திங்கள், 6 ஜூலை, 2020

*☀ஜூலை 6, வரலாற்றில் இன்று:தமிழுக்கு தொண்டாற்றியவரும், தமிழ் அறிஞருமான பரிதிமாற் கலைஞர் (Parithimar Kalaignar) பிறந்த தினம் இன்று.*

ஜூலை 6, வரலாற்றில் இன்று.

 தமிழுக்கு தொண்டாற்றியவரும், தமிழ் அறிஞருமான பரிதிமாற் கலைஞர் (Parithimar Kalaignar) பிறந்த தினம் இன்று

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் (ஜூலை 6, 1870) பிறந்தார். இயற்பெயர் சூரியநாராயணன். தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றார். மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவித் தொகையைப் பெற்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார். தமிழ் மொழி, தத்துவத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். தான் பயின்ற கல்லூரியில் தத்துவத் துறை ஆசிரியர் பணியை ஏற்காமல், குறைந்த சம்பளமாக இருந்தாலும் தமிழ்த் துறைப் பணியை விரும்பி ஏற்றார்.

செந்தமிழ் நடையில் இவர் சுவைபட விவரிக்கும் ஆற்றலில் ஈர்க்கப்பட்டு, பிற துறை மாணவர்களும் இவரது வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்பார்கள். தமிழ் அறிவும் ஆர்வமும் கொண்ட மாணவர்களை தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாத்திர நூல்களைக் கற்பித்தார்.

சென்னைச் செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார். கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதினார். மதுரையில் 4-ம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயற்சி மேற்கொண்டார்.

தமிழை செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்தவர். குழந்தைகள் 12 வயது வரை தமிழிலேயே கல்வி கற்க வேண்டும் என்று முழங்கியவர். யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் இவரது தமிழ்ப் புலமை, கவிபாடும் திறனைக் கண்டு ‘திராவிட சாஸ்திரி’ என்னும் பட்டத்தை வழங்கினார்.

தனது தனிப்பாசுரத் தொகை என்ற நூலில், சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை ‘பரிதிமாற்கலைஞர்’ என தமிழில் மாற்றிக்கொண்டார். பல்கலைக்கழகப் பட்ட வகுப்புகளில் தமிழை விலக்கி சமஸ்கிருதத்தைக் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது. இவரது எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.

நாவல், உரைநடை நாடகம், செய்யுள் நாடகம், கவிதை நூல், ஆய்வுநூல், நாடக இலக்கண நூல் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

பல தமிழ் அறிஞர்களின் வரலாற்றையும் எழுதியுள்ளார். சபாபதி முதலியாரின் திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப்பரணி, நளவெண்பா, பஞ்சதந்திரம் உட்பட 67 நூல்களைப் புதுப்பித்து வெளியிட்டார்.

ஞானபோதினி, விவேகசிந்தாமணி இதழ்களில் தான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து ‘தமிழ் வியாசங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர்.

தமிழ்-தமிழர் முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பரிதிமாற் கலைஞர் 1903-ல் மறைந்தார். ‘‘33 ஆண்டுகளே வாழ்ந்த இவர் அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் அதிக காலம் வாழ்ந்திருந்தால், தமிழ் அன்னை அரியாசனத்தில் அமர்ந்திருப்பாள்’’ என தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கூடாது..சமூக ரீதியாகவும்,கல்வி ரீதியாகவும்'என்னும் அளவுகோலே இட ஒதுக்கீட்டில் சரியானது-சட்டப்படியானது!-கி.வீரமணி,தலைவர்-திராவிடர் கழகம்..

உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கூடாது

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்' என்னும் அளவுகோலே  இட ஒதுக்கீட்டில் சரியானது - சட்டப்படியானது!

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீடு அவர் காலத்திலேயே அவரால் பின்வாங்கிக் கொள்ளப்பட்டது!

