திங்கள், 27 ஜூலை, 2020

*உரிய முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது?கல்வித்துறை குழப்பத்துறையாக மாறி அச்சுறுத்துகிறதா?

தமிழ்நாட்டின் முன்னாள் கல்விஅமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்களின் முகநூல் பதிவிலிருந்து...


“மரமேறி விழுந்தவனைக் கடா ஏறி மிதிச்சதாம்!”

“ எங்களிடம் கேட்காமல் உயர்கல்வி படித்துவிட்டார்கள்”,  என்று ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது தொடக்கக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, எனக்கு மேலே இருக்கும் பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது.

ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று காரணம் சொல்லி, அவர்கள் மீதுக் கல்வித்துறையே நடவடிக்கை மேற்கொள்வதென்பது நகை முரணாகத் தோன்றினாலும், அனுமதி பெறவில்லையெனச் சில விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஏற்கனவே இந்த அரசால், ஆசிரியர் சமுதாயம் பல வழிகளில் பழிவாங்கப்பட்டு, பலர் மீது குற்ற வழக்குகள் புனையப்பட்டு, மிகுந்த துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றது. அவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என எவ்வளவோ வலியுறுத்தியும் ஏற்றுக்கொள்ளாமல்  இன்றுவரை தமிழக அரசு பாராமுகமாகப் பிடிவாதப் போக்குடன் நடந்து கொள்கிறது.

இப்போது “ கொரொனா” நோய்த்தொற்றால் கடந்த நான்கு மாதங்களாக நாடே அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், ஏதோ ஒரு சப்பைக் காரணத்தைக் காட்டி ஐயாயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல; ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும் ஏற்க முடியாத செயலும் கூட!

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடனே தலையிட்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஏற்கனவே அவதிக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கிடும் தொடக்கக் கல்வித்துறையின் இந்த ஆணையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

கல்வித்துறை, ஒருபோதும் கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது!

“வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்”

நினைவிற் கொள்க!

செய்தி: தினகரன் / தந்தி டிவி

*🌟உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பாடப்பிரிவு தேர்வு செய்ய உதவி எண்கள் அறிவிப்பு.*

*🌟உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பாடப்பிரிவு தேர்வு செய்ய  உதவி எண்கள் அறிவிப்பு.*

NHIS - New Claim Form...

ஜூலை 27, வரலாற்றில் இன்று.இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று (1922).

ஜூலை 27, வரலாற்றில் இன்று.

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று (1922).

உண்ணும் உணவு குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக ரத்தத்தில் சென்று மாற்றமடைகிறது என்பதையும், அந்தச் சர்க்கரையின் அளவை கணையத்தில் சுரக்கும் இன்சுலின் கட்டுப்படுத்துகிறது என்பதையும் 1869ம் ஆண்டு ஜெர்மனை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் பால் லாங்கர்ஹேன்ஸ் என்பவர்தான் முதலில் கண்டுபிடித்தார். சாதாரணமாக இறந்தவர்களின் உடலையும் நீரிழிவு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலையும் ஆராய்ச்சி செய்தபோது நீரிழிவாளர்களின் கணையத்தில் இருந்து ஏதோ ஒரு திரவம் குறைவாக சுரப்பதைக் கண்டுபிடித்தார்.

பால் லாங்கர்ஹேன்ஸின் கருத்தை உறுதிப்படுத்துவதற்காக, 1889ல் ஜெர்மனியை சேர்ந்த ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி மற்றும் ஜோசப் வான்மெரிங் ஆகிய இரு மருத்துவர்கள் ஒரு நாய்க்கு கணையத்தை அகற்றிவிட்டு, நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். கணையத்தை இழந்த பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, நாய் இறந்துபோனது. கணையத்தில் சுரக்கும் ஏதோ ஒரு வேதிப்பொருள்தான் இதற்குக் காரணம் என்று தெரிந்தது.

1910ம் ஆண்டு சர் எட்வர்ட் ஆல்பர்ட் ஷார்பே என்பவர், இந்த வேதிப்பொருளுக்கு இன்சுலின் என்று பெயர் வைத்தார். லத்தீன் வார்த்தையான Insula என்பதில் இருந்து Insulin என்ற வார்த்தையை உருவாக்கியவர் இவர். 1921ம் ஆண்டு டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் ஃப்ரெடரிக் பேண்டிங், சக மருத்துவர் சார்லஸ் பெஸ்ட் இருவரும் 10 நாய்களின் கணையத்தை அகற்றிப் பாதுகாத்து வைத்து விட்டு, அவற்றுக்கு சர்க்கரை அளவு அதிகமாகும் என்பது தெரிந்தே காத்திருந்தார்கள்.

சர்க்கரை அளவு அதிகமானவுடன் அகற்றப்பட்ட கணையத்தில் இருந்து இன்சுலினை எடுத்து, நாய்களுக்கு ஊசியின் வழியாக செலுத்தினார்கள். இன்சுலின் செலுத்தியவுடன் நாய்கள் ஆரோக்கியமாக இருந்தன. ஆகவே, இன்சுலின் சுரப்பு குறைந்தால் ஊசியாகப் போட்டுக்கொண்டு சமாளித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அடுத்து முயல் குட்டி, பசு, பன்றி என விலங்குகளின் கணையத்தில் இருந்து இன்சுலினை தயாரிக்க ஆரம்பித்தனர்.

1922ல், டொரோண்டோ மருத்துவமனையில் நீரிழிவுக்காக சிகிச்சைக்கு வந்த லியானார்ட் தாம்ஸன் என்ற டீன் ஏஜ் பையன்தான் இன்சுலின் ஊசி பயன்படுத்திய முதல் பயனாளர்! நாளடைவில் மிருக வதைக்கு எதிரான குரல்கள், அறிவியலின் வளர்ச்சி, இன்சுலினின் பிரமாண்ட தேவை போன்ற காரணங்களால் பயோடெக்னாலஜி, வேதியியல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் ஆய்வகத்திலேயே இன்சுலின் தயாரிக்கும் முறை இப்போது உருவாகிவிட்டது!

ஜூலை 27, வரலாற்றில் இன்று. ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று(1967).

ஜூலை 27,
வரலாற்றில் இன்று.

ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று(1967).

                 
ஏ.டி.எம்மை முதன் முதலில் உருவாக்கியவர் ”ஜான் ஷெப்பர்ட் பாரன்”. இந்த ஏ.டி.எம் இயந்திரம் உருவான கதை சுவராஸ்யமானது.
ஒரு நாள் அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது,வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் பாரன்.
வீடு திரும்பிய பாரன் குளிக்க சென்றார்.
குளித்துகொண்டிருந்த பாரனுக்கு இன்றைக்கு அவசரதேவைக்கு பணம் எடுக்கமுடியாமல் போனதைப் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சிந்தனையின் போது உதித்ததுதான் இந்த ஏ.டி,எம், இயந்திரம்.


1967ஆம் ஆண்டு ஜூலை் 27 அன்று வடக்கு லண்டனில் “பார்கிளேஸ் வங்கியில்” பாரன் உருவாக்கிய ஏடிஎம் முதல் முதலில் நிறுவப்பட்டது.

 ரசாயனக் குறி இடப்பட்ட சிறப்புக் காசோலையையும்,
ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” எண்ணையும் கொண்டு அந்த இயந்திரத்தில் இருந்து பணம் பெற முடிந்தது.
ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” நம்பரை நினைவில் வைத்துக்கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது, எனவே அதை 4 இலக்கம் கொண்ட எண்களாக மாற்றி தாருங்கள் என்று மனைவி ”கரோலின்” கூறியதை ஏற்று, ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” நம்பரை நான்கு இலக்கமாக குறைத்தார் பாரன்.

இத்தனைக்கும் சொந்தக்காரரான ”ஜான் ஷெப்பர்ட் பாரன்” இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது மற்றுமொரு சிறப்பு.

