சனி, 27 ஜூன், 2020

*🌐ஜூன் 27,வரலாற்றில் இன்று:தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த பெண் போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மா அவர்களின் நினைவு தினம் இன்று.*

 ஜூன் 27,
வரலாற்றில் இன்று.

தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த பெண்  போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மா அவர்களின்  நினைவு தினம் இன்று.

பெண்களுக்கெதிரான சமயச் சடங்குகளில் மிகக் கொடூரமானது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை பொட்டுக்கட்டி தேவதாசியாக்கும் கருவியாக்கியதுதான்.

குறிப்பிட்ட சமூகப் பெண்களை கோவிலில் நடனமாடவும், அவர்களை திருமணம் செய்து கொள்ளவிடாமல் பொட்டுக் கட்டும் வழக்கம் கடந்த நூற்றாண்டின் முதல் பகுதி வரை நீடித்தது. இந்த சமூகத்தில் பிறந்த ஆண்கள் நாயனம், மேளம் வாசிப்பதிலும், நட்டுவனார்களாகவும் வாழ்க்கையை நடத்தினர்.

இக்கொடுமையைக் கண்ட மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் கிருஷ்ணசாமி என்பவர் எதிர்த்தார். இதனால் கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்றவற்றால் ஊரைவிட்டே சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். அவருக்கும் சின்னம்மாள் என்பவருக்கும் 1883ஆம் ஆண்டு இராமாமிர்தம் பிறந்தார்.

தன் குழந்தையை ஆச்சிக் கண்ணு என்ற தேவதாசியிடம் 10 ரூபாய்க்கும், ஒரு பழைய புடவைக்கும் விற்றுவிட்டார் சின்னம்மாள். காரணம். குடும்பத்தின் வறுமை. ஆச்சிக் கண்ணுவிடம் 7 வயது முதல் வளர்ந்தார் இராமாமிர்தம். பின்னாளில் தன் இனிஷியலாக ஆ என்று இவர் போட்டுக் கொண்டது இந்த ஆச்சிக் கண்ணுவின் பெயரைத்தான்.

தன் 17 வயதில் பொட்டுக்கட்டும் சடங்கை வெறுத்துக் கடும் எதிர்ப்பு தெரிவித்த இராமாமிர்தம், பின் உள்ளூர் தேவதாசிகள் எதிர்ப்பால் அது நடைபெறவில்லை.

65 வயது பணக்கார மிராசுதாரைத் திருமணம் செய்ய வற்புறுத்தி மீண்டும் தனக்கு வந்த சோதனையை எதிர்த்து, நடனம் சொல்லித் தந்த காங்கிரஸ் பற்றாளர் சுயம்புப் பிள்ளையை ஒரு கோவிலில் நெய் விளக்கின் முன் சத்தியம் பெற்றுத் திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் தேவதாசி முறை ஒழிய காங்கிரசில் ஈடுபட்டு தீவிரப் பிரசாரம் செய்தனர்.

இராஜாஜியின் கடும் எதிர்ப்பையும் மீறி இராமாமிர்தம் நடத்திய மாநாட்டில் காந்தியார் கலந்து கொண்டார்.

1925ஆம் ஆண்டு நடத்திய மயிலாடுதுறை மாநாட்டில் திரு.வி.க., பெரியார் போன்றோர் கலந்து கொண்டனர்.

பெண்ணுலகு போற்ற வந்த கற்பகம் என்று இராமாமிர்தத்தை திரு.வி.க. பாராட்டினார்.

ராமாமிர்தம், தேவதாசி முறை ஒழிக்கப்பட திட்டம் வகுக்க வேண்டும் என்று காந்தியாருக்கு பல நீண்ட கடிதங்கள் எழுதினார். எதற்கும் காந்தியிடம் இருந்து பதில் வரவில்லை.

1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கிய போது, அவருடன் சுயமரியாதை இயக்கத்தில் பங்கு பெற்ற முதல் பெண்மணி இராமாமிர்தம் அம்மையார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்பட பல போராட்டங்கள் என அனைத்துமே அம்மையார் இல்லாமல் நடந்ததில்லை.