‘‘இது எங்கள் அரசின் கொள்கை முடிவு!'' என்று நீதிமன்றத்தில் அறிவித்திடுக!
-------------------------------------------------------------
இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் வந்தது ஏன்? தமிழ்நாட்டில்  1928 முதல் நீதிக்கட்சி ஆட்சியால் நீண்ட காலம் அமுலில் இருந்து வந்த கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புரிமை ஆணையை எதிர்த்து, இந்திய அரசியல் சட்டம் 1950 ஜனவரியில் அமுலுக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தவறான தகவல்களை நீதிமன்றத்திற்குக் கொடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, அது செல்லாது என்று தீர்ப்புப் பெற்ற வர்கள் - பார்ப்பன மேலாண்மையாளர்களாக கல்வி, உத்தியோகத்தில் ஏகபோகத்தை அனு பவித்து வந்தவர்களே! அன்றைய உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிலும் அந்தத் தீர்ப்பு உறுதிப் படுத்தப்பட்டது. சமூகநீதி பறிக்கப்பட்டதை எதிர்த்து, தந்தை பெரியார்  மக்கள் மன்றத்தைத் திரட்டி நடத்திய மாபெரும் கிளர்ச்சியும், போராட்டமும் மத்திய அரசினை சிந்திக்க வைத்தது.

பிரதமர் நேருவும், சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரும் முதலாவது அரசியல் சட்டம் திருத்தம் தொடர்பாக  அன்றைய நாடாளு மன்றத்தில் கொணர்ந்து நன்கு விவாதித்தனர். ஆளும் காங்கிரசே ஆதரவு அளித்தது. பிரதமர் நேரு தெளிவாக, தென்னாட்டுப் போராட்டத்தை விளக்கி, திருத் தத்தை முன்மொழிந்து, நிறைவேற்றி, டாக்டர் அம்பேத்கரை கலந்து முடிவெடுத்ததின் விளைவே - கல்வி வாய்ப்பில் விடுபட்டிருந்த இட ஒதுக்கீட்டுக்கான பிரிவாக 15(4) என்பது அடிப்படை உரிமைகள் பகுதியில் புகுத்தப்பட்டது.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்ற அளவுகோலே சரி!

பிற்படுத்தப்பட்டோரை அடையாளப் படுத்தும் வகையில், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் ‘‘Socially and Educationally'' என்ற சொற்கள் இணைக்கப்பட்டன. பொருளாதார அடிப்படைபற்றி சிலர் கூறியபோது, அது நிலையான அளவுகோல் அல்ல; அடிக்கடி மாறக் கூடியது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதி யாகவும் என்ற அளவுகோலே இழைக்கப்பட்ட சமூகஅநீதிக்குப் பரிகாரம் - மாற்று என்பதையும் சுட்டிக்காட்டினர். (இவை ஏற்கெனவே பிரிவு 340 இல் கையாளப்பட்டிருக்கும் சொற்றொடர் களே என்பதையும் விளக்கினர்).
எம்.ஜி.ஆர். கொண்டு வந்த பொருளாதார அளவுகோல் பின்வாங்கப்பட்டது - ஏன்?

பிறகு வந்த பல உச்சநீதிமன்றத் தீர்ப்பு களின் விளக்கத்தில் இட ஒதுக்கீடு என்பது ஏழ் மையை ஒழிக்கும் திட்டம் அல்ல; முன்பு காலங்காலமாய் (ஜாதி அடிப்படையில்) வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கும் உரிமை என்றும் விளக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, 1977 ஆம் ஆண்டில், எம்.ஜி.ஆர். அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில் முதல மைச்சராக வந்தபோது, பிற்படுத்தப்பட்டோ ருக்குக் கொடுக்கப்பட்டு வந்த இட ஒதுக் கீட்டில், ஆண்டு வருமானம் 9000 ரூபாய் என்ற ஓர் அளவுகோல் ஆணையைப் பிறப்பித்த போது, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியக் கம்யூனிஸ்ட் (சி.பி.அய்),  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (அய்.யூ.எம்.எல்.) கட்சிகளும், காங்கிரஸ் கட்சி- ஜனதா கட்சியில் சில தலைவர்களும் இணைந்து கடுமையாக எதிர்த்ததோடு, நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. படுதோல்வி அடைந் தது. (39 இடங் களில் 37 இடங்களில் தோல்வி).

பிறகு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்த ஆணையை - பொருளாதார அளவுகோல் 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை எம்.ஜி.ஆர். அரசு ரத்து செய்தது.

மண்டல் கமிஷன் வழக்கில் உச்சநீதிமன்ற 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, மத்திய காங்கிரஸ் அரசு கொணர்ந்த உயர்ஜாதி ஏழை களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆணையும் அரசியல் சட்ட விரோதம் - செல்லாது என்று தீர்ப்பளித்து ரத்து செய்தது!