ஜூலை 27, வரலாற்றில் இன்று. தமிழ்நாட்டின் 20ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று(1876)

ஜூலை 27, வரலாற்றில் இன்று

தமிழ்நாட்டின் 20ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை  பிறந்த தினம் இன்று(1876)
.

குமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார் ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றார்.

திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் ஆசிரியர், திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் என 36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார்.

இவரது இலக்கிய வெளிப்பாட்டில் ஒரு அறிவியல் கண்ணோட்டம் பிரதிபலித்தது. நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியதால் ‘விடுதலைக் கவிஞர்’ எனவும் போற்றப்பட்டார்.

‘ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள் இல்லையே என்றுதான் நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடல்கள் எழுதினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 ‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’, ‘உமர்கய்யாம் பாடல்கள்’, ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’, ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’, ‘கதர் பிறந்த கதை’, ‘குழந்தைச் செல்வம்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது ‘தேவியின் கீர்த்தனங்கள்’ என்ற இசைப்பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பல பாடல்களை, இசைக் கலைஞர்கள் மேடைகளில் விரும்பிப் பாடினார்கள்.

இவரது சொற்பொழிவுகள் ‘கவிமணியின் உரை மணிகள்’ என்ற நூலாக வெளிவந்தது. சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர் எட்வின் ஆர்னால்டின் ‘தி லைட் ஆஃப் ஏஷியா’ என்ற படைப்பைத் தழுவி ‘ஆசிய ஜோதி’ என தமிழில் எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். ‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராகப் பணியாற்றினார். ‘கம்பராமாயணம் திவாகரம்’, ‘நவநீதப் பாட்டியல்’ உள்ளிட்ட பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்துள்ளார். ‘தேசியக் கவிஞர்’, ‘குழந்தைக் கவிஞர்’, ‘சமுதாயக் கவிஞர்’, ‘விடுதலைக் கவிஞர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’ என்றெல்லாம் போற்றப்பட்டார்.

‘பைத்தியக்காரன்’, ‘மணமகள்’, ‘தாயுள்ளம்’, ‘வேலைக்காரன்’, ‘கள்வனின் காதலி’, ‘கண்ணின் மணிகள்’, ‘நன் நம்பிக்கை’ ஆகிய திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

 ‘தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை’ என நாமக்கல் கவிஞர் பாராட்டியுள்ளார். 1940இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உமாமகேஸ்வரன் பிள்ளை இவருக்கு ‘கவிமணி’ பட்டம் வழங்கினார்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர்களுள் ஒருவருமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954-ம் ஆண்டு, 78ஆவது வயதில் காலமானார்.
இவர் பிறந்த ஊரில் நினைவு இல்லம்
அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவர் நினைவாக 2005இல் தபால் தலை வெளியிட்டது.

ஜூலை 27, வரலாற்றில் இன்று. 💐டாக்டர். அப்துல் கலாம் நினைவு தினம் இன்று💐

ஜூலை 27,
வரலாற்றில் இன்று.

💐டாக்டர். அப்துல் கலாம் நினைவு தினம் இன்று💐

✈ ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்ற இயர்பெயர் கொண்ட கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் பிறந்தார்.🌹

✈ சென்னையில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். 2002இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 922,884 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற முதல் விஞ்ஞானி இவர்.🌹

✈ இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்பட்ட இவர் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.🌹

ஞாயிறு, 26 ஜூலை, 2020

*தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம்.*

*தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம்.*

ஜூலை 26, வரலாற்றில் இன்று. ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம் இன்று(1856).

ஜூலை 26, வரலாற்றில் இன்று.

ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம் இன்று(1856).

*அயர்லாந்து நாடக ஆசிரியர்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே.
இவர் நோபல் பரிசையை மறுத்தவர்.

