*🌟ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.*
*🖥️2020-2021 ஆம் ஆண்டுக்கான E-Filing செய்தல் மற்றும் E-Pay tax கட்டுதல் பற்றிய ஒரு விளக்கம்.
*வருமானவரி E-Filing செய்யும்போது முன்பு அனைத்து வருமானவரி தாக்கல் செய்யும்முறைகளுக்கும்(1)ஆதார் OTP, 2)EVC முறை மற்றும் 3) centralized processing centre,Income tax department Bengaluru க்கு Post செய்தல்)வருமானவரி கணக்கு submit செய்தவுடன் Acknowledgement generate ஆகும்.*
*ஆனால் இவ்வாண்டு கொரோனா பேரிடர் காரணமாக ஆதார் லிங்க் OTP கொடுத்தால் மட்டும் Acknowledgement generate ஆகிறது..மற்ற முறைகளுக்கு Acknowledgement generate ஆவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.*
*வருமானவரி தாக்கல் செய்யும்போது ஆதார் லிங்கினை தேர்வுசெய்து ஓடிபி(OTP)பதிவிட்டு Submit செய்தால் மட்டும் Acknowledgement generate ஆகிறது.அத்துடன் வருமானவரி அலுவலகத்திற்கு Acknowledgement அனுப்பத்தேவையில்லை என்பது அனைவரும் அறிந்ததே...அதற்கான Acknowledgement ல் எவ்வித மாற்றமும் இல்லை.*
*Centrelized processing centre,Income tax department,Bengaluru ஐ தேர்வு செய்து Submit செய்தால் Acknowledgement வராது.அதற்குப் பதில் Income tax E-verification form generate ஆகும்.அதில் கையொப்பமிட்டு Centrelized processing centre,Income tax department,Bengaluru 560500 முகவரிக்கு சாதாரண தபாலில் அல்லது விரைவஞ்சலில் அனுப்பி வைத்தால் return verification முடிந்து அதன் பிறகே Acknowledgement Generate ஆகும்.*
*ஆதார் லிங்க் முறையினை தேர்வு செய்ய இயலாதவர்கள் உடனடியாக வருமானவரி கணக்குடையவர் ஆதார் எண்ணையும்,பான் எண்ணையும் இணையுங்கள்..அல்லது உங்கள் பழைய அலைபேசி எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் அதற்குப்பதிலாக புதிய எண்ணை ஆதாருடன் இணையுங்கள்...அதன் பிறகு வருமானவரி கணக்கு Return தாக்கல் செய்யும் போது ஆதார் லிங்க் முறையினை தேர்வு செய்தீர்களானால் உடனடியாக Acknowledgement generate ஆவதோடு Bengaluru வருமானவரி அலுவலகத்திற்கு Acknowledgement அனுப்பத் தேவையில்லை.*
கீழே *Acknowledment மாதிரி*
*Income tax E-verification form மாதிரி உள்ளது.*
*🖥️E-Pay tax பற்றிய விளக்கம்.*
*மார்ச்சு மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய 12 மாதங்களில் வருமானவரி 100% பிடித்தம் செய்திருப்பீர்கள்.ஒருவேளை வருமானவரி செலுத்துபவர், ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் ஆகியோரால் வருமானவரி தவறுதலாக குறைவாக கட்டப்பட்டிருந்தால் அதற்கு வட்டியுடன் சேர்த்து E-pay tax E-Filing செய்யும் போது கட்ட வேண்டும்.*
*ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதர வருமானம் பெறும்போது உங்கள் பான் எண் மூலம் சம்பளம் தவிர வரும் வருமானத்திற்கு E-Filing மூலம் Interest ஆக கலத்தில் காட்டப்பட்டு E-Pay Tax ஆக காட்டப்படும்.அந்த E-Pay Tax ஐ கிளிக் செய்தால் Challan எண் 280 ஐ கிளிக் செய்து Tax applicable ல் 021 Other than companies ஐ தேர்வு செய்து Type of payment ல் 300 Self assessment Tax ஐ கிளிக் செய்து உங்கள் வங்கியின் Net banking மூலமாகவோ அல்லது Debit card (Atm card)மூலமாகவோ வருமானவரியினை கட்டலாம்.*
*E-pay tax கிளிக் செய்தால் வரக்கூடிய வருமானவரி Challan 280 கீழே*
*E-Pay tax கட்டியபிறகு வரும் Challan எண் மற்றும் E-Pay tax கட்டிய தொகை,தேதி உள்ளிட்ட விபரங்களை E-Filing செய்யும் போது Details advance tax or Regular tax assessment என்ற கலத்தில் கட்டாயமாக குறிப்பிட்டு E-Filing செய்ய வேண்டும்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக