சனி, 18 ஜூலை, 2020
*🌷ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப விநியோகம்: தனியார் கலைக்கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு*

*தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டுமென கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.*
*தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்து, அந்த திட்டத்தையும் 15ம் தேதி தொடங்கி வைத்தார்.*
*இதையடுத்து, கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 20ம் தேதி முதல் பெறப்படும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.*
*இந்நிலையில், தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் நேற்று காலையில் இருந்தே அச்சிட்ட விண்ணப்பங்களை விற்கத் தொடங்கி விட்டன.*
*இதை வாங்குவதற்காக மாணவர்கள் குவிந்தனர். கொரோனா தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்றாமல், கூட்டமாக விண்ணப்பங்களை வாங்கினர்.*
*இது குறித்து பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.*
*அதன்பேரில் கல்லூரிக் கல்வி இயக்ககம் நேற்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.*
*தமிழகத்தில் உள்ள 109 அரசு கல்லூரிகளில் 20ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.*
*இந்நிலையில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகங்கள் அச்சிட்ட விண்ணப்பங்களை தங்கள் விருப்பம் போல விற்பனை மற்றும் வினியோகம் செய்து வருவதாக புகார் பெறப்பட்டுள்ளது.*
*அதனால், உடனடியாக தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அச்சிட்ட விண்ணப்பங்களை வினியோகம் செய்வதை நிறுத்த வேண்டும்.*
*மேலும், 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தான் விண்ணப்பங்களை பெற வேண்டும்.*
*இது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.*
*இதற்கிடையே, தனியார் கல்லூரிகள் நேற்று மதியத்திற்குள் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை விற்று தீர்த்தன.*
*இந்த உத்தரவு வந்ததும் விண்ணப்ப விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளன.*

*🟣ஜூலை 18,* *வரலாற்றில் இன்று:கவிஞர் வாலி நினைவு தினம்.*
ஜூலை 18, வரலாற்றில் இன்று.
தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட உலகில் புகழ்பெற்று விளங்கிய பாடலாசிரியருமான கவிஞர் வாலி 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர். பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், ஓவியர் என பன்முகம் கொண்டவர்
திருச்சி, திருவரங்கத்தில் 29 அக்டோபர், 1931இல் பிறந்த இவரது இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன். வாலியின் காதல் மனைவி பெயர் ரமணத்திலகம். ரமண திலகம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். வாலி-ரமண திலகம் தம்பதிக்கு பாலாஜி என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார்.
சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன்.
ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.
திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன், ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி, ஒரே ஒரு கிராமத்தில் இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மாருதிராவோடு சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
அவர் நடித்த திரைப்படங்களுள் பொய்க்கால் குதிரை, `சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’, ஆகியவை குறிப்பிடத்தக்கவை . மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் திருவரங்கத்தில் தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி அன்றுதிருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா. வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!
தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.
சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்க்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர்.எப்பவும் `என்ன ஆண்டவனே’ என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!
வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை, சில்க்காக இருந்தால் சந்தன நிறம், இவை தவிர வேறு விருப்பம் இல்லை!
எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்! வாலியின் பாடல்கள் வயதானவர்களை மட்டுமின்றி இன்றைய 20 வயது இளைஞர்களையும் கவரும் வண்ணம் இருக்கிறது. இது அவரது வெற்றியாகும்
5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்று இருக்கிறார்.
பத்மஸ்ரீ, பாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத்தமிழ் மாநாடு போன்றவற்றின் இவரது பங்கும் உண்டு!
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார்.
கவிஞர் வாலி நினைவு தினம் இன்று.