ஜார்ஜ் பெர்னாட் ஷா 1856 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அயர்லாந்தின் டப்ளின் நகரில் பிறந்தார்.பெற்றோர் ஜார்ஜ் கார் ஷ -லூசிண்டா எலிசபெத் ஷா.இவரின் தாய் பாடகி.இவரின் தந்தை அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தார். இவரது தந்தை குடித்து குடித்தே பணத்தை செலவழித்தார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது.இவரின் தாய் இவரை அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்தனர்.இவருக்கு இவரின் அம்மா தரும் ஒரு பவுண்டு பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டார்.இவருக்கு பத்து வயது நிறைவதற்குள் பைபிள் முதல் ஷேக்ஸ்பியரின் நாடகம் வரை நிறைய புத்தகங்களை வாசித்து முடித்திருந்தார். சிறு வயதில் தாயிடம் இசையைக் கற்றார்.

இவர் குடும்ப வறுமை நிலமைக்கு தந்தையின் குடிப்பழக்கம்தான் காரணம் என்பதை சிறுவயதிலேயே உணர்ந்தார்.அதனால் மதுவைத் தொடுவதில்லை என்று உறுதி பூண்டார்.இவரின் தந்தை இறந்து போனபோது அவரது இறுதிச்சடங்கில்கூட கலந்து கொள்ளவில்லை குடும்ப உறுப்பினர்கள். இவரின் குடும்ப வறுமை காரணமாக பத்தாவது வயதில்தான்  பள்ளிச்சென்று கல்வி கற்றார்.இவரால் நான்கு ஆண்டுகள்தான் பள்ளியில் படிக்க முடிந்தது.

இவரின் பதினைந்தாவது வயதில் வேலைப் பார்க்கத் தொடங்கினார்.இருபதாவது வயதில் இங்கிலாந்துச்சென்றார்.நிறைய எழுதத் தொடங்கினார். தன்னுடைய எழுத்துகளை ஆர்வத்துடன் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார். ஆனால் அனுப்பபட்ட வேகத்திலேயே அது திரும்பி வந்துவிடும்.அவை திரும்பி வந்தாலும் தொடர்ந்து எழுதினார். பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வெளியாகத் தொடங்கின.

இவர் தன் தாயிடமிருந்து  கற்றுக்கொண்ட இசையை பயன்படுத்தி இசை விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார்.பின்னர் நாடக விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார்.நாடக விமர்சனங்களுக்கு பின்பு தாமே நாடங்களை எழுதத் தொடங்கினார்.

விடோயர்ஸ் ஹவுசஸ் என்ற முதல் நாடகத்தை  எழுதினார்.இதன் பின்னர் ,Candida, The Devil's Disciple, Arms and the Man, Saint Joan, Pygmalion, The Apple Cart, The Doctor's Dilemma, போன்ற நாடகங்கள் இவருக்கு பெரும் புகழ் சேர்த்தன. இவரது பல படைப்புகள் மேடைகளில் அரங்கேறின.

அந்த காலக்கட்டத்தில் லண்டன் நாடக மேடைகள் பொழுதுபோக்கு அரங்குகளாக இருந்தன. அதை நீதி, அரசியல், பொருளாதார விவகாரங்களை எடுத்துக்கூறும் மன்றங்களாக மாற்றி அமைத்தார் பெர்னாட்ஷா. இவரது அனைத்து படைப்புகளுமே சமூகத்தில் நிலவிவரும் சிக்கல்களைப் பிரதிபலித்தன.இவர் புரட்சிகரமான கருத்துகளை எவருக்கும் அஞ்சாமல் எழுதினார்.

இவரை இங்கிலாந்தின் பிளேட்டோ என்று வருணித்தது இலக்கிய சமூகம்.இவர் தன் எழுத்தில் கேலி, நையாண்டி, நகைச்சுவை ஆகியவற்றை  கலந்து கொடுத்தார். எழுத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இவர் நகைச்சுவையையும், நையாண்டியையும்  பயன்படுத்துவார். பெரிய சபைகளில்கூட தைரியமாக கேலியும், நையாண்டியும் செய்யும் துணிச்சல் இவரிடம் இருந்தது.

ஷேக்ஸ்பியருக்கு அடுத்து ஆங்கில இலக்கிய உலகம் சந்தித்திருக்கும் மிகச் சிறந்த நாடக ஆசிரியர் பெர்னாட்ஷா.இவர் அறுபத்து மூன்று நாடகங்களை எழுதினார்.இவர் ஒரு நாவலாசிரியர், விமர்சகர், கட்டுரையாசிரியர் மற்றும் தனியார் கடிதவியலாளர்.இவர் 2,50,000 கடிதங்களை எழுதியுள்ளார்.

