சனி, 11 ஜூலை, 2020

*🌐ஜூலை 11, வரலாற்றில் இன்று:உலக மக்கள் தொகை தினம் இன்று.*

ஜூலை 11, வரலாற்றில் இன்று.

உலக மக்கள் தொகை தினம் இன்று.

     உலக மக்கள் தொகை தினம் ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்டு வருடம் தோறும் ஜூலை 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெருகி வரும் உலக மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

      உலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

     தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உலக மக்கள்தொகை 730 கோடியாக உள்ளது. அது போல் இந்திய மக்கள்தொகை 2016-இன்படி 132. 42 கோடியாக இருந்தது.

       2018-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி அன்று இந்த எண்ணிக்கை 3 கோடி உயர்ந்து 135 கோடியாகிவிட்டது. உலக மக்கள்தொகையும் வரும் 2030 -ஆம் ஆண்டு படி 850 கோடியை எட்டும் என்றும் 2050-ஆம் ஆண்டு 970 கோடியாக உயரும் என்று அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகிறது.

       அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.

     இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 33.2 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.74 சதவீதமாகும்.

     மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், செயற்கைக் கருநகரங்கள் உருவாகின்றமை, வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் போன்றன முக்கிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன.

       இவற்றுடன் இன்று ஒட்டுமொத்தமாக தலையெடுத்துள்ள பொருளாதார நெருக்கடியினையும் கூறலாம்.

     எளிய மக்கள் மத்தியில் குடும்ப நலத் திட்டமிடல்கள் பற்றிய கருத்தரங்குகள், பாதுகாப்பான கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தல், சிறப்பான பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பள்ளிகளில் மக்கள்தொகைக் கல்விக்கு முக்கியமளிப்பதுடன், மக்கள்தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் சமூகப் பொருளாதார தாக்கங்கள் பற்றிய செயலமர்வுகள் மேற்கொள்வது அவசியமாகின்றது.

வெள்ளி, 10 ஜூலை, 2020

*🌷ஈரோடு SP சக்தி கணேஷ் நாமக்கல்லுக்கும் .. நாமக்கல் Sp திரு.அருளரசு கோவைக்கும் மாறுதல்.*

*🌷ஈரோடு SP சக்தி கணேஷ் நாமக்கல்லுக்கும் .. நாமக்கல் Sp திரு.அருளரசு கோவைக்கும் மாறுதல்.*

*🌟பள்ளிக்கல்வி மாநில நல்லாசிரியர் விருது வழங்குதல் 2019 2020 ஆம் கல்வி ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிட ஏதுவாக ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்பக் கோருதல்- சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் -* *நாள் :10.07.2020*

*🌟பள்ளிக்கல்வி மாநில நல்லாசிரியர் விருது வழங்குதல் 2019 2020 ஆம் கல்வி ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிட ஏதுவாக ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்பக் கோருதல்- சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் -*
*நாள் :10.07.2020*




*🌟ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றிதழ் நேரில் சென்று சமர்ப்பிக்க ஓராண்டு விலக்கு.. கொரானா பரவல் காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர வேண்டாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு!*

*🌟ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றிதழ் நேரில் சென்று சமர்ப்பிக்க ஓராண்டு விலக்கு.. கொரானா பரவல் காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர வேண்டாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு!*

*🌟சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் (Honorarium) கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் _இரத்து செய்யப்படுகிறது_ - ஏற்கனவே மதிப்பூதியம் வழங்கியிருந்தாலும் திரும்பப் பெறப்படும் - நிதித்துறை அரசாணை வெளியீடு!*

*🌟சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் (Honorarium) கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் _இரத்து செய்யப்படுகிறது_ - ஏற்கனவே மதிப்பூதியம் வழங்கியிருந்தாலும் திரும்பப் பெறப்படும் - நிதித்துறை அரசாணை வெளியீடு!*

*🌐ஜூலை 10, வரலாற்றில் இன்று:எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு பிறந்த தினம் இன்று.*

ஜூலை 10, வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு பிறந்த தினம் இன்று.

  ஆர்.நாராயணசாமி எனும் இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு
(ஜூலை 10, 1919 - ஜனவரி 17, 1992)தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கட்டுரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.

1948 முதல் 1977 வரை கரிச்சான் குஞ்சு அவர்கள், "மன்னை தேசிய மேல்நிலைப் பள்ளியில்" தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


கு. ப. ராஜகோபாலனின் (கு.ப.ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி அவர் மீது கொண்ட பற்றால் “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.


