திங்கள், 28 செப்டம்பர், 2020

தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு...

தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து ஆணை அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது...

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் பதிவு...

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் பதிவு...

“ செருமுகம் நோக்கிச் செல்கெனெ விடுமே! “

சங்க இலக்கியங்களில் ஒன்றான புற நானூற்றில் உள்ள பல பாடல்களில் மேற்குறித்தவாறு முடியும்  புறப்பாடலும் ஒன்று. ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.

வீரத்தமிழ்மகள் ஒருத்தியின் தந்தை முதல்  நாள் நடந்த போர்க்களத்தில் ஒரு யானையை வீழ்த்தி மாண்டு போனார் ; நேற்று நடந்த போரிலோ அவளது கணவன் ஆநிரைகளை மீட்கப் போராடி மடிந்து போனான்; வாழ்க்கையின் இரு பெரும் அரண்களையும் இரண்டே நாட்களில் அடுத்தடுத்து இழந்த அந்தத் தாய்,  இன்றைக்கும் போர்ப்பறை கேட்டவுடன், அவ்வொலியில் பெருவிருப்பம் கொண்டவளாகி, வாழ்வின் பற்றுக்கோடாக இருக்கும் தன் ஒரே மகனையும் அழைத்து அவன் தலையை வாரி, வெண்ணிற ஆடையை உடுத்தி ,  கையில் வேலினைக் கொடுத்து இன்முகத்தோடு, “போர்க்களத்துக்குப் போ மகனே!” என்று அனுப்பி வைத்தாள் என்று அந்தப் பாடல் சொல்கிறது.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் 
கழித்து இப்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது.

கொரொனா நோய்த்தொற்று இன்னும் குறையாத நிலையில், தமிழ் நாட்டின் பள்ளிக் கல்வித்துறை, அக்டோபர் 1ம் தேதி முதல்  ‘ சந்தேக நிவர்த்திக்காக’ பள்ளிக்கூடங்களைத் திறப்பதாக அறிவித்து உள்ளது. ‘சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும், ஆலோசனையைப் பெறவேண்டியும்’தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள், தங்கள் சுய விருப்பத்தையும், முழு மனதுடனான தங்கள் ஒப்புதலையும் தெரிவித்து,  சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அனுப்பவேண்டிய கடிதத்தின் மாதிரியும் தற்போது வெளியிடப்பட்டு இருக்கின்றது. 

கடித வரிகளைப் படித்த போது, அதை அனுப்பி வைக்கப் போகும் ஒவ்வொரு பெற்றோரும்,  போர்க்களத்துக்குப் பெரு விருப்பத்தோடு  தானே தன் பிள்ளையை அனுப்பிவைத்த புறநானூற்றுத் தாயாக மாறவேண்டும் என்ற அவர்களின் விருப்பம் புலனாகிறது. அவ்வாறு நாம் கருதும் வகையில் இந்தக் கடிதத்தை வரைவு செய்தவர், நிச்சயம் ஒக்கூர் மாசாத்தியார் வழிவந்தவராகவே  இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடும்  உடன் எழுகிறது.😉

செப்டெம்பர் 28, வரலாற்றில் இன்று.🐕 உலக ரேபிஸ் நோய் தினம்

செப்டெம்பர் 28, வரலாற்றில் இன்று.

🐕 உலக ரேபிஸ் நோய் தினம் செப்டெம்பர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

🐕 ரேபிஸ் எனும் வைரஸ் வீட்டு விலங்கான நாய்களையும், பூனைகளையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிபட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் நோய் பரவுகிறது.

🐕 ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருமுறை ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

🐕 இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டெம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

செப்டெம்பர் 28, வரலாற்றில் இன்று.🍁 பசுமை நுகர்வோர் தினம்

செப்டெம்பர் 28,
 வரலாற்றில் இன்று.

🍁 பசுமை நுகர்வோர் தினம் செப்டெம்பர் 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

🍁 பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறு சுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

*🌟அரசாணை எண் 37 -இன் படி 10.03.2020 க்கு முன்னர் படிப்பை முடித்திருந்தால் அரசாணை பத்தி 6 -இன் படி அரசின் இசைவு பெற்று ஊக்க ஊதியம் பெறலாம்.*

*🌟அரசாணை எண் 37 -இன் படி 10.03.2020 க்கு முன்னர் படிப்பை முடித்திருந்தால் அரசாணை பத்தி 6 -இன் படி அரசின் இசைவு பெற்று ஊக்க ஊதியம் பெறலாம்.*

செப்டெம்பர் 27, வரலாற்றில் இன்று.கூகுள் தேடல் தளம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்று (1998).

செப்டெம்பர் 27, வரலாற்றில் இன்று.

கூகுள் தேடல் தளம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்று (1998).
 

