர், மில்டர், ஷெல்லியைப் படித்துவந்த படித்த இளைஞர்கள், புராணம், உபநிஷதங்கள், பகவத்கீதை படிக்கத் தொடங்கினர். நமது இலக்கியம், மொழி, வரலாறு குறித்து விழிப்புணர்வும், பெருமிதமும் மக்கள் மத்தியில் பரவியது.

முதல் நாவலான 'துர்கேஷ் நந்தினி' 1865-ல் வெளிவந்தது. அடுத்தடுத்து, பல நாவல்கள் வெளிவந்து வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. '

வங்க தர்ஷன்' என்ற இலக்கிய இதழை 1872-ல் தொடங்கினார்.

இவர் உட்பட பல படைப்பாளிகளின் நாவல்கள், கதைகள், நகைச்சுவை சித்திரங்கள், வரலாற்றுக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் அதில் வெளியாயின.

எளிய, சரளமான நடையால் அனைவரையும் ஈர்த்தார்.

 இவரது கதைசொல்லும் பாணி தனித்துவமானது. இவரது அனைத்து படைப்புகளும் ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 'வங்காள எழுத்தாளர்களின் குரு, வங்க வாசகர்களின் நண்பர் பங்கிம்' என்பார் தாகூர்.

தாய்மொழி மீது மிகுந்த பற்று, பக்தி கொண்டவர். மதம், சமூகம், நடப்பு நிகழ்வுகள் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

தனது படைப்புகள் வாயிலாக தேசிய உணர்வை மக்களிடம் எழுப்பினார்.

 1882-ல் வெளிவந்த 'வந்தேமாதரம்' பாடல் இடம்பெற்ற இவரது 'ஆனந்தமட்' நாவல் நாடு முழுவதும் புகழ்பெற்றது.

கல்கத்தாவில் 1896-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் பாடப்பட்டது. 'தாயை வணங்குவோம்' என்று பொருள்படும் 'வந்தேமாதரம்' கோஷம் இந்திர சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக மாறி, நாடு முழுவதும் ஒலித்தது.

இது ஆங்கில அரசை நடுநடுங்க வைத்தது.

வன்முறையைத் தூண்டுவதாக கூறி இந்த கோஷத்தை அரசு தடை செய்தது. பின்னர் இப்பாடல் இந்திய தேசத்தின் கீதமாகப் புகழ்பெற்றது.

 இறுதி நாட்களில் ஆன்மிகம் குறித்து எழுதினார். நவீன வங்க இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகப் போற்றப்படும் பங்கிம் சந்திர சட்டர்ஜி 56ஆவது வயதில் (1894) நோய்வாய்ப்பட்டு காலமானார்.

வியாழன், 25 ஜூன், 2020

*☀வருமானவரி தாக்கல் செய்ய மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு:*

*☀வருமானவரி தாக்கல் செய்ய மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு:*

*2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்ய வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து நேரடி வரிவிதிப்பு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்க 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.*


 *உலக நாடுகளே கொரோனாவிற்க்கான தடுப்பூசி கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது. தினமும் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில், சமுக இடைவெளி மற்றும் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை முக்கியமானதாக அறிவித்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கமானது நாடுளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.*

*இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:2018-19 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகசாம் வரும் ஜூலை 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 2019-20 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கா கால அவகாசம் நவ.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.*

*☀கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு ஊதிய தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!!!*_ 👆👆👆👆👆

*☀கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு ஊதிய தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!!!*_
👆👆👆👆👆


*💪பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 7 கட்ட தொடர் நடவடிக்கைகள் ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளுகிறது.*

*💪பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 7 கட்ட தொடர் நடவடிக்கைகள் ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளுகிறது. கோரிக்கைகள் வெல்ல ஒன்று கூடுவோம்..வென்று காட்டுவோம்...*

Central Teachers Eligibility Test postponed

Central Teachers Eligibility Test postponed

G.O'No:280 date: 24.6.2020 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் NHIS மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் கொரானா Covid_19 சிகிக்சை சேர்ப்பு





மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடம் கற்றுக்கொள்ள தமிழக அரசு இணையத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது


அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலர்களுக்கும் கடிதம்.

*அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020  ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் திருவண்ணாமலை* *மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலர்களுக்கும் கடிதம்*