கரிச்சான் குஞ்சு ஆங்கிலம், இந்தி, வடமொழி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் புலமை பெற்றவர். திருச்சியில் கவிஞர் திருலோகசீதாராம் நடத்திய "சிவாஜி" இதழில் கரிச்சான் குஞ்சு தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதினார். தவிர, "கலாமோகினி" இதழிலும் இவரது படைப்புகள் பிரசுரமாயின.
காதல் கல்பம், குபேர தரிசனம், வம்சரத்தினம், தெய்வீகம், அன்றிரவே, கரிச்சான் குஞ்சு கதைகள், சுகவாசிகள், தெளிவு, கழுகு, ஒரு மாதிரியான கூட்டம், அம்மா இட்ட கட்டளை ஆகியவை இவரின் சிறுகதைத் தொகுப்புகள். இவைதவிர, "பசித்த மானிடம்" என்ற நாவலையும் எழுதியுள்ளார். இந் நாவல்தான் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. "சங்கரர்", "கு.ப.ரா.", "பாரதி தேடியதும், கண்டதும்" என்னும் மூன்று வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார். ஆனந்த வர்த்தனன் மற்றும் தேவி பிரசாத் சட்டோபாத்யாவின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். "சுகவாசிகள்" என்னும் இவரது குறுநாவல் "மனிதர்கள்" என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது. சாகித்திய அகாதெமி, "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் இவருக்கும் இடமளித்து பெருமை சேர்த்துள்ளது.

*🌐ஜூலை 10, வரலாற்றில் இன்று:வேலூர் சிப்பாய் புரட்சி நிகழ்ந்த தினம் இன்று.*

ஜூலை 10, வரலாற்றில் இன்று.

வேலூர் சிப்பாய் புரட்சி நிகழ்ந்த தினம் இன்று.

இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சி தான். 1806-ல் மதராஸ் படைக்கு முதன்மை தளபதியாக நியமிக்கப்பட்ட சர்ஜான் கிரடேக் என்பவர் பல விதிமுறைகளை புகுத்தினார் இந்திய படைகள் சமய அடையாளங்களை அணியக் கூடாது. தலையில் குடுமி வைக்கக்கூடாது ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைக்க வேண்டும் என்ற உத்தரவு இந்து, முஸ்லிம் சமயத்தை சேர்ந்த 1500 வீரர்களுக்கு கோபத்தை மூட்டியது. அதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றனர் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை இந்திய சிப்பாய்களுக்கு மேலும் கோபத்தை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் இந்திய சிப்பாய்கள் 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி புரட்சியில் ஈடுபட்டு அதிகாலை உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் 100 பேரை கொன்று குவித்தனர்.இந்த தகவல் உடனடியாக ஆற்காட்டில் இருந்த ஆங்கிலேய படைகளுக்கு தெரிவிக்கப்பட்டு புரட்சி அடக்கப்பட்டது. அப்போது கொல்லப்பட்ட சிப்பாய்கள் 350க்கும் மேற்பட்டோரை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடியதாக வாய்மொழி வரலாறு உண்டு. உயிர்நீத்த வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத்தூண் ஒன்று 1998ல் நிறுவப்பட்டது. 2006ம் ஆண்டில் வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

*🌐ஜூலை 10, வரலாற்றில் இன்று:வரலாற்றில் மறைக்கப்பட்ட விஞ்ஞானி நிகோலா டெஸ்லா பிறந்த தினம் இன்று.*

ஜூலை 10, வரலாற்றில் இன்று.

வரலாற்றில் மறைக்கப்பட்ட விஞ்ஞானி நிகோலா டெஸ்லா பிறந்த தினம் இன்று.

வரலாறு என்பது வேட்டைக்காரர்களின் டைரிக் குறிப்பே. சிங்கம் வந்து உண்மையைச் சொல்லாதவரை வேட்டைக்காரர்கள் தான் ராஜாக்கள். இது டெஸ்லா என்கிற அறிவியல் சிங்கத்தின் கதை.