சுயசரிதை போன்று இவர் 1936இல் எழுதிய நாவல்தான் தாசிகளின் மோசவலை (அ) மதி பெற்ற மைனர் . இதில் தேவதாசி முறைக் கொடுமை பற்றியும், அது ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கப்பட்டிருந்தது. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். பல கட்டுரைகள், கதைகளை எழுதி திராவிடர் இயக்கப் பிரச்சாரத்தை யாருக்கும் பயப்படாமல் செய்தார்.

1932ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த பிரசார நாடகத்தில் சிலர் புகுந்து கலவரம் செய்ததுடன் அவரின் நீண்ட தலைமுடியை அறுத்து எறிந்தனர். அதன் பின் கிராப்புத் தலையுடனே இறுதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு மசோதாவை அறிமுகம் செய்த போது, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி  கடும் எதிர்ப்புத் தெரிவிக்க முத்துலெட்சுமி ரெட்டி தேவையென்றால் அவரினத்துப் பெண்கள் ஆடட்டும். எங்கள் இனப் பெண்கள் இனி ஆடமாட்டார்கள் என்றபோது, சட்டசபையே அதிர்ந்தது. முத்துலட்சுமி ரெட்டியின் இந்த அறைகூவலுக்குப் பின்னால் இருந்தவர்கள் தந்தை பெரியாரும், இராமாமிர்தம் அம்மையாரும்தான்.

மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947ஆம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமிரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை முற்றாய் ஒழிக்கப்பட்டது.

மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் ஜூன் 27, 1962ஆம் ஆண்டு காலமானார். அம்மையாரைச் சிறப்புச் செய்யும் விதமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் ஒன்றை 1989ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

வெள்ளி, 26 ஜூன், 2020

*🌐ஜூன் 26,வரலாற்றில் இன்று:சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினம் இன்று.*

ஜூன் 26,
வரலாற்றில் இன்று.

சித்திரவதையால் பாதிக்கப்
பட்டோருக்கான ஆதரவு தினம் இன்று.

சர்வதேச சட்டத்தின்படி சித்திரவதை என்பது ஒரு சமூகக்குற்றம் என ஐ.நா. சபை கூறுகிறது.

சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான சட்டமும் உள்ளது. சித்திரவதை என்பது வீடுகளில் தொடங்கி, சிறைச்சாலை மற்றும் போர்க் கைதிகள்வரை தொடர்கிறது.

1997ஆம் ஆண்டில் ஐ.நா. சபை இத்தினத்தை அறிவித்தது.

*🌐ஜூன் 26, வரலாற்றில் இன்று:வில்லியம் தாம்சன் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 26, வரலாற்றில் இன்று.

வில்லியம் தாம்சன் பிறந்த தினம் இன்று.

தாம்சன் (சூன் 26 1824 - திசம்பர் 17, 1907 )அயர்லாந்தைச் சேர்ந்த இவர்  இயற்பியல் அறிஞர்  ஆவார். இவரே இலார்டு கெல்வின் என்றழைக்கப்பட்டார். இவர் 19-ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

 மின்காந்தவியல், வெப்பவியல் என பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையான தனிமுழு வெப்ப அளவீட்டு முறையை நிறுவப் பரிந்துரைத்து அது குறித்த ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய ஸ்காட்லாந்தில் உள்ள கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் கெல்வின் என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு இலார்டு கெல்வின் எனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையை, இவர் நினைவாக கெல்வின் என்பது வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.

