புதன், 8 ஜூலை, 2020

*🌐ஜூலை 8, வரலாற்றில் இன்று:மயிலை சீனி. வேங்கடசாமி நினைவு தினம் இன்று.*

ஜூலை 8, வரலாற்றில் இன்று

மயிலை சீனி. வேங்கடசாமி நினைவு தினம் இன்று.

மயிலை சீனி. வேங்கடசாமி  (பி. டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார்.

 தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.

வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.

தனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றியக் கிளையின் தொடர் நடவடிக்கைகள்! பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் 03.07.2020 அன்று உயர் அலுவலர்களுக்கு கடிதம் ! பரமத்தி ஒன்றிய அமைப்பிற்கு 06.07.2020 அன்று கடிதம்! பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரின் வேண்டுகோளின் அடிப்படையில் தொடர்நடவடிக்கைகள் 03.08.2020 முதல் மேற்கொள்ள ஒன்றியச்செயற்குழு முடிவு!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றியக் கிளையின் தொடர் நடவடிக்கைகள்!
பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் 03.07.2020 அன்று
உயர் அலுவலர்களுக்கு கடிதம் !
பரமத்தி ஒன்றிய அமைப்பிற்கு 06.07.2020 அன்று கடிதம்!
பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரின் வேண்டுகோளின் அடிப்படையில் தொடர்நடவடிக்கைகள் 03.08.2020 முதல் மேற்கொள்ள ஒன்றியச்செயற்குழு முடிவு!


1)பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் 03.07.2020 அன்று உயர் அலுவலர்களுக்கு கடிதம்!பரமத்தி ஒன்றிய அமைப்பிற்கு 06.07.2020 அன்று பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் கடிதம்.

2)பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரின் வேண்டுகோளின் அடிப்படையில் தொடர்நடவடிக்கைகள் 03.08.2020 முதல் மேற்கொள்ள ஒன்றியச்செயற்குழு முடிவு!


செவ்வாய், 7 ஜூலை, 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றிய அமைப்பின் 01.07.2020 ஆம் நாளைய பெருந்திரள் முறையீடு! பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரின் 02.07.2020 ஆம் நாளைய கடிதம்! பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரின் கடிதத்தின் மீது 03.07.2020 ஆம் நாளைய ஆசிரியர் மன்றத்தின் கடிதம்!


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றிய அமைப்பின் 01.07.2020 ஆம் நாளைய  பெருந்திரள் முறையீடு!
பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரின் 02.07.2020 ஆம் நாளைய கடிதம்!
பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரின் கடிதத்தின் மீது 03.07.2020 ஆம் நாளைய ஆசிரியர் மன்றத்தின்  கடிதம்!

1)பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரின் 02.07.2020 ஆம் நாளைய கடிதம்!

2)02.07.2020 பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் கடிதத்தின்மீது 03.07.2020 ஆம் நாளைய ஆசிரியர் மன்றத்தின் கடிதம்.!

*🍎சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்* *9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை குறைக்க நடவடிக்கை*

*🍎சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்*

*9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை குறைக்க நடவடிக்கை*

10ஆம் வகுப்பு மற்றும் விடுபட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண் மற்றும் வருகைப்பதிவு பதிவேற்றம் தொடர்பான தெளிவுரை தேர்வுத்துறை வெளியீடு.




*🌐ஜூலை 7,* *வரலாற்றில் இன்று:இந்தியாவில் 1896-ம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி சலன திரைப்படம் (movie) முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.*

ஜூலை 7, வரலாற்றில் இன்று.

இந்தியாவில் 1896-ம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி சலன திரைப்படம் (movie) முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது

லுமியர் பிரதர்ஸ்,  சினிமட்டோகிரபி என்ற நிறுவனம் மும்பையில் (அப்போது பம்பாய்) இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது.

அன்றைய ஆங்கில பத்திரிகை டைம்ஸ் ஆப் இந்தியாவில் இது பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டன. எனினும் இந்த முதல் சிறப்பு சினிமா காட்சிகளை ஐரோப்பியர்கள் மட்டுமே பார்த்தனர்.

*🌐ஜூலை 7,* *வரலாற்றில் இன்று:ஜார்ஜ் சைமன் ஓம் நினைவு தினம் இன்று(1854).*

ஜூலை 7,
வரலாற்றில் இன்று.

ஜார்ஜ் சைமன் ஓம் நினைவு தினம் இன்று(1854).

ஜார்ஜ் சைமன் ஓம்
(Georg Simon Ohm)
ஜெர்மானிய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆவார்.

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது ஓம், இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டா கண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார்.

தாமே உருவாக்கிய கருவிகளைக் கொண்டு ஒரு கடத்தியின் இரு முனைகளுக்கு இடையேயான நிலை வேறுபாட்டிற்கும் (மின்னழுத்தம்) அதனால் ஏற்படும் மின்னோட்டத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார். இந்தத் தொடர்பை விவரிப்பதே ஓமின் விதி என அறியப்படுகிறது.

அனைத்துலக அலகுகளில் மின்தடைக்கான அலகு இவரது பெயரைக் கொண்டு ஓம் (குறியீடு Ω) என வழங்கப்படுகிறது.

*🌐ஜூலை 7, வரலாற்றில் இன்று:உலக சாக்லேட் தினம் இன்று.*

ஜூலை 7, வரலாற்றில் இன்று.

உலக சாக்லேட் தினம் இன்று.

 இத்தினத்தில் சாக்லேட் உண்பதன் சில நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

1 .பிரிட்டனில் உள்ள சில ஊட்டச்சத்து நிபுணர்கள் டார்க் சாக்லேட் உண்பது ரத்த  அழுத்தத்தை குறைக்கும்  என்கிறார்கள். அதுபோல,  இதயத்திற்கும் மிக நல்லது  என்கிறார்கள் . ஞாபக சக்தியை  மேம்படுத்தும் என்று சொல்லும் ஊட்டச்சத்து நிபுணர்கள், புற்று நோய் பாதிப்பை குறைக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

2 . கோகோவில் ஆண்டிஆக்ஸிடெண்ட்  உள்ளது. கோகோ  கசப்புதன்மை உடையது. ஆனால், அதே நேரம் சுவைக்காக அதில் சேர்க்கப்படும்  பால் மற்றும் சர்க்கரை, இந்த   ஆன்டி ஆக்ஸிடெண்ட் தன்மையை  குறைக்கிறது. இதன் பொருள், டார்க் சாக்லேட் மற்ற  சாக்லேட்டுகளைவிட நல்லது என்பதுதான்.

3 .அண்மையில்  ஆயிரம் பேரிடம்  மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு  வாரத்திற்கு ஒருமுறை சாக்லேட்    உட்கொண்டால்   நினைவாற்றல் மேம்படும் என்பது தெரியவந்துள்ளது.

*🌐ஜூலை 7, வரலாற்றில் இன்று:உலகின் புதிய ஏழு உலக அதிசயங்கள் அறிவிக்கப்பட்ட தினம் இன்று.*

ஜூலை 7, வரலாற்றில் இன்று.

உலகின் புதிய ஏழு உலக அதிசயங்கள் அறிவிக்கப்பட்ட தினம் இன்று.

உலகின் புதிய ஏழு அதிசயங்கள்  என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும்.

 நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம்  கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன.

புகைப்படங்கள்

இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக: சிச்சென் இட்சா, மீட்பரான கிறித்து, சீனப் பெருஞ் சுவர், மச்சு பிச்சு, பெட்ரா, தாஜ் மகால், கொலோசியம்