103 ஆவது சட்ட திருத்தம்
என்பது என்ன?

ஆனால், இதையெல்லாம்பற்றிக் கவலைப் படாமல், உயர்ஜாதியினரான பார்ப்பனரும், வடநாட்டில் சில மாநிலங்களில் வாக்கு வங்கி பெற்றுள்ள உயர்ஜாதியைச் சேர்ந்த மற்றவர் களும் 10 சதவிகித இட ஒதுக்கீடு தரும் சட் டத்தை, பொதுத் தேர்தல் 2019 இல் வருவதற்கு முன்பு, (2018 இல்) இரண்டொரு நாளில் - நாடா ளுமன்றத்திற்கு அவகாசமே தராமல், 103 ஆவது அரசியல் சட்டத் திருத்தமாக நிறை வேற்றி, அதற்காக இடங்களைக் கூட்டி, நிதி களையும் அதிகரித்தனர். (ஆர்.எஸ்.எஸ். கொள் கையான பொருளாதார அடிப்படையை - ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை விட்டதைப் போல நுழைத்துவிட்டனர்). உச்சநீதிமன்றத் திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு கள் நிலுவையில் உள்ளன!
தமிழ்நாடு, சமூகநீதிக்கு இந்தியாவிற்கே கலங்கரை வெளிச்சமாகி வழிகாட்டும் மாநில மாகையால், இதில் தெளிவான நிலை - 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு பலத்த எதிர்ப்பு - திராவிடர் இயக்கம் முதல் அத்துணை கட்சிகளும் (பா.ஜ.க. தவிர) எதிர்க்கும்.

சென்ற ஆண்டு ஜூலையில் 3,000 இடங் களை மருத்துவக் கல்விக்குக் கூடுதலாக தமிழ்நாட்டுக்குத் தருகிறோம் என்று நாக்கில் தேன் தடவியபோதுகூட,  தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதற்கு ஆதர வான முடிவு எடுக்கவில்லை. காரணம், பெரும் பாலான கட்சிகள் திராவிடர் கழக வழிகாட்டலில் எதிர்க்கவே செய்தன!

10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கவேண்டும்

இன்னமும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இதில் உறுதியாக இருப்பதால், 10 சதவிகிதத்தை ஏற்க இயலாது என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த 10 சதவிகித பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீடு என்பது சமூகநீதியின் அடிப் படையின் வேரில் வெந்நீர் ஊற்றுவது என்ற  கட்சிகளின் பொதுக் கருத்தை (Consensus) கருத்திணக்கத்தை ஏற்றுக்கொண்டது தமிழக அரசு. உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர்களும், மற்ற சிலரும் வழக்குப் போட்டுள்ளனர்.

தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூத்த அமைச்சர்கள் குழு  இது அரசின் கொள்கை முடிவு   (Policy Decision) என்று திட்டவட்டமாக அறிவிக்கவேண்டும். இது அவசியமும், அவசரமும்கூட!

ஏற்கெனவே காட்டியுள்ள உறுதியிலிருந்து தமிழக அரசு எக்காரணம் கொண்டும் பின்வாங்கக் கூடாது; மக்கள் மன்றம் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளது!

அம்மா ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி என்றால், பொருளாதார அடிப்படையில் ஏற்கமாட்டோம் என்று திட்டவட்டமான கொள்கை முடிவினை எடுத்து, உயர்நீதிமன்றத்தில் அறிவித்து, அதனை (10 சதவிகிதத்தினை) ஏற்காத இன்றைய நிலையிலிருந்து பின்வாங்கவே கூடாது!

இப்போது காட்டும் உறுதியான - 10 சதவிகித இட ஒதுக்கீடு முன்னேறிய ஜாதியினருக்கு என்ற நிலைப்பாட்டை எதிர்ப்பது சமூகநீதியைப் பாதுகாப்பது ஆகும். ‘‘பசியேப்பக்காரனுக்குத் தான் பந்தியில் இடமே தவிர, புளியேப்பக் காரனுக்கு அல்ல'' என்பதுதான் நியாயம்!

உயர்ஜாதியில்  பொருளாதாரத்தில் நலிந் தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது, கிரிமீலேயரை ஏற்காத மாநிலம் தமிழகம் என்பதையே புரட்டி, தலைகீழாக்கிவிடும் ஆபத்தும் நுழைந்துவிடும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய  வழியிலிருந்து தடம் புரளக்கூடாது!