வில்லியம் தாம்சன் 1824 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாசுட்டு நகரில் பிறந்தார். இவர் தந்தையார் சேம்சு தாம்சன் ஒரு பயிர்த்தொழிலாளரின் மகன், இவரின் தாயார் மார்கரெட்டுத் கார்டனர். இப்பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்களுள் சேம்பசு தாம்சனும் அவருடைய அண்ணன் சேம்சும் முதலில் வீட்டிலேயே அவர்களின் அக்காவால் பயிற்றுவிக்கப்பெற்றனர். பின்னர் வில்லியம் தாம்சன் இலண்டன் நகரிலும், பாரிசிலும், இடாய்ச்சுலாந்திலும், நெதர்லாந்திலும் பன்மொழிகள் கற்றனர். மொழிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வில்லியம் தாம்சன் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுப் பிற்காலத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பெல்ஃபாசுட்டு வேதியியல் கல்விக்கழகத்தில் பணிபுரிந்தார். கேம்பிரிட்சில் சேர வில்லியம் தாம்சனின் தந்தை நிறைய பணவுதவி முதல் நல்ல பரிந்துரை மடல்கள் பெறுவது வரை பல உதவிகள் செய்தார். வில்லியம் தாம்சன் 1845 இல் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது 'இராங்கலர்' (Second Wrangler)ஆகத் தேர்ச்சி பெற்றார். புதிய ஆய்வுக்கான சுமித் பரிசை (Smith Prize) வென்றார். அதன் பின் 1846 -இல் கிளாசுக்கோ(Glasgow) நகரில் இயல் தத்துவப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார்.

ஆரம்பத்தில் மின்காந்தவியலில் ஆய்வுகள் செய்து இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தந்திக் கம்பிகள் (Telegraphic wires)அமைத்து வெற்றியடையச் செய்ய இவர் முயன்று தோல்விகண்டார். எனினும் இவரது விடா முயற்சியைப் பாராட்டி இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது.

வெப்பவியலிலும் தொடந்து ஆய்வுகள் செய்து 1849-ல் அடிப்படையான வெப்ப அளவினை முன்மொழிந்தார். இதன் படி செல்சியசு(Celsius) அளவினை ஒத்த கெல்வின் வெப்ப அளவு உருவாக்கப்பட்டது. இங்கு அடிப்படை வெப்பமான சுழியப்புள்ளி(Zero point) (O K)-273 °C ஆக அமைக்கப்பட்டது. வெப்பவியலிலும், வானவியலிலும் இது அருஞ்சாதனையாகும்.

வில்லியம் தாம்சன் ஆரம்பக்கட்ட உருகிய கோள வடிவ பாறைக் குழம்பிலிருந்து புவி தற்போதுள்ளது போல திட வடிவம் பெற எத்தனை காலம் பிடித்திருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறினார். வெப்பவியலில் இவருக்கு இருந்த திறமை காரணமாகவே இக்கணிப்பினை இவர் நிகழ்த்தினார். சூரியனின் அதிக எல்லை வாழ்நாளையும் இவர் கணக்கிட்டார். சுருங்குதல் மூலம் ஏற்படும் வெப்ப ஆற்றலின் தொடர்ந்த வெளிப்பாடு காரணமாகச் சூரியனில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை கணிதக் கோட்பாடுகள்மூலம் இவர் கணித்தார். இதனைக் கெல்வின் எலம்ஃகோல்ட்சு கால அளவு (Kelvin Helmholtz) என அழைக்கப்படுகிறது. இது பிற்காலத்தில் ஏற்புடையதல்ல என அறியப்பட்டது என்றாலும், தகுந்த கருவிகள் இல்லாத அக்காலத்தில் இவர் நிகழ்த்திய இக்கண்டுபிடிப்பு போற்றப்பட்டது.

அரிய சாதனைகள் புரிந்த கெல்வின் 1907 டிசம்பர் மாதம்  17-ஆம் நாள் மறைந்தார். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக இவருடைய உடல் சர் ஐசக் நியூட்டனின் சமாதி அருகே புதைக்கப்பட்டது.

*🌐ஜூன் 26, வரலாற்றில் இன்று:சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பிறந்த தினம் இன்று.*

ஜூன் 26, வரலாற்றில் இன்று.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பிறந்த தினம் இன்று.

 கப்பலோட்டிய தமிழனைப் பற்றி முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவா் ம.பொ.சிவஞானம்.

 1927இல் 'தமிழ்நாடு ' நாளிதழில் அச்சு கோப்பாளராக பணியாற்றிய ம.பொ.சி அங்கே அவா் அறிய நோ்ந்த விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள் அவருக்குள் சுதந்திர வேள்வியை எழுப்பின. பலமுறை சிறை சென்றாா்.

சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிாித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திர மக்கள் கோாினாா்கள். 'மதராஸ் மனதே' என்று ஆந்திரா்கள் எழுப்பிய இந்தக் குரலுக்கு, 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று வீர முழக்கம் எழுப்பியவா் ம.பொ.சி. ஒரு கட்டத்தில் சென்னையை பொது தலைநகரமாக ஆக்கலாம், அல்லது இரண்டாகப் பிாிக்கலாம் என்று கூட மத்திய அரசு நினைத்தது. சென்னை நகாின் மீது தமிழா்களுக்கு உள்ள உாிமையை வலியுறுத்தி, அன்றைய மத்திய உள்துறை அமைச்சா் லால்பகதூா் சாஸ்திாிக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கத்தை ம.பொ.சி நடத்தினாா். இதன் தாக்கத்தால் மத்திய அரசின் முடிவினை மறுபாிசீலனை செய்வதாகவும் சாஸ்திாி உறுதி கூறினாா்

ம.பொ.சியின் கடும் போராட்டத்திற்கு பின் ம.பொ.சியின் எண்ணம் போல் சென்னை தமிழ்நாட்டின் தலைநகரானது.

 நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச்சின்னம் மாற்றப்பட வேண்டிய அவசியம் வந்தது. இதற்கான குழுவில் இருந்த ம.பொ.சி அவா்கள்  சேர, சோழ, பாண்டியாின் சின்னமான 'வில், புலி, மீன்' சின்னங்களை சென்னை மாநகராட்சி கொடியிலும் பொறிக்க பாிந்துரைத்தாா். இன்று வரை ம.பொ.சி பாிந்துரைத்த கொடியே சென்னை மாநகராட்சியின் கொடியாக திகழ்கிறது.

ம.பொ.சியின் தீவிரமான திருத்தணி எல்லைப் போராட்டத்தின் விளைவாகத்தான், திருப்பதி போன்று திருத்தணியும் ஆந்திரா்களின் ஆளுமைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

*🌐ஜூன் 26, வரலாற்றில் இன்று:சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் இன்று.*

ஜூன் 26, வரலாற்றில் இன்று.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் இன்று.

ஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 கோடி பேர் போதை பொருள்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.
போதை என்றால் மது மற்றும் புகையிலைத் தொடர்பானவை என பலரும் நினைக்கின்றனர்.

 ஆனால் உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருட்களான கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் மற்றும் ஒயிட்னர், சில பெயின்ட் வகைகள் என பலவகை பொருட்கள் போதையூட்ட பயன்படுத்தப் படுகின்றன.
இவை மனிதரின் உடல், மனம் இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
ஆனால் போதை பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.
போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போதை பழக்கத்தின் தீமையை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களுக்கு அழைத்து சென்று சிசிச்சை அளித்து அவர்களின் மறுவாழ்வுக்கு உதவ வேண்டும்.

*🌐ஜூன் 26, வரலாற்றில் இன்று:வந்தேமாதரம்' பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று.*

ஜூன் 26, வரலாற்றில் இன்று.

'வந்தேமாதரம்' பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று.

வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் காண்டல்படா கிராமத்தில் (1838) வசதியான குடும்பத்தில் பிறந்தார்.

 தந்தை துணை ஆட்சியர். இவரை செல்லமாக வளர்த்த பெற்றோர், வீட்டிலேயே ஆசிரியர்களை வைத்துப் பாடம் கற்பித்தனர்.

மிட்னாப்பூர் கான்வென்ட் பள்ளியில் சேர்ந்தார். இளம் வயதிலேயே இயற்கைக் காட்சிகளில் மனதைப் பறிகொடுத்தார்.

 வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். பள்ளியில் படிக்கும்போதே வங்கமொழியில் கவிதைகள் எழுதினார்.

இவரது கவிதைத் தொகுப்பு 'லலிதா ஓ மானஸ்' என்ற தலைப்பில் வெளிவந்தது.

ஆங்கிலத்தில் 'ராஜ்மோகன்ஸ் ஒய்ஃப்' என்ற கதையை எழுதினார்.

கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். துணை மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினார். சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.

இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை மக்கள் மதிக்காததால்தான் அந்நியர்கள் மனம்போனபடி நடக்கின்றனர் என கருதினார்.

