ஜூலை 17, வரலாற்றில் இன்று.
திராவிட லெனின் என்று அழைக்கப்படும் டாக்டர் டி.எம்.நாயர் நினைவு தினம் இன்று
நீதித் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் டாக்டர்.நடேசனார், சர் பிட்டி தியாகராயருக்குப் பின் மூன்றாவது பெரிய தலைவர் தாரவார்ட் மாதவன் நாயர் ஆவார்.
கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள திரூருக்குப் பக்கம் உள்ள தாரவார்ட்டில் சங்கரன் நாயரின் மகனாகப் பிறந்தார்.
எல்லாப் பாடங்களிலும் எல்லாத் தேர்வுகளிலும் முதலிடத்தில் தேறிய நாயர், சென்னை மருத்துவக் கல்லூரியிலும், பின்பு இங்கிலாந்திலும் மருத்துவம் பயின்று MPCM என்ற உயர்ந்த பட்டம் பெற்றார். பின்பு பிரான்சிலும் பயின்று ENT மருத்துவத்தில் பட்டமும், எடின்பரோ பல்கலையில் M.D.யும் படித்து மருத்துவத்தில் சாதனை படைத்தார்.
சென்னை திரும்பி Anti Septic என்ற சென்னை ராஜதானியின் முதல் மருத்துவ இதழை நடத்தினார். "madras Standard" என்ற ஆங்கில நாளேட்டிற்கும் ஆசிரியராக இருந்தார்.
பொது வாழ்வில் தீவிர ஈடுபாடு கொண்டு காங்கிரசில் பணியாற்றிய டாக்டர் நாயர் 1904 முதல் 1916 வரை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார்.
அவர் காலத்தில் Madras Medical Registration Act கொண்டு மருத்துவத் தொழில் செய்வதை ஒழுங்குபடுத்த வகை செய்தார்.
ஆறரை அடி உயரமும், கம்பீரத் தோற்றமும் கொண்ட டாக்டர் .நாயரின் பொது வாழ்வில் சந்தேகம் இல்லாமலும், சுயமரியாதையோடும் பணியாற்றினார்.
1908 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக் கோவில் குளத்திற்கு வரியில்லாமல் தண்ணீர் விட வேண்டுமென்று மேயர் தியாகராயர் தீர்மானத்தை எதிர்த்த நாயர், அப்படி செய்தால் மிகுந்த வருமான இழப்பும், தவறான முன்னுதாரணமாகவும் ஆகிவிடும் என்றார். சிலர் இதற்காக அவரைக் கடுமையாக விமர்சித்தும் பதவி விலக வேண்டும் என்றும் எழுதியும் பேசியும் வந்ததை அறிந்த டாக்டர்.நாயர் நேர்மையாகவும், நாணயமாகவும் பாடுபடுவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் இடமில்லை என்று கூறி பதவி விலகினார்.
காங்கிரசில் இருந்த டாக்டர் நாயர் 1915 இல் டெல்லி இம்பீரியல் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் தோல்வியுற்றதே அவரது பொது வாழ்வில் நீதிக் கட்சியின் பக்கம் திரும்ப வைத்தது.
அப்போது Dr.நடேசன், தியாகராயர் சந்தித்து பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் சேர வற்புறுத்தி அவரை இயக்கத்தில் சேர்த்தனர்.
டாக்டர் அன்னிபெசன்ட் பற்றியும், அவரின் நோக்கம் பற்றியும் அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை பற்றியும் Madam Besant என்ற நூலை எழுதி HIGGIN B0THAMS நிறுவனத்தால் வெளியிடச் செய்தார். இதனால் கோபமுற்ற பெசன்ட் தாக்கல் செய்த வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.
10-11-1917 அன்று மாண்டேகு - செம்ஸ் போர்டு சென்னை வந்து புதிய ஆட்சி அமைப்பது பற்றி பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்திக்க வந்த போது டாக்டர்.நாயர், நடேசனார், தியாகராயர் சந்தித்து Non-Brahmin Reservation பற்றி பேசினர். ஆனால் அவர்கள் அதைப் பற்றி பெரிதாக அக்கறை காட்டவில்லை. இதன் பின்னணியில் சர்.சி.பி.ராமசாமி அய்யரும்,பெசன்ட் அம்மையாரும் இருந்தார்கள்.