*🌐ஜூலை 18, வரலாற்றில் இன்று:இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளான ரோகிணி விண்ணில் செலுத்தப்பட்ட தினம் இன்று (1980).*
ஜூலை 18, வரலாற்றில் இன்று.
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளான ரோகிணி விண்ணில் செலுத்தப்பட்ட தினம் இன்று (1980).
அப்துல்கலாம் நகத்தைக் கடித்துக்கொண்டு டென்ஷனாக இங்கும் அங்குமாக அலைந்துக் கொண்டிருந்தார்.
“எல்லாம் தயாரா? பிரச்சினை ஒன்றுமில்லையே?” திரும்பத் திரும்ப உதவியாளர்களை கேட்டுக்கொண்டே இருந்தார்.
“எல்லாம் சரியாக இருக்கிறது சார். நிச்சயமாக நாம் வெல்வோம்” அவர்களது பதிலில் திருப்தியடைந்தாலும் ஏதோ ஒன்று அவருக்கு இடித்துக்கொண்டே இருந்தது.
ஆகஸ்ட் 10, 1979. ஸ்ரீஹரிகோட்டா. முப்பத்தைந்து கிலோ எடையுள்ள ரோகிணி பூமியின் சுற்றுப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். ரோகிணி என்பது சோதனை சேட்டிலைட். பிற்பாடு இந்தியா செலுத்த திட்டமிட்டிருக்கும் சேட்டிலைட்டுகளின் தலைவிதியை இந்த நாள்தான் தீர்மானிக்கப் போகிறது. திட்ட இயக்குனராக இருந்த அப்துல்கலாமும் அவரது குழுவினரும் ஏழு ஆண்டுகளாக இரவுபகல் பாராமல் இந்நாளுக்காக காத்திருந்தார்கள். 1980ல் ரோகிணியை நிலைநிறுத்த வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் ஓராண்டு முன்பாகவே தயாராகி விட்டார்கள்.
ஏவுதளத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார் கலாம். ரோகிணியை ஏவுவதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்பாக எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஆராய்வதற்காக கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்தார். கலாம் நினைத்ததைப் போலவே ஏதோ வில்லங்கம். ‘சில கட்டுப்பாட்டு கருவிகள் முறையாக இல்லை’ என்று கம்ப்யூட்டர் ஆட்சேபம் தெரிவித்தது. இந்த நாளின் வெற்றிக்காக நாடே காத்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. தன்னுடைய குழுவில் இருந்த நிபுணர்களை கலந்தாலோசித்தார்.
“கவலைப்படாதீர்கள் சார். ஒன்றுக்கு நாலு முறை ரோகிணியை பரிசோதித்துவிட்டோம். தேவையான அளவு எரிபொருள் இருக்கிறது. எல்லாம் சரியாகவே இருக்கிறது. கம்ப்யூட்டரில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம்”
அரைமனதுடனேயே கம்ப்யூட்டரின் ஆட்சேபணையை புறந்தள்ளிவிட்டு, ரோகிணியை ஏவினார் கலாம். முதல் கட்டத்தில் எல்லாமே சரியாக அமைந்தது. குழுமியிருந்த அறிவியலாளர்கள் முகத்தில் வெற்றிக்களிப்பு. இரண்டாவது கட்டத்தில் ஏதோ பிரச்சினை. சுற்றுப்பாதையில் ரோகிணி நிலைநிறுத்தப்படாமல் வீழ ஆரம்பித்தது. அன்று வங்காளக்கடலில் வீழ்ந்தது ரோகிணி மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களின் ஏழாண்டு பிரதிபலன் பாராத உழைப்பும், இலட்சியமும் கூடத்தான். கலாம் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
காலை ஏழு மணிக்கு இச்சம்பவம் நடக்கிறது. ஏழேமுக்கால் மணிக்கு பத்திரிகையாளர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் பிரத்யேக பத்திரிகைச் சந்திப்புக்காக குவிந்துவிட்டார்கள். இந்தியப் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அவர்களில் சர்வதேசப் பத்திரிகையாளர்களும் கலந்திருந்தார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) அப்போதைய தலைவர் பேராசிரியர் சதிஷ் தவான் பத்திரிகையாளர்களை எதிர்கொண்டார். ரோகிணியின் தோல்விக்கு தானே தார்மீக பொறுப்பேற்றுக் கொண்டார்.
“எங்கள் குழுவினர் மிகக்கடுமையாக உழைத்தனர். அவர்களுக்கு இன்னும் கூடுதலான தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படுகிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஒரே ஆண்டில் எங்கள் குழு மாபெரும் வெற்றியை ஈட்டும்”
கலாமுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது. திட்ட இயக்குனர் என்கிற அடிப்படையில் இத்தோல்விக்கு அவர்தான் பொறுப்பு. நிறுவனத்தின் தலைவர் என்கிற அடிப்படையில் தன்னுடைய குழுவினரை காப்பாற்றும் வகையில் நாகரிகத்தைக் காட்டிய தவான் அவரது மனதில் உயர்ந்து நின்றார்.
மீண்டும் ஆரம்பத்தில் இருந்து உழைக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு நாளின் ஒரு நொடியையும் வீணாக்காமல் அசுரத்தனமான உழைப்பு. ஜூலை 18, 1980ல் தயாரானார்கள். உலகமே ஸ்ரீஹரிகோட்டாவை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இம்முறை நாடே போற்றும் வெற்றி. இனி விண்வெளியையும் ஆள்வோம் என்று இந்தியா உலகுக்கு அறிவித்தது. வெற்றிச் செய்தியை நேரிடையாக கேட்க இம்முறை முன்பைவிட கூடுதலாக பத்திரிகையாளர்கள் சதீஷ்தவானை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். தவான் கலாமை அழைக்கிறார்.
“உன் வாயால் வெற்றியை சொல்லு”
தழுதழுத்த நிலையில், கண்களில் ஈரம் கசிய அன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் கலாம். எப்படி வென்றோம் என்று ஒட்டுமொத்த கதையையும் சொன்னார்.
பின்னாளில் இந்த நிகழ்வைப் பற்றி சொல்கிறார் கலாம்.
“அந்நாளில் நான் ஒரு முக்கியமான பாடத்தை கற்றேன். ஒரு நிஜமான தலைவன் தோல்வி காணும்போது அத்தோல்வியை தன்னுடையதாக கருதுவான். வெற்றி எனும்போது அது தன்னுடைய குழுவின் வெற்றியாக கொண்டாடுவான். உலகின் மிகச்சிறந்த நிர்வாகவியல் பாடமான இதை நான் எந்தப் புத்தகத்திலும் வாசித்ததில்லை. என்னுடைய அனுபவத்தின் வாயிலாக கற்றேன்”

வெள்ளி, 17 ஜூலை, 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)