சிட்னி வெப் மற்றும் பீட்ரைஸ் வெப் மற்றும் க்ரஹாம் வால்லஸ் ஆகிய ஃபேபியன் சொசைட்டி உறுப்பினர்களுடன் இணைந்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தை 1895 ஆம் ஆண்டில் பெர்னாட் ஷா நிறுவினார்.

1925ஆம் ஆண்டில்  இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெர்னாட் ஷாவிற்கு வழங்கப்படுவதாக அறிவித்தது நோபல் குழு.இவருக்கு வந்த நோபல் பரிசை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்தார்.பரிசுத் தொகை இவர் வீடு தேடி வந்தபோது அதனை அப்படியே இலக்கியப் பணிகளுக்காக கொடுத்து விட்டார்.

பெர்னாட் ஷா நோபல் பரிசை மட்டும் வெறுக்கவில்லை. கௌரவ பட்டம், பதக்கம், பாராட்டு விழா, புகழுரை போன்றவற்றையும் அறவே வெறுத்தார்.தனது கடைசி நிமிடம் வரை படிப்பதையும், எழுதுவதையும் கைவிடவில்லை..நல்ல நகைச்சுவை உணர்வும், சைவ உணவே விரும்பி உண்டது இவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தன. புகைப்பிடிக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ அறவே இல்லை அதனால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார்.

இவர்  1950-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி தமது 94-ஆவது அகவையில் காலமானார்.

பெர்னாட் ஷாவின் பொன்மொழிகள்:

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.

 சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியை ஈட்டுகின்றனர்.

 தன்னைத்தானே சீர்த்திருத்திக் கொள்பவனே உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி.

ஒன்றுமே செய்யாமல் வெட்டியாய் கழிக்கும் ஒரு வாழ்க்கையை விட பிழைகள் செய்து வாழும் வாழ்க்கை பயன்மிக்கது, பெருமைமிக்கது.

ஜூலை 26,வரலாற்றில் இன்று.இந்தியாவில் முதன்முதலாக பார்ப்பனரல்லாத மக்களுக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணை 1902, ஜூலை 26இல் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் கோலாப்பூர் சமஸ்தான மன்னர் சத்ரபதி சாகுமகராஜா.

ஜூலை 26,
வரலாற்றில் இன்று.


இந்தியாவில் முதன்முதலாக பார்ப்பனரல்லாத மக்களுக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணை 1902, ஜூலை 26இல் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் கோலாப்பூர் சமஸ்தான மன்னர் சத்ரபதி சாகுமகராஜா.

சாகு மகாராஜா இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததும் பார்ப்பனர்கள் மற்ற சமஸ்தான மன்னர்கள் இவரைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு  இடஒதுக்கீடு தந்து தொலைத்தால் என்ன செய்வது என அஞ்சினர். சமஸ்தான மன்னர்களிடம் இடஒதுக்கீடு திட்டத்தைப் பற்றி குறைகூறினர். மன்னர்களும் பார்ப்பனர்கள் குடைச்சல் கொடுத்தால் தாங்கமுடியாதே என்றும், பார்ப்பனரல்லாதார் இடஒதுக்கீடு கேட்டு போராடத்தில் இறங்கிவிடக்கூடாதே என்றும் கவலைப்பட்டனர். எனவே எப்படியாவது சாகு மகாராஜாவை மனம்மாற்றி இடஒதுக்கீட்டை கைவிட வைக்க சிலர் விரும்பினர்.