டாக்டர்.நாயர் இது பற்றி வலியுறுத்த இங்கிலாந்து சென்றார். ஆனால் அவர் எந்தப் பொதுக் கூட்டத்திலும் லண்டனில் பேசக்கூடாது என்று காங்கிரசாரும், சுயராஜ்யக் கட்சியினரும் நெருக்கடி தந்ததை முடியடித்து வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.
சுயராஜ்யம் பெறுவதே நம் லட்சியம் என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னபோது, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக ஆட்சியில் பங்கு பெற்று சரிசமாக வாழ்வதே உண்மையான சுயராஜ்ஜியம் என்று தன் கம்பீரக் குரலால் கர்ஜனை புரிந்தவர் டாக்டர்.நாயர்.
ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பங்களிப்பில்லாமல் நீதிக்கட்சி வேரூன்ற முடியாது என்ற நாயர் 07-10-1917 இல் சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் ஆற்றிய வீர உரையால் சென்னை வாழ் தாழ்த்தப்பட்ட இயக்க நிர்வாகிகள் பெருவாரியாக நீதிக் கட்சியை ஆதரிக்க முன் வந்தனர். "நீதிக்கட்சி வரலாறு" புத்தகத்தில் ஆய்வாளர் க.திருநாவுக்கரசு இந்த உரையினை முழுதுமாகப் பதிவு செய் துள்ளார்.
1910 இல் அயோத்திதாசர் நாயரின் பணிகளைப் பாராட்டி எழுதியுள்ளார். எம்.சி. ராஜா குறை கூறாத ஒரே நீதிக் கட்சித் தலைவர் நாயரே.
நீதிக்கட்சி 1920 இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு நாயரின் பணி அடித்தளமிட்டது.
காங்கிரசிலிருந்து விலகி தீவிரமாக நீதிக் கட்சியை ஆதரித்து வந்ததற்காக டாக்டர்.நாயரை திரு.வி.க
தன் தேசபக்தனில் திட்டித்தீர்த்தார்.
"தேசிய கவி" பாரதியும் நாயரை சகட்டுமேனிக்கு விமர்சித்து அவரை வகுப்புவாதி என்றார். இதன் மூலம் நாயரின் இயக்கப்பற்று வெளிப்படும்.
1918 இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தன்னந்தனியாக பார்ப்பனரல்லாதார் சமூக ரீதியிலும், அரசியல் ரீதியாகவும் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்பது பற்றி விரிவாக விளக்கினார்.
1919 ல் மீண்டும் தன் நியாயமான வகுப்புரிமைக் கொள்கையை வலியுறுத்த லண்டன் சென்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் உரையாற்ற சென்றார். 18-07-1919 அன்று அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் (17-07-1919) டாக்டர்.நாயர் காலமானார்.
Golders Green என்ற இடத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.
தான் வாழ்ந்த 51 ஆண்டுக் காலத்தில் திருமணம் என்ற எண்ணம் கூட எழாமல் படிப்பு, பொதுவாழ்வு என்று திறந்த புத்தகமாய் வாழ்ந்தார் டாக்டர் .நாயர்.
பல்வேறு இதழ்கள், சங்கங்கள், அய்ரோப்பிய தலைவர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாலும் காங்கிரசின் எந்தப் பிரிவு தலைவர்களும் டாக்டர்.நாயர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வில்லை என்பதே அவர் கொள்கை உறுதியை பறைசாற்றும்.
டாக்டர்.நாயரின் மறைவுக்குப் பின் அவர் எதிர்பார்த்த நீதிக்கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு சாதனைகளை, சமூகத்திலும், அரசியலும் தங்களுக்கு அளிக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தில் செய்து சாதனை படைத்தது.