உலகின் சிறந்த தேடுதல் தளமாக கருதப்படும் கூகுள் நிறுவனத்தின் 21ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

இணையத்தில் கூகுள் இல்லையென்றால் எதையும் பார்க்க முடியாது என்ற நிலை தான் பெரும்பாலான பயனர்களுக்கு. அவர்கள், கூகுள் தேடுபொறியை பயன்படுத்தி தான், எல்லா தகவல்களையும் தேடி பெறுவர்.

லாரி பேஜ், செர்ஜி பிரின் ஆகிய இருவரால் கடந்த 1998ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. 

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இருவரும் கல்லூரி ப்ராஜக்ட்டாக செய்த தேடுதல்தளம் செல்வம் கொழிக்கும் அட்சய பாத்திரமாக மாறத்தொடங்கியது.

செப்டெம்பர் 27,வரலாற்றில் இன்று.விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் (Bhagat Singh) பிறந்த தினம் இன்று.

செப்டெம்பர் 27,
வரலாற்றில் இன்று.


விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் (Bhagat Singh) பிறந்த தினம் இன்று.


பஞ்சாப் மாநிலம் பங்கா என்ற கிராமத்தில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) 1907இல் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலர் கொண்ட குடும்பம் அது. தந்தையும், இரு மாமாக்களும் சிறையில் இருந்து வெளிவந்த நாளில் பிறந்தார்.

தாத்தா ஆரிய சமாஜத்தில் ஈடுபாடு கொண்டவர். சில உறவினர்கள் கதர் கட்சியில் இருந்தனர். இதனால், தேசபக்தியும் சீர்திருத்த சிந்தனைகளும் அவரிடம் இயல்பாகவே இருந்தன. ‘கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையரை வேட்டையாட வேண்டும்’ என்று சிறு வயதிலேயே கனவு கண்டவர்.

ஆரிய சமாஜத்தின் டிஏவி (தயானந்த் ஆங்கிலோ வேதிக்) பள்ளியில் படித்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது அவருக்கு 12 வயது. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு சென்றவர், அப்பாவி மக்களின் ரத்தம் தோய்ந்த மண்ணை புட்டியில் போட்டு எடுத்து வந்தார்.

லாகூர் தேசியக் கல்லூரியில் 1923இல் சேர்ந்தார். கல்லூரி நாடகக் குழுவில் இடம்பெற்றார். நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். திருமணத்தை தவிர்க்க வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் சென்றார்.

நவ் ஜவான் பாரத் சபாவை 1926இல் நிறுவினார். ஐரோப்பிய புரட்சி இயக்க நூல்களைப் படித்தவர், பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். பல சுதந்திரப் போராட்டப் புரட்சி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். விரைவில் இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார்.

பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். 
5 வாரங்களில் விடுதலையானார். உருது, பஞ்சாபி நாளிதழ்கள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கான இதழ்களில் புரட்சிகர கட்டுரைகளை எழுதினார்.

சைமன் குழு 1928இல் இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பத்ராய் அமைதிப் பேரணி நடத்தினார். அதில் ஏவிவிடப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்து லஜ்பத்ராய் மரணமடைந்தார். இதற்குப் பழிவாங்கத் துடித்த பகத்சிங் தன் குழுவினருடன் இணைந்து, இதற்கு முக்கிய காரணமான காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்றார்.

தப்பிச் சென்ற இவர், தனது இயக்கத்தினருடன் இணைந்து சென்ட்ரல் அசெம்பிளியில் குண்டு வீசினார். மேலும் பல தாக்குதல் திட்டங்களை செயல்படுத்தினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்கள். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என்பது இவரது தாரக மந்திரம். சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். ‘தி டோர் டு டெத்’, ‘ஐடியல் ஆப் சோஷலிஸம்’ போன்ற நூல்களை எழுதினார். சிறையில் இந்தியக் கைதிகளுக்கும் ஐரோப்பியக் கைதிகளுக்கும் சம உரிமை வழங்க வலியுறுத்தி 116 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

ஏராளமான இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்த புரட்சியாளரான ‘மாவீரன்’ பகத்சிங் 24ஆவது வயதில் (1931) ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.

செப்டெம்பர் 27,வரலாற்றில் இன்று.உலக சுற்றுலா தினம் இன்று.

செப்டெம்பர் 27,
வரலாற்றில் இன்று.

உலக சுற்றுலா தினம் இன்று.  

உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டெம்பர் 27ஆம் நாளில், 1980ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும்,
சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இத்தினம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

சனி, 26 செப்டம்பர், 2020

*🖥️2020-2021 ஆம் ஆண்டுக்கான E-Filing செய்தல் மற்றும் E-Pay tax கட்டுதல் பற்றிய ஒரு விளக்கம்.

*🌟ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.*


*🖥️2020-2021 ஆம் ஆண்டுக்கான E-Filing செய்தல் மற்றும் E-Pay tax கட்டுதல் பற்றிய ஒரு விளக்கம்.