சங்லி எனும் சமஸ்தான மன்னர் பட்வர்தன் தன் பார்ப்பன வழக்கறிஞர் கண்பத்ராவ் அபயங்கர் என்பரை சாகு மகாராஜாவை கன்வின்ஸ் பண்ண அனுப்பினார்.  அபயங்கர் கோலப்பூர் சென்று சாகு மகாராஜாவை சந்தித்து "எங்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) ஏன் இத்தகு அநீதியை (பிற்பட்டோர் இடஒதுக்கீடு) இழைக்கிறீர்கள்?" என்று கேட்டார்.  இடஒதுக்கீட்டை கைவிடக் கோரிக்கை வைத்தார்.

சாகு பொறுமையாக அபயங்கள் சொல்வதைக் கேட்டார். பிறகு வாருங்கள் பேசிக்கொண்டே ஒரு முக்கிய இடத்துக்குக் செல்வோம் என வழக்கறிஞரை தன் குதிரைலாயத்திற்கு அமைத்துக் சென்றார். குதிரைகளுக்கு அது தீவனம் வைக்கும் நேரம். ஒவ்வொரு குதிரையின் வாயோடு தீவனம் வைக்கப்பட்ட கூடை பிணைக்கப்பட்டிருந்தது. அது அது அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தன. மகாராஜா எல்லா குதிரைகளின் முகத்தில் பிணைக்கப்பட்ட தீவனக் கூடைகளை கழட்டச்சொன்னார். பணியாளர்கள் உடன் கழட்டினர். இப்போது ஒரு விரிப்பை விரித்து அதில் தீவனத்தை கொட்டக் சொன்னார். பின் ஒரே நேரத்தில் குதிரைகளை அவிழ்த்துவிடச்சொன்னார்.

குதிரைகள் பாய்ந்து கொண்டு விரிப்பில் இருந்த தீவனத்தை தின்ன ஓடின. வலிமையான குதிரைகளும்  வளர்ந்த குதிரைகளும் பாய்ந்து ஓடி விரிப்பில் இருந்த தீவனத்தை தின்ன ஆரம்பித்தன. நலிவுற்ற வலிமையற்ற குதிரைகள் தீவனத்தை உண்ண முயன்றும் வலிமையான குதிரைகள் நெட்டித் தள்ளியும் பின்னங்கால்களால் உதைத்தும் வலிமையற்றவையைத் துரத்தின.சிறிது நேரத்தால் நோஞ்சான் குதிரைகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு ஒதுங்கி அமைதியாக நின்று தீவனத்தையே பார்த்தவண்ணம் இருந்தன. இதை எல்லாம் பார்ப்பன வழக்கறிஞர் அபயங்கர் பார்த்தார்.

இப்போது அபயங்கரிடம் சாகு மகாராஜா பேசத்தொடங்கினார். திரு.அபயங்கர், என்ன செய்யலாம் ? வலிமையற்ற குதிரைகளை சுட்டுக்கொன்றுவிடலாமா? அப்படி செய்வது சரியா? அதனால்தான் நான் எவ்வொரு குதிரைக்கும் அதற்கான தீவனத்தை அது மட்டுமே உண்ணும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். இந்த ஏற்பாடு இல்லாமல் இப்போது பார்த்தோமே அது போல் தீவனத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு அனைத்து குதிரைகளுக்கும் போட்டியை உருவாக்கினால் வலிமையான குதிரைதான் ஜெயிக்கும். வலிமை இல்லாதது பட்டினி கிடக்கும். இதற்கு மாற்றாக நான் எவ்வொரு குதிரைக்கும் உரிய தீவனத்தை உத்ரவாதப்படுத்தும் ஏற்பாட்டுக்குப் பெயர்தான் இடஒதுக்கீடு.

இந்த விலங்குகளுக்கான ஏற்பாட்டை நான் என் குடிமக்களுக்கு செய்கிறேன்.   நீங்கள் (பார்ப்பனர்கள்) மனிதர்களில் சாதியை உருவாக்கி சூத்திரர்களையும் ஆதி சூத்திரர்களையும் காலங்காலமாக விலங்குகளைப்போல நடத்தி வந்துள்ளீர்கள். இப்போது அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையைப் பெற அவர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன்" என்றார். அபயங்கரால் எதுவும் பேசமுடியவில்லை. மன்னரிடம் விடைபெற்றுக்கொண்டார்.