சனி, 8 ஆகஸ்ட், 2020

தாய்மொழியை பலிகொடுத்துவிடாதீர்!தாய்மொழியை அழிவின் விளிம்பில் நிறுத்திவிடாதீர்!தாய்மொழியை பழிச்சொல்லுக்கும்,இழிநிலைக்கும் உள்ளாக்கி விடாதீர்!நல்லதொரு வேண்டுகோள்!கீழ்க்கண்ட தகவல்தொகுப்பில்! நன்றி:ஆ.பகலவன்.

தாய்மொழியை பலிகொடுத்து
விடாதீர்!
தாய்மொழியை  அழிவின் விளிம்பில் நிறுத்திவிடாதீர்!
தாய்மொழியை 
பழிச்சொல்லுக்கும்,
இழிநிலைக்கும் உள்ளாக்கி விடாதீர்!
நல்லதொரு வேண்டுகோள்!
கீழ்க்கண்ட தகவல்தொகுப்பில்! 

நன்றி:ஆ.பகலவன்
------------------------------------------


இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் நிலையை பாருங்களேன்
பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி.

உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான் அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்
வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி,பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது

அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி

அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான் ஆனால் தாய்மொழி ஹரியாணி

ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி ஆனால் தாய்மொழி கள் ராஜஸ்தானி,மார்வாரி,மேவாரி,

மத்யபிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி ஆனால் தாய்மொழிகள் உருது,மால்வி,நிமதி,அவதி,பகேலி

காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது, ஜம்முவின் தாய்மொழி டோக்ரி,பாடி, லடாக்கின் மொழி லடாக்கி,ஆட்சிமொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது

சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி,கோர்பா, ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி,

ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி,சந்த்தலி
ஆட்சி மொழி இந்தி

மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன

இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி
வெறும் வாய்மொழியாக கற்பிக்கப்படுவதோடு சரி கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.

சரி மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை
தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன.
சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன

பிறகெதற்கு நம்மீது மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிறார்கள் என்றால் இந்தி பேசும் மாநிலத்தினருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதும்,தொழில் மேற்கொள்வதும் ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்வதும்கூட எளிமையாக இருக்கவேண்டுமல்லவா

நான் உன்னோடு தொடர்புகொள்ள எனக்குச் சிரமமாக இருக்கிறது அதனால் நீ என் மொழியை கற்றுக்கொள் என்பது எவ்வளவு திமிரான சர்வாதிகாரம் அந்தச் சர்வாதிகாரம்தான் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது புதிய. கல்விக் கொள்கை வாயிலாக ...

- தோழர் ஆ. பகலவன்

*🖥️தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம்.(இணைய வழி) நிகழ்வுகள்.நாள்:07.08.2020.*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம்.(இணைய வழி) நிகழ்வுகள்.நாள்:07.08.2020.
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*  

*நாமக்கல் மாவட்டம்*
 *(கிளை)*

*********************
 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட அமைப்பின்
*விரைவு மாவட்ட செயற்குழுக்*
*கூட்டம்* இணையவழியில்
07.08.2020 ( வெள்ளி) பிற்பகல் 04.30 மணி முதல் பி.ப 06.00 மணி வரை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு.க.ஆசைத்தம்பி
தலைமை தாங்கினார்.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் பாவலர்.திரு.க.மீ. அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்டு 15 இல் அனைத்து ஒன்றியங்களிலும்  
பாவலர் அவர்களின் படத்திறப்பு மற்றும் இயக்க கொடியேற்றி  நலத்திட்ட உதவிகள் வழங்கிடுவது என்று முடிவாற்றப்பட்டது.

2.தேசிய கல்வி கொள்கை 2020-ஐ தமிழக அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும்.


இக்கூட்டத்தில் 
மாநிலத்தலைவர் மன்றம் திரு. நா.சண்முகநாதன் சிறப்புரையாற்றினார்.

புதிய கல்விக் கொள்கையின் பேராபத்துகளை 
 மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் முன்வைத்தார்.

இக்கூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் திரு.வெ.பாலமுரளி, மாவட்டத் துணைத் தலைவர்
திரு.வெ.ராமச்சந்திரன், மாவட்ட துணைச்செயலாளர்கள் திரு.வெ.வடிவேல், திருமதி.து.லதா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர்
 திருமதி.கு.பாரதி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் திருமதி.பொன்.திலகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ், 
 பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.பி.கண்ணன்
ஒன்றியச் செயலாளர்கள்
திரு.சி.கார்த்திக் (திருச்செங்கோடு)
 திரு.க.சேகர் (பரமத்தி ) திரு.அ.ஜெயக்குமார் (நாமக்கல்) 
திரு.ப.சிவக்குமார் (எலச்சிபாளையம்)
திரு.இர.ஜெகந்நாதன் (வெண்ணந்தூர்)
திரு.கா.சுந்தரம் (சேந்தமங்கலம்) திரு.கொ.கதிரேசன் (புதுச்சத்திரம்) திரு.சி.மோகன்குமார் (நாமகிரிப்பேட்டை) திரு.இரா.செல்வராசு (எருமப்பட்டி) 
திருமதி.கு.லட்சுமி (இராசிபுரம்) ஆகியோர் பங்கேற்றனர்.



மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம் (கிளை)

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

*✍️சுதந்திர தின கட்டுரைப்போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு.இணையதளம் வாயிலாக பதிவுகள் மேற்கொள்ள தேதி அறிவிப்பு.*

*✍️சுதந்திர தின கட்டுரைப்போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு.இணையதளம் வாயிலாக பதிவுகள் மேற்கொள்ள தேதி அறிவிப்பு.*

*📘தமிழ்நாடு அரசு அடிப்படை விதிகள்-தற்காலிகமான அரசு பெண் பணியாளர்களுக்கு நிரந்தரமான அரசு பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று மகப்பேறு விடுப்பு 270 நாட்களாக உயர்த்தி அரசாணை 91.நாள்:28.07.2020 வெளியீடு.*

*📘தமிழ்நாடு அரசு அடிப்படை விதிகள்-தற்காலிகமான அரசு பெண் பணியாளர்களுக்கு நிரந்தரமான அரசு பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று மகப்பேறு விடுப்பு 270 நாட்களாக உயர்த்தி அரசாணை 91.நாள்:28.07.2020 வெளியீடு.*

*✍️தமிழ்ச் சமுதாயத்திற்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள்,தமிழ்ச் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி அவர்களின் பெயரில் விருதுகள் வழங்கி தமிழறிஞர்களை ஊக்குவித்தல் சார்பான தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்.574.நாள்:07.08.2020.*

*✍️தமிழ்ச் சமுதாயத்திற்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள்,தமிழ்ச் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையில்  போட்டிகளை நடத்தி அவர்களின் பெயரில் விருதுகள் வழங்கி  தமிழறிஞர்களை ஊக்குவித்தல்  சார்பான தமிழ் வளர்ச்சித்துறை செய்தி  வெளியீடு எண்.574.நாள்:07.08.2020.*

*📘✍️10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள் 10/08/2020 கிழமை வெளியீடு*

*📘✍️10 ஆம் வகுப்பு  தேர்வு  முடிவுகள்  திங்கள் 10/08/2020  கிழமை  வெளியீடு*

*பள்ளி மாணவர்கள் அளித்த கைபேசி எண்ணுக்கு எஸ் எம் எஸ் மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.*

*மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆக.17 முதல் 25ஆம் தேதி வரை https://t.co/fp0bAL1jCj ல் விண்ணப்பிக்கலாம்.*

*ஆகச்ட் 17 முதல் 25ஆம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.*

🌴 *BREAKING**🌻செப். 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை*

🌴 *BREAKING*

🌻செப். 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை

🌻செப்.15-க்குப் பின் 6-ல் இருந்து 9-ம் வகுப்பு வரையான வகுப்புகளை தொடங்க ஆலோசனை

🌻செப்டம்பரில் இருந்து முதல் 15 நாட்களில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை தொடங்க திட்டம்

🌻பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும்

🌻மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்

🌻ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படும்

🌻மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை திறப்பது பற்றி ஆலோசிக்கப்படவில்லை

🌻வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்தவும் பள்ளிகள் அறிவுறுத்தப்படும்

🌻ஒவ்வொரு ஷிப்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தல் 

🌻காலை 8 மணியில் இருந்து 11 மணி வரை ஒரு ஷிப்ட் மலை 3 வரை 2-வது ஷிப்ட் என வகுப்புகள் நடைபெறும்

*SunNews*

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

*🌟தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*

*🌟தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*

*தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*


*பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவில்லை. சூழல் சரியானதும், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.*


*பள்ளிக் கல்வித் துறை*

*📘✍️2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்*

*📘✍️2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்*

*2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.*

*ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்.*

*தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க முடியாது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள்,  கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.*

*2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது. அதற்கு அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.*

*தமிழகத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள், கல்வி பயில வசதியாக, முதல்வர் மூலம் கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது.*

*பள்ளியில் பாடங்கள் போதிப்பது போல், தனியார் டிவி சேனல்கள் மூலம் கல்வி போதிக்கப்படுகிறது. தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு, இந்தியாவே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது.*

*தமிழகத்தில் மட்டுமே, அரசுப் பள்ளிகளில் உயர் ரக ஆய்வகம் வசதி துவங்கப்பட்டுள்ளது. இதுவரை, 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.*

*இந்தியாவிலேயே, க்யூ ஆர் கோடு மூலம் கல்வி கற்கும் முறை, தமிழகத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.*

*புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய, நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவினரின் கருத்துகளை அறிந்து, என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை அரசு முடிவு செய்யும், என்று கூறியுள்ளார்.*

*📺கல்வித் தொலைக்காட்சி தவிர மற்ற தனியார் தொலைக்காட்சிகளில் வகுப்புகள் ஒளிபரப்பாகும் நேர அட்டவணை*

*📺கல்வித் தொலைக்காட்சி தவிர மற்ற தனியார் தொலைக்காட்சிகளில் வகுப்புகள் ஒளிபரப்பாகும் நேர அட்டவணை*