உறுதியான நிலைப்பாட்டில் இருந்து தமிழ் நாடு அரசு மாறினால், கடுமையான விலையைத் தரவேண்டியிருப்பதோடு, அதன் முன்னோர்கள் காட்டிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியிலிருந்து தடம் புரண்டவர்களாவார்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்.

எனவே,  தெளிவான, உறுதியான நிலைப் பாட்டை எடுத்து, சமூகநீதி மண்ணின் தனித் தன்மையை காப்பாற்றட்டும்!

- கி.வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
2.7.2020

ஞாயிறு, 5 ஜூலை, 2020

இரண்டு வருட படிப்பாக MCA மாற்றம் - AICTE அறிவிப்பு


*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றியம் 03.07.2020 செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் காலைக்கதிர் (05.07.2020)நாளிதழ் செய்தி.நன்றி-காலைக்திர்.*👆

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றியம்  03.07.2020 செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் காலைக்கதிர் (05.07.2020)நாளிதழ் செய்தி.நன்றி-காலைக்திர்.*👆

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட இணையவழி ஒன்றியச்செயலாளர்கள் கூட்ட நிகழ்வுகள் நாள்:05.07.2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் ஒன்றியச்செயலாளர்கள் கூட்டம் இணையவழியில் இன்று(05.07.2020)பிற்பகல் 06.00மணிக்கு தொடங்கி 08.25 மணிக்கு நிறைவுபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் திரு.க.ஆசைத்தம்பி அவர்கள் தலைமை தாங்கினார்.மாவட்டப்பொருளாளர் திரு.சு.பிரபு முன்னிலை வகித்தார்.
மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் இயக்க உரை ஆற்றினார்.

நாமக்கல் மாவட்டத்தின் 13  ஒன்றியங்களில் இருந்தும் பங்கேற்ற பொறுப்பாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட முடிவுகள்   தீரமிகு போராட்டக்களத்தில் இருக்கும் பரமத்தி ஒன்றிய அமைப்பிற்கு தெரியப்படுத்துவது -வழிகாட்டுவது  என்று இக்கூட்டம்
முடிவாற்றி உள்ளது.

பரமத்தி ஒன்றிய அமைப்பின் அனைத்துவகை போராட்ட நடவடிக்கைகளுக்கும் அனைத்து ஒன்றிய அமைப்புகளும் உறுதிமிக்க  ஆதரவினை நல்குவது என்று இக்கூட்டம் முடிவாற்றி 
உள்ளது.

*(மெ.சங்கர்),*
*மாவட்டச்செயலாளர்.*



























அடுத்த ஒரு வருடத்திற்கான கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது கேரள அரசு

அடுத்த ஒரு வருடத்திற்கான கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது கேரள அரசு

*பொதுமக்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் முகக் கவசம் அணி வேண்டும்.

*பொது இடங்களில் 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்



*☀மார்ச்/ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் நடத்தப்படாமல் விடுபட்ட மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்பட்டது...காலாண்டு/அரையாண்டு விடைத்தாள்களை பள்ளியிலிருந்து பெறுதல் -மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.125746/பி1/2019 நாள்:04.07.2020*👆

*☀மார்ச்/ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் நடத்தப்படாமல்  விடுபட்ட மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்பட்டது...காலாண்டு/அரையாண்டு விடைத்தாள்களை பள்ளியிலிருந்து பெறுதல் -மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பான   அரசுத் தேர்வுகள் இயக்குநர்  அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.125746/பி1/2019 நாள்:04.07.2020*


*🌐ஜூலை 5, வரலாற்றில் இன்று:எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 5,
வரலாற்றில் இன்று.


எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்த தினம் இன்று.



பாலகுமாரன் (ஜூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின் புகழ்பெற்ற  எழுத்தாளர் ஆவார். இவர் இருநூறுக்கும் மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.


பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை(டிராக்டர்) இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இயக்குநர் பாலச்சந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

*📱ANDROID PHONE வைத்துள்ளீர்களா? இந்த 7 ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க..*

*📱ANDROID PHONE வைத்துள்ளீர்களா? இந்த 7 ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க..*


*பெரும்பாலான பயனர்களுக்கு ஸ்மார்ட்போனுக்குள் ஒளிந்துள்ள பல அம்சங்கள் தெரிந்துகொள்ளவே இல்லை. அதனால் அவற்றை பயன்படுத்தவும் முடிவதில்லை. இந்த வசதிகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் மேலும் சிறப்பான அனுபவத்தை பெறமுடியும். இதோ உங்கள் ஆண்ட்ராய்டு போனில் மறைந்துள்ள 7 சிறப்பம்சங்கள்..*


 *தேர்ந்தெடுத்த நபர்களின் அழைப்புகளை மட்டும் எடுங்கள்.*

*நமக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என எண்ணும் போது ' டோன்ட் டிஸ்டர்ப்' என்னும் வசதியை பயன்படுத்துவோம். இதில் ' பிரியாரிட்டி ஒன்லி' என்ற வசதி இருப்பதை வெகு சிலரே அறிவர். இதன் மூலம் முக்கிய நபர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், முக்கிய நேரங்களில் யார் உங்கள் தொந்தரவு செய்யலாம், செய்யக்கூடாது என முடிவு செய்யலாம்.*

 
*வீட்டிற்குள் சென்றவுடன் போன் தானாக அன்லாக் செய்யும் வசதி.*

*இந்த ஸ்மார்ட் லாக் வசதி ஒரு சில காரணங்களால் உண்மையிலேயே ஸ்மார்ட் தான். நம்பத்தகுந்த இடங்கள் பட்டியலில் உங்கள் வீட்டை இணைத்துவிட்டால், நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் போன் தானாகவே அன்லாக் ஆகிவிடும். இந்த வசதியை பயன்படுத்த, ஜி.பி.எஸ்-ஐ ஸ்விட்ச் ஆன் செய்திருக்க வேண்டும்.*

*இதயத்தை கண்காணித்தல்*


*உங்கள் இதய துடிப்பை கண்காணிக்க வேண்டுமென்றால், கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள 'Instant Heart Rate' என்ற செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள். பின்னர் அந்த செயலியை இயக்கி கேமரா மீது உங்கள் சுட்டு விரலை வைப்பதன் மூலம் இதய துடிப்பை கணக்கிடலாம்.*

*திரை உருப்பெருக்கியை பயன்படுத்துங்கள்.*

*உங்களுக்கு கண்பார்வை குறைவாக இருந்தால், திரை உருப்பெருக்கி (screen magnifier)மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Settings-> Accessibility-> Magnification மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம். ஒரு விரலை வைத்து திரையில் தட்டுவதன் மூலம் எளிதாக திரையை பெரிதாக்கலாம்.*

*கெஸ்ட் மோடை பயன்படுத்துங்கள்.*

*உங்கள் போனை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் போது, கண்டிப்பாக 'கெஸ்ட் மோட்' ல் தான் தரவேண்டும். இந்த மோடில் உங்கள் போனில் உள்ள அனைத்தும் போனை பயன்படுத்துபவருக்கு மறைக்கப்படும். இதை பயன்படுத்த முதலில் நோட்டிவிக்கேசன் பாரை கீழே இழுத்து, உங்கள் ப்ரோபைலை கிளிக் செய்து 'Add Guest' ஐ தேர்வு செய்ய வேண்டும்.*

*உங்கள் குரோம் டேப்களை போனை தவிர மற்ற கருவிகளில் பயன்படுத்துங்கள்.*

*இதை பயன்படுத்த உங்கள் அனைத்து கருவிகளிலும் ஜிமெயில் ஐடி மூலம் உள்நுழைய வேண்டும். பின்னர் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யும் போது திறக்கும் பட்டியலில் 'ரிசன்ட் டேப்ஸ்'ஐ தேர்வு செய்யவும். இதன் மூலம் வேறு கருவிகளில் சமீபத்தில் பயன்படுத்திய டேப்களை கூட திறக்க முடியும்.*

*இரவில் கலர் இன்வெர்சன் வசதியை பயன்படுத்துங்கள்.*

*இரவு நேரங்களில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது கண்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என நினைத்தால், Settings ல் ' Colour inversion' என்ற வசதியை இயக்குங்கள்.*

சனி, 4 ஜூலை, 2020

*05.07.2020, 12.07.2020, 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய 4 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்துதல் சார்பான நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்தி வெளியீடு.நாள்:04.07.2020*

*05.07.2020, 12.07.2020, 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய 4 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்துதல் சார்பான நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்தி வெளியீடு.நாள்:04.07.2020*