*வருமானவரி E-Filing  செய்யும்போது முன்பு அனைத்து வருமானவரி தாக்கல் செய்யும்முறைகளுக்கும்(1)ஆதார் OTP, 2)EVC முறை மற்றும் 3) centralized processing centre,Income tax department Bengaluru க்கு  Post செய்தல்)வருமானவரி கணக்கு  submit செய்தவுடன் Acknowledgement generate ஆகும்.*

*ஆனால் இவ்வாண்டு கொரோனா பேரிடர் காரணமாக ஆதார் லிங்க்   OTP கொடுத்தால் மட்டும் Acknowledgement generate ஆகிறது..மற்ற முறைகளுக்கு Acknowledgement generate ஆவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.*

*வருமானவரி தாக்கல்  செய்யும்போது ஆதார் லிங்கினை தேர்வுசெய்து ஓடிபி(OTP)பதிவிட்டு Submit செய்தால் மட்டும் Acknowledgement generate ஆகிறது.அத்துடன் வருமானவரி அலுவலகத்திற்கு   Acknowledgement அனுப்பத்தேவையில்லை என்பது அனைவரும் அறிந்ததே...அதற்கான Acknowledgement ல் எவ்வித மாற்றமும் இல்லை.*

*Centrelized processing centre,Income tax department,Bengaluru ஐ தேர்வு செய்து Submit செய்தால் Acknowledgement வராது.அதற்குப் பதில் Income tax E-verification form generate ஆகும்.அதில் கையொப்பமிட்டு Centrelized processing centre,Income tax department,Bengaluru 560500 முகவரிக்கு சாதாரண தபாலில் அல்லது விரைவஞ்சலில் அனுப்பி வைத்தால் return verification முடிந்து அதன் பிறகே Acknowledgement Generate ஆகும்.*

*ஆதார் லிங்க்  முறையினை தேர்வு செய்ய இயலாதவர்கள் உடனடியாக வருமானவரி கணக்குடையவர் ஆதார் எண்ணையும்,பான் எண்ணையும் இணையுங்கள்..அல்லது  உங்கள் பழைய அலைபேசி எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் அதற்குப்பதிலாக புதிய எண்ணை ஆதாருடன் இணையுங்கள்...அதன் பிறகு வருமானவரி கணக்கு Return தாக்கல் செய்யும் போது ஆதார் லிங்க் முறையினை தேர்வு செய்தீர்களானால் உடனடியாக Acknowledgement generate ஆவதோடு Bengaluru வருமானவரி அலுவலகத்திற்கு Acknowledgement அனுப்பத் தேவையில்லை.*

கீழே *Acknowledment மாதிரி*
*Income tax E-verification form மாதிரி உள்ளது.*
E-Verification Form


*🖥️E-Pay tax பற்றிய விளக்கம்.*

*மார்ச்சு மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய 12 மாதங்களில் வருமானவரி 100% பிடித்தம் செய்திருப்பீர்கள்.ஒருவேளை வருமானவரி செலுத்துபவர், ஊதியம் பெற்று  வழங்கும் அலுவலர்  ஆகியோரால் வருமானவரி தவறுதலாக குறைவாக கட்டப்பட்டிருந்தால் அதற்கு வட்டியுடன்  சேர்த்து E-pay tax E-Filing செய்யும் போது கட்ட வேண்டும்.*

*ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதர வருமானம் பெறும்போது உங்கள் பான் எண் மூலம் சம்பளம் தவிர வரும் வருமானத்திற்கு  E-Filing மூலம் Interest ஆக கலத்தில் காட்டப்பட்டு E-Pay Tax ஆக காட்டப்படும்.அந்த E-Pay Tax ஐ கிளிக் செய்தால் Challan எண் 280 ஐ கிளிக் செய்து Tax applicable ல் 021 Other than companies ஐ தேர்வு செய்து Type of payment ல் 300 Self assessment Tax ஐ கிளிக் செய்து  உங்கள் வங்கியின் Net banking மூலமாகவோ அல்லது Debit card (Atm card)மூலமாகவோ வருமானவரியினை கட்டலாம்.*

*E-pay tax கிளிக் செய்தால் வரக்கூடிய வருமானவரி Challan 280 கீழே*

*E-Pay tax கட்டியபிறகு வரும் Challan எண் மற்றும் E-Pay tax கட்டிய  தொகை,தேதி உள்ளிட்ட விபரங்களை E-Filing செய்யும் போது Details advance tax or Regular tax assessment என்ற கலத்தில் கட்டாயமாக குறிப்பிட்டு E-Filing செய்ய வேண்டும்.*

*🌟தன்பங்கேற்பு ஓய்வூதியம் 2020-21 ஆம் ஆண்டுக்கான வட்டிவிகிதம் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.*

*🌟தன்பங்கேற்பு ஓய்வூதியம் 2020-21 ஆம் ஆண்டுக்கான வட்டிவிகிதம்  அறிவித்து தமிழக அரசு  அரசாணை வெளியீடு.*