இலக்கியத்தின் வாயிலாக, இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்தும் முனைப்புகளை மேற்கொண்டார்.

அதுவரை ஷேக்ஸ்பியர், மில்டர், ஷெல்லியைப் படித்துவந்த படித்த இளைஞர்கள், புராணம், உபநிஷதங்கள், பகவத்கீதை படிக்கத் தொடங்கினர். நமது இலக்கியம், மொழி, வரலாறு குறித்து விழிப்புணர்வும், பெருமிதமும் மக்கள் மத்தியில் பரவியது.

முதல் நாவலான 'துர்கேஷ் நந்தினி' 1865-ல் வெளிவந்தது. அடுத்தடுத்து, பல நாவல்கள் வெளிவந்து வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. '

வங்க தர்ஷன்' என்ற இலக்கிய இதழை 1872-ல் தொடங்கினார்.

இவர் உட்பட பல படைப்பாளிகளின் நாவல்கள், கதைகள், நகைச்சுவை சித்திரங்கள், வரலாற்றுக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் அதில் வெளியாயின.

எளிய, சரளமான நடையால் அனைவரையும் ஈர்த்தார்.

 இவரது கதைசொல்லும் பாணி தனித்துவமானது. இவரது அனைத்து படைப்புகளும் ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 'வங்காள எழுத்தாளர்களின் குரு, வங்க வாசகர்களின் நண்பர் பங்கிம்' என்பார் தாகூர்.

தாய்மொழி மீது மிகுந்த பற்று, பக்தி கொண்டவர். மதம், சமூகம், நடப்பு நிகழ்வுகள் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

தனது படைப்புகள் வாயிலாக தேசிய உணர்வை மக்களிடம் எழுப்பினார்.

 1882-ல் வெளிவந்த 'வந்தேமாதரம்' பாடல் இடம்பெற்ற இவரது 'ஆனந்தமட்' நாவல் நாடு முழுவதும் புகழ்பெற்றது.

கல்கத்தாவில் 1896-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் பாடப்பட்டது. 'தாயை வணங்குவோம்' என்று பொருள்படும் 'வந்தேமாதரம்' கோஷம் இந்திர சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக மாறி, நாடு முழுவதும் ஒலித்தது.

இது ஆங்கில அரசை நடுநடுங்க வைத்தது.

வன்முறையைத் தூண்டுவதாக கூறி இந்த கோஷத்தை அரசு தடை செய்தது. பின்னர் இப்பாடல் இந்திய தேசத்தின் கீதமாகப் புகழ்பெற்றது.

 இறுதி நாட்களில் ஆன்மிகம் குறித்து எழுதினார். நவீன வங்க இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகப் போற்றப்படும் பங்கிம் சந்திர சட்டர்ஜி 56ஆவது வயதில் (1894) நோய்வாய்ப்பட்டு காலமானார்.

வியாழன், 25 ஜூன், 2020

*☀வருமானவரி தாக்கல் செய்ய மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு:*

*☀வருமானவரி தாக்கல் செய்ய மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு:*

*2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்ய வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து நேரடி வரிவிதிப்பு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்க 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.*


 *உலக நாடுகளே கொரோனாவிற்க்கான தடுப்பூசி கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது. தினமும் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில், சமுக இடைவெளி மற்றும் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை முக்கியமானதாக அறிவித்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கமானது நாடுளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.*

*இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:2018-19 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகசாம் வரும் ஜூலை 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 2019-20 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கா கால அவகாசம் நவ.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.*

*☀கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு ஊதிய தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!!!*_ 👆👆👆👆👆

*☀கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு ஊதிய தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!!!*_
👆👆👆👆👆


*💪பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 7 கட்ட தொடர் நடவடிக்கைகள் ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளுகிறது.*

*💪பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 7 கட்ட தொடர் நடவடிக்கைகள் ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளுகிறது. கோரிக்கைகள் வெல்ல ஒன்று கூடுவோம்..வென்று காட்டுவோம்...*

Central Teachers Eligibility Test postponed

Central Teachers Eligibility Test postponed