ஆஸ்திரியாவில் ஜூலை 10, 1856 ல் பிறந்த நிகோலா டெஸ்லாவுக்கு அறிவியல் என்றால் அவ்வளவு பிரியம். கையில் கிடைத்த உபகரணங்களை வைத்து எதாவது புதிய பொருளை கண்டுபிடிப்பது அவனது வாடிக்கை. "உன்னை மாதிரி ஆட்களுக்கு அமெரிக்காவில் நிறைய மவுசு” என்று நண்பர் சொல்ல அமெரிக்காவின் பிரபலமான பணக்கார விஞ்ஞானியான எடிசனுடைய ஆராய்ச்சிக்கூடத்தில் ஆராய்ச்சியாளர் பணிக்கு எழுதிப் போட்டார். டெஸ்லாவின் திறமையைக் கண்ட எடிசன் அவரை உடனே வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்க விஞ்ஞானிகள் எல்லாம் பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்க, தன் கனவின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார் டெஸ்லா. அவர் கண்டுபிடித்த ஒவ்வொரு பொருளையும் எடிசன் தனது பெயரில் பேடண்ட் உரிமை வாங்கிக் கொண்டிருந்தார்.
அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் தனது கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார் டெஸ்லா. ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த டெஸ்லா எடிசனிடம் நியாயம் கேட்க ”வெளியே போ” என்கிற பதிலே கிடைத்தது.

வெளியே வந்த டெஸ்லாவுக்கு எடிசனின் போட்டிக் கம்பேனிகள் ஆதரவுக்கரம் நீட்டினர். டெஸ்லாவும் ஒரு கம்பெனியில் சேர்ந்து தன் பணிகளைத் தொடர்ந்தார். அவைகளும் சொற்ப ராய்ல்டி கொடுத்து ஏமாற்றின. இதைக் கண்டுகொள்ளாமல் டெஸ்லா தனது சிறந்த கண்டுபிடிப்பான AC கரண்ட் என அழைக்கப்படும் ஆல்டர்னேடிவ் கரண்டைக் கண்டுபிடித்தார். இது ஏற்கனவே DC கரண்ட் எனும் டைரக்ட் கரண்டை கண்டுபிடித்த எடிசனுக்கு பெரிய தலைவலியைத் தந்தது. அவர் DC கரண்டில் நிறைய முதலீடு செய்திருந்தார். AC கரண்ட் , DC கரண்டை விட விலை மலிவாகவும் எளிதில் பயன்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. உலகமே AC கரண்டிற்கு மாறிக் கொண்டிருந்தது. நீரில் இருந்து மின்சாரத்தை பெருமளவு தயாரிக்க முடியும் என்று நயாகரா அருவியில் இருந்து மின்சாரம் தயாரித்துக் காட்டினார். இதை எல்லாம் எடிசனால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. எடிசன் தனது அதிகாரத்தையும் பணத்தையும் வைத்து டெஸ்லாவை விரட்டினார்.. (கடைசியில் டெஸ்லா இறந்த பிறகு எடிசன் AC கரண்டிற்கு மாறினார் என்பது உபரித் தகவல்).

எடிசன் தான் கண்டுபிடித்த பல்பை இன்னும் செம்மையாக்க பல லட்சம் டாலர்களை செலவு செய்துகொண்டிருந்த பொழுது டெஸ்லா நியான் பல்புகளைக் கண்டுபிடித்தார்.
எடிசனின் பல்புகள் டெஸ்லாவின் பல்பின் ஐந்து சதவீத சக்தியைக் கூடத் தரவில்லை.நியான் பல்புகளைக் கண்டு பிடிக்கும் முன் டெஸ்லா ஃப்லோரஸண்ட் பல்புகளைக் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இது எடிசனின் பல்பு வியாபரத்தை மேலும் பாதித்தது.

டெஸ்லா எப்போதும் அமைதியையே விரும்பினார் . ஏனோ அது கடைசி வரை அவருக்கு கிட்டவேயில்லை.
அவரது மனிதநேயத்திற்கு ஒரு சான்று. அவர் மின்னூட்ட துகள் கற்றைகளைக் கண்டுபிடித்த பொழுது உலகிலேயே அதிபயங்கரமான ஆயுதமாக அது இருந்தது.
அவர் அதை அமைதிக்கான கற்றைகள் என்றே பெயரிட்டார். உள்நுழையும் எதிரி நாடுகளுக்கெதிராகத் தான் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.பல கம்பெனிகள் அதை அவரிடம் இருந்து வாங்க போட்டி போட்டனர். அவர்களின் சூழச்சிகளை உணர்ந்த அவர் அதை விற்கவே இல்லை. பணக்காரனாய் இருப்பதை விட மனிதனாய் இருப்பது முக்கியம் என்று அவர் கருதினார்.

ரேடியோவைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி என்று படித்திருப்போம். ஆனால் மார்க்கோனி ரேடியோவைக் கண்டுபிடிப்பதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னரே டெஸ்லா ரேடியோவைப் பற்றி ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார்.
ரேடியோவிற்கான முதல் பேட்டன்ட் உரிமையையும் அவர் 1893ல் பதிந்திருந்தார். ஆனால் 1904 ஆம் வருடம் அரசியல் செல்வாக்கு பெற்றவரும்,எடிசனின் பிரியத்திற்கு உரியவருமான மார்க்கோனி தான் ரேடியோவைக் கண்டுபிடித்தார் என்று அமெரிக்கா அறிவித்தது. அதற்காக அவர் நோபல் பரிசும் பெற்றார்.

இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் டெஸ்லா 411 கண்டுபிடிப்புகளுக்கு பேட்டர்ன் உரிமையை வாங்கியிருந்தார். காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தவர் டெஸ்லா. அவர் பெயரிலேயே நாம் அதை அளவிடுகிறோம். X கதிர்கள், வேக்கம் டியூப்கள், இப்போது பயன்படுத்தப்படும் இண்டக்ஷன் மோட்டார்கள், எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்கும் ரேடார்கள் எல்லாம் டெஸ்லாவின் கொடையே. டெஸ்லாவுக்கு பொருளுதவி செய்துகொண்டிருந்தே ஒரே நண்பரான ஜே.பி.மார்கனும் இறந்துவிட  டெஸ்லா கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்.
எடிசன் என்கிற பணக்கார வியாபார விஞ்ஞானியிடம் சிக்கி அங்கீகாரத்திற்காக அலைந்து கடைசியில் மனம் உடைந்து ஹோட்டல் அறையில் அனாதையாக தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்பவர்கள் இறந்த பிணத்தை எரியூட்டும் வேலையே செய்கிறார்கள்.கடைசி வரை தனது கனவுகளுக்காக போராடிய டெஸ்லாவும் மனதால் இறந்த பின் தனது உடலை மாய்த்துக் கொண்டார்.

ஒரு மேடையில் தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னதை இங்கே நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை. “வியாபாரத்திலும், தொழிற்துறையிலும் திருடாதவர்கள் யாரும் இல்லை.
நானும் திருடியிருக்கிறேன். மற்றெல்லோரையும் விட, எனக்கு எப்படித் திருடுவது என்று தெரியும்."

*✒10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிடுகிறது ஐ.சி.எஸ்.இ.,*

*✒10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிடுகிறது ஐ.சி.எஸ்.இ.,*


10 மற்றும் 12 ஆம் வகுப்பு
தேர்வு முடிவுகளை இன்று வெளியிடுகிறது ஐ.சி.எஸ்.இ.,

சென்னை : ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய சான்றிதழ் கல்வி வாரியமான ஐ.சி.எஸ்.இ. தலைமை செயல் அதிகாரி ஜெர்ரி அரத்தூண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பகல் 3:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. முடிவுகளை ஐ.சி.எஸ்.இ.யின் www.cisce.org என்ற இணையதளம் வழியாகவும் மாணவர்களுக்கான அலைபேசி எஸ்.எம்.எஸ். வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மறு ஆய்வின் வழியே தெரிந்து கொள்ள ஜூலை 16ம் தேதிக்குள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு தாளுக்கும் 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை டிஜிட்டல் வழியில் பதிவிறக்கம் செய்யலாம். மத்திய அரசின் 'டிஜி லாக்கர்' தளத்தில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 9 ஜூலை, 2020

*🌷அரசாணை 37 நாள் 10.03.2020 ல் அரசு ஊழியர்களுக்கான முன் ஊதிய உயர்வுகளை மட்டுமே இரத்து செய்ய ஆணையிடப்பட்டுள்ளதால் அரசாணை எண் 42 நாள் 10.01.1969 மற்றும் அரசாணை எண் 747 நாள் 18.08.1986 ன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லை என்பது சார்பான அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ஓ.மு.எண்.3369/ஆ4/2020 நாள் 06.07.2020.*

*🌷அரசாணை 37 நாள் 10.03.2020 ல் அரசு ஊழியர்களுக்கான முன் ஊதிய உயர்வுகளை மட்டுமே இரத்து செய்ய ஆணையிடப்பட்டுள்ளதால் அரசாணை எண் 42 நாள் 10.01.1969 மற்றும் அரசாணை எண் 747 நாள் 18.08.1986 ன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லை என்பது சார்பான அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ஓ.மு.எண்.3369/ஆ4/2020 நாள் 